கட்டிலடங்கா எண்ணங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டிலடங்கா எண்ணங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 15 பிப்ரவரி, 2020

நான் முன்னாலே போறேன் பின்னாலெ வா நீ



                                       நான் முன்னாலே போறேன்  பின்னாலே வா நீ
                                       --------------------------------------------------------------------------



.
விடிகாலையில் விழிப்பு வந்தது என்படுக்கை சன்னலை ஒட்டியே இருப்பது வெளிச்சம் வேண்டி

சன்னல் ஸ்க்ரீனை  ஒதுக்கி வைப்பது வழக்கம் விழிப்பு வந்ததும்  அருகில்

படுத்திருக்கும்மனைவியைப்பார்த்தேன்  அவளுக்கென்ன தூங்கு கிறாள் மனசில் அல்லாடுப்வன்

 நானல்லவா வயது கூடக்கூட எண்ணங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை சாலைஒரத்து

  விளக்குக்கள்அறைக்குள்ளும் வெளிச்சம் பாய்ச்சுகிறது இந்தப்பாழும் மனம்   தினமும் அவள்

 உயிர்ப்புடன் தான்   இருக்கிறாள்  என்று

 உறுதி செய்துகொள்ளும் 


  நான்  அன்றெழுதிய கவிதை  நினைவுக்கு வந்தது

  நிலவைப் பழிக்கும் முகம்

  அதில் நினைவைப் பதிக்கும் கண்கள் (இப்போது உறக்கத்தில் கண்கள்மூடி இருகின்றன்)

  படர்கொடி வெல்லும் துடியிடை

  இடர் சேர்க்க இடையிடையாட

என்றெல்லாம்  எழுதிக் குவித்தேன் 

  இன்றும் அவளெழில் குறைந்தாளில்லை

  கூறப் போனால் அக அழகு

  மாசற்ற மெருகு கூடியே உள்ளது
.
  காதலுக்குக் கண் இல்லை என்பர். –நான்

  ஓங்கி உரைப்பேன், காதலுக்கு வயதுமில்லை.

. அன்றோ தளதளவென்று இருப்பாள் இன்று தளர்ந்திருக்கிறாள்

இருவருக்கும் வயதாகி விட்டது இருவரும் ஒருநாள்  இல்லாமல் போக வேண்டியதுதான் யார்

 முந்தி என்பது தெரியாது  ஆனால் என்னால் தனியே இருக்கமுடியாது  என் சுபாவம் அப்படி

 என்னால் எல்லா இடங்களிலும் என்னைப் பொறுத்திக் கொள்ள முடியாது அப்படி ஒரு சுபாவம்

 எங்கும் என் கை ஓங்கி இருந்து  பழகி விட்டது மேலும்   இப்போதெல்லாம் என்னால் தனித்து

 இயங்க   முடிவதில்லை என்னை  எல்லோராலும் ஏற்றுக் கொள்வது சிரமம்  அவளில்லாமல்

 நானில்லை என்னும் பாடலே நினைவுக்கு வருகிறது சொல்லப் போனால் நான்  வெர்சுவலி  ஒரு

குழந்தை  என்னோடு 56 வருடங்கள்  குப்பைகொட்டியவள் நான்நினைப்பதை உடனே கூறுபவள்

 அது போல் என்னால் முடிவதில்லை  என் குறைகள் எனக்குத்தெரியும்  எழுத எண்ணங்கள்

கோர்வையாய் வ்ருவதில்லை  

         வாழ்வின் விடியல்,பகல்,மாலை வரை வந்து
        விட்டாய்,வென்றுவிட்டாய். வாழ்க்கை நிறைவேயன்றோ
       
நீ சென்ற பின்னே பழிக்கும்படியா இருப்பாய்.

உன் உயிர்ப் பறவை இன்னும் இருக்கிறது
அறம் ,பொருள் ,இன்பம் கழித்தாயிற்று;
வீடு நோக்கிப் பறப்பதே மீதி.

         
என்னுயிர்ப் பறவையே,
         
நான் கண்களை மூடிக் கொள்கிறேன்
         
நீ உன் சிறகசைப்பை துவக்கலாம்.
         
என் நெஞ்சுக்கூட்டை விட்டு
         
அழகாக வெளியேறிவிடு, யாரும் அறியாமல்.
         
மூடிய கண்கள் விழித்து விட்டால்
         
இன்னும் இன்னும் எண்ணச் சிறகடிப்பாயே

 என்பதிவு ஒன்றுக்கு  பின்னூட்டமாகஒருவர் சொல்கிறார்  சொல்கிறார்,வாழ்க்கைதுணை தேடும் போது பெண் தன் முதல் குழந்தையை தேடுகிறாள், ஆண் தன் இரண்டாவது அன்னையை தேடுகிறான் என்று.சத்தியமான  மொழி அது  நான் என் இளவயதில் என்னைப் பெற்றவளை இழந்தேன்பெற்ற அன்னையின் அன்பு அறியாதவன்  என்  மனைவியைத் தாரமாகமட்டுமல்லாமல்  தாயாகவும் காண்கிறேன்

எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்

சொல்லிப் போனான் பாரதி  

அவனுக்கென்ன சொல்லிவிட்டான்
நல்லவே எண்ணல் வேண்டும்
ஒரு வேளை அவனுக்குத் தெரியவில்லையோ
எண்ணங்கள் கட்டுக்குள் அடங்காதவை
எது எண்ணக் கூடாதோ அதுவே முன்னே சதிராடும்
மருந்து அருந்துகையில் குரங்கின் எண்ணம்
வரக்கூடாது என்றாலும் அதுதானே முன் நிற்கும்


நினைவுகள் அதுவும் சுகமான நினைவுகள் கொண்டு
வேண்டா எண்ணங்களைத் துரத்த முயல்கிறேன்
எத்தனையோ போராட்டங்கள் பார்த்தாயிற்று நான்
வெல்லவில்லையா.?நானில்லாவிடினும் ஏதும் மாறாது
எதுவும் கடந்து போகும், இதுவும் கடந்து போகும்

.இருந்தாலும்  எண்ணங்கள் கட்டுக்குள் இல்லை வேண்டலாம்  நான் முன்னாலே

 போறேன் பின்னலே வா நீ