Sunday, August 26, 2018

ஒண்ணுமே புரியலே


                                        ஒண்ணுமே புரியலே இந்த உலகத்திலே
                                        ---------------------------------------------------------------
   ஆண்டவன் அவதரிப்பது துஷ்ட நிக்கிரகம்  சிஷ்ட பரிபாலனம்  செய்ய என்று கூறுகிறார்கள்  பகவத் கீதையிலும்    நல்லாரைக் காப்பதற்கும் கெட்டவரைக் கரந்தொடுக்குவதற்கும் , தர்மத்தை நிலை நாட்டுவதற்கும் யுகந்தோறும் நான் அவதரிகிறேன் என்று கூறுகிறார் (அத்தியாயம் 4 சுலோகம் 8)  எனக்கு ஒரு ஐயம் எழுகிறது நல்லார் எனப்படுபவர் யார்கெட்டவர் எனப்படுபவர் யார்
அவதாரக்கதைகள் என்று எல்லா அவதாரங்கள் பற்றியும் எழுதி இருந்தேன்  அதில் வாமனாவதாரத்தை  மீள் பதிவாக்குகிறேன்
 
        
ஆதிசிவனால் மூவுலகாள  வரம் பெற்ற
         திரி தூண்டி விளக்கணையாது காத்த கோயில் எலி,
         இரணியன் மகன், பிரஹலாதன் மகன், விரோசனன் 
         மகன் மகா பலியாகப் பிறந்தான்.( தது )

பெற்றவரம்  பலிக்க, வானவரையும் ஏனையவரையும் 
வென்று, மூவுலகாளும் பலி சக்கரவர்த்தி ஆனான்

          வானவர்களின் தாய் அதிதி, அது கண்டு
          தன் மக்கள் நிலை கண்டு வருந்தி
          கச்சியப்ப  முனிவரிடம்  முறையீடு செய்ய,
          அவர் நோன்பு நோற்று, திருமாலை வழிபடு
          வழி ஒன்று பிறக்கும் என்றார்.அவளும் வழிபட,

திருநீலகண்டன்  அருள் பெற்று, மூவுலகாளும் பலி,
ஆணவத்தில் திளைக்கும்போது, அவனை நான்
அடக்குவேன், அதற்கென நாள் வரும்போதுன்
வயிற்றில் நான் வந்துதிப்பேன், என்றுரைத்த திருமால்,
அதிதி மகனாக வாமனாவதாரம் எடுத்தார்.

          
வரம் மூலம் பெற்ற ஆட்சி நிலைக்க,
          
அசுவமேத  யாகம் நடத்தி, யார்
          
எதைக் கேட்பினும் நான் அதனைத் தருவேன்,
       
   என்று கூறி ,அதனைச் செய்தும் வந்தான்  பலி.

தக்க தருணம் வேண்டி நின்ற வாமனரூப
மகாவிஷ்ணு மகாபலியின் யாகசாலை வர,
வணங்கி வரவேற்கப்பட்டு , வேண்டியது
கேட்டுப்பெற, , வேண்டிக்கொள்ளப் பட்டான்.

          
தான் ஒரு பிரம்மசாரிப்  பார்ப்பனன்,
          
அவன் வாழ மூன்றடி நிலம் தந்தால்
          
அதுவே போதும் நலமாயிருக்க என்ற,
          
வாமனனுக்கு அது அளிக்க வேண்டாம்
          
வந்திருப்பவன் பெருமாள் , அவனுன்னை
          
அழிப்பான் என்று அறிவுரை  வழங்கினார்
          
குல குரு சுக்கிராச்சாரியார்.

சொன்ன சொல் தவறேன், திருமாலுக்கே என்
தானம் என்றால் எனக்கது பெருமை, என்
குலம் தழைக்கும் என்றே  கூறிய  மகாபலி,
தானம் தர, நீர் வார்த்துத் தர  தயாராக
கிண்டி நீரை எடுக்க, வண்டாக மாறி,
அதன் துவார மறைத்தார், சுக்கிராச்சாரி .

           
கிண்டி அடைப்பை நீக்க, எல்லாம்
           
அறிந்த மாலும் தருப்பையால்  அதன்
           
துவாரம் குத்த ,கண்ணொன்று  குருடாகி
           
அலறியடித்து வெளியே வந்தது வண்டு.

மூன்றடி நிலம் பெற,
வரம் பெற்ற வாமனன்
நெடிதுயர்ந்து  ஓரடியாய்
வான மளந்து ,மறு அடியாய்
பூமி அளந்து ,மூன்றாம் அடிக்குக்,
கால் எங்கே வைக்க என்று
மகாபலியிடம்  வினவினான்.

          
கைகூப்பித் தலை வணங்கி
          
சொன்ன சொல் தவற மாட்டேன்
          
தங்கள் மூன்றாம் அடி  என் தலை மேல்
          
வைக்க , யான் பெருமை கொள்வேன்
          
என்று கூறிய பலிச்சக்கரவர்த்தி
          
பாதாளம் ஆள வரம் ஈந்து அவன்
         
தலை மேல் கால் வைத்தான் பெருமான்.
           ================================
=
வரம்பெற்று சிறப்பாக  ஆண்ட மஹாபலி கெட்டவனா  அவன் அசுர குலத்தில் பிறந்ததால் கெட்டவனா  பாரோர் போற்ற நாடு  ஆண்டவன் கெட்டவனா என்னால் கொடுக்க முடிந்ததைக் கொடுப்பேன்  என்று சொல்வது கெட்டவனின்  அடையாளமா  அவனைஅழித்தொடுக்க  வாமன அவதாரமெடுத்து பாதாள உலகத்துக்குள் அழுத்திய வாமனன்செயல் நல்லதா தேவர்களின்  தாய் அதிதிக்கு வரம்கொடுப்பதுதான்  துஷ்ட நிக்கிரகமா 
இதையெல்லாம் மீறி மக்கள் மனதில் வாழும்பலிச்சக்கரவர்த்தி துஷ்டனா அவன்நினைவைக் கொண்டாட ஆண்டுதோறும் விழா எடுக்கும் மக்கள்  அறிவிலிகளா
 ஆண்டவன் செயலில் குறை காணும் என்னைப்போல் இருப்பவர்கள் தவறு செய்கிறோமா  
 சுதந்திரமாக சிந்திப்பதும்   பழைய கோட்பாடுகளுக்கு அடிமையாகமல்  இருப்பதும் தவறா 
ஒண்ணுமே புரியலே  இந்த உலகத்திலே
    

67 comments:

 1. இதற்கு விளக்கமான பதில் எழுத வேண்டும். பின்னொரு சமயம் பார்க்கலாம். சரியான புரிதல் இல்லாமல் வந்திருக்கும் சந்தேகம்.

  ReplyDelete
  Replies
  1. எந்த பதிலானாலும் நேரடியாக பதில் இருக்கும் படி எழுத வேண்டுகிறேன் எனது ஐயப்பாடுகள்சரியில்லை என்றுசொல்ல நேரடி பதில் சொல்ல வேண்டுகிறேன்

   Delete
 2. தங்களின் சிந்தனை நன்று

  ReplyDelete
  Replies
  1. உங்கள்கருதை தெரிவித்திருந்தால் இன்னும் நலமாக இருந்திருக்கும் வருகைக்கு நன்றி

   Delete
 3. உங்களின் இச்சிந்தனை எங்களையும் அதிகம் சிந்திக்க வைத்தது.

  ReplyDelete
  Replies
  1. சிந்தனை ஒரு நல்ல பலனைக் கொடுக்கட்டும்

   Delete
 4. இருக்கா...? இல்லையா...? - முதலில் இதில் ஏதேனும் ஒன்றில் முடிவு செய்து நிற்க வேண்டும்...

  இல்லையென்றால் குழப்பம் வரத்தான் செய்யும் :-

  உள்குவா ருள்ளத்தானை யுணர்வெனும் பெருமையானை
  உள்கினே நானுங்கண்பா நுருகினே நூறியூறி
  எள்கினே நெந்தைபெம்மா நிருதலை மின்னுகின்ற
  கொள்ளிமே லெறும்பெனுள்ள மெங்கனங் கூடுமாறே

  - அப்பர் பெருமான் (நாலாம் திருமுறை)

  ReplyDelete
  Replies
  1. அருமையான பதில் டிடி.

   Delete
  2. ஆனால் எனக்குத்தான் புரியவில்லை ஒரு வேளை புரியாமல் இருப்பதுதான் சரியோ

   Delete
 5. எந்த இடத்திலும் நாம் நின்று அந்த இடத்தில் அவன் நடந்துகொண்டதை நியாயப்படுத்த முடியும். அதுதுரியோதன்ன் இடமாயினும் சரி, ராவணன் இடமாயினும், வாலி, தாரை, சுக்ரீவன், கர்ணன், இரண்யாட்சகன், கம்சன், கண்ணன், இராமன், கைகேயி.....

  நாம் தர்மத்தின் பக்கம் நிற்கிறோமா என்பது நம் மனசாட்சிக்குத்தான் தெரியும்.

  அடுத்து உங்களிடமிருந்து, ஒருவன் மனைவியை ஆசையில் அபகரிப்பது ஒரு பெரிய குற்றமா?, அரசன் என்றால் அனைத்து குடிகளும் சொந்தம்தானே, இதற்காக இறைவன் ராமனாக அவதரித்து ஒரு குலத்தையே கொல்லவேண்டுமா. இராவணனின் மேன்மைகள் எத்தனை, அது தவறா, ஒண்ணுமே புரியலை உலகத்திலே என்ற பதிவையும் எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நெ.த. ஏற்கெனவே இதெல்லாம் பலர் கேட்டு விட்டார்கள். மணிரத்னம் ஒரு படமே எடுத்திருப்பதாகவும் சொல்கின்றனர். :)

   Delete
  2. @டிடி இருக்கா இல்லையா என்பதல்லகேள்வி எனக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகங்கள் ஸ்ட்ரெட்யிட் ஃபார்வார்ட் படித்ததும் கேட்டதும் சந்தேக அடிப்படைஇதைதெளிவு படுத்தவெவ்வேறு இடங்களில் சொல்லப்பட்டவற்றைப்படி என்று சொல்வது சரியா

   Delete
  3. @நெத கேடகப்பட்டிருக்கும் சந்தேகங்களுக்கு இதுபதிலா மனசட்சி என்பதே நாம்நினைப்பதை நியாயப்படுத்த உபயோகிக்கும் ஒருபதில் தர்மம் அதர்மம் என்பதற்கு வெவேறு அளவு கோல்கள் உள்ளதா கேள்விக்கு எதிர் கேள்வி பதிலாகாது

   Delete
  4. @கீதா யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் சந்தேகங்கள்படித்ததுகேட்டதிலிருந்து உதிப்பது

   Delete
  5. ஜி.எம்.பி. சார்.... உங்க சிந்தனையே வேறு திசையில் செல்லுது. அதுக்கு எப்படி பதில் எதிர்பார்க்கிறீங்க?

   'கடவுள் இருக்கானா காட்டு' என்று காட்டச் சொல்பவர்களுக்கெல்லாம் காட்ட யாரால் முடியும்? ஒவ்வொருத்தருக்கே அந்த அனுபவம் ஒரு துளி, மொத்த வாழ்க்கையில் வருவதே அரிது.

   என் யோகா மாஸ்டர் எனக்கு தியானம் பழகிக்கொடுக்கும்போது, ஒரு வாரம் ஆனபிறகு, ஒண்ணும் தெரியலையே என்றேன். அதுக்கு அவர், இதுதான் பாதை, இப்படியே செல். சிலருக்கு உடனே லபிக்கும், சிலருக்கு போய்க்கொண்டே இருக்கணும், இந்தப் பிறவியிலோ அல்லது தொடர்ந்த பிறவிகளிலோ லபிக்கும், ஆனால் இதுதான் பாதை என்று சொன்னார். பொதுவா நம்பிக்கையாளர்கள் இப்படித்தான் சொல்வதை வைத்து, சொல்பவர்களை வைத்துப் புரிந்துகொண்டு தொடர்கின்றனர். இறை உணர்வு என்பது முழுக்க முழுக்க நம்பிக்கையின்பாற் பட்டது.

   ஆனால் 'கடவுள் இல்லை' என்று சொல்பவர்களையும் குறுக்குக் கேள்விகள் கேட்பவர்களையும் அவதானித்தீங்கன்னா, அவங்க, தங்களோட வாழ்க்கையில், தாங்கள் நம்புவதை முழுமையாக கடைபிடிக்க மாட்டாங்க, அவங்களால வீட்டில் ஒருவரையும் மாற்ற இயலாது. பசங்க, 'கடவுள் இல்லை' என்ற கோட்பாட்டை ஏற்றுக்கொள்வதுபோல் தோன்றும், ஏனென்னில் கோவிலுக்குப் போகணும், இந்த இந்த மாதிரி கர்மங்களைச் செய்யணும் என்ற கஷ்டத்திலிருந்து (ஃபிசிகல் நியதிகளிலிருந்து) விடுதலை என்பதால்.

   உங்கள் இடுகையே எதிர்மறை இடுகை. இதுல என்ன யோசிக்கவோ ஆதரிக்கவோ இருக்கு? நமக்கோ மஹாபலிச் சக்கரவர்த்தியின் முழு வரலாறு தெரியாது. நாம் அந்தக் காலத்திலும் இருந்ததில்லை. அப்போ, நாமே ஒரு பகுதியைச் சொல்லி, இது நியாயமா தர்மமா என்று கேள்வி கேட்பதே அர்த்தமில்லாதது.

   எது நல்லது என்பதிலேயே உங்களுக்கு அடிப்படைச் சந்தேகம் இருக்கிறது. அப்புறம் என்ன சொல்ல?

   Delete
  6. கடவுள் இருக்காரா இல்லையா என்பது என் கேள்வியல்ல எதையும் சற்றுஆராய்ந்துபார்ப்பது என்வழக்கம் இக்கதையிலும் அதுதான் ஒருநல்லவன் என்று ஏற்றுக்கொள்ளப்படட்டவனை அழிக்க ஒரு அவதசரமா என்பதே என் சந்தேகம் பகவத் கீதையை நான் படித்ட்க்ஹு அட தமிழிலும் எழுதி இருக்கிறேன் நீங்கள் படித்தீர்களா கீதையை நான் மாற்றிச் சொல்ல இல்லை ஆனால் கீதையைச் சொல்வதிலும் அதைச் சொல்வதிலும் புரிந்துகொள்ள முயலும்போதுமேற்பட்ட சந்தேகங்களையும் எழுதி இருக்கிறேன் எதையும் ஏற்றுக் கொள்ளும்சுபாவம் எனக்கில்லை ந அறியாததையாராவது சொல்ல்ச்க் கூடும் என்றுதான் எதிர்பார்க்கிறேன்

   Delete
  7. @நெத நீங்கள் என்கீதைத் தொடரைவாசிக்க வில்லை என்று தெரிகிறது நீங்கள் விரும்பினால் கீதைக்கு ஒரு முன்னுரையையும் கீதை பற்றிய என் கருத்துக்கோர்வையையும்சுட்டிகளாகத் தருகிறேன் அவற்றையும் அதில் கண்டுள்ள பின்னூட்டங்களையும்வாசித்துப்பாருங்கள் என்நிலைப்பாடு பற்றிய உங்கள் எண்ணங்கள் சிறக்கலாம்

   Delete
 6. ம்ம்ம்.... உங்களுக்குப் பதிவுக்கு வரும் பதில்களைப் படிக்க ஆவலுடன் நானும்....

  ReplyDelete
  Replies
  1. எவ்வாறு பதில்கள் வரும் என்பதுமோரளவு யூகிக்க கூடியதே பதில்கள் என்ன சலனம் மனதில் ஏற்படுத்துகிறது என்பதே முக்கியம்

   Delete
 7. சுதந்திரமாக சிந்திப்பதற்கு உங்களுக்கு உரிமை உண்டு. நினைப்பவர்கள் உள்ளத்தில் இருக்கிறான் பெருமான்.

  நினைக்காதவர்களின் சந்தேகக் கேள்விகளிலும் இருக்கிறான்!!!

  ReplyDelete
  Replies
  1. இந்த மாதிரி பின்னூட்டங்கள் பதிவை சரியாகப் புரிந்து கொள்ளாததால் ஏற்படுகிறதுஎங்கும் இருப்பதாகவோ இல்லையென்றோ சொல்ல வில்லையேஇருந்தால் என்றும் என்னுள்ளும் இருக்க வேண்டுமல்லவா

   Delete
 8. ஸ்ரீராம் அழகாய் சொல்லி இருக்கிறார்.
  இறைவன் இருக்கிறான் என்பவர்களை விட இல்லை என்று சொல்பவர்கள் அதிகமாய் நினைக்கிறார்கள்.

  உங்களுக்கு அவனைபற்றி நினைக்க சுதந்திரம் இருக்கிறது.

  ReplyDelete
 9. ஓணபண்டிகைக்கு அழகான பதிவை போட்டு உலகளந்த பெருமாளை நினைத்து விட்டீர்கள்.

  நினைப்பவர் மனதில் இருக்கிறார்.
  எங்கும் எதிலும் இருப்பவர்.

  ReplyDelete
  Replies
  1. இப்படித்தான் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் பலரும் போய் விடுகிறார்கள்

   Delete
  2. @கோமதி அரசு /ஓணபண்டிகைக்கு அழகான பதிவை போட்டு உலகளந்த பெருமாளை நினைத்து விட்டீர்கள்./ உலகளந்தபெருமாளை நினைத்ததால் அல்ல பதிவு எப்படி நினைக்கிறேன் என்பதைதான் எழுதி இருக்கிறேன் பதிவைப்புரிந்து கொளாத பின்னூட்டமா இல்லை ப்உரிந்து கொள்ள விரும்பாத பின்னூட்டமா எனிவே வருகைக்கு நன்றி மேம்

   Delete
 10. நிறைய வேலைப்பளு இருந்ததால், உடனே இந்தப் பதிவிற்கு வரமுடியவில்லை... அனைவரின் கருத்துரைகளை வாசித்தேன்... இப்போது உங்களை பற்றி தான் எனக்கு ஒண்ணுமே புரியலே...!

  ReplyDelete
  Replies
  1. முதலிலேயே பதிவுக்கு வந்திருக்கிறீர்கள்குழப்பமில்லாதபின்னூட்டம் உதவியாய் இருந்திருக்கும்நானொரு திறந்த புத்தகம் சரியாக வாசிக்க வேண்டுகிறே

   Delete
 11. // வரம்பெற்று சிறப்பாக ஆண்ட மஹாபலி கெட்டவனா அவன் அசுர குலத்தில் பிறந்ததால் கெட்டவனா பாரோர் போற்ற நாடு ஆண்டவன் கெட்டவனா என்னால் கொடுக்க முடிந்ததைக் கொடுப்பேன் என்று சொல்வது கெட்டவனின் அடையாளமா அவனைஅழித்தொடுக்க வாமன அவதாரமெடுத்து பாதாள உலகத்துக்குள் அழுத்திய வாமனன்செயல் நல்லதா தேவர்களின் தாய் அதிதிக்கு வரம்கொடுப்பதுதான் துஷ்ட நிக்கிரகமா
  இதையெல்லாம் மீறி மக்கள் மனதில் வாழும்பலிச்சக்கரவர்த்தி துஷ்டனா அவன்நினைவைக் கொண்டாட ஆண்டுதோறும் விழா எடுக்கும் மக்கள் அறிவிலிகளா
  ஆண்டவன் செயலில் குறை காணும் என்னைப்போல் இருப்பவர்கள் தவறு செய்கிறோமா
  சுதந்திரமாக சிந்திப்பதும் பழைய கோட்பாடுகளுக்கு அடிமையாகமல் இருப்பதும் தவறா //

  கெட்டவனின் அடையாளமா...? இல்லையா...?

  துஷ்ட நிக்கிரகமா...? இல்லையா...?

  அறிவிலிகளா...? இல்லையா...?

  தவறு செய்கிறோமா...? இல்லையா...?

  அடிமையாகமல் இருப்பதும் தவறா...? இல்லையா...?

  உங்களின் கேள்விகளுக்கு நீங்களே முதலில் ஒரு முடிவிற்கு வாருங்கள்... பிறகு விவாதத்திற்கு அழையுங்கள்... அப்போது தான் மற்றவர்களின் எண்ணங்களையாவது தெரிந்து கொள்ளலாம் என்பது
  அடியேன் எண்ணம்...

  ReplyDelete
  Replies
  1. முடிவுக்கு வராததால் பதிவு அல்ல வாசகர்களின்நிலைப்பாடுகளைதெரிந்துகொள்ளவே எழுதியது விவாதத்துக்கு யாரையும் அழைக்கவில்லைநன்கேட்ட கேள்விகளையே எனக்கு திருப்புதல் சாமர்த்தியமோ

   Delete
 12. எனக்கொரு ஆசை... வேண்டுகோள் என்றே வைத்துக் கொள்ளுங்கள் ஐயா...

  1) கெட்டவனின் அடையாளமா...? இல்லையா...?
  2) துஷ்ட நிக்கிரகமா...? இல்லையா...?
  3) அறிவிலிகளா...? இல்லையா...?
  4) தவறு செய்கிறோமா...? இல்லையா...?
  5) அடிமையாகமல் இருப்பதும் தவறா...? இல்லையா...?

  மேற்படி உங்களின் கேள்விகளை தங்களின் துணைவியாரிடம் கேட்டு, அவர்கள் சொன்ன பதில்களை ஒரு பதிவாக போடுங்கள்... அங்கே மீண்டும் வந்து விவாதிக்கலாம்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. நானொரு சுதந்திரஎண்ணமுடையவன் விவாதம்விதண்டாவதமாகலாம் அதுஎனக்கு விருப்பமில்லைஎப்பவும் ஸ்ட்ரெய்ட் ஃபார்வார்ட் தான்

   Delete
  2. ?/நானொரு சுதந்திரஎண்ணமுடையவன் // இங்கே அனைவருமே சுதந்திர எண்ணம் உள்ளவர்களே! நீங்க ஒரு கருத்துச் சொன்னால் அதை மறுத்து யாரும் சொல்லக் கூடாது என நீங்கள் எதிர்பார்ப்பது சரியல்ல. உங்க மனைவியே அதை ஆதரிக்க மாட்டார் என்பதைத் தான் டிடி சொல்கிறார். உங்க மனைவிக்கு நீங்க சுதந்திரமாகக் கடவுள் நம்பிக்கையை அனுசரிக்க விட்டாற்போல் மற்றவர்களின் நம்பிக்கையிலும் நீங்க குறுக்கிடலாமா? முதல்லே உங்க மனைவியை இதை எல்லாம் நம்பச் சொல்லாதீங்க! அப்புறம் மற்றவர்களை மாறச் சொல்ல உங்களுக்குமுழு உரிமை உண்டு. அதோடு நீங்க ஏற்கெனவே ஒரு முன்முடிவில் இருக்கீங்க! ஆகவே அந்த முடிவை மறுத்து யாரானும் சொன்னால் உங்களால் ஏற்க முடிவதில்லை. ஏனெனில் நீங்க கடவுளரை நம்மைப் போல் ஓர் மனிதனாகவே நினைக்கிறீர்கள், பார்க்கிறீர்கள். தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையில் நடக்கும் போர் எனப் புரிந்து கொள்ளவில்லை. கடவுளர் அனைவருமே ஏதோ பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும் இறை நம்பிக்கை உள்ளவர்கள் ஓர் மூட நம்பிக்கையாலும், சின்ன வயசில் இருந்தே வீட்டில் பெரியவர்கள் ஏற்படுத்திய ஓர் எண்ணங்களாலும் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கிறார்கள் என உங்கள் நினைப்பு. இன்னும் சொல்லப் போனால் அறிவு ஜீவிகள் என்பவர்கள் பக்தி உள்ளவர்களால் மனித நேயம் காக்க முடியாது என்றும் சொல்வது உண்டு. சொல்லவும் செய்கின்றனர். ஆனால் உண்மையான பக்தியும் ஆன்மிகமும் உலக க்ஷேமத்துக்குத் தான் பிரார்த்திக்கும்.

   இன்னும் சில நாட்களில் துச்சாதனன் திரௌபதியைத் துகில் உரித்ததைக் கூட நியாயம் என்று நீங்கள் வாதிட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை. அசுரர்கள் யாரும் கெட்டவர்கள் இல்லை, நல்லவர்களே என்பதைக் காட்டவே மகாபலியின் மோக்ஷம் நிரூபிக்கிறது! அதே போல் தான் சூர சம்காரமும் பேசப்படும். சூரனைக் கொல்லாமல் குமரன் இரு கூறாக்கிச் சேவலாகவும் மயிலாகவும் மாற்றினான். உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே அசுர சக்திக்கும் தேவ சக்திக்கும் இடைவிடாத போர் நடந்து கொண்டே தான் இருக்கிறது. அசுரர்கள் ஜெயித்தால் உலகில் நன்மைகள் குறையும். உலக க்ஷேமத்துக்காகவே அசுர சம்காரம்!

   Delete
  3. கிட்டத்தட்ட ஒரே நாள், ஒரே நேரம் சில விநாடிகள் இடைவெளியில் பிறக்கும் இரட்டையருக்கே வாழ்வில் ஒரே விதமான அமைப்பு இருப்பதில்லை. படிப்போ, திருமணமோ, வேலை வாய்ப்போ, பண வசதியோ எதுவாக இருந்தாலும் ஒன்றாக இருப்பதில்லை. அந்தச் சில விநாடிகள் இடைவெளிதான் அவர்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. அதோடு கர்மா பலனும் சேரும்.

   Delete
  4. நான் இரு முறை நீண்ட மறு மொழிகள் எழுதினேன் ஏனோ அவை பப்லிஷ் ஆகுமுன் காணாமல்போய்விட்டது இருந்தாலும் உங்கள்பின்னூட்டத்தில் எனக்கு சரியாக விளங்காததுஇன்னும் சொல்லப் போனால் அறிவு ஜீவிகள் என்பவர்கள் பக்தி உள்ளவர்களால் மனித நேயம் காக்க முடியாது என்றும் சொல்வது உண்டு. சொல்லவும் செய்கின்றனர். ஆனால் உண்மையான பக்தியும் ஆன்மிகமும் உலக க்ஷேமத்துக்குத் தான் பிரார்த்திக்கும். நான் யாரையும் என் கருத்துகளை ஏற்றுக் கொள்ள வற்புறுதுவதில்லை அது உங்களுக்குத் தெரியும் என் எண்ணங்களை பகிர்கிறேன் என்னைப் பற்றிய எண்ணங்கள்தவறானவையோ என்னும் ஐயம் உண்டு நான் என்னை ஒருஅறிவு ஜீவியாகக் கருதியதில்லை ஆனால் நானாக எண்ணுவதைக் கூறுவதற்கு தயங்குவதும் இல்லை

   Delete
 13. பிரகலாதனின் பேரனான மஹாபலிக்கு பாணாசுரன் மகன். பிரகலாதன் கதை யாவரும் அறிந்ததே...

  தந்தையின் செல்வாக்கினால் அவன் செய்யும் அட்டகாசங்கள் எல்லை மீறிக் கொண்டிருக்க, மஹாபலி யாகம் செய்கிறான். யாகம் நிறைவுற்றால் ஏற்கெனவே மூவுலகம் ஆளும் மஹாபலி இந்திரப்பதவி அடைவான் என்று அறியப்படுகிறது.

  மஹாபலி விஷ்ணுபக்தன். ​ஆனால் தந்தையின் பாசத்தை மீறி நாராயணனின் மேல் பக்தி வைத்த ப்ரகலாதனுக்கும், மஹாபலிக்கும் வித்தியாசம், தான் பெற்றிருக்கும் வரங்களினால் நியாயம் மறந்த பலிச்சக்கரத்தி மகன் செய்யும் அட்டகாசங்களைக் கண்டிக்க மறக்கிறான்.

  மஹாபலி இந்திரன் ஆகிவிட்டால் பாணாசுரன் தான் அடுத்த சக்கரவர்த்தி. அவன் குணத்துக்கு அவன் சக்கரவர்த்தி ஆனால்?

  விஷ்ணுபக்தனுக்கு அருள்செய்து ஆட்கொள்ள வேண்டும். அதே சமயம் துஷ்டனை ஆட்சிக்கு வராமல் தடுக்கவேண்டும். அதற்கு அவனை ராஜ்ஜியமில்லாமல் செய்யவேண்டும். இதுதான் மஹாபலி கதை. இது உங்களுக்கும் தெரிந்திருக்கும். எல்லோருக்கும் தெரிந்த கதை. அப்புறமும் இது சரியா என்றால், என்ன சொல்ல?!

  ReplyDelete
  Replies
  1. தசாவதாரக் கதைகள் பதிவிடிருக்கிறேன் அதில் காணும் செய்திகள் எல்லாம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கராச்சாரிய ஸ்வாமிகள் அருளாசியுடன் வெளியிடப்பட்ட கதைகளிலிருந்துஎடுத்தாளப்பட்டது எங்கும் பாணாசுரன் கொட்டத்டை அடக்க பலிச்சகர வர்த்தி பாதாள லோகத்துக்கு அழுத்டப்பட்டக இல்லைதுஷ்டனை ஆட்சிக்கு வராமல் தடுக்க எடுக்கப்பட்ட அவதாரமென்று கூறப்படவில்லை உங்கள் பின்னூட்டம் நல்ல கற்பனையே கற்பனைக் கதைகளுக்கே கற்பனை எல்லோருக்கும் தெரிந்தகதை அல்ல பாணாசுரன் கதை இதைப்படித்தபின் தேடியபின் பல விஷயங்கள் தெரிய வந்தது அதற்குஎன் நன்றி ஸ்ரீ

   Delete
  2. http://aanmiga-payanam.blogspot.com/2012/03/blog-post.html

   பாணாசுரன் மகாபலிச் சக்கரவர்த்தியின் 100 புதல்வர்களில் மூத்தவன்!

   Delete
  3. தன்னை வெல்ல யாருமில்லை என்ற ஆணவத்தால் இந்திர பதவியை அடைய மகாபலி முயற்சி செய்யவே அவன் ஆணவத்தை அடக்கவே அவனை வாமன அவதாரத்தின் மூலம் அடக்க நேர்ந்தது. என்றாலும் அவன் சிரஞ்சீவிகளில் ஒருவன். இப்போதும் பாதாள லோகத்தில் வாழ்ந்து வருவதாக ஐதீகம். அவனுக்கு தண்டனை ஏதும் கொடுக்கப்படவில்லை! மார்க்கண்டேயர், வியாசர், பரசுராமர், அஸ்வத்தாமா, மகாபலி, விபீஷணன், அனுமன் ஆகிய எழுவரும் சிரஞ்சீவிகள் எனப்படுவர்.

   Delete
  4. //அவன் சிரஞ்சீவிகளில் ஒருவன். இப்போதும் பாதாள லோகத்தில் வாழ்ந்து வருவதாக ஐதீகம்.//

   பிரளய காலம் முடியும் வரை மஹாபலி பாதாள லோகத்தில் இருக்கவேண்டும் என்று சொன்னதாய் படித்த நினைவு!

   Delete
  5. //http://aanmiga-payanam.blogspot.com/2012/03/blog-post.html

   பாணாசுரன் மகாபலிச் சக்கரவர்த்தியின் 100 புதல்வர்களில் மூத்தவன்!//

   அக்கா.. இந்தக் கதையை இன்றே வாசிக்கிறேன்.

   Delete
  6. முதலில் எழுதிய பின்னூட்டங்கள்!?பாணாசுரன் மகாபலிச் சக்கரவர்த்தியின் 100 புதல்வர்களில் மூத்தவன்!//

   அக்கா.. இந்தக் கதையை இன்றே வாசிக்கிறேன்.

   Delete
  7. ?????? இதன் அர்த்தம் என்ன ஐயா?

   Delete
  8. ஐந்து கேள்விக்குறிகள் எங்கே மேம்

   Delete
 14. ஒரு க்ஷத்ரியனின் கடமை அநீதி தலைதூக்கும்போது அதை நசுக்குவது. இவனின் பிராரப்த கர்மா அவனை இதைச் செய்ய வைக்கிறது. அதற்கு அவன் காரணமல்ல. கர்மாவைச் செய்ய வேண்டியதுதான் அவன். பலன் அவனுக்கு கிடையாது. அதை அந்த ஷத்ரியன் செய்யத் தவறும்போது அவனுக்கு குரு போன்ற கடவுள் அந்தக் காரியத்தைச் செய்கிறார். மஹாபலி கடமை மறக்கும்போது இதுதான் நிகழ்கிறது.

  ReplyDelete
  Replies
  1. பலிச் சக்கரவர்த்தி கலத்தில் அநீடி தலை தூக்கியதாக எங்கும் வாசிக்கவில்லை அவன்யாகம் செய்தால் இந்திர பதவி அடையக் கூடும் என்னும்பயத்தில் வானவரின் தாய் அதிதி விஷ்ணுவை வேண்ட அவன் ஆணவத்தில் திளைக்கும் போது அவனைஅடக்குவேன் என்பதாகத்தான் கதை கேட்டத்சைக் கொடுப்பேனென்பது ஆணவமா அதற்காக தண்டனையா என்பதே என் கேள்வி மற்றபடி உங்கள் பதில் சரியாகத் தோன்றவில்லை கதகளில் வரும்கடவுளர்கள்செய்வது எல்லாமே ஏற்புடைத்து என்றுசொல்லஎன்னால் முடியவில்லை மற்றபடி யார் மனதையும் நோகடிக்க அல்ல என்பதிவு யாரும் பொய்ங்க வேண்டாம்

   Delete
 15. //:முடிவுக்கு வராததால் பதிவு அல்ல வாசகர்களின்நிலைப்பாடுகளை தெரிந்துகொள்ளவே எழுதியது விவாதத்துக்கு யாரையும் அழைக்கவில்லைநன்கேட்ட கேள்விகளையே எனக்கு திருப்புதல் சாமர்த்தியமோ //

  வாசகர்களின் கருத்தை இனிமேல் நீங்கள் எந்தப் பதிவு எழுதினாலும் அறிந்து கொள்ள முடியாது என்பதே என் எண்ணம்...

  காரணம் :-

  உங்களின் வயது...

  நன்றி ஐயா...

  ReplyDelete
  Replies
  1. என் வயது காரணமாகயாரும் பதில் கூறுவதுஇல்லை என்பது ஒரு சாமர்த்திய சமாளிப்பு என் கருத்துஎன் எழுத்தில் வயதெங்கே வந்ததுபதிவுகளில் உங்களிடம் இருந்துதெரிந்து கொள்ள முடியாது போனாலும் அவரவர் நிலைப்பாட்டை எடுத்துரைக்கும் வாசகர்களும் இருக்கிறார்கள்என்படே சரி

   Delete
 16. நீங்கள் சொல்லும் வாசகர்கள் யாரேனும் ஒருவர் விளக்கம் சொல்லட்டும்... அவர்களிடம் மேலும் தொடர்கிறேன்...

  ReplyDelete
 17. விளக்கம் சொல்ல வருபவர்கள் கீழ்கண்ட வினாவிற்கு பதில் சொல்ல வேண்டுகிறேன்...

  கூறினால் குறளின் சிறப்பை சொல்கிறேன்...

  சிந்தை உவந்து எதிர்... “என் செய” என்றான்...

  அந்தணன், “மூவடி மண், அருள் உண்டேல், வெந்திறலாய்! இது வேண்டும்” எனாமுன்

  “தந்தனென்” என்றனன்; வெள்ளி, தடுத்தான்...


  வெள்ளியா... யாரது...?

  ReplyDelete
  Replies
  1. http://www.tamilhindu.com/2011/07/kamban-sings-the-kural/

   கம்பனின் இந்தப் பாடல் விளக்கத்தைத் தமிழ் விர்சுவல் பல்கலைக்கழகப்பக்கங்களிலும், இந்தச் சுட்டியிலும் படித்து இன்புற்றிருக்கிறேன். வெள்ளி எனில் "சுக்கிரன்" என்பது அனைவரும் அறிந்தது தானே டிடி! :)))) நீங்கள் கொடுக்கும் விளக்கத்தைக் காண ஆவலுடன் காத்திருக்கேன். சுவாரசியமாகப் போகிறது.

   Delete
  2. மகாபலி மகாவிஷ்ணுவுக்குச் செய்த உதவி மூன்று அடி மண் அளித்தது. அது சிறியது. ஆனால் அவ்வுதவிப் பயன் மகாவிஷ்ணுவின் சால்பு போல, மூவுலகத்தையும், சிரஞ்சீவித் துவத்தையும், பாகவத உத்தமர்களில் ஒருவன் என்னும் பெரும் பதவியையும், என்றென்றும் உலகத்தாரால் போற்றிக் கொண்டாடி வணங்கப் படக் கூடிய பெருமையையும் எல்லாம் மகாபலிக்கு அளித்தது. அது தான் உயர்ந்தவர்க்கு உதவிய உதவியின் பயன்!//

   இது அந்தக் கட்டுரையிலே சொல்லி இருக்கும் கருத்து.

   Delete
  3. //மடியிலா மன்னவன் எய்தும் அடி அளந்தான்
   தாஅயதெல்லாம் ஒருங்கு.//

   பரணர் பாடியது:

   மாலும் குறளாய் வளர்ந்து இரண்டு மாண் அடியால்
   ஞாலம் முழுதும் நயந்து அளந்தான் – வால் அறிவின்
   வள்ளுவரும் தம் குறள் வெண்பா அடியால் வையத்தார்
   உள்ளுவ எல்லாம் அளந்தார் ஓர்ந்து.

   வள்ளுவரும் சொல்லி இருக்கார். திருவள்ளுவ மாலையில் பரணரும் பாடி இருக்கார்.

   Delete
  4. //பொன்முடியார் பாடியது:

   கான் நின்ற தொங்கலாய்! காசிபனார் தந்தது முன்
   கூ நின்று அளந்த குறள் என்ப – நூன்முறையான்
   வான் நின்று மண் நின்று அளந்ததே வள்ளுவனார்
   தாம் நின்று அளந்த குறள்.// மண்ணில் நின்று உலகம் அளந்த வாமனக் குறளைப் பற்றியும் அவர் தம் தந்தை காசியப முனிவர் பற்றியும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

   Delete
  5. அதற்கு ஈடாக வள்ளுவனின் குறள் அமைந்தது என்கிறார்.

   Delete
  6. அம்மா... அற்புதம்... நன்றி...

   வியாபார பயணத்தில் உள்ளேன்... மற்றவை நேரம் கிடைக்கும் போது...

   உடன் மறுமொழி இல்லையென்றால் கோபித்துக் கொள்ள வேண்டாம் அம்மா... Please...

   Delete
  7. ஒரு கேள்வி என்னவெல்லாம் பதில்களைக் கொண்டு வந்து சேர்க்கிறதுநல்லதோர் கருத்தாடல்கள் பலிச் சக்கர வர்த்தியின் ஆணவம் (அதை ஆண்வம் என்று ஒப்புக்கொள்ள மனம் இடம்தராவிட்டாலும்) அடக்க ஒரு அவதாரமென்று கூறி சமாதாம் அடைய வேண்டியதுதான்
   ஒரு முறை திருமதி கீதா சம்பசிவத்தை ஒரு நண்பர் துறை போகியவர் என்று குறிபிட்டிருந்தார் ஆனால் அவர் ஒரு நிறைகுடம் என்று தெரிகிறது

   Delete
  8. கோபமெல்லாம் இல்லை டிடி. மெதுவா வாங்க. உங்களுடைய விளக்கத்தைக் காண ஆவலுடன் காத்திருக்கேன். நன்றி.

   Delete
  9. ஜிஎம்பி ஐயா, நீங்க கம்பராமாயணம் அறிந்தவர் என ஏற்கெனவே சொல்லி இருக்கீங்க! உங்களுக்குத் தெரியாததையா நான் சொல்லி இருக்கேன். அதுவும் மேற்கோள் தான் காட்டி இருக்கேன். சட்டுனு படிச்சது நினைவில் வந்தது! அவ்வளவே!

   Delete
  10. நான் கம்பராமாயணத்தை ஆங்காங்கே படித்திருக்கிறேன் எனக்குத் தெரியாததை தெரியாதுஎன்றுசொல்வதில் எனக்கு வெட்கமில்லை

   Delete
 18. உங்களுக்கு நிஜமாகவே புரியவில்லையா? அல்லது புரிந்து கொள்ள விருப்பமில்லையா? ஏனென்றல் இரண்டு வருடங்களுக்கு முன்பும் இதே கேள்வியை நீங்கள் எழுப்பினீர்கள். பின்னூட்டங்கள் நூறுக்கு மேல் வந்தன. நான் எப்போதும் போல் கடைசியாகத்தான் பதில் சொல்ல வந்தேன். உங்களுக்கு கோபம் வந்து,"போதும், to learn we should unlearn first" என்று தொடங்கி நீண்ட பின்னூட்டமிட்டு முடித்திருந்தீர்கள். எப்படியோ எங்களுக்கு பொழுது போகிறது. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. என் பதிவுகளும் கருத்துகளுமுங்கள்நினைவில் நிற்கிறது என்றால் என்பதிவைப் பற்றி நினைக்கிறீர்கள் என்றுதானே அர்த்தம் அந்த வகையில் திருப்தி அங்கே சொன்ன மறுமொழியே இங்கு ஒரு பொருளை விளங்கிக் கொள்ள that is to learn new concepts you must unlearn first what has been implanted in your thoughts பதிவு எழுதுவதுஎன் கடமை அதற்குப் பின்னூட்டக் கருத்துகள் வாசகரின் வெளிப்பாடுகள் இதில் கோபம் என்று நினைப்பது அர்த்தம் இல்லாதது கடைசியாக பதில்சொல்ல வருவதிலொர் அட்வாண்டேஜ் பிறர்கருத்துகளைப் பின் பற்றுவதிலிருக்கும் சாத்தியம்

   Delete
  2. //கடைசியாக பதில்சொல்ல வருவதிலொர் அட்வாண்டேஜ் பிறர்கருத்துகளைப் பின் பற்றுவதிலிருக்கும் சாத்தியம்//

   என் வேலைகளை முடித்து விட்டு நான் வருவதற்குள் பலர் பின்னூட்டமிட்டு விடுவார்கள். நான் மற்றவர்கள் கருத்துக்களால் பாதிக்கப்படுவது கிடையாது. என்ன பதில் எழுத வேண்டும் என்று மதில் ஓட்டி, எழுதி, எழுதி, திருத்தி வெளியிடுவதால்தான் நேரமாகிறது. டி.டி. அவர்களின் திருக்குறளுக்கு என் பின்னூட்டத்தை படித்தால் இது புரியும்.

   Delete
  3. / டி.டி. அவர்களின் திருக்குறளுக்கு என் பின்னூட்டத்தை படித்தால் இது புரியும்./ எந்தப்பதிவில் தெரியவில்லையே

   Delete
 19. //எனக்குத் தெரியாததை தெரியாதுஎன்று சொல்வதில் எனக்கு வெட்கமில்லை//
  நமக்கு தெரியாததை யாரோ தெரிந்து கொண்டு விட்டார் என்றால் அவருக்கு அதை விளக்கத் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. உடனே அவரை செம்மறியாடு என்று சொல்வது நியாயம் இல்லை.

  ReplyDelete
  Replies
  1. நான்சொல்லாததை சொன்னதாக கற்பனை செய்வதுஅதாவது வாசகர்களை செம்மறியாடு என்று சொன்னதாகச் சொல்வது எதையோ பிரதிபலிக்கிறது ஒரு வேளைபுரியாததால்வரும் இயலாமையோ

   Delete
  2. /ஒரு வேளைபுரியாததால்வரும் இயலாமையோ//
   இல்லை,புரிய வைக்க முடியாததால் வரும் ஆதங்கம். நான் நினைப்பதுதான் சரி. மற்றவர்கள் யாரும் யோசிப்பது இல்லை என்று நினைப்பதற்கு என்ன பெயர்? இரண்டு வருடங்களாக(எனக்குத் தெரிந்து இரண்டு வருடங்கள், நிஜத்தில் எத்தனை வருடங்கள் என்று தெரியவில்லை) ஒரே கேள்வியை கேட்டுக் கொண்டிருக்கீர்கள் என்பதிலிருந்து அந்த விஷயத்தை நீங்கள் ஒரே கோணத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது புரிகிறது.

   Delete
  3. ஒரே கேள்வியை கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்பதிலிருந்துஎன் கோணம் இன்னும் அப்படித்தான் இருக்கிறது என்று புரியவில்லையா யாரும்நேரடியாக பதில் சொல்ல முன்வரவில்லை என்பதும் புரியும்

   Delete