பசி உணவு சுவை
---------------------------
முதலில் பசி என்றல் என்ன என்பதை எனக்குத் தெரிந்த வரையில்
சொல்கிறேன் நாம் உண்ணும்போது அதை
செரிக்கச்செய்ய வாயில் உமிழ் நீர் முதல் குடலில் செல்லும்போது சுரக்கும் திரவங்கள் வரைஉடல் உற்பத்தி செய்கிறது ஒரு
குறிப்பிட்ட நேரத்தில் உண்ணும் பழக்கத்தினால் அவற்றைச் செரிக்கச் செய்ய இந்த திரவங்களும் தயாராய் இருக்கும் உணவு உள்ளே சென்றால் அவற்றைச் செரிக்க செய்ய உதவும்திரவங்கள் வயிற்றில் உணவு இல்லாதபோதும்
சுரக்கும் இப்படி சுரக்கும்போது உணவு இல்லாவிட்டால் ஒரு வித அரிப்பு வயிற்றில்
ஏற்படுகிறது இதையேநாம்பசி என்கிறோமா பசித்தவன் எதிரில் ஆண்டவன் கூட உணவு ரூபத்தில்தான் வரமுடியும்தனி ஒருவனுக்கு
உணவில்லையெனில் இ ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி பாடி இருக்கிறான் கூடவே வய்ச்
சொல்லில் வீரரடி என்றும்
பாடியிருக்கிறான் புத்திசாலிதான்
ஒரு காலத்தில் ஒருபுலவன்வறுமையால்வாடியபோது
கல்லைத்தான்மண்ணைத்தான்காய்ச்சித்தான்
குடிக்கத்தான்கற்பித்தானா
இல்லைத்தான்பொன்னைத்தான்எனக்குத்தான்
கொடுத்துத்தான்ரட்சித்தானா
அல்லைத்தான்சொல்லித்தான்யாரைத்தான்
நோவத்தான்ஐயோவெங்கும்
பல்லைத்தான்காட்டத்தான்பதுமற்றான்
புவியிற்தான் பண்ணினானே.
இல்லைத்தான்பொன்னைத்தான்எனக்குத்தான்
கொடுத்துத்தான்ரட்சித்தானா
அல்லைத்தான்சொல்லித்தான்யாரைத்தான்
நோவத்தான்ஐயோவெங்கும்
பல்லைத்தான்காட்டத்தான்பதுமற்றான்
புவியிற்தான் பண்ணினானே.
என்றும் பாடி இருக்கிறான்
ஔவையும் பசி பற்றிப்
பாடும்போது “ஒரு நாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இரு நாளுக்கு ஏலென்றால் ஏலாய்
இடும்பை கூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது”” என்றுஅங்கலாய்த்து இருக்கிறாள்
ஔவையார் பசி வந்தால்
பறந்துபோகும் பத்தினைஇவ்வாறு கூறி இருக்கிறார்
"மானம்குலம்கல்விவண்மைஅறிவுடைமை
தானம்தவருயர்ச்சிதாளாண்மை--தேனின்
கசிவந்தசொல்லியர்மேல்காமுறுதல்பத்தும்
பசி வந்திடப் பறந்து போம்"
தானம்தவருயர்ச்சிதாளாண்மை--தேனின்
கசிவந்தசொல்லியர்மேல்காமுறுதல்பத்தும்
பசி வந்திடப் பறந்து போம்"
இம்மாதிரி இருக்கும் பசியினைப்போக்கமட்டுமல்லாமல்
வித விதமாக சமைத்துதிருப்திப்படுத்தும் பலரையும் பார்த்திருக்கிறோம் உணவு வகைகளை
சமைத்துப்பார்க்கவே வலைத்தளங்களும் ஆலோசனை கூறுகின்றன./ அதுவுமொரு
கிழமையையே திங்கற கிழமையாகவும் பாவிக்கிறார்கள்
பசித்துப் புசிப்பவர் ஒரு வகை என்றால் உடல் ஆரோக்கியத்துக்காக உபவாசமிருப்பவரும் உண்டு
இப்படிஉபவாசமிருப்பவர்களில் உணவை உபேட்சிப்பவரை
விட பல ஆகாரங்களை பலகாரங்களாக உள்ளே
தள்ளுவோருமுண்டு எனக்கு ஒரு விஷயம் தோன்றுவதுண்டு இவ்வாறு உபவாசமிருப்பவர்கள் அந்தநாளில்
இல்லாத ஒருவருக்கு இட்டு உண்டால் நலமாய் இருக்காதோ
உணவை பலசுவைகளில் உண்பவர்
உண்டு அறுசுவையிலும் சில சுவைகளை
விரும்புவோரும் உண்டு சுவையைக்கூட்ட உபயோகமாகும்
உவர்ப்பினை அதிகம் ஏற்க
முடியாது இருந்தாலும் அதைஇட்டவரைஉள்ளளவும் நினக்கச் சொல்லும் சமுதாயம் நமது சிலருக்குப் பிடித்தமான சுவைகள்
சில சிலருக்குப் பிடிக்காது இருந்தாலும் இனிப்பை விரும்பாதவர் மிகக்குறைவு
விருந்துகளில் இனிப்பாக பாயசம்
வழங்கப்படுவது நம் பழக்கங்களில் ஒன்று பாயசம் அதிகமாக உட்கொள்ள அதில் பப்படத்தைப்பொடித்து
உண்பவர்களும் உண்டு
போட்டி போட்டு
உண்பவர்களும் இருக்கிறார்கள் ஒருவர் வயிறு முட்ட உண்டு மிகவும்கஷ்டப்படுவதுகண்டுஒருநண்பர் தொண்டைக்குள் விரல் விட்டுஅதிகமானதை வெளியில் தள்ள ஆலோசனை கூறினாராம் தொண்டக்குள் விரலை விட இடமிருந்தால் இன்னும் சிறிது உண்டிருப்பேனே என்று கூறினாராம் இவர்
எனது உறவினர் ஒருவர் உண்டு முடித்தபின் கண்களில் நீர் வந்தால் திருப்தியாக உண்டேன்
என்பதன் அடையாளம் என்பாப் அவர் உண்ணும்போது அவரது
கண்களில்நீர் வருகிறதா என்று பார்ப்போம் கடைசியாக உண்ணும் போது செய்ய வேண்டிய பயிற்சி என்று நான்
கூறுவது, பரிமாற வரும்போது தலையைமேலும் கீழும் ஆட்டுவதற்கு பதில் பக்க
வாட்டாக ஆட்டுதல் நலம்பயக்கும்
நேற்று பெங்களூரில் கல்யாண்நகரில் இருக்கும் MTR
ஹோட்டலுக்கு மதிய உணவுக்க்காக நான்
என்மகன்குடும்பத்துடன் சென்றிருந்தொம் ஒரு
மாற்றத்துக்காக ஹோட்டல் உணவு என்பதில் எனக்கு ஆட்சேபணை இருக்கவில்லை இந்தப்பதிவு அதைச் சொல்ல அல்ல நாங்கள் ஐந்துபேர் இருந்தோம் மொத்தபில் 1300
ரூபாய் வந்தது அன்லிமிடெட் உணவு வகைகள்
முதலில் மசால் தோசை பின் பூரி கிழங்கு
பின்பிசி பேளா ஹுளி அன்னா தக்காளி
சாதம் சாதம்ரசம் சாம்பார் தயிர்சாதம்
மசால் வடை கிரேப் ஜூஸ் ஜிலேபி சேமியா பாயசம் கூட்டு கோசம்பரி பொறியல்
சட்னி ஊறு காய் பீடா. நான் வெகு
எளிமையான் உணவு உட்கொள்ளுபவன் நன்கு உண்ணக் கூடியவரே கருத்து சொல்லமுடியும் ஒரு வேளை உணவுக்கு ஒரு வருக்கு ரூ260 என்பது
என்னதான் அன்லிமிடெட் என்றாலும் டூ மச் என்றே தோன்று கிறது இருந்தும் அந்த
ஹோட்டலில் காத்திருப்போர் அதிகம்
//அதுவுமொரு கிழமையையே திங்கற கிழமையாகவும் பாவிக்கிறார்கள்//
பதிலளிநீக்குஹிஹிஹிஹி....
ரசித்தது மகிழ்ச்சி தருகிறது நன்றிஸ்ரீ
நீக்கு//இவ்வாறு உபவாசமிருப்பவர்கள் அந்தநாளில் இல்லாத ஒருவருக்கு இட்டு உண்டால் நலமாய் இருக்காதோ//
பதிலளிநீக்குஎதற்கு அந்நாளில் மட்டும்? எவ்வெப்போது தேவையோ, அப்போதெல்லாம் கொடுக்கலாமே...
கொடுக்கவுமென்று ஒரு நாள் இருந்தால் நல்லதுதானே
நீக்குஇன்றைய காலகட்டத்தில் ஒரு ஆளுக்கு 260 ரூபாய் என்பது ரொம்ப சீப்! நீங்கள் சொல்லியிருக்கும் ஐட்டங்களில் மசால்வடை மட்டும் மனதைக் கவர்கிறது!
பதிலளிநீக்குநான் இன்னும் இந்த ஊர் விலைவாசிக்கு டியூன் ஆகலை ஶ்ரீராம். இருந்தாலும் ஒரு வேளைக்கு 400 வரை (மாதம் இருமுறை) என்றால் ஓகே என்றுதான் தோணுது.
நீக்கு@ஸ்ரீ அந்த 260 ரூபாய் அதிகம் என்றுதோன்றியதால் பதிவிட்டேன் இந்தியா இன்னும் ஏழை நாடுதானே மசால்வடை அதிகம்பிடிக்குமோ
நீக்கு@ நெத இந்த ஊரில் இன்னும் அதிக விலையிலும் உண்ணலாம் ஃபினிக்ஸ் மால் பற்றி ஒருமுறைஎழுதி இருக்கிறேன் மாடம் இரு முறை நன்றாக சாப்பிடக்கூடிய நாளா
நீக்குஎந்த நாளாக இருந்தாலும் பிறருக்குக் கொடுத்து உண்ணலாம். தப்பில்லை. நாங்க அம்பத்தூரில் இருக்கும்போது காய்கறிக்காரங்க, பழம் விற்பவர்கள் என அழைத்து சாப்பாடு கொடுப்போம். இங்கேயும் சில நாட்களில் உடனடியாகப் பாதுகாவலரை அழைத்துக் கொடுப்போம்.
பதிலளிநீக்குஒரு முறை குருவாயூரில் ஒருவருக்கு இம்மாதிரிஉணவு கொடுக்க முயன்றபோது நான் என்னபிச்சைஎடுப்பவனா என்று கோபப்பட்டார் ஒருவர் பாத்திரமறிந்து பிச்சைஎன்று சொல்லிச்சென்றிருகிறார்களே
நீக்குசாப்பாடு பற்றிய அலசல் அருமை ஐயா
பதிலளிநீக்குநடை முறைச் செய்திகள் டைர மெருகேற்றவும்சில செய்திகள் யாரும்ரசிக்க வில்லையா
நீக்குஅன்லிமிடெட் விவரம் பெற்றோம் சாப்பாட்டைப் பற்றி. அருமை ஐயா.
பதிலளிநீக்குதலைப்புபடி சொல்லமுயற்சி
நீக்கு//இவ்வாறு உபவாசமிருப்பவர்கள் அந்தநாளில் இல்லாத ஒருவருக்கு இட்டு உண்டால் நலமாய் இருக்காதோ//
பதிலளிநீக்குஆவணி ஞாயிறு சூரியனுக்கு பொங்கல் வைப்போம் எங்கள் வீடுகளில் அன்று அம்மா விரதம் இருப்பார்கள். ஒவ்வொரு ஞாயிறும் யாருக்காவது உணவு அளித்து விட்டே உண்பார்கள். அவர்களை அழைத்து இலை போட்டு சாப்பிட வைத்து விட்டே சாப்பிடுவார்கள்.
சிலர் புரட்டாசி சனிக்கிழமை உணவு அளித்து உண்பார்கள்.
முகமதியர்கள் ராம்ஜான் நோன்பு காலத்தில் உணவு அளித்தே உண்கிறார்கள்.
எல்லாமதமும்
திருமூலரும் இதை சொல்லி இருக்கிறார்.
யாவருக்குமாம் இறைவற்கொரு பச்சிலை
யாவருக்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவருக்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவருக்கு மாம் பிறர்க் கின்னுரை தானே’
அன்னதானம் தான் சிறந்தது.
வயிர் நிறைந்து வாழ்த்தும் வாழ்த்து மிகவும் சிறந்தது.
கைபிடி அரிசி திட்டம் இருந்தது.
தினம் ஒரு கைபிடி எடுத்து வைத்து அதை மாத கடைசியில் ஏழை எளியவருக்கு உணவு சமைத்து கொடுக்கலாம். அன்னதான திட்டத்திற்கு கோவிலுக்கு கொடுக்கலாம்.
பசிபிணி என்று ராமலிங்க அடிகளார் சொல்கிறார் வடலூரில் பசிப்பிணி போக்கப்படுகிறது.
ஓட்டலில் உணவு விலைகள் அதிகம் அந்த அளவு நம்மால் உண்ணமுடியாது.
அங்கு வீண் செய்வதே அதிகம்.
உங்கள் கட்டுரை சிறப்பு.
உங்கள் பின்னூட்த்தை, திருமூலரின் திருமந்திரத்தை மிகவும் ரசித்தேன் கோமதி அரசு மேடம்.
நீக்கு@கோமதி அரசு யார் யாரோ சொல்லிச் ச்டென்றதெல்லாம் அனுஷ்டிக்கப் படுகிறதாகூடுதல் தகவல் களுடன் பின்னூட்டம் நன்றி மேம்
நீக்குயாராவது சொன்னதை ரசிப்போம் பின்னூட்டத்தில் கூடுதல் தகவல்தருவார்கோமதிமேம்
நீக்குநன்றி நெல்லைத் தமிழன்
நீக்குநன்றி பாலசுப்பிரமணியம் சார்.
நீக்குநன்றிக்கு நன்றி மேம்
நீக்கு"போதும் போதும்..." என்று சொல்வதும் இதற்கு மட்டும் தான்...!
பதிலளிநீக்குஉண்மை அதையே யாராவது சொல்லும் போது ரசிப்பதும் கூடுதல்
நீக்குபசி போக்க மட்டுமே உணவு - நானும் அடிக்கடி சொல்வது - பசிக்கு சாப்பிடு, ருசிக்கு சாப்பிடாதே!
பதிலளிநீக்குஆளொன்றுக்கு 260 ரூபாய். இப்படி நிறைய இடங்களில் இருக்கிறது. இங்கே “சுருச்சி” எனும் உணவகத்தில் 475/- ப்ளஸ் வரிகள்! ராஜஸ்தானி, குஜராத்தி, பஞ்சாபி என விதம் விதமாக தருவார்கள் - அளவில்லா சாப்பாடு தான்!
மற்றவர்களுக்கு உணவு அளிப்பது கூட விரதம் தான் - உண்மை.
நானுயிர் வாழ ஊண் என்பேன் சிலர் வாழ்வதே ஊணுக்காக என்று நினைக்கிறார்கள் eat to live live to eat
நீக்கு"மிஸ் எ மீல் ஆன் மண்டே" என்ற திட்டத்தை லால்பகதூர் சாஸ்திரி கொண்டு வந்தார் 1965 ல்
பதிலளிநீக்குஅன்று திங்கள் கிழமை இரவு ஓட்டல்களும் கிடையாது. கொஞ்ச நாள் அந்த திட்டம் இருந்தது என்று என் கணவர் சொன்னார்கள்.
போர் காலத்தில் இந்த திட்டம் இருந்ததாம்.
இப்பவும் தமிழக ஓட்டல்களில் இரவு சாப்பாடு கிடைப்பதில்லைஎன்றுஎன் கன்னட நண்பர்கள் சொல்வார்கள்
நீக்குலால்பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்தப்போ கொண்டு வந்த திங்கள் அன்று உபவாசம் திட்டம் எங்க வீட்டிலேயும் அனுசரிக்கப்பட்டது. நான் அப்போப் பள்ளி மாணவி. அப்போத் தான் அரிசி அதிகம் கிடைக்காமல் அம்மா கேழ்வரகு, கோதுமை பயன்பாட்டை அதிகம் கொண்டு வந்ததும்! என் கணவர் புனேயில் இருந்தார் அப்போ. ஓட்டல்களில் இரவு உணவுகிடைக்காமல் பழங்கள் வாங்கிச் சாப்பிட்டதாகச் சொல்லுவார்.
நீக்குசென்னை ஓட்டல்னு இல்லை, பொதுவாகவே இப்போதெல்லாம் ஓட்டல்களில் இரவு முழுச்சாப்பாடு கிடைப்பதில்லை. தமிழ் நாட்டின் ஒரு சில உள் நகரங்களில் ஒருவேளை கிடைக்கலாம். இப்போதெல்லாம் அதிகம் டிஃபன் தான்! இரவும் அரிசிச் சோறு சாப்பிடுபவர்களுக்குக் கஷ்டம் தான்!
நீக்குலால்பஹதூர் சாஸ்திரி எந்த உபவாச திட்டமும் கொண்டு வரவில்லை அரிசி கிடைக்காததால் ஒரு வேளை அரிசியின் பயனை நிறுத்தச் சொல்லி இருந்தார்
நீக்குதமிழ் நாட்டில் மடுமெ இரவு அரிசி சோறு கிடைப்பதில்லை இல்லாவிட்டால் என்ன யாரும் உபவாசமிருப்பதில்லை பல ஆகாரங்களை உள்ளே தள்ளுகின்றனர்
நீக்குமுதலில் இந்த திட்டத்தை சாஸ்திரி தன் வீட்டில் கொண்டு வந்தராம், இரவு உணவு திங்கள் கிழமை இரவு சமையல் கிடையதாம் சாஸ்திரி அவர்கள் வீட்டில்.
பதிலளிநீக்குநாங்களும் அப்படி சில காலம் இருந்திருக்கிறோம்
நீக்குஉணவைப் பற்றி நல்லா எழுதியிருக்கீங்க சார்.
பதிலளிநீக்குMTR உணவு இப்போ 260 ரூபாயா? எனக்குப் பிடிக்கும். எப்போவாவது ஒரு முறை ரசிக்கலாம்.
நான் பெங்களூரில் D ல் ஆரம்பிக்கும் உணவகத்துக்கு (பெயர் சட்னு மறந்துடுத்து, கோரமங்கலாவில் இருக்கு) 4 வருடத்துக்கு முன்னால் மனைவியுடன் லஞ்ச் ஒருவருக்கு 700 ரூபாய்க்கு சாப்பிட்டேன். மிக அருமை ஆனால் பணத்தை ஜஸ்டிஃபை பண்ணும் அளவு சாப்பிடமுடியலை. எல்லாம் அட்டஹாசம்.
இப்போ ஜெயநகர்ல விறகு அடுப்பில் செய்யும் தாவென்கெரே உணவகத்தில் Bபெண்ணை தோசை, தட்ட இட்லிலாம் சாப்பிட்டேன். தமிழக சாம்பாரைக் கையோடு கொண்டுபோயிருந்தால் இன்னும் ரசித்திருப்பேன். தோசை 40ரூ, இட்லி 2, 30 ரூ.
உணவு ஒன்றைத்தானே போதும் என்று சொல்லக்கூடிய அளவு சாப்பிட இயலும். சிங்கத்துக்கெல்லாம் சரி இன்னைக்கு வேற சாப்பிடலாம் என்று நினைத்தால், மான், எருமை, வரிக்குதிரையை விட்டா வேற என்ன சாய்ஸ் இருக்கு? அபூர்வமா ஒட்டகச்சிவிங்கி, யானைக் குட்டி.
நமக்குத்தான் அதிக சாய்ஸ்.
பிறருக்குக் கொடுத்து உண்ணல் நம் கடமையல்லவா?
விறகு அடுப்பில் சமையல் மண்பாத்திரத்தில் சமையல் என்பதெல்லாம் வெறும் விளம்பரமாகி விட்டது விறகுஅடுப்பில் சமைத்தால் புகை வாசனை வராதோ
நீக்குநல்லதொரு அலசல் ஐயா.
பதிலளிநீக்குஸ்டார் ஹோட்டலில் இப்பொழுது பெரிய அளவில் பில் போட்டால்தான் மக்களே மதிக்கின்றார்கள்.
அளவில்லாச் சாப்பாடு என்பதும்வெறும் விளம்பரமே ஒருவர் எத்தனை அளவுதான் சாப்பிட முடியும் தெ லா ஆஃப் ஆவெரேஜஸ் படி எல்லாம்சமமாகி விடும் மேலும் அதிகபணம் கொடுத்து சாப்பிடுவது ஒரு பெருமைக்குரிய விஷயமாகக் கருதப்படுகிறது நாங்கள் அன்று உணவுக்குச் சென்றது ஒரு டவிர்க்க முடியாத நேரத்தட்டுப்பாட்டினால்தான்
நீக்குதரம் பற்றி நானெழுதி இருந்ததும் நினைவுக்கு வருகிறது
நீக்குகொடுத்த தொகை அதிகம்தான்
பதிலளிநீக்குஓட்டலில் அளவு சாப்பாடு 70 ரூபாய்
பதிலளிநீக்குஅளவில்லாத சாப்பாடு வயிற்று வலி என்று எழுதி வைத்திருந்தார்கள்.
என்ன சொல்கிறீர்கள்?.. நீங்கள் வரிசையாக அடுக்கியிருக்கிற வகைகளில் இரண்டு- மூன்றை தனியாகச் சாப்பிட்டாலே பில் ரு. 260/- வந்து விடுமே?.. ஆக மற்றதெல்லாம் இலவசம் தான்.
பதிலளிநீக்குஎனக்கு ஐ.பி.எஸ். சாபமுண்டு. அதனால் எதையும் ஆசையோடு உண்பதை விடுத்து யோசித்து யோசித்து கொறிப்பது தான்.
ஒன்றை சொல்ல மறந்தேனே கூடவே ஃப்ரூ சலாடும் ஐஸ்க்ரீமுடன் உண்டு ஐபிஎஸ் சாபம்புரியவில்லை இண்டக்காசிலேயே லாபமென்றால் இன்னும் அதிகவிலையில் விற்பவர் கொள்ளை அடிக்கின்றனர் என்று தானே அர்த்தம்
பதிலளிநீக்கு