திங்கள், 3 பிப்ரவரி, 2020

தொடரும் அலுவலக நினைவுகள்



                                 தொடரும் அலுவலக நினைவுகள்
                                    -----------------------------------------------------


பொல்லான் என்பரோ,புனிதன் என்பரோ,
கல்லான் என்பரோ,கலைஞன் என்பரோ,
சொல்லா வசைகள் சொல்வரோ,
சூழ்ந்து நின்று புகழ்வரோ
எல்லாம் சொல்லித் தூற்றிடினும்,
ஏதும் சொல்லாது வாழ்த்திடினும்,
மண்ணில் நானோர் ஒளிவட்டம்.
மற்றவ் வட்டம் நோக்கிடுவோர்,
கண்ணிற் காண்பது அவரவர்தம்
காட்சி அன்றி வேறாமோ.?


என்னவெல்லமோ நிகழ்வுகள்:  எதை எழுத எதை விட  சில முக்கிய விஷயங்கள் என்னில் ஏற்படுத்தியஉறுதியை  அதிகரிக்கச் செய்ததை மட்டும் நினைவு கூறுகிறேன் பாய்லர் வேலையில் சில பார்ட்களின் மூலம்  தெரிய வேண்டும் அதற்காக அந்தப்பாகத்தின்  மீது அதன்  ஜாதகத்தையே செதுக்கவேண்டும் அதற்கு வேண்டி அப்பொருளின்  மீது எல்ல டீடெயில்ஸ்களையும்  செதுக்க வேண்டும் சிலபொருட்கள் நூற்றுக்கணக்கில் கடைந்தெடுக்கப்படும் அவை சில செமி ஆடோமெடிக்  மெஷின்களில் தயாராகும்  ஆனால் அவற்றின் மீது செதுக்கப்ப்டும்  விஷயங்கள் மானுவலாகதான் செய்யமுடியும்மெஷினில் தயாரகும் வேகத்தோடு ஒப்பிடமுடியாது  நேரம் எடுக்கும்   இப்படி செதுக்குவது  தரக் கட்டுப்பாட்டுபிரிவின் கீழ்வரும் ஒரு சமயம்  பொருட்கள் அதிகமாக இருக்கும்  எண்களைச் செதுக்குவது  தாமதமாகும் சில நேரங்களில்  பொருட்களின் தாமதத்துக்கு தரக்கட்டுப்பாடே காரணம் என்றுபுகார் எழும்ஒரு முறை பொது மேலாளரிடம்  புகார் சொன்னார்கள் அவர் என்னிடம் தாமதம் இல்லாமல்  பொருட்கள் போக வேண்டும் என்று கண்டித்தார் நான் இருக்கும் நிலையை விளக்கி எத்தனை சீக்கிரம் அனுப்பமுடியுமோ அத்தனை சீக்கிரம் அனுப்புகிறேன் என்றேன்   அவர் உடனே என்றார் நான்  சீக்கிரம் அனுப்பமுயற்சி  செய்வதாகக் கூறினேன் அவர் மறுமுறை அங்கு வரும்போது  எதுவும் தேங்கி  இருக்கக் கூடாது என்று சத்தம் போட்டார்  நான் என் இம்மீடியட் உயரதிகாரியிடம் கூறினேன் அவர் பார்ட் கள்  மீது  பன்ச்  செய்ய எங்கிருந்தெல்லாமோ  பல ஆட்களை ஏற்பாடு செய்தார் இருந்தும்   அப்பொருட்கள்  இரண்டுநாட்கள் தேங்கி விட்டன நான்  பொது மேலாளருக்கு  பயப்படலாம்   ஆனால் இருக்கும் வேலை யாருக்கும் பயப்படாது என்னை பல நாட்களுக்குபின்   பார்த்த அவர் என் நேர்மையைப் பாராட்டினார் என்  ஒளிவட்டம்   அவருக்கும் தெரிந்ததுஎன்றே தோன்றியது

என்னை நெர்முக தேர்வில்  தேர்ந்தெடுக்கப்பட்டேன் என்று கூறி அதற்கும் ஒரு கிரேட் குறைவாகதேர்ந்தெடுத்து ஆர்டர் வந்ததுபற்றிக் கூறி இருந்தென்  அப்போதெல்லாம் பி எச் இ எல் லில் நான்கு அல்லது ஐந்து  ஆண்டுகளுக்குள்  ஒருப்ரொமோஷன் கிடைக்கும்   ஆனால் எனக்கு அந்த உதவி எஞ்சினீர் கிரேடை அடைய ஆறே முக்கால் ஆண்டுகளாயிற்றுஅந்தப் பொதுமேலாளர் இன்னும்பெரிய பதவி எல்லாம் வகித்து பி எசி எல்  வந்திருந்தபோது என்னைப் பார்த்து அட் லாஸ்ட்  யூ காட் யுவர் ப்ரொமோஷன்   என்றார்  எனக்கு ப்ரொமோஷன்  கொடுத்து என்னை கன்ஸ்ரக்‌ஷன் சைட்டுக்கு  மாற்றலும் கொடுத்தார்கள்  அப்போது வேலையை ராஜினாமாசெய்யலாம என்னும் யோசனையும் இருந்தது கன்ஸ்ரக்‌ஷன் சைட்கள்இந்தியாவின்  எல்லா ப்குதிகளிலும்   இருந்தது எங்கு என்று தெரியாத நிலையில்பிள்ளைகளின்   படிப்பு கெட்டு விடுமோ என்னும்பயம்வந்தது சென்னையில் ஒரு குடித்தனம் வைத்து எனக்கு எங்கு மாற்றல் ஆர்டர் வருகிறதோ அங்கு நான் தனியாகவுமிருக்க என்னை  ஆயத்தப்படுத்திக் கொண்டேன் கோடம்பக்கம் ட்ரஸ்ட் புரத்தில் வீடு வாடகைக்குப் பிடித்து பிள்ளைகளை நுங்கம்பாக்கம் கிருஷ்ணசாமி ஹையர் செகண்டரி  ஸ்கூலில் சேர்த்தேன்  இதன்நடுவே திருச்சியில் உதவி பொதுமேலாள்ர் ஒருவருக்கு விஜயவாடா அனல் மின்  நிலையம் நிர்மாணிக்கும்   ஆர்டரும் இருந்தது  அவரென்னை சென்னை ஆஃபீசில் பார்த்ததும்விஜயவாடாவுக்கு வர விருப்பமா என்றுகேட்டார் அவர் என்னைப்பற்றியும் என் திற்ன்பற்றியும்  ஐ மீன்  ஒளிவட்டம்  பற்றியும்  கேள்விப்பட்டிருந்தார் விஜயவாடா வெகு தொலைவு இல்லை என்பதால்நான்சரி என்றேன்  முதலில் என்னை விஜயவாடா சென்று அங்கு வரப்போகும் ஊழியர்களின்   பிள்ளைகளுக்கு பள்ளிக்கூட வசதியும் ஏற்பாடுசெய்யச் சொன்னார் (அதுபற்றி பிறிதொரு பதிவில்விளக்கமாக எழுதுவேன் ) நான்  தொழிற்கூடத்தில்வேலை பார்த்தவன் கட்டுமானப் பிரிவு பற்றி ஏதும் தெரியாதுவிஜயவாடா விட்டு வரும்போது  அங்கு பணியிலிருந்த சூப்பெரிண்டெண்டண்ட் சொன்னது இங்கே கூறுவது நான் என்னை எவ்வள்வு தூரம்  ஆர்வமுடன் உழைத்தேன் என்பதைக்  காட்டும் அவர் சொன்னார் “நானிங்கு வரும்போதெல்லாம் இந்த மெஷின்கள்  பாலு பாலு  என்று கூறுவதைக் கேட்பேன்” நான் நான்காண்டுகள் அங்கு பணி ஆற்றினேன்   எதையும் கற்றுத் தேறலாம்என்னும்  தன்னம்பிக்கை வந்ததுவிஜயவாடா விட்டு வரும்போது நான் சீனியர் எஞ்சினீர் என்று வந்தேன்  திருச்சியில் என்னை வால்வ் டிவிஷன் தரக் கட்டுப்படுப்பிரிவின் பொறுப்பாளனாக இருந்தேன்
அப்போது பிஎச் இ எல் நிறுவனம் ட்ரெஸ்ஸர் இண்டஸ்டிரீஸ் உடன் வால்வு செய்ய ஒப்பந்தம்  போட்டு இருந்தார்கள் டோவா TOA ஜப்பானுடனும் ஒப்பந்தமிருந்தது  தரக்கட்டுப்பாட்டுக்கு நான் பொறுப்பாளனாக நான்  இருந்தும் முதலில் அந்நாடுகளுக்குச்சென்றுபயிற்சிபெற என்னை முதலில் தேர்ந்தெடுக்கவில்லைஎன்னை என்றும் ஒதுக்கச் முடியாது என்று நம்பினேன் அதேபோல் சற்று தாமதமானாலும் என்னை ஜப்பானுக்கு பயிற்சிக்கு அனுப்பினார்கள்
எனக்கு  டோவா  எஞ்சினிர்கள்டமிருந்தும்  ட்ரெஸ்ஸேர்  எஞ்சிநீர்களிடமிருந்தும்  நல்ல பெயர் இருந்தது நான் ஜப்பான்  சென்று இருந்தபோது  அங்கிருந்தவர்கள்பலரு என்னிடமே கற்க நிறைய இருப்பதால் என் காலடியில் அமர்ந்து எனனுபவங்களைப் பகிர வேண்டினார்கள்
நான் விஜயவாடா வ்ட்டு வரும்போது சீனியர் எஞ்சினீயர்அதாவது நான் பிஎச் இ எல் சேர்ந்து பத்தாண்டுகளுக்கும்  மேல் கழிந்தபின் நானொரு சீனியர் மானெஜராக இருந்திருக்க வேண்டியவன் 1991ல் சீனியர் மானேஜர் பதவிக்கு நான் தேர்ந்தெடுக்கப்படவில்லை இன்னும் தொடர்ந்து இருந்தால் மனதளவில்  சங்கடங்கள் அதிகம்நேரலாம்  என்று நினைத்து விருப்ப ஓய்வுக்கு எழுதிக் கொடுத்து விட்டேன் அதாவது என் 53 வயதில்  நான்  பிறருக்காக உழைத்ததுபோதும்  என்றாகி  விட்டது விருப்ப ஓய்வு பெறும்போது நான் ஒரு மானேஜெர் பிஎச் இ எல்லில் சேரும்போதே அந்தகுறிப்பிட்டபத்வில் இருந்தால்  நான் எங்கோ போய் இருக்க வேண்டியவன் எமாற்றப்பட்டுவிட்டேன்  என்பது தவிர நான் அங்கிருந்தவரை என்னை நன்கு வெளிப்படுத்தித்தான் வந்தேன்   என்ஒளி வட்டம் நன்கே மிளிர்ந்தது 















19 கருத்துகள்:

  1. எந்த வேலையையும் அர்ப்பணிப்புடன் செய்தால் ஒளிவட்டத்தை அனைவரும் பெறலாம்.   உங்கள் அனுபவங்கள் எங்களுக்கு  பாடம்.

    பதிலளிநீக்கு
  2. கடமையை சரியாக செய்து இருக்கின்றீர்கள்.
    இதுதான் ஐயா ஒவ்வொரு மனிதனும் கடைப்பிடிக்க வேண்டியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதிர்பார்ப்புகள் கடமைகளைச் செய்ய விடாமல் தடுக்கும் வாய்ப்புகளும் அதிகம்

      நீக்கு
  3. உங்கள் அனுபவத்தைப் பார்க்கும்போது என் வாழ்வில் நான் கடைபிடித்த சிலவற்றை ஒப்புநோக்கி, பெருமை அடைந்தேன் ஐயா.

    பதிலளிநீக்கு
  4. இதுதான் பல இடங்களில் நடக்கிறது. காக்கா பிடிக்க தெரிந்து இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காக்கா பிடிப்பதற்கும் ஒரு தனி திறமை வேண்டும் அது என்னிடமில்லை என்பது ஊரறிந்த விஷயம்

      நீக்கு
  5. வாசித்தேன். அலுவலகப் பணிகளில் சொந்த ஆற்றலை அதிகரித்துக் கொள்வது, தான், தன் பதவி என்று தன் மட்டத்தில் சுருங்கிப் போய் விடுமோ?..

    பதிலளிநீக்கு
  6. /சுய சரிதை போலவான எந்த விவரிப்பும் சமூக விஷயங்கள் சார்ந்து இருந்தால் தான் வாசிப்போருக்கு சுவாரஸ்யத்தையும், சரித்திர நிகழ்வுகளைத் தெரியப்படுத்துவதாகவும் இருக்கும். இல்லையென்றால் தனி மனித பிரதாபங்களாகப் போகக்கூடிய ஆபத்து ஏற்பட்டுவிடும்.இருந்தும் ஏதோ ஒரு ஈர்ப்பினல் வண்ட வாசித்ததற்கு நன்றி சொந்த ஆற்றலை அதிகரித்துக் கொண்டு என்னை பற்றிய ஒரு வீச்சை அதிகரித்துக் கொள்வதை செய்தேன் அது என் மட்டத்தில் சுருங்கிப்போதலல்ல

    பதிலளிநீக்கு
  7. நடந்ததை மறக்காமல் சொல்வது = !
    மறைக்காமல் சொல்வதும் = ?
    நீங்கள் இரண்டிலும் நிபுணர் = !?

    பதிலளிநீக்கு
  8. நல்ல நினைவாற்றல் என்பதோடு உங்கள் கடமையைச் சரிவரச் செய்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் மூலம் என்னை நான் கொஞ்சம் வெளிப்படுத்திக் கொண்டேன் அவ்வளவு தான்

      நீக்கு
  9. திறமை பல சமயம் மதிக்கப்படுவதில்லை; ஏமாற்றங்கள் வாழ்வில் சகஜம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திறமையை விட பட்டங்களுக்கு மதிப்பு அதிகம் என்று அனுபவம் சொல்கிறது

      நீக்கு
  10. கடந்த கால நினைவலைகளை மறக்காமல் நினைவில் வைத்து பதிவு செய்த பாங்கு பாராட்டிற்கு உரியது ஐயா

    பதிலளிநீக்கு
  11. நினைவுகளில் மூழ்கி இருப்பதும் பதிவெழுத உபயோகமாகிறது நினைவாற்றலையும் வளர்க்கிறது

    பதிலளிநீக்கு