எதைத்தான் எழுதுவது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எதைத்தான் எழுதுவது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 23 ஜனவரி, 2018

எழுதாவிட்டால் என்னதான் நடக்கும்



                    எழுதாவிட்டால்  என்னதான்  நடக்கும் 
                  --------------------------------------------------------------

மூன்று நாட்கள் வலைப்  பக்கமே வர முடியவில்லை  உள்ளூரில் இருக்கும் உறவுகளுக்கு  நாங்கள் அவர்களை சந்திக்க செல்வதில்லை என்னும்  ஆதங்கம்  ஒரு முறை வெளியே போகும் போது கூடியவரை  பல செயல்களையும்  க்ளப் செய்வது  வழக்கம்  மனைவிக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்ய வேண்டி டாக்டர் எழுதிக் கொடுத்திருந்தார் அதற்கு இரண்டு முறை செல்ல வேண்டும்  காலி வயிறுடனும்   உணவு உட்கொண்டபின்னும்  பரிசோதனைக் கூடம்  வீட்டிலிருந்து சுமார் 25 கி மீ தூரம்   அங்கு செய்தால் செலவை பிஎச் இ எல் ஏற்கும் மனைவியின்  அக்கா வீட்டுக்குச் சென்றோம்   மதிய உணவு அங்கே மாலை வேலை முடித்து வரும் மகன் பிக் அப் செய்வான் மனைவியின் அக்கா  வீட்டில் ஹோம்  தியேட்டர் இருக்கிறது எல்லாமே இன்றைய சூழலுக்கு ஏற்ப அப் டு டேட்  பாடல்கள் பல கேட்டோம்  கர்நாடக சங்கீதம்   மேற்கத்ட்க்ஹிய இசையுடன்   மனைவியின்  அக்கா பையனுக்குப் பிடித்தது ப்யூரிஸ்டுகள் விரும்பமாட்டார்கள் ஆனால் சங்கீத வாத்திய இசை துல்லியம்   இது குறித்து வலையில் கருத்துகள் இருந்தன எனக்கு திரையிசைப் பாடல்களில்  கர்நாடக இசையின்   சாயல் இருந்தால் ரசிப்பேன்  ஒரு மாற்றத்துக்கு நான்  ரசிக்கும் பாடல்
பாலமுரளி கிருஷ்ணா சுசீலா குரலில்  தங்கரதம் வந்தது

p



என்ன எழுதுவது என்னும் சங்கட மிருந்தது எதை வேண்டுமானாலும் எழுதலாம்  என்றபடி பின்னூட்டங்கள் இருந்தன  ஒரு வேளை நான்  எழுதாவிட்டால் என்ன நடக்கும்   ஒரு சின்ன கற்பனை
 ஜீஎம்பி எழுதுவதில்லை  என்னும் செய்தி கேட்டவுடன்
செய்தி  வீட்டுப்பரண்மேல் ஏறியது  மனைவியும் குழந்தைகளும் வீட்டு முற்றத்தில் வீழ்ந்தனர் தொழுவத்தில் பசுவும் கன்றும்  கயிறு அறுத்து ஓடியது  காசியில் கங்கை  கலங்கி ஓடியது ஒரு காசின் பரப்பு வானம் ஓட்டையாகிற்று காரணம்  தெரியாமல் வலைஞர்கள் திடுக்கிடுகின்றனர் மெல்ல மெல்ல காரணம் புரியத்தொடங்க  ஜீஎம்பி வீட்டின் முன்   வலைப்[ பதிவர் கூட்டம்  தாள் வில்லை எழுதுங்கள் எழுதுங்கள் என்னும்  கோஷம் எங்கும் சட்டென்று ஒரு அடி விழ விழித்துப் பார்த்தால்  மனைவி என்னாச்சு என்னாச்சு என்று கேட்கிறாள்  கண்டது கனவில் வந்த நிமித்தங்கள் என்றதும்  சப்பென்று போயிற்று

எதை எழுதுவது என்று நினைத்தவன் இதையே எழுதத் துணிந்தேன்
என் மச்சினி வீட்டுக்குப் போனபோது அங்கு வைக்கப் பட்டு இருந்த விநாயகர் ஓவியம் என்னை ஈர்த்தது ஏன் என்றால் அது நான்  வரைந்து சகலைக்குக் கொடுத்தது இப்போது அவர் வீட்டில் அவர் இல்லை ஆனால் நான்  வரைந்த ஓவியம்  இருக்கிறது 
நான் வரைந்த ஓவியம் மேலே 

என் மனைவிக்கு இந்த ஆண்டு ஒரு காலண்டர் பரிசாக வந்தது  அதில் என்ன விசேஷம்  இது மத்ரையில் இருந்து கொண்டுவரப்பட்டு என் மனைவிக்கு  பரிசாகக் கொடுக்கப் பட்டது  அதைப் பார்த்ததும் என்கைகள் துறு துறுக்கத் தொடங்கியது அதில் இருந்த ஓவியங்களை தீட்ட வேண்டும் போல் இருந்தது ஒவ்வொரு பக்கமும்  மதுரைக் க்லோவில் மூர்த்திகள் அத்தனைஅழகு  அதில் ஏதாவது ஒன்றையாவது கண்ணாடி ஓவிய மாக்க வேண்டும் போல் ருக்கிறதுஆனால் இப்போதெல்லாம் ஓவியம்தீட்ட  கையும் கண்களும்  ஒத்த்ழைப்பதில்லைஇருந்தாலும்  முயற்சி செய்யலாம்  என்றிருக்கிறேன் 
எத்தனை காலண்டர்கள் வந்தாலும்   தேதி கிழிக்கும்படியான காலண்டர் வந்தால்தான் திருப்தி