திரு .சித்ரனின் வலைப்பதிவுகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன் . சிகரெட் புகைப்பது பற்றி அவர் எழுதியதைப் படித்தபோது எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது .கோவாவில் ஒரு நாள் நான் ஒரு ஹோட்டல் லௌஞ்சில் புகை பிடித்துக்கொண்டிருந்தேன் . ஒரு பெரியவர் நான் புகைப்பதை சற்று நிறுத்த முடியுமா என்று கேட்டுக்கொண்டார் , நான் மன்னிப்பு கேட்டு சிகரெட்டை அணைத்து. விட்டேன் அவர் யாரிடமும் சிகரெட் புகைக்கவேண்டாம் என்று அறிவுரை கூறுவது இல்லை என்றார் . அதற்கு ஒரு கதையும் சொன்னார் . ஒரு முறை அவர் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு வாலிபன் விடாமல் புகைத்துக்கொண்டிருப்பதை பார்த்துக்கேட்டாராம் , ஒரு நாளில் எவ்வளவு சிகரெட் புகைக்கிறார் என்று.. அவன் சுமார் 15 முதல் 20 வரை இருக்கும் என்றானாம் . சிகரெட்டின் விலையை கேட்டு அவர் ஒரு நாளைக்கு சுமார் ரூ .50/-வரை செலவு செய்பவர் ஒரு மாதத்துக்கு ரூ 1500/- வீதம் வருடத்துக்கு ரூ 18000/- என்றும் பத்து வருடங்களில் அது சுமார் 18 லட்சம் ஆகுமென்றும் அதனை சேர்த்து வைத்தால் ஒரு வீடு கட்டிக்கொள்ளலாம் என்றும் அறிவுரை கூறினாராம் . சற்று நேரம் ஒன்றுமே பேசாமல் இருந்த அந்த வாலிபன் பெரியவரிடம் அவர் எவ்வளவு வீடு கட்டியிருக்கிறார் என்று கேட்டானாம் .தினப்படி காலம் தள்ளுவதே கடினமாக இருக்கும்போது வீடு எங்கே கட்டுவது என்று பெரியவர் கூறினாராம் . அதற்கு அந்த வாலிபன் தான் மூன்று வீடுகள் கட்டியிருப்பதாக சொன்னானாம .
அதன் பிறகு பெரியவர் யாரிடமும் சிகரெட் புகைப்பது பற்றி அறிவுரை கூறுவதை நிறுத்திவிட்டாராம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக