கட்டுச் சோறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுச் சோறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

பெயர்க் குழப்பம் வாய் முஹூர்த்தம் உடன்சிலபொன் மொழிகள்




                        பெயர்குழப்பம் வாய் முஹூர்த்தம்  உடன் சிலபொன் மொழிகள்
                       -------------------------------------------------------------------------------------------------------------
 பெயர்க் குழப்பம்
முதலில் ஒரு பெயர் குழப்பத்தை பார்ப்போம்  வழக்கம்பொல நான் திருச்சியில் இருந்தபோது நண்பர் ஒருவர் தன்நண்பனுக்கு எனக்கு திருமணப் பத்திரிக்கை வைத்தார்களா என நினைவுப் படுத்த ஜீ எம்  பால சுப்பிரமணியத்துக்கு பத்திரிக்கை வைக்க மறக்காதே  என்றிருக்கிறார் அவர் மிகவும் சிரமப்பட்டு அப்போது ஜெனரல் மானேஜராக இருந்த பால சுப்பிரமணியத்துக்கு அவரிடம் பேசிப் பழக்கமில்லாததால் மிகவும்சங்கோஜப்பட்டு வீட்டுக்குச்சென்று திருமணத்துக்குஅழைப்பு வைத்து  வேண்டி இருக்கிறார்  பிறகு வந்தவர் பழக்கம் இல்லாவிட்டாலும் ஜீஎம்மை  அழைத்திருக்கிறேன் என்றார்  நான் எனக்கு பத்திர்க்கை வரவில்லை என்றவுடன்  விசாரித்து அறிந்ததே மேற்சொன்ன சம்பவம்   என் இனிஷியலில்இருந்த ஜீ எம்பதவியில் ஜீ எம் ஆக இருந்தவரை நாட வைத்திருக்கிறது

வாய்முஹூர்த்தம்  
 ஒரு நாள் என்வீட்டுக்கு நண்பரொருவர் வந்தார் கவலையுடன் காணப்பட்டார் விசாரித்தபோது அவர் மனைவிக்கு பிரசவகாலம்  வெகு அருகில் இருக்கிறது என்றும்  முன்பே பெற்றெடுத்த  நான்கு குழந்தைகள் பிறந்தவுடன் இறந்தன என்றுமிந்த ஐந்தாவது பற்றிகவல்சை என்றும்   தெரிந்தது நான் ஆறுதல் சொல்லும்வகையில் இப்போது பிறக்கப்போகும்   குழந்தை நன்கு ஆரோக்கியத்துடனும் நல்ல ஆயூளுடனும் பிறக்கும் என்றும்  கூறி ஆறுதல் அளித்தேன் இது நடந்து இரண்டு மூன்று மாதம் கழித்து அந்த நண்பர் என் வீட்டுக்கு மீண்டும்வந்தார் வந்தவர் முகமலர்ச்சியுடன் இனிப்பும் கொடுத்தார் என்வாய் முஹூர்த்தமோ என்னவொ குழந்தை பிறந்து  ஆரோக்கியமுடன் இருப்பதாகவும் நானே பெயர் வைக்க வேண்டுமென்றும் கூறினார் அவர்கள்முருக பக்தர்கள்முருகன்பற்றிய பெயராக வைக்கவும் வேண்டினார் பிறந்தது பெண்குழந்தை ஆதலால்  கார்த்திகா என்று பெயர் சூட்டினேன்மிகவும் மகிழ்ந்துசென்றார் அவ்ர்  என் என் உறவினர் ஒருவர்திருச்சிக்கு மாற்றலாகி  வந்தார் ஆருக்கு நான் பி எச் இ எல்லில் இருப்பதுதெரிந்தது  சுமாரான பதவியில் இருப்பதும்தெரிந்தது ஆனால் என்விலாசம் தெரியவில்லை அவர் தீ அணைப்பு பிரிவில் தலைமைப் பொறுப்பில்இருந்தார்   பி எச் இ எல்  தீ அணைப்பு ப்ரிவில் பலரை அவருக்கு தெரிந்திருந்தது அவர்களில் ஒருவரிடமென்பெயரை கூறி என் நை தொடர்பு கொள்ளச் சொன்னார் பாவம் அந்த மனிதர்  மிகவும் கஷ்டப்பட்டு விட்டார்   பிஎச் இ எல்  தொலைபேசி டைரக்டரியில் முக்கியமானவர் பெயர்களிருக்கும்  அவர் அப்போது வேலையில் இருந்தஎல்லா பால சுப்பிரமணியங்களியும் மாற்றி மாற்றி அழைக்கத்தொடங்கி எனையும் அழைத்து  இன்னாரைத் தெரியுமா என்றுவிசாரித்திருக்கிறார்  நான் தெரியும் என்றதுமவர் குரலில் இருந்த அப்பாடியில்  அவர் மகிழ்ச்சி தெரிந்தது பின் அவரெனைப் பார்த்ததும்  நான் என் உறவினரைப்பார்த்ததும் நிகழ்ந்தது

 இனி சில பொன் மொழிகள்
 கருவறை இருட்டுக்கும்   கல்லறை இருட்டுக்கும் நடுவே இருக்கும் வெளிச்சமேவாழ்க்கை
ஒருபயாலஜி மாணவன்  சொன்னது ஜீரணமென்பது வலது கையில் தொடங்கி இடதுகையில் முடிவது  
 இனி ஒரு பக்திப்பாடல்