Saturday, August 4, 2018

மாற்றங்கள்


                                         மாற்றங்கள்
                                      ----------------------


மாற்றம் ஒன்றே மாறாதது என்பது அடிக்கடி கூறப்படும்வாசகம் ஆனால் மாற்றங்கள் நிகழும் போது அவை எளிதில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை
நான் திருச்சியில்  பி எச் ஈ எல் லில் இருந்தபோது என்னை இடம்மாற்றி உத்தரவு வந்தது எந்த இடமென்று குறிப்பிட்டு இருக்கவில்லை சென்னைக்குப் போய்  இருக்க வேண்டும் என்றும்  அங்கு சென்றபின்  சிலநாட்களில் மாற்றல் எந்த இடத்துக்கு என்று தெரிவிக்கப்படுமென்றும்கூறினர் என் பிள்ளைகள் அபோதுதான் படிப்பில் வேரூன்றி இருக்கும் நேரம் எங்காவது  மாற்றல் ஆனால் அவர்கள் படிப்பு கெடும் என்றும்  என்னை மாற்றியது என்னை எனக்குத் தெரியாத வேலையில் ஈடுபடச்சொல்வார்கள் என்றும் பயம்  இருந்தது நான் என்வேலையை ராஜினாமா செய்து ஏதாவது பெட்டிக்கடை வைத்துப்பிழைக்கலாமா என்னும்யோசனையில் இருந்தேன்  இருந்தாலும் என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று சென்னைக்குச் சென்றென் அங்குஓரிரு மாதஙள் திரிசங்கு சொர்க்கம்போல் இருந்தது அதே சமயம் பி எச் ஈ எல் லிலிருந்துஒரு டெபுடி ஜெனரல் மானேஜர்  சென்னைக்கு வந்தார் அவருக்கும் மாற்றல் உத்தரவு வந்து  விஜய வாடா   தெர்மல் பவர் ஸ்டேஷனை நிறுவ உத்தரவு இருந்தது அவர் என்னை சென்னை ஆஃபீசில் பார்த்தபோது  விஜயவாடாவுக்கு வர விருப்பமா என்று கேட்டார் அவருக்கு என்மேல் நம்பிக்கைஇருந்தது நல்ல அதிகாரி சரிஎன்றேன்  உடனே என்னை விஜயவாடா சென்றுஅங்கு வருவோரின்  பிள்ளைகளுக்கு  பள்ளிமற்றும் வீட்டு வசதி எல்லாம் எப்படி என்று பார்த்து வரப்பணித்தார்  மாற்றல் இடம்தெரிந்ததுஇதைப் பற்றி நான்  முன்பே விஜயவாடா  நினைவுகள் என்றுஒருபதிவு எழுதி இருந்தேன்
l
சில மாற்றங்களின் பாதிப்பு அவரவருக்கு வந்தால்தான் தெரியும் மாற்றம் கண்டு பயந்த நான் அந்தமாற்றம்மூலம் என்னை நிரூபிக்கும் வாய்ப்பாகமாற்றிக் காட்டினேன் அதுவரை நான் செய்திராத வேலை சொல்லப்போனால்  முற்றிலும் புதிதாய் கற்க வேண்டிய வேலை. அங்கு பணிக்குச்சென்ற  முன்னோடிகளில் முக்கியமானவன் என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். வாழ்க்கையில் போராட்டங்களிலேயே  உழன்றவன் என்பதால் அவற்றையும்சமாளித்து பெயர் பெற்றேன் நான் விஜயவாடா பணியிலிருந்து மறுபடியும் திருச்சிக்கு கிளம்பும்போது VTPS –ன் SUPERINTENDING  ENGINEER  சொன்ன வார்த்தைகள் இன்னும் என் காதுகளில் ரீங்கரிக்கிறது. அவர் சொன்னார்,” BALU WHENEVER I COME NEAR THESE MACHINES  I WILL HEAR THEM CALL –BALU, -BALU” ஒரு தொழிலை புதிதாய் கற்று  நல்லபெயர் வாங்கின திருப்தி  இடமாற்றத்தின் விளைவே இன்றுசிந்திக்கும் போது நான்முன்பு யோசித்தபடி  வேலையை ராஜினாமா  செய்திருந்தால்  என்னென்ன  மாற்றங்கள்  நிகழ்ந்திருக்குமோ தெரியவில்லை
ஆரம்பகாலத்தில்  அரசுபணிகளில்  வங்கிகளில்  இன்னும் பல இடங்களில் கணினிக்கு ஒருபெரிய எதிர்ப்பே இருந்தது ஆனால் இப்போதுஎல்லாமே கணினி மயம் கணினி உதவியால்  உலகத்தையே  கைகளின்  கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிகிறது கணினி புழக்கத்துக்கு வந்தால் வேலையில் இருப்போரின் வேலைக்கு பாதிப்பு வந்து பணி இழப்பு ஏற்படும் என்னும் பயமிருந்தது ஆனாலந்தபயங்கள் ஆதாரமற்றவை என்று ஆயிற்று அதேபோல் கூடங்குளம் மின் நிலையம் வந்தால் எதிர்பார்க்காத இழப்புகள் ஏற்படலாம்  பயம் இருக்கலாம் ஆனால் பயம்மட்டுமே கூடாது ஒரு திரைப்படசம்பவம் நினைவுக்கு வருகிறது
நாகேஷ் நடித்ததுஎன்று நினைவு  அவருக்கு எங்காவது நெருப்பு கண்டால் கற்பனையில் எல்லாமே எரிந்து போகும் என்றபயம் விளக்கில் தீயைக் கண்டால் அந்ததீ  பற்றி எரிவது போலவும் எல்லாமே சாம்பலாவதுபோலவும் இருக்கும்   கூடங்குள நிலையத்துக்கு எதிர்ப்பாக  எழுதிய ஒரு பதிவுக்கு பின்னூட்டமாக நான் இக்கதையை சுட்டிக்காட்டி எழுதி இருந்தேன் இதேபோல்டான் முல்லைப் பெரியாறினுயரத்தைக்கூட்டினால்  அது அழிவுக்கு வித்திடும் என்னும் பயமிருந்ததும் நினைவுக்கு வருகிறது  ஒரு கதை நினைவுக்கு வருகிறது ஒரு பெரியவர் ஊரில் நடக்குமநேகைழவுகளில் ஆறுதல் கூறுவார்  மக்களும் பெரியவரின்பேச்சால்  ஆறுதல் அடைவார்கள் ஒரு நாளந்தப் பெரியவரின் வீட்டில் ஒரு இழவு நடந்து மிக்க வருத்தமுடன்  அவர் அழுது கொண்டிருந்தார்  ஊர் மக்கள் எங்களுக்கு தைரியம்சொல்லும்நீங்கள் மனம் உடையலாமா என்று கேட்டனர்  அதற்கு அவர் உங்கள் இழப்புக்கு நான் ஆறுதல் கூறலாம் ஆனால்  இப்போது இழப்பு எனக்கல்லவா என்று கூறி அழுதாராம் எந்தஒரு நஷ்டமும் அவரவருக்கு வந்தால்தான்  தெரியும்  அதுவும் உண்மைதான்  
 தொழில் நிறுவனங்களில்  இந்த ஐ எஸ் ஓ நிலைப்பாடுகளை அமல் படுத்த நிலவும் எதிர்ப்புகளை  கண்கூடாகக் கண்டவன் நான்.  ஐ எஸ் ஓ பிரகாரம்  செய்வதைச் சொல் சொல்வதைச் செய் என்பதே தாரக  மந்திரம் அதை நிரூபிக்க டாக்குமெண்ட்ஸ் வேண்டும் என்றும் வற்புறுத்தப்படும் நாங்கள்செய்வது பொருட்களின் தரத்தில் பிரதிபலிக்கும் அதை விட்டு  டாகுமெண்ட்ஸ் என்பதெல்லாம்  வேஸ்ட் என்னும் நிலைப்பாடே ஊழியரிடம் காண்பது  
மாற்றங்கள் காலத்தின் கட்டாயம்  என்றாலும்  அதை எதிர்ப்பதும் ஒரு  வழக்கமாகி விட்டது  இதை நாம் எந்த ஒரு நிகழ்விலும் காணக்கூடும் சமூக வழக்கங்களில் மாறுதல் வேண்டும்  என்பதை பலரும் அறிந்தாலும்  அவற்றைக்கண்டு  ஏதோ ஒரு இனம்தெரியாத பயமும் அதை எதிர்க்கச் செய்யும்
 என்னென்ன  மாற்றங்கள்  தேவை  என்பதைநான்  விவரிக்கப்போவதில்லை  பல பதிவுகளில் கூறி இருக்கிறேன்  ஆனால் மாற்றங்கள் நிச்சயம் நிகழும் முக்கியமாக மக்களிடம் மன மாற்றம் தேவை  அதுவும்நிகழும்   
      

42 comments:

 1. மனித மனம் உடனடியாக மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாது. இது இயல்பானதுதான். இதற்கு எத்தனையோ உதாரணங்கள் நம் வாழ்க்கையிலிருந்தே கூறலாம்.

  பொது மாற்றங்கள் அதுவாகவே நிகழும். அது நிகழும்போது பதட்டப்படும் மனம், பிறகு அதனை ஏற்றுக்கொள்ளும்.

  சமூக வழக்கங்களில், சாதாரண மக்களுக்கு மாற்றங்களைப் புகுத்துவது எளிதல்ல. சமூகத் தலைவர்கள்தான் அதனை ஆரம்பிக்கவேண்டும்.

  இருந்தாலும், இடுகை ஒரு பொருளை நோக்கிச் செல்லவில்லை. அலைபாய்கிறது. ஹா ஹா ஹா.

  ReplyDelete
  Replies
  1. மாற்றங்கள் பற்றி எழுதும்போது சொந்த அனுபவங்களூடே சமூக மாற்ற்ங்களையும் சொல்லிச் சென்றிருக்கிறேன் சமூக வழக்கங்களில் மாற்றங்களைப்புகுத்துவது எளிதல்ல இருந்தாலும் சமூக மாற்றங்கச்ள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன மாற்றப் பட்டியல்களைக் குறிப்பிட வேண்டியதில் இன்றைய த ஹிந்துவில் முதல் பக்கமே சமூக மாற்றம்பற்றியதுதான் இவற்றை உணர்த்த சமூகத் தலவர்கள் தேவை இல்லசிவிழிப்புணர்ச்சி போதும் / இடுகை ஒரு பொருளை நோக்கிச் செல்லவில்லை.அலை பாய்கிறது/ தவறான புரிதல் நிறைய இடுகைகள் எழுதி விட்டேன் வாசிப்பவருக்கும் புரியும்

   Delete
 2. மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் எல்லோரிடமும் தேவை. அதுதான் எதிர்பார்க்கும் மாற்றம். விசிடி வரும்போதும், டிவிடி வரும்போதும் திரைத்துறையினர் எதிர்த்தார்கள். ஆனால் மாற்றத்தை அவர்களால் நிறுத்த முடியவில்லை. யாராலும்... எங்கும் நிறுத்த முடியாது. நாம்தான் அதற்கேற்ப பழகிக்கொள்ள வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. நம்மை பாதிக்காதவரை மாற்றங்களை ஏற்றுக் கொள்கிறோம் நம்நம்பிக்கைக்கு எதிராக மாற்றங்கள் நிகழும்போதும் ஏற்றுக் கொள்கிறோம் ஒரே வித்தியாசம் ஒரு விம்பருக்குப் பின் ஏற்றுக் கொள்ள தள்ளப் படுகிறோம் அண்மைய செய்தி சபரிமலைக்குப்பெண்களை அனுமதிக்கலாமா ?

   Delete
  2. // சபரிமலைக்குப்பெண்களை அனுமதிக்கலாமா ? //

   இதற்கு பதில் சொல்ல நான் தகுதி அற்றவன்.

   Delete
  3. மாற்றத்தால் பாதிக்கப்படாததால் இந்த பதிலா. கருத்து சொல்ல தகுதி வேண்டுமா ஷூரடிஅருகே சனி சிங்கனாபூர் என்னும் இடத்தில் பெண்கள் கோவிலில் சில உரிமைகள்வேண்டி போராடினார்கள் இப்போதுசபரி மலையில் பெண்களுக்கு அஉமதி இருக்க வேண்டும் என்பது உச்ச நீதிமன்ற முடிவு என்று தெரிகிறது நம்பும் ஆண்டவன் சந்நதியிலும் ஆண் பெண் பேதமா

   Delete
  4. //சபரிமலைக்குப்பெண்களை அனுமதிக்கலாமா ?//

   ஜி.எம்.பி. சார்... இதற்கு நாம பதில் சொல்ல முடியாது, கூடாது.

   பதில் சொல்ல யாருக்குத் தகுதி இருக்கு என்றால், சபரிமலை பக்தர்களுக்கும், அங்கு பலகாலம் இருமுடி எடுத்துச் செல்பவர்களுக்கும், அதனை நிர்வகிப்பவர்களுக்கும்தான் (தேவசம்போர்டு, பூஜாரிகள்). ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு பாரம்பர்யம், வழக்கம் உண்டு. அதனை காலத்துக்கேற்றபடி மாற்றம் செய்ய அவர்கள்தான் தீர்மானிக்கவேண்டும். இதில் சபரிமலை ஐயப்பனின் பக்தைகளுக்கும் அதே அளவு உரிமை உண்டு. அந்தக் கோவிலுக்கு இதுவரை சென்றிராத, அதன் வழக்கங்களின் காரணங்களை அறிந்திராத நான் எப்படி பதில் அல்லது ஆலோசனை சொல்லமுடியும்?

   மேல்மருவத்தூரில், ஆதிபராசக்தி கோவில் அமைத்து, அதில் பெண்களும் அம்மனைத் தீண்டி வழிபடலாம், விலக்கு நாட்கள் என்று எதுவும் கிடையாது என்ற வழிமுறை வைத்து வழிபாடு நடந்துவருகிறது. அதனை யாரும் எதிர்ப்பதில்லை.

   நியாயமான மாற்றங்கள் கண்டிப்பாக ஏற்படும். ஆனால் கொஞ்சம் மெதுவாக நடக்கும்.

   Delete
  5. இந்த மனப் பான்மையைத்தான் முன்பே அடிமைத்தனம் என்று எழுதி இருக்கிறேன் நம் மில சில வழக்கங்கள் உண்டு அதைநாம் கேள்வி கேட்கக் கூடாது போன்றவை உச்ச நீதி மன்றம் சொல்லிவிட்டால் ஏதொ ஒரு முனகலுடனேறுக் கொள்வோம் இதே சபரிமலையில் ஆண்டவன் தீப ஜோதியாய் திகழ்கிறான் என்று கூறியே அறியாமையில் இருத்த்னார்கள் தீபமெல்லாம் கப்சா மனிதன் காட்டும்தீ ஒளிதான்அது என்று தெரிந்து விட்டது அதையும் இன்னும் ஆண்டவனின் ஜோதிதான் என்று சொல் பவர்களும் இருக்கிறார்கள் அறியாமை என்பட்க்ஹன்றி வேறென்ன சொல்ல

   Delete

 3. மாற்றங்களை மக்கள் எதிர்த்து கொண்டே இருந்தாலும் மாற்றங்கள் அவர்களுக்காக காத்திருக்காமல் மாறிக் கொண்டே இருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. மாற்றங்கள் நலம் பயப்பதாக இருந்தால் யாருக்கும் காத்திராமல் மாறிக்கொண்டே இருக்கும் வருகைக்கு நன்றி

   Delete
  2. மாற்றங்களை மக்கள் எதிர்த்து கொண்டே இருந்தாலும் மாற்றங்கள் அவர்களுக்காக காத்திருக்காமல் மாறிக் கொண்டே இருக்கிறது

   இது தான் நச் என்ற விமர்சனம்.

   Delete
  3. மாற்றங்கள் பெரும்பாலும் இப்போதெல்லாம் சமூக மேம்பாட்டுக்கே என்பது ஆறுதல் அளிக்கிறது

   Delete
 4. 'மாற்றம் ஒன்றே மாறாதது'-- என்று சொன்னவர் கார்ல் மார்க்ஸ்.
  அந்த மாற்றமும் சில விதிகளுக்கு உட்பட்டே நடக்கிறது என்பார் அவர்.

  //ஆரம்பகாலத்தில் அரசுபணிகளில் வங்கிகளில் இன்னும் பல இடங்களில் கணினிக்கு ஒருபெரிய எதிர்ப்பே இருந்தது //

  கம்ப்யூட்டர் வந்தால் அலுவலங்களில் ஆட்குறைப்பு ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் இருந்த காலம் அது.

  சென்னை சதர்ன் ரயில்வே அலுவலகத்தில் நிறுவுவதற்காக முதல் சூப்பர் கம்ப்யூட்டர் சென்னை ஹார்பரில் ஒரு பெரிய கண்ட்டயினரில் இறங்கக் காத்திருக்கிறது. அதனை கப்பலிலிருந்து இறக்க விடாமல் டாக் ஒர்க்கர்ஸ் யூனியன் உதவியோடு தொழிலாளர்களின் பெரும் போராட்டம் ஒன்று நடந்தது நினைவிருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. அண்மையில் நிகழும் நிகழ்த்தப்படும்மாற்றங்களையும் நினைவு கொள்ள வேண்டுகிறேன்

   Delete
 5. மாற்றம் ஒன்றுதான் மாறாதது
  உண்மைதான் ஐயா
  மாற்றத்திற்கேற்ப வாழப் பழகிக் கொள்ளும் தங்களைப் போல் அனைவரும், மாற்றங்களை ஏற்றுப் பழக வேண்டும் ஐயா
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. சொந்த அனுபவங்களோடு சமூக மாற்றங்களும் நிகழ்கின்றன நிகழ்த்தப்படுகின்றன. நாம்தான் கவனிக்கத் தவறுகிறோம்

   Delete
 6. எப்போது பெட்டி கொடுத்தால் ISO Certificate கிடைத்ததோ, அன்றே ISO Consulting செய்வதை நாங்கள் விட்டுவிட்டோம்...

  நான் சொல்ல நினைத்ததை நெல்லைத்தமிழன் அவர்கள் முடிவில் சொல்லி விட்டார்...

  ReplyDelete
  Replies
  1. சில மாற்றங்களை நிகழ்த்த விடாமல் நடக்கும் /எதிர்க்கும் பல செயல்களில் பெட்டியின் பலமும் வெளிவருகிறது நெல்லைத் தமிழனுக்கு கொடுத்த மறு மொழியே உங்களுக்கும் I was not drifting

   Delete
 7. மாற்றங்களை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. நன்கு பக்குவழ்ப்பட்ட கருத்து நன்றி சார்

   Delete
 8. மாற்றங்கள் சில சமயங்களில் ஏமாற்றம் ஆகி விடுகின்றனவே. உ-ம் Demonetisation, GST. ஐயா கந்தசாமி அவர்கள் வரவு மகிழ்ச்சி ஊட்டுகிறது.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், தமிழ்நாட்டின் வருவாய் ஜிஎஸ்டியினால் அதிகம் ஆகி இருப்பது வருத்தம் அளிக்கும் விஷயம் தான்! :))))))

   Delete
  2. @jk 22384 அவை பொருளாதாரம் சம்பந்தப்பட்டதுஅதனிலும் மேலாக சில சமூக மாற்றங்கள் திருப்தி தருவதாய் இருக்கிறது

   Delete
  3. @ கீதா சாம்பசிவம் சிலருக்கு இழப்பு சிலருக்கு வரவு வித்தியாச கருத்துகள் இருக்கும்தானே

   Delete
 9. மாற்றங்களை எல்லோராலும் சட்டென ஏற்றுக்கொள்வது கடினமான விசயம்தான் ஐயா.

  பெண்கள் பிறந்த வீட்டிலிருந்து... புகுந்த வீட்டிற்கு செல்வதுகூட மாற்றம்தான்.

  ReplyDelete
  Replies
  1. மாற்றங்கள் நலம் பயந்தால் ஏற்றுக் கொள்வது சிரமமாக இருக்காது

   Delete
 10. மாற்றங்கள் நல்லதே, நம் அடிப்படைக்குணம் மாறாத வரையிலும்! :)))) என்னைச் சின்ன வயசில் பார்த்த பலரும் "நீ இன்னும் மாறாமல் அதே "கீதா"வாக இருக்கிறாய்!" என்றே சொல்கிறார்கள். இது நல்லதா, கெட்டதா என எனக்குத் தெரியவில்லை என்றாலும் எனக்குள்ளும் மாற்றங்கள் என்னையும் அறியாமல் நிகழ்ந்திருக்கிறது. மாற வேண்டியவை மாறித்தான் ஆகும்!

  ReplyDelete
  Replies
  1. மார்ரத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நல்லது

   Delete
 11. மாற்றம் ஒன்றுமட்டுமே மாறாதது....

  பல சமயங்களில் மாற்றத்தினை ஏற்றுக்கொள்ள நம் மனம் ஒப்புவதில்லை. சில மாற்றங்கள் நல்லவை என்று தெரிந்தாலும் கூட!

  ReplyDelete
  Replies
  1. மாற்றத்தினால் பாதிப்பு ஏற்படும்போது மனமேற்பதில்லை என் அனுபவத்தையும் பகிர்ந்திருகிறேனே

   Delete
 12. மாற்றங்கள் தவிர்க்க முடியாதது , சிலரால் ஜீரணிக்க முடிவதில்லை

  ReplyDelete
  Replies
  1. அந்த சிலர் யார் என்பதையும் கவனிக்க வேண்டும்

   Delete
 13. மாற்றம் ஒன்றூ மட்டும் மாறாதது? யாரு இதை முதலில் சொன்னதுனு தெரியவில்லை. எல்லோரும் இதைச் சொல்றாங்க. எதுக்குனு தெரியலை. "Facts never change" makes more sense to me!

  மாற்றங்கள்?

  பரிணாமவியல்படிப் பார்த்தால், மாற்றங்கள்தான் நம்மை உருவாக்கியுள்ளது. தவிர்க்க முடியாது. மாற்றங்கள ஏற்றூக்கொள்வதில் பல வகைகள் உண்டு. மேலை நாடுகளீல், மாற்றத்தை ஏற்றூக்கொள்வதில் வேகம் அதிகம், நாம் 30 வருடம் பிந்தங்கி இருக்கிறோம்.

  ஒரு மாற்றம்.

  குடிக்கிறவங்க எண்ணீக்கை பல மடங்கு அதிகமாகிவிட்டது. 30 வருடங்கள் முன்னால் சென்றால் குடிகாரர்களூக்கு மரியாதை இல்லை. இன்னைக்கு குடிக்கிறவந்தான் பெரிய மனுஷன். இதையும் ஏற்றூக்கத்தான் வேண்டியுள்ளது.

  முகநூல், பெண்களீன் ப்யூட்டி பார்லர் வளர்ச்சி, டாஸ்மாக் வளர்ச்சி இதெல்லாம் மாற்றங்கள்தான்.

  ப்ளாகிங் மாற்றம்தான். 20 வருடங்கள் முன்னால் நினைப்பதை எல்லாம் பிரசுரிக்க முடியாது. இன்றூ முடிகிறது.

  இப்போ ப்ளாகிங்ல இருந்து முகநூல், ட்விட்டர்னு போறாங்க. ப்ளாக் எசுதும்போது நம் கருத்தை வெளீயிட முயலும்போது நம் தமிழ் எழுத்துத் தரம் நாளூக்கு நாள் இம்ப்ரூவ் ஆனது. ட்விட்டரில் எழுதும்போது அதுபோல் கிடையாது. நல்ல பதிவர்கள் பலர் இப்படி ட்விட்டர் போயி வீணாகிட்டாங்க.

  அதேபோல் சினிமா விமர்சனம் நல்லா எழுதுறவங்க இப்போ யு ட்யூப்ல போயி உளற ஆரம்பிச்சுட்டாங்க. ஏனென்றால் பணம் செய்வதுக்காக இப்படி நாசமாப் போயிட்டாங்க.

  Change does not change anything. The same good, bad and ugly people are there, no matter what!

  ReplyDelete
 14. கார்ல் மார்க்ஸ் கூறியதாக நண்பர் ஜீவி எழுதி இருக்கிறார்/மாற்றம் ஒன்றூ மட்டும் மாறாதது? யாரு இதை முதலில் சொன்னதுனு தெரியவில்லை. எல்லோரும் இதைச் சொல்றாங்க. எதுக்குனு தெரியலை. "Facts never change" makes more sense to me!. ஆனால் facts பல இடங்களில் சிதைக்கப்படுகின்றன் நானிதுபற்றிஎழுதுவதற்கு காரணமேஎன்னையே தேற்றிக் கொள்ளத்தான் சமூகமாற்றங்கள் வேண்டி நிறையவே எழுஹி இருக்கிறேன் எங்கள் கிராமத்தில் மனித கழிவை மனிதர் அகற்றுபவர்கள் வீதிகளில் நடக்கக்கூட அனுமதி பெற வேண்டியவர்கள் என்று இருந்த காலம்மாறிஅப்படிப்பட்டவரே கிராமத்தில் வீடு வாங்கி தங்கவும் செய்கிறார்கள் என்பது மாற்றம் அல்லாமல் வேறு என்ன

  ReplyDelete
 15. மாற்றம் ஒன்றே மாறாதது

  ReplyDelete
  Replies
  1. அதுதானே பதிவின் கருத்தும்ம்மா

   Delete
 16. நாம் தப்பிக்க நினைத்தாலும் முடியாதது இந்த மாற்றம்தான் ஐயா. ஒரு காலகட்டத்தில் அதுவே நம்மைப் பக்குவப்படுத்திவிடுகிறது என்பதையும் காணமுடிகிறது.

  ReplyDelete
  Replies
  1. தெரிந்திருந்தாலும் மாற்றங்களை ஏற்க மனம் வருவதில்லை சார்

   Delete
 17. வழக்கமான பின்னூட்டங்களிலிருந்து மாற்றத்திற்காக ஒரு கேள்வி:

  நீங்கள் புதிதாக ஒரு பதிவு போட்டதும், தனிப்பட்ட முறையில் நீங்கள் மெயில் மூலம் தெரிவிக்காவிட்டாலும் நீங்கள் புதுப்பதிவு போட்டது எனக்குத் தெரிந்து விடும்.

  அதே மாதிரி நான் புதுப்பதிவு ஒன்று போட்டதும் நீங்கள் தெரிந்து கொள்வது எப்படி?

  ReplyDelete
  Replies
  1. சிம்பிள் நீங்கள் எட்ன்பதிவுகளைத் தொடர்கிறீர்கள் நான் உங்கள் பதிவுகளைத் தொடர்கிறேன் பதிவு வெளியானதும் டாஷ் போர்டில் தெரியும் மெயில் மூலம் தெரிவிக்கத் தேவை இல்லை என்று சூசகக் குறிப்பா இனி வராது

   Delete
  2. ஆமென். அந்தச் சிரமம் உங்களுக்கு எதற்ககாக என்பதற்காக.

   Delete
  3. இனி வராது நிம்மதியாக இருங்கள்

   Delete