யாரும் செருக்கொழியர்க
வெண்ணிற மேனியாள் எனக்கு
மிளிரும் நீலவானம் சரிதுகில்
பன்நிறம் தெரியப பதித்த மணிகள்
மின்னும் தாரகை நல்லணிகலன்
எனக்கு நிகர் யாரே இப்புவிமீதே எனவே
உன்னாது இயம்பும் மதியும் --கிளியே
கறை துடைத்த மதி வதனம் அவள் மேனிக்கணியும்
பட்டோ மற்றோ பொலிவுறும் பேருண்மை ---ஆங்கு
இதழிலோடும் புன்னகையும் நன்னகையாம்
வண்டென விரைந்தாடும் மலர் விழிகளும்
கண்டதும் கவி பாடத்தூண்டும் ---என்
காதல் ஜோதி ! கன்னல் மொழியினள்---அவள்
காண்பார் கண் கூசும் பேரெழில் ---கண்டும்
செருக்கொழிந்தாளிலை -- ஏன் ?
சிந்தை கவர்ந்த என் பூங்கொடியாள் தன
நடை குரல் அதரம் கண்டும் -ஈண்டு
தோகை மயிலின் களிநடம் குறைந்திலை
கானக்குயிலின் இன்னிசை குறைந்திலை
கொவ்வைக்கனியதன் செம்மையும் குறைந்திலை --ஏன் ?
கட்டழகன் எந்தன் கொட்டமடக்க
வட்டமிடும் கழுகன்ன சுற்றி வரும்
நான்முகன் திட்டமெல்லாம் தரை மட்டம்
இயற்கையின் படைப்பினில் எனதவள் சிறந்தவள்
கண்கூடு தேவையில்லை அத்தாட்சி இதற்கு !
யாரும் செருக்கொழியர்க -- யானும் ஒழிகிலேனே .
Sir,
பதிலளிநீக்குஉங்கள் தமிழ் அபாரம். வாழ்த்துக்கள்.
உங்கள் பேரன் அல்லது தோழரின் உதவியுடன், "alignment" சரி செய்து கொள்ளுங்கள். இடப்பக்கம் காலியாக உள்ளது. Left justify செய்ய வேண்டும். பதிவு இடப்பக்கமிருந்து துவங்குவது போல்.
வேண்டாம் வேண்டாம் செருக்கொழிய வேண்டாம்.
பதிலளிநீக்குஇயற்கையின் பேரெழிலுக்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல தலைவியின் அழகு - என்னும் காதல் செருக்கு, கவிஞனுக்கே உரிய கம்பீரம் ,..
அபாரம் GMB சார்.
இன்னும் கொஞ்சம் பாரா பிரித்து எதுகை மோனை இயைந்து வர எழுதினால் சங்கப் பாடல் தான்.