செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

பெயர்க் குழப்பம் வாய் முஹூர்த்தம் உடன்சிலபொன் மொழிகள்




                        பெயர்குழப்பம் வாய் முஹூர்த்தம்  உடன் சிலபொன் மொழிகள்
                       -------------------------------------------------------------------------------------------------------------
 பெயர்க் குழப்பம்
முதலில் ஒரு பெயர் குழப்பத்தை பார்ப்போம்  வழக்கம்பொல நான் திருச்சியில் இருந்தபோது நண்பர் ஒருவர் தன்நண்பனுக்கு எனக்கு திருமணப் பத்திரிக்கை வைத்தார்களா என நினைவுப் படுத்த ஜீ எம்  பால சுப்பிரமணியத்துக்கு பத்திரிக்கை வைக்க மறக்காதே  என்றிருக்கிறார் அவர் மிகவும் சிரமப்பட்டு அப்போது ஜெனரல் மானேஜராக இருந்த பால சுப்பிரமணியத்துக்கு அவரிடம் பேசிப் பழக்கமில்லாததால் மிகவும்சங்கோஜப்பட்டு வீட்டுக்குச்சென்று திருமணத்துக்குஅழைப்பு வைத்து  வேண்டி இருக்கிறார்  பிறகு வந்தவர் பழக்கம் இல்லாவிட்டாலும் ஜீஎம்மை  அழைத்திருக்கிறேன் என்றார்  நான் எனக்கு பத்திர்க்கை வரவில்லை என்றவுடன்  விசாரித்து அறிந்ததே மேற்சொன்ன சம்பவம்   என் இனிஷியலில்இருந்த ஜீ எம்பதவியில் ஜீ எம் ஆக இருந்தவரை நாட வைத்திருக்கிறது

வாய்முஹூர்த்தம்  
 ஒரு நாள் என்வீட்டுக்கு நண்பரொருவர் வந்தார் கவலையுடன் காணப்பட்டார் விசாரித்தபோது அவர் மனைவிக்கு பிரசவகாலம்  வெகு அருகில் இருக்கிறது என்றும்  முன்பே பெற்றெடுத்த  நான்கு குழந்தைகள் பிறந்தவுடன் இறந்தன என்றுமிந்த ஐந்தாவது பற்றிகவல்சை என்றும்   தெரிந்தது நான் ஆறுதல் சொல்லும்வகையில் இப்போது பிறக்கப்போகும்   குழந்தை நன்கு ஆரோக்கியத்துடனும் நல்ல ஆயூளுடனும் பிறக்கும் என்றும்  கூறி ஆறுதல் அளித்தேன் இது நடந்து இரண்டு மூன்று மாதம் கழித்து அந்த நண்பர் என் வீட்டுக்கு மீண்டும்வந்தார் வந்தவர் முகமலர்ச்சியுடன் இனிப்பும் கொடுத்தார் என்வாய் முஹூர்த்தமோ என்னவொ குழந்தை பிறந்து  ஆரோக்கியமுடன் இருப்பதாகவும் நானே பெயர் வைக்க வேண்டுமென்றும் கூறினார் அவர்கள்முருக பக்தர்கள்முருகன்பற்றிய பெயராக வைக்கவும் வேண்டினார் பிறந்தது பெண்குழந்தை ஆதலால்  கார்த்திகா என்று பெயர் சூட்டினேன்மிகவும் மகிழ்ந்துசென்றார் அவ்ர்  என் என் உறவினர் ஒருவர்திருச்சிக்கு மாற்றலாகி  வந்தார் ஆருக்கு நான் பி எச் இ எல்லில் இருப்பதுதெரிந்தது  சுமாரான பதவியில் இருப்பதும்தெரிந்தது ஆனால் என்விலாசம் தெரியவில்லை அவர் தீ அணைப்பு பிரிவில் தலைமைப் பொறுப்பில்இருந்தார்   பி எச் இ எல்  தீ அணைப்பு ப்ரிவில் பலரை அவருக்கு தெரிந்திருந்தது அவர்களில் ஒருவரிடமென்பெயரை கூறி என் நை தொடர்பு கொள்ளச் சொன்னார் பாவம் அந்த மனிதர்  மிகவும் கஷ்டப்பட்டு விட்டார்   பிஎச் இ எல்  தொலைபேசி டைரக்டரியில் முக்கியமானவர் பெயர்களிருக்கும்  அவர் அப்போது வேலையில் இருந்தஎல்லா பால சுப்பிரமணியங்களியும் மாற்றி மாற்றி அழைக்கத்தொடங்கி எனையும் அழைத்து  இன்னாரைத் தெரியுமா என்றுவிசாரித்திருக்கிறார்  நான் தெரியும் என்றதுமவர் குரலில் இருந்த அப்பாடியில்  அவர் மகிழ்ச்சி தெரிந்தது பின் அவரெனைப் பார்த்ததும்  நான் என் உறவினரைப்பார்த்ததும் நிகழ்ந்தது

 இனி சில பொன் மொழிகள்
 கருவறை இருட்டுக்கும்   கல்லறை இருட்டுக்கும் நடுவே இருக்கும் வெளிச்சமேவாழ்க்கை
ஒருபயாலஜி மாணவன்  சொன்னது ஜீரணமென்பது வலது கையில் தொடங்கி இடதுகையில் முடிவது  
 இனி ஒரு பக்திப்பாடல்  


  

















             
                 

22 கருத்துகள்:

  1. அனுபவங்களோடு கூடிய கதம்பம் ரசித்தேன்.

    வலது கையில் தொடங்கி இடது கையில் முடிவது -ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. நன்றி பலபாடல்கள்நினைவுக்கு வந்தாலும் பக்திப் பாடல்களுக்கு இருக்கும் மவுசே தனி

      நீக்கு
  3. நல்ல பதிவு. பெயர்க்குழப்பங்கள் அடிக்கடி ஏற்பட்டு விடுகிறது. தங்கள் வாய்முகூர்த்தம் எப்போதும் நல்லதாகப் பலிக்கட்டும். எழுத்துப் பிழைகளை சற்று கவனியுங்கள். ஆட்சென்ஸ் விளம்பர சேவையை இணைக்க முயற்சி செய்யுங்கள்.

    நமது வலைத்தளம் : சிகரம்
    இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிகரம் பதிவுக்கு சென்றேன் ஆர்வமிருந்தால் நான் என்பதிவுகள் சிலவற்றைப் பகிர்கிறேன்

      நீக்கு
  4. இது போல பெயர் குழப்பம் எனக்கும் பல தடவைகள் நேர்ந்து இருக்கிறது... வட நாட்டவர் என்னுடன் சென்னையில் வேலைபார்த்து வந்தார் என் பெயர் அவரது இனத்தை குறிக்கும் அதனால் எனக்கு வரும் போனை அவருக்கு கூப்பிட்டு தருவார்கள் அவருக்கு வரும் போனை என்னை கூப்பிட்டு தருவார்கள்..... அந்த காலத்தில் செல்போன் உபயோகம் இல்லை


    பொன் மொழிகள் ரசிக்க செய்தன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒன்னுமே புரியலே கடவுள்களுக்கே அடையாளங்கள் இருக்கிற்தே உட்கார்ந்து இருப்பவன் ஐயப்பன் படுத்திருப்பவன் பெருமாள் சூலமேந்தி நாக்கு துருத்தி இருந்தால் காளி வேல் இருந்தால் முருகன் etc etc இனமும் புரியலே பேரும் புரியலே

      நீக்கு
  5. ஜி.எம்.இன்ஷியல் விவகாரம் ரசனையாக இருந்தது ஐயா.

    பதிலளிநீக்கு
  6. பெயர்க்குழப்பம் வித்தியாசமான அனுபவம் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரே பெயரில் பலரு இருண்டால் அடையாளப்பெயர்கள்தலை தூக்கும் ரெட்டை மண்டை கோணவாயனென்பது போல்

      நீக்கு
  7. தமிழர்களின் பெயர்கள் எண்ணிக்கையில் குறைவாதலால் குழப்பத்துக்கு இடமுண்டு . ஒரே தெருவில் 4 ராமசாமி , 3 கந்தசாமி , 2 நடராஜன் இருக்கக்கூடும் . ஒரு தடவை என் வகுப்பில் எட்டு கலியபெருமாள்கள் இருந்தார்கள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இம்மாதிரி பெயர் குழப்பங்களை தவிர்க்கஎன்றே சில அடையாளங்களிருக்கும் இம்மாடிரி சிந்தனை அடிப்படையில் எழுந்தஒரு படிவின் சுட்டி இதோ https://gmbat1649.blogspot.com/2013/10/blog-post_24.html

      நீக்கு
  8. பெயர்கள் ஒரு போல இருந்தாலும் அடையாள்ங்கள் வேறாயிருக்
    இதெ சிந்தன்சையி அடிப்படாஇயிலெழுந்த ஒர்பதிவின் சுட்டி இஒதோ \ https://gmbat1649.blogspot.com/2013/10/blog-post_24.html

    பதிலளிநீக்கு
  9. // இப்போது பிறக்கப்போகும் குழந்தை நன்கு ஆரோக்கியத்துடனும் நல்ல ஆயூளுடனும் பிறக்கும் என்றும் கூறி ஆறுதல் அளித்தேன்//

    உங்கள் ஆறுதல் வாழ்த்தாகி ஆரோக்கியமான குழந்தை பிறந்து அதற்கு நீங்களே பெயர் சூட்டியது மகிழ்ச்சி தரும் செய்தி.
    குழந்தைக்கு கொடுப்பினை.

    முருகன் பாடல் கேட்டேன். பிடித்த பாடல்.

    பதிலளிநீக்கு
  10. அப்படியாக எழுத முயற்சிக்கிறேன்

    பதிலளிநீக்கு