நானும் குழந்தையும்
-----------------------------------
பச்சிளங்குருத்து
என் மடியில்
கருப்பையில்நீந்தி
மகிழ்ந்த( ? ) ஒரு சின்ன உயிர்
ஏதும்
புரியாமல் என்னைப் பார்க்கிறது
என்னைப்
பார்க்கிறதா ?விலங்குகள்
மண்ணில் விழுந்தவுடன்எழுந்தோடும்
இக்குழவிக்கு
அது முடியுமா
தாய் யாரென்றாவது தெரியுமா
பரப்பிரம்மம் என்று சொல்லப் படுவதும் ஈதோ
நாட்களை
எண்ணிக் கொண்டிருக்கும்
எனக்கு
எண்ணிக்கையே துவங்காத
மழலையின் ( அதுவும் தவறோ )
சிந்தையில் என்னதான் ஓடுகிறதோ
சிந்தை என்றஒன்றுஇருந்தால் தெரியவில்லையே
இன்றைக்கு
என்ன எல்லாமே அப்ஸ்ட்ராக்டாக
என் வீட்டின்மேல் தளத்தில் குடியிருப்பவருக்கு ஒரு ஆண்மகவு பிறந்தது என்னால் படியேறிப் போகமுடியாது என்று எண்ணி குழந்தையை காட்ட என் வீட்டுக்கு வந்திருந்தார் அப்போது எடுத்த படம்
குழந்தையும் நீங்களும் - உங்கள் எண்ண ஓட்டங்கள் நன்று.
பதிலளிநீக்குகுழந்தையை மடியில் ஏந்தியதும் ஓடிய எண்ண ஓட்டங்கள்
நீக்குகுழந்தைக்கு வாழ்த்துகள். உங்கள் மடியில் உங்கள் கொள்ளுப் பேத்தி/பேரன் விரைவில் தவழட்டும்.
பதிலளிநீக்குஅது ஒன்றுதான் வாழ்வில் பாக்கி
நீக்குஎண்ணங்கள் தாறுமாறாக ஓடுகின்றன போல. குழந்தைக்கு வாழ்த்துகள். மொழியறிவு வந்ததும்தான் குழந்தைக்கு சிந்தனை என்கிற ஒன்றும் வரும் என்று படித்த நினைவு.
பதிலளிநீக்குஓ அப்படியா குழந்தைகள் சிந்திப்பதுஇல்லையா
நீக்குமொழியறிவிற்கும், சிந்தனைக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்ன?
நீக்குஎனக்குப் புரியவில்லை குழந்தைகள்சிந்திக்க முடியுமா என்ன
நீக்குவிரைவில் கொள்ளுப்பெயரனை கொஞ்சிட வாழ்த்துகள் ஐயா.
பதிலளிநீக்குவாழ்த்துகளுக்கு நன்றி ஜி
நீக்குநண்பர் கில்லர்ஜி அவர்களின் கருத்தை வழிமொழிகின்றேன்
பதிலளிநீக்குநன்றி சார்
நீக்குஇரண்டு குழந்தைகள்...
பதிலளிநீக்குசரியாகச் சொன்னீர்கள்
நீக்குநண்பர் திரு திண்டுக்கல் தனபாலன் கருத்தை வழிமொழிகின்றேன்.
நீக்கு5 நாள் குழந்தையோ ஆவ்வ்வ்வ்வ்வ்...
பதிலளிநீக்குஅது உலகம் புரியாமல்
நிம்மதியாக உறங்கிறது...
உலகம் புரிந்த
ஜி எம் பி ஐயா சிரிக்கிறார்
ஐந்து நாள் குழந்தைஎன்று சொல்ல வில்லையே அதுசரி அப்போது அந்தக்குழந்தைக்கு ஐண்ட்க்ஹு நாள்தான் வயது
நீக்குநாட்களை எண்ணிக் கொண்டிருக்கும்
பதிலளிநீக்குஎனக்கு எ////
எதுக்கு எதுக்கு இந்த சிந்தனை... இங்கு ஒருவர் 94 வயசுவரை ஹைவேயில் கார் ஓடிக்கொண்டிருந்தார்... இப்படிப் பலர் இருக்கிறார்கள்... நாட்களை எண்ணுவதை விட்டுப்போட்டு ... நல்ல விதமாக எண்ணுங்கோ....
எண்ணங்கள் கட்டுப்பாட்டில் இல்லையே எனக்கு தெரியுமென்னிலும் மூத்தவர் நல்ல உடல் நிலையோடு இருகிறார்கள் எனக்கு இன்னொன்றும்தெரியும் என்வயது அனுபவங்களை உணராது போனவர்களும் ஏராளம் என் முதுமையின் பரிசு பதிவைப் பாருங்கள்கூகிளில் தமிழில்கேட்டால் வரும் சுட்டி
நீக்குஇரு குழந்தைகள்ன்னு தலைப்பிட்டிருக்கலாமோ!!??
பதிலளிநீக்குஎழுதும்போடு இது தோன்றவில்லையே
நீக்குசார் நீங்களும் கைக்குழந்தையுடன் ஒரு குழந்தையாக!!!சிரிப்புடன் சூப்பர் சார்...குழந்தைக்கு எண்ண ஓட்டம் எடுக்க நாளெடுக்கும்...
பதிலளிநீக்குநாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் எனக்கு என்ற சிந்தனை எதற்கு சார்? இந்த எண்ணம் வேண்டாம் சார். அந்த நினைப்பைக் களையுங்கள். வலை இருக்கிறதே முடிந்தவரை எழுதுங்கள் வாசியுங்கள்...மகிழ்ச்சியாக இருங்கள்!
மேலேதானே இருக்கிறார்கள் அக்குழந்தையின் பெற்றோர். எப்போது உங்களுக்குக் குழந்தையை பார்க்கத் தோனுதோ அப்போது அவர்களைக் கொண்டு வந்து காட்டச் சொல்லுங்கள் குழந்தையைப் பார்க்கும் போது நம் மனமும் குழந்தையாய் களிக்கும்...
கீதா
நன்றி கீதா சிலநேரங்களில் மனம் எதெதையோ நினைக்கும் என் எழுத்துகள் ஒரு வித்தியாச பிக்சரைக்காட்டுகிறதோ
நீக்குவிரைவில் உங்கள் கொள்ளுப்பேரனையோ,கொள்ளுப் பேத்தியையோ கையில் ஏந்தும் பாக்கியம் வாய்க்கட்டும்.
பதிலளிநீக்குஉங்கள் வக்கு பலிக்கட்டும்
நீக்குபட்டுப்பாப்பாவைத் தூக்கிய நேரம் உங்கள் பேரனுக்கும் விரைவில் குழந்தை பிறந்து நீங்கள் தூக்கிக் கொஞ்சுவீர்கள். குழந்தைக்கு எங்கள் ஆசிகளைத் தெரிவித்து விடுங்கள்.
பதிலளிநீக்குஎனக்குத் தெரியும் உங்கள் ஆசிகள் என்றும் உண்டு என்று
பதிலளிநீக்குஅழகிய படம் ...ரசித்தேன்
பதிலளிநீக்கு/அழகிய படம்/நெஞ்சாரப் பொய்தன்னை சொல்ல வேண்டா
பதிலளிநீக்குநான் பல முறை ரசிக்கவும் தான் அழகான படம் என்று கூறினேன் ..பொய் அல்ல ...
நீக்கு