டிடிக்கு நன்றி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
டிடிக்கு நன்றி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 22 ஜனவரி, 2017

நன்றி நவில்கிறேன்


                                          நன்றி நவில்கிறேன்
                                           ---------------------------


 என் வலைப்பூவுக்கு வரும்  வாசகர்களுக்குப் புலப்படுகிறதா தெரியவில்லை.  என்  தளமே மாறி விட்டிருப்பதை கவனித்தீர்களா  என்  பதிவு ஒன்றில் சில புரியாத விஷயங்கள் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்  நண்பர் தனபாலன்  என்  தளத்தில்  இருந்த வலையக இணைப்பை எடுக்கச் சொன்னார்  எனக்குத்தான் ஏதும் தெரியாதே. அவரையே உதவக் கேட்டேன்   என்  தளத்துச் செல்ல அனுமதி அளிக்கும்   முகவரி மற்றும்  கடவுச் சொல் போன்றவை தேவை என்றார்.  கடவுச் சொல்லைக் கொடுக்க எனக்குத் தயக்கமாக இருந்தது  என்  ப்ரைவசியில் பிறரை அனுமதிப்பது என்றாகி விடுமே. இருந்தாலும்  நம்  நண்பர்தானே  என்று கொடுத்தேன் (இதற்குப் பின்  என்  கடவுச் சொல்லை மாற்றி விட்டேன்.....! )  ஒரே நாளில் ஏதேதோ மாற்றங்கள் செய்து  என்  தளத்தையே மாற்றிவிட்டார்மின் அஞ்சலில் என் பதிவுகளைப் பெற இப்போது இணைய முடியும்  மறுமொழி எழுதுவதில் மாற்றம்  கொண்டு வந்து விட்டார்  வேறு சில விஷயங்களும்  சேர்ந்திருக்கின்றன. சொல்ல மறந்து விட்டேனே டாட் இன் னை டாட் காமாக மாற்றி இருக்கிறார் தமிழ்மண வாக்குப்பட்டையும்  இருக்கிறது  இனி பார்க்க வேண்டும்  தமிழ் மண ராங்க் இப்போது இருக்கும்  24 ல்லிருந்து  மேல் நோக்கிப் போகிறதா என்று எனது சென்றபதிவை திரு தனபாலனே தமிழ்மணத்தில் இணைத்து தமிழ்மண வாக்கும்  கொடுத்து விட்டார்  ஆனல் என்  வலைப்பூ பதிவில் தமிழ்மண வாக்குப் பட்டை காணோம்  தமிழ் மணத்தில் என் பதிவில் இருந்தது நான்  வாக்குப்போட முயன்றபோது எனக்குஅது சாத்திியப்படவில்ல என்ன பிரச்சனையோ தெரியவில்லைஎனக்கு தெரிய வேண்டியது இன்னும்  நிறையவே இருக்கிறது ஒரு பிரச்சனை என்றபோது உடன் வந்து உதவிய தனபாலன் இதிலும் உதவுவார் என்று நினைக்கிறேன்
 இத்தனையும்  செய்து கொடுத்த நண்பர் திண்டுக்கல் தனபாலனுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்