Sunday, August 19, 2018

நீரின் ஆவேசம்

மழை இல்லை என்று ஏங்கியவர்களுக்கு  போதுமடா சாமி என்னும் அளவுக்கு மழைபெய்து பல இடங்களும் வெள்ளக்காடாய் இருக்கின்றன  கிருஷ்ண ராஜசாகர் அணையில் நீர் நிரம்பி  14 மதகுகளை திறந்து விட வெளியேறும் நீரின் ஆக்ரோஷம் காணொளியாய்  இதற்குமுன்   சதுர கிரியில்வெள்ளம் பெருக்கெடுத்துஓட  தஞ்சையம்பதியின் தளத்தில் காணொளி கண்ட நினைவு  மலையாளச் செய்திகளில் நீர்  வரத்தை பிரளயம் என்று கூறுவதுபோல் புரிந்தது பாலக்காட்டில் அம்பர்நாத் ஆலும்னி கள் 2019 ஃபெப்ருவரியில் கூட இருக்கிறது வட இந்தியாவில் இருந்துவருபவர்களின்  வாட்ஸாப் செய்திகள் ஃபெப்ருவரியில் நிலைமை சீராகுமா என்னும்  பய தொனியில் இருக்கிறது
அம்மாமண்டபம் நீரில் மூழ்கியதாக செய்தி
கேரளாவில் இருக்கும்  வலை நண்பர்கள் பற்றியசெய்திகள் உண்டா துளசிதரனுக்கு மடல் எழுதி இருந்தேன் என்ன பிரச்சனையோ பதில் இல்லை

எனக்கு வந்த சில புகைப்படங்கள்நான் ரசித்தேன்  யான்பெற்ற பேறு  பெருக இவ்வலையுலகம்
ஊர்க்குருவி பருந்தாகிறது
திராட்சைக் கொத்து 
கத்தரிக்காயா
பாகற்காய்கள்
சுரைக்காயா

இது என்ன பழமோ


சமயபுரம் மாரியம்மன்  அடியேன் கை வண்ணம்  


கிருஷ்ணர்  என் கை வண்ணம்   பழையது
துள்ளுவதே முதுமை 


50 comments:

 1. மழைநீர் விரைவில் வடிந்து நல்ல விடிவு பிறக்கட்டும்.

  படங்கள் அனைத்தும் அருமை. துள்ளுவதோ இளமை ஹா.. ஹா..ஹா..

  ReplyDelete
  Replies
  1. எல்லா இடங்களிலும் மழைவெள்ளம்பற்றியே பேச்சு வெள்ளம்வடிந்து இயல்பு நிலைக்கு வரவேண்டும் துள்ளுவதோ முதுமை என்றல்லவா இருக்கிறதுவருகைக்கு நன்றி ஜி

   Delete
 2. படங்கள் அழகு.

  நீரின் ஆவேசம் - ரொம்பவே கஷ்டம். இயற்கையின் சீற்றம்.

  ReplyDelete
  Replies
  1. கொள்ளிட நீரைக் காண சுற்றுலாபோல் மக்கள் வருவதை தொலைக்காட்சியில் காண்பித்தனர்

   Delete
 3. மழை, வெள்ளம் மனதில் மகிழ்ச்சியுறச் செய்தாலும் வெள்ளச் சீற்றம் பயம் காட்டுகிறது. (தண்ணீரையும் நெருப்பையும் ஜாக்கிரதையாக அணுக வேண்டும் என்று சொல்வார்கள்)

  காய்கள், திராட்சை படங்கள் கண்டு மகிழ்ந்தேன்.

  சமயபுரம் மாரியம்மன் ஓவியம் அருமை. அதன் கீழ் இருப்பது திருவனந்தபுரம் பத்மநாப ஸ்வாமிதானே.

  திருமதி அவர்களின் சிரிப்புக்குக் காரணம் அது நகைக்கடை என்பதனால் அல்ல என நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நெல்லை... கருத்தைக் கவர்ந்த கண்கவர் மணாளன் அருகிலிருக்க சிரிக்கக் கேட்பானேன்!

   :)))

   Delete
  2. மழை ஓக்கே வெள்ளம்,,,,? நான் வரைந்த ஓவியங்கள் அவர்களது வீடுகளில் பூஜைக்கு வைத்திருப்பது கண்டேன் கீழே இருப்பது பத்மநாப சுவாமியாக இருக்கலாம்சில நேரங்களில் வரும்மகிழ்ச்சியின் வெளிப்பாடுதான் என்று நினைக்கிறேன்

   Delete
  3. @ஸ்ரீ அருகிலிருக்கும்போதெல்லாம்சிரிக்க முடியுமா சார்

   Delete
  4. அது கொத்து தக்காளி என்று நினைக்கிறேன். பொதுவா கொத்து கொத்தா 20-40 பழங்கள் பார்க்கலாம். ஆனால் இதில் ஏகப்பட்டது இருக்கு. சாதாரண தக்காளிப்பழத்தைவிட கொஞ்சம் சிறியது, ஆனால் தக்காளிதான்.

   Delete
  5. @ஸ்ரீராம் - இரண்டு சமயத்தில் பெண்கள் ரொம்ப மகிழ்வா இருப்பாங்க. ஒண்ணு, நகைக்கடையில் (புடவைக் கடையில் அவங்க ரொம்ப பிஸியா இருப்பாங்க, ஏகப்பட்ட புடவைகள் எடுத்துப் பார்ப்பதால்). இரண்டு, அவங்க உறவினர்கள் வீட்டுக்கு வந்தால், நாம ரொம்ப மகிழ்ச்சியா அந்த உறவினர்கள்ட பேசிக்கிட்டிருந்தோம்னா. ஹா ஹா. மற்றபடி ஹஸ்பண்ட் அருகில் இருப்பதால் முகம் மலர்வது, கல்யாணமாகி ஓரிரு நாட்கள்தான்.

   Delete
  6. நெல்லைத் தமிழன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. பெண்கள் பற்றிய கணிப்பீட்டுக்கு:)). அப்படி இல்லை..

   அந்த கொத்துப் பழங்கள் அது நிறைய ட்றிக்ஸ் காட்டியிருக்கினம் என நினைக்கிறேன் கிராஃபிக்ஸ்.. நிஜத்தில் இப்படி எல்லாமும் இருக்க வாய்ப்பில்லை.. அப்படி திராட்சை இருக்குமோ உலகில்.. சாத்தியமே இல்லை!>.

   Delete
  7. @கொத்து தக்காளியா கேள்விப்பட்டதும் இல்லை பார்த்ததும் இல்லை அந்தப் பழங்கள் பற்றி வேறு ஒரு வாசகர் எழுதியது கன்வின்சிங் ஆக இருக்கிறது

   Delete
  8. @ நெத பொதுவாகவே பெண்களுக்கு நகை புடவை பிடிக்கும் என்றாலும் அது மட்டுமே மகிழ்ச்சி தருவதில்லை கணவன் அருகாமை மகிழ்ச்சி தருவது மணமான ஓரிரு நாட்களுக்குத்தான் என்பது ஒரு சுய அனுபவமோ

   Delete
  9. @ ஞானி எல்லாமே ட்ரிக்ஸ் என்பதும் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை வேறு ஒரு பதிவர் எழுதி இருப்பதையும் பாருங்கள்

   Delete
  10. கொத்துத் தக்காளி இல்லை, ப்ளம்ஸாக இருக்கும்னு எழுத நினைச்சு மறந்துட்டேன். இன்னொருத்தர் குறிப்பிட்டிருக்கார். எனக்கும் ப்ளம்ஸ் மாதிரித் தான் தெரியுது!

   Delete
  11. அதானே நீங்கள் சொல்லி இருக்க வேண்டும் எனக்குத்தான் தெர்யவில்லை

   Delete
 4. அனைத்து படங்களும் அருமை...

  உங்கள் கைவண்ணம் ஆகா...!

  ReplyDelete
  Replies
  1. படங்கள் எனக்கு வந்துபகிரப்பட்டவை நெசவு தொழிலில் காணப்படும் டிசைன்கள் எனக்கு ஆச்சரிய மூட்டும்

   Delete
 5. சதுரகிரி வெள்ளத்தின் காணொளியினைத் தாங்கள் நினைவு கூர்ந்திருப்பது மகிழ்ச்சி...

  சமயபுரம் மாரியம்மன் படம் அழகு.. அருமை...

  ஆனாலும், தாங்கள் -

  துள்ளுவதே இளமை!.. - என்று தாராளமாகப் பாடலாம்!..

  நலம் வாழ்க என்றென்றும்!..

  ReplyDelete
  Replies
  1. தாராளமாகப் பாட விரும்பினாலும் சரியாகாதே பாராட்டுக்கு நன்றி சார்

   Delete
 6. மழை, வெள்ளம் = காய்ந்தால் கருவெள்ளம் ; பெய்தால் பெருவெள்ளம்!

  காய்கள் அசத்துகின்றன.

  பருந்தின் முதுகில் குருவி - அட்டகாசம்... போட்டோஷாப் வேலை மாதிரி தெரிகிறது. நல்ல கற்பனை.

  ReplyDelete
  Replies
  1. படங்கள் எனக்கு வந்தவை போட்டோ ஷாப் பற்றி ஏதும் அறியேன் பருந்தின் முதுகில் குருவி எனக்கு வேறுகற்பனையைத் தந்தது

   Delete
 7. நீங்கள் வரைந்த படங்கள் அழகாய் இருக்கின்றன. 'நான் வரைந்த ஓவியமே...' என்று பாடலாம்!

  இங்கும் ஞாயிறு படப்பகிர்வு... குட்!

  ReplyDelete
  Replies
  1. அந்த ஓவியங்கள் வரைந்து காலங்கள் ஆகிறதுபாராட்டுக்கு நன்றி ஸ்ரீ

   Delete
 8. உங்க சமயபுரம் மாரியம்மன் படம் ஏற்கெனவே பார்த்திருக்கேன். இதே போல் ஓர் கிருஷ்ணர் படம் வரைந்தது எனக்கும் கொடுத்திருக்கீங்க! :) உங்க இரண்டு பேரையும் நகைக்கடையில் பார்ப்பது சந்தோஷமான நிகழ்வுனு நினைக்கிறேன். அதான் உங்க மனைவி சிரிக்கிறாரோ!

  ReplyDelete
  Replies
  1. நல்லது நான் கொடுத்தகிருஷ்ணர் படம் நினைவு வைத்திருக்கிறிர்களேநகைக்கடைக்குப் போய் எத்தனையோ ஆண்டுகள் ஆகின்றன. இப்போதுஒரு மாற்றத்துக்கு அவள் எப்போதும் புன்னகையோடுதான் இருப்பாள் பொன் நகை காரணமல்ல

   Delete
  2. நீங்க கொடுத்த படம் மாட்டி இருக்கேன். நீங்க வந்தப்போப் பார்த்திருக்கலாம். மறந்துட்டீங்க போல! :)

   Delete
  3. நான் கொடுத்தபடமெங்கே என்றுகேட்கக் கூச்சமாய் இருந்திருக்கும்

   Delete
 9. துளசிதரன் நலமாக இருப்பதாகச் செய்தி கிடைத்தது. அம்மாமண்டபம் முழுகி எல்லாம் போகலை. நாங்க பாட்டு சர்வசாதாரணமாக வெளியே போய்க்கொண்டும் வந்து கொண்டும் இருக்கோம். எவ்விதப் பிரச்னையும் இல்லை. அம்மாமண்டபம் உள்ளே இருந்த கடைகள், வைதிகர்கள் அனைவரையும் வெளியேற்றி விட்டார்கள். அம்மாமண்டபம் இப்போது போலீஸ் பாதுகாப்பில் இருக்கிறது. யாரும் உள்ளே நுழைய முடியாது.

  ReplyDelete
  Replies
  1. நீரின் ஆவேசம் கண்டதால்தானோ என்னவோ அம்மா மண்டபத்துக்கு நீர் வந்து விட்டதுஎன்றதும் எழுதியது

   Delete
 10. ஓ இப்படியா பாய்கிறது. பார்க்கவே பயமாக இருக்கு, அருகில் போய் நிற்கிறார்களே.. நிலமும் உடைந்தால் தெரியும்..

  உங்கள் சமயபுர மாரியம்மன் கை வண்ணம் மிக அழகு...

  ஏனைய படங்களில் சிலது பார்த்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. எனது பழைய ஓவியங்களை அவ்வப்போது பதிவிட்டு வருகிறேனே ஒரு விளம்பரம்தான்

   Delete
 11. புது நகை வாங்கிக் குடுத்திட்டோ.. போஸ் குடுக்கச் சொன்னீங்கள்?:)

  ReplyDelete
  Replies
  1. போஸொன்றும் இல்லை அவல் எப்போதும் இப்படித்தான்

   Delete
 12. இயற்கைக்கு எதிராக மனிதனால் ஏது செய்ய இயலும்
  நிலைமை சீரடையும் என்று எதிர்பார்ப்போம் ஐயா

  ReplyDelete
  Replies
  1. நிலைமை சீரடைந்து வருவதாக இன்றைய செய்தி

   Delete
 13. நீரின் சீற்றம் காணொளி பயத்தை அளிக்கிறது.

  காய்,கனி படங்கள் எனக்கும் வந்தன.
  உங்கள் இருவர் புகைப்படம் நன்றாக இருக்கிறது.
  அவர்கள் புன்னகை முன் பொன்நகை எதற்கு?

  ReplyDelete
  Replies
  1. புன்னகை மட்டும் போதாதே பொன்னகையும் தேவைப்படுகிறதே அழகுக்கு அழகு சேர்க்கவா

   Delete
  2. அழகுக்கு அழகு சேர்க்க என்று சொன்னாலும் உண்மைதான்.

   Delete
 14. ஆம், அதன் வழியை நம் போக்குக்குத் தடுக்கும் போது, அதன் அறச் சீற்றம் அதிகமே ! நாம் தான் மாறவேண்டும். இப்படங்களைப் பார்த்துள்ளேன் , செய்நேர்த்தி பரவசமே! தங்கள் கைவண்ணம் -கண்ணில் ஒற்றலாம்- அருமை! - என்றும் துள்ளட்டும் உங்கள் முதுமை - படம் ம்ம்ம்...

  ReplyDelete
  Replies
  1. வெகுநாட்களுக்குப் பின் உங்கள் பின்னூட்டம்மகிழ்ச்சி தருகிறது சார் நதியின்போக்கில் அணை கட்டுவதே காரணம் என்கிறீர்களா

   Delete
 15. The red fruit is Red plums, not tomatoes. The tree looks like a plum tree, The leaves don’t look like tomatoe leaves. The tree is very big for tomatoes. Note there are small tomatoe trees exist.The photos are from Thailand orchards( some of the photos).— Rajan

  ReplyDelete
  Replies
  1. thank you for the information and your first (?) comment

   Delete
 16. நீர், நெருப்பு, காற்றூ, பாம்பு, நிலம், சூரியன் எல்லாவற்றயும், இந்திய கலாச்சாரத்தில் "கடவுள்" ஆக்கி வணங்க ஆரம்பித்து விடுவார்கள்.

  காரணம்?

  They knew THEY CAN NOT WIN against NATURE!

  இயற்கை மிகவும் வலிமையானது என்பதால், அதை ஓரு போதிலும் வெல்ல இயலாது என்பதை அறீந்து, நண்பனாக, கடவுளாக, தாயாக, "நல்ல பாம்பாகவும்" ஆக்கிக் கொள்கிறார்கள்.

  வெள்ளத்தால் இத்தனை உயிர் சேதம், பொருட் சேதம் ஆனாலும், நீரே இல்லாமல் கஷ்டப்படும் நம் நாட்டுக்கு, பஞ்சத்தைவிட வெள்ளமும், மழையும் பரவாயில்லைனு எனக்குத் தோனுது. :(


  ReplyDelete
  Replies
  1. பயமே கடவுள் வழிபாட்டாக மாறி விட்டது என்கிறீர்கள் இல்லையா

   Delete
 17. சமயபுரம் மாரியம்மன் மற்றும் கண்ணன் படங்கள் மிக அழகு.. அருமை...

  ReplyDelete
  Replies
  1. பாராட்டுக்கு நன்றி மேம்

   Delete
 18. இந்தக் கத்திரிக்காயை எங்க ஊர்ல மார்கெட்டுல பார்த்திருக்கேன். (வாங்கினதில்லை). இது கொடியில் காய்த்துத் தொங்குவதை இப்போதுதான் தெரிந்துகொள்கிறேன். எதுவும் அளவுக்கு மிஞ்சி பெரிதானால் ருசி இருக்காது.

  ReplyDelete
 19. ருசி என்பதால் பதிவிடப்படவில்லை வித்தியாசமாய் தெரிந்ததால் பதிவில் இடம் பெற்றது

  ReplyDelete