ஒண்ணுமே புரியலே இந்த உலகத்திலே
---------------------------------------------------------------
ஆண்டவன் அவதரிப்பது துஷ்ட நிக்கிரகம் சிஷ்ட பரிபாலனம் செய்ய என்று கூறுகிறார்கள் பகவத் கீதையிலும் நல்லாரைக் காப்பதற்கும் கெட்டவரைக் கரந்தொடுக்குவதற்கும் , தர்மத்தை நிலை நாட்டுவதற்கும் யுகந்தோறும் நான் அவதரிகிறேன் என்று கூறுகிறார் (அத்தியாயம் 4 சுலோகம் 8) எனக்கு ஒரு ஐயம் எழுகிறது நல்லார் எனப்படுபவர் யார்கெட்டவர் எனப்படுபவர் யார்
அவதாரக்கதைகள் என்று எல்லா
அவதாரங்கள் பற்றியும் எழுதி இருந்தேன்
அதில் வாமனாவதாரத்தை மீள்
பதிவாக்குகிறேன்
ஆதிசிவனால் மூவுலகாள வரம் பெற்ற,
திரி தூண்டி விளக்கணையாது காத்த கோயில் எலி,
இரணியன் மகன், பிரஹலாதன் மகன், விரோசனன்
மகன் மகா பலியாகப் பிறந்தான்.( தது )
பெற்றவரம் பலிக்க, வானவரையும் ஏனையவரையும்
வென்று, மூவுலகாளும் பலி சக்கரவர்த்தி ஆனான்.
வானவர்களின் தாய் அதிதி, அது கண்டு
தன் மக்கள் நிலை கண்டு வருந்தி,
கச்சியப்ப முனிவரிடம் முறையீடு செய்ய,
அவர் நோன்பு நோற்று, திருமாலை வழிபடு,
வழி ஒன்று பிறக்கும் என்றார்.அவளும் வழிபட,
திருநீலகண்டன் அருள் பெற்று, மூவுலகாளும் பலி,
ஆணவத்தில் திளைக்கும்போது, அவனை நான்
அடக்குவேன், அதற்கென நாள் வரும்போதுன்
வயிற்றில் நான் வந்துதிப்பேன், என்றுரைத்த திருமால்,
அதிதி மகனாக வாமனாவதாரம் எடுத்தார்.
வரம் மூலம் பெற்ற ஆட்சி நிலைக்க,
அசுவமேத யாகம் நடத்தி, யார்
எதைக் கேட்பினும் நான் அதனைத் தருவேன்,
என்று கூறி ,அதனைச் செய்தும் வந்தான் பலி.
தக்க தருணம் வேண்டி நின்ற வாமனரூப
மகாவிஷ்ணு மகாபலியின் யாகசாலை வர,
வணங்கி வரவேற்கப்பட்டு , வேண்டியது
கேட்டுப்பெற, , வேண்டிக்கொள்ளப் பட்டான்.
தான் ஒரு பிரம்மசாரிப் பார்ப்பனன்,
அவன் வாழ மூன்றடி நிலம் தந்தால்
அதுவே போதும் நலமாயிருக்க என்ற,
வாமனனுக்கு அது அளிக்க வேண்டாம்
வந்திருப்பவன் பெருமாள் , அவனுன்னை
அழிப்பான் என்று அறிவுரை வழங்கினார்
குல குரு சுக்கிராச்சாரியார்.
சொன்ன சொல் தவறேன், திருமாலுக்கே என்
தானம் என்றால் எனக்கது பெருமை, என்
குலம் தழைக்கும் என்றே கூறிய மகாபலி,
தானம் தர, நீர் வார்த்துத் தர தயாராக
கிண்டி நீரை எடுக்க, வண்டாக மாறி,
அதன் துவார மறைத்தார், சுக்கிராச்சாரி .
கிண்டி அடைப்பை நீக்க, எல்லாம்
அறிந்த மாலும் தருப்பையால் அதன்
துவாரம் குத்த ,கண்ணொன்று குருடாகி
அலறியடித்து வெளியே வந்தது வண்டு.
மூன்றடி நிலம் பெற,
வரம் பெற்ற வாமனன்
நெடிதுயர்ந்து ஓரடியாய்
வான மளந்து ,மறு அடியாய்
பூமி அளந்து ,மூன்றாம் அடிக்குக்,
கால் எங்கே வைக்க என்று
மகாபலியிடம் வினவினான்.
கைகூப்பித் தலை வணங்கி
சொன்ன சொல் தவற மாட்டேன்
தங்கள் மூன்றாம் அடி என் தலை மேல்
வைக்க , யான் பெருமை கொள்வேன்
என்று கூறிய பலிச்சக்கரவர்த்தி
பாதாளம் ஆள வரம் ஈந்து அவன்
தலை மேல் கால் வைத்தான் பெருமான்.
=================================
திருநீலகண்டன் அருள் பெற்று, மூவுலகாளும் பலி,
ஆணவத்தில் திளைக்கும்போது, அவனை நான்
அடக்குவேன், அதற்கென நாள் வரும்போதுன்
வயிற்றில் நான் வந்துதிப்பேன், என்றுரைத்த திருமால்,
அதிதி மகனாக வாமனாவதாரம் எடுத்தார்.
வரம் மூலம் பெற்ற ஆட்சி நிலைக்க,
அசுவமேத யாகம் நடத்தி, யார்
எதைக் கேட்பினும் நான் அதனைத் தருவேன்,
என்று கூறி ,அதனைச் செய்தும் வந்தான் பலி.
தக்க தருணம் வேண்டி நின்ற வாமனரூப
மகாவிஷ்ணு மகாபலியின் யாகசாலை வர,
வணங்கி வரவேற்கப்பட்டு , வேண்டியது
கேட்டுப்பெற, , வேண்டிக்கொள்ளப் பட்டான்.
தான் ஒரு பிரம்மசாரிப் பார்ப்பனன்,
அவன் வாழ மூன்றடி நிலம் தந்தால்
அதுவே போதும் நலமாயிருக்க என்ற,
வாமனனுக்கு அது அளிக்க வேண்டாம்
வந்திருப்பவன் பெருமாள் , அவனுன்னை
அழிப்பான் என்று அறிவுரை வழங்கினார்
குல குரு சுக்கிராச்சாரியார்.
சொன்ன சொல் தவறேன், திருமாலுக்கே என்
தானம் என்றால் எனக்கது பெருமை, என்
குலம் தழைக்கும் என்றே கூறிய மகாபலி,
தானம் தர, நீர் வார்த்துத் தர தயாராக
கிண்டி நீரை எடுக்க, வண்டாக மாறி,
அதன் துவார மறைத்தார், சுக்கிராச்சாரி .
கிண்டி அடைப்பை நீக்க, எல்லாம்
அறிந்த மாலும் தருப்பையால் அதன்
துவாரம் குத்த ,கண்ணொன்று குருடாகி
அலறியடித்து வெளியே வந்தது வண்டு.
மூன்றடி நிலம் பெற,
வரம் பெற்ற வாமனன்
நெடிதுயர்ந்து ஓரடியாய்
வான மளந்து ,மறு அடியாய்
பூமி அளந்து ,மூன்றாம் அடிக்குக்,
கால் எங்கே வைக்க என்று
மகாபலியிடம் வினவினான்.
கைகூப்பித் தலை வணங்கி
சொன்ன சொல் தவற மாட்டேன்
தங்கள் மூன்றாம் அடி என் தலை மேல்
வைக்க , யான் பெருமை கொள்வேன்
என்று கூறிய பலிச்சக்கரவர்த்தி
பாதாளம் ஆள வரம் ஈந்து அவன்
தலை மேல் கால் வைத்தான் பெருமான்.
=================================
வரம்பெற்று சிறப்பாக ஆண்ட மஹாபலி கெட்டவனா அவன் அசுர குலத்தில் பிறந்ததால் கெட்டவனா பாரோர் போற்ற நாடு ஆண்டவன் கெட்டவனா என்னால் கொடுக்க முடிந்ததைக்
கொடுப்பேன் என்று சொல்வது கெட்டவனின் அடையாளமா
அவனைஅழித்தொடுக்க வாமன அவதாரமெடுத்து பாதாள உலகத்துக்குள் அழுத்திய வாமனன்செயல்
நல்லதா தேவர்களின் தாய் அதிதிக்கு
வரம்கொடுப்பதுதான் துஷ்ட நிக்கிரகமா
இதையெல்லாம் மீறி மக்கள்
மனதில் வாழும்பலிச்சக்கரவர்த்தி துஷ்டனா அவன்நினைவைக் கொண்டாட ஆண்டுதோறும் விழா
எடுக்கும் மக்கள் அறிவிலிகளா
ஆண்டவன் செயலில் குறை காணும் என்னைப்போல்
இருப்பவர்கள் தவறு செய்கிறோமா
சுதந்திரமாக சிந்திப்பதும் பழைய கோட்பாடுகளுக்கு அடிமையாகமல் இருப்பதும்
தவறா
ஒண்ணுமே புரியலே இந்த உலகத்திலே