Saturday, January 14, 2017

பொங்கலுக்காக


                         பொங்கலுக்காக
                         -------------------------
எங்கோ தவறு நேர்ந்திருக்கிறது இன்று பதிவிட்டது மூன்று நாட்களுக்கு முந்தையதாகக் காட்டுகிறது  டேஷ் போர்டிலும்   எங்கோ சென்று விட்டது  அதையே மீள்பதிவாக இடுகிறேன்


ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு கதை உண்டு
பொங்கலுக்கும் ஒரு கதை கேளீர்
அந்தக் கால ஆயர் பண்டிகை போகி
அது இந்திரனுக்கெ உரித்தாயிற்று
அதுவே அந்தநாள் இந்திர விழாவாயிற்று

மழை கொடுக்கும் இந்திரனுக்கு வேள்வி ஏன்,மரம் நிறைந்த மலைக்கன்றோ விழா வேண்டும்
எனக் கூறிய கோபாலன்பால் கோபமுற்ற இந்திரன்,பெருமழையுடன் இடியும் கூட்டி இ டர் கொடுக்கக் கோவர்தன
 
மலையைத் தூக்கி இடையரின் இடர் துடைத்துக் காத்த
 
கண்ணன் முன் செறுக்கழிந்து நின்றான் தேவர்கோன்.

செறுக் கொழிந்த இந்திரனுக்குத் தொடரும் விழா போகி
அவனிடமிருந்து ஆநிரைகளையும்  ஆயர்களையும்  காத்த நாள்
சூரிய நாராயண வழிபாடாயிற்று பயிர்காக்கும்   பரிதிக்கு
நன்றி நவில அதுவே பொங்கலுக்கு வித்தாயிற்று
அறுவடை செய்த புது நெல் அரிசி கொண்டு பொங்கல்
படைத்து மக்கள் மகிழும் நாளே பொங்கல் திருநாள்
உழவருக்கு உதவும்  ஆநிரைக்கும்  நன்றி நவில 
அதன்  அடுத்த நாளே மாட்டுப்பொங்கல்

மகரம் என்றால் சூரியன் அவன் தனுர் ராசிவிட்டு
மகர ராசிக்குள் நுழையும் காலம் உத்தராயணம் எனப்படும்        
பகலவனும் பாதை மாறிப்
பயணம் செய்யத் துவங்கும்
இந்நாளே மகர சங்கராந்தி
இது ஒரு உழவன்  திருநாள் 
தமிழர்களுக்கே உரித்தானது போன்ற
மயக்கம் ஏனோ உழைக்கும்  மக்கள்
மனம் மகிழும் நந்நாள் 
ஆண்டின்  துவக்கமே இந்நாள் என்று
அரசாணை இட்டு மாற்றவும் அந்தோ முயன்றனர்
நாளெல்லாம் ஒன்றுபோல் இருக்க
நன்றி நவிலக் கொண்டாடும் திருநாளில்
தைபிறந்தால் வழி பிறக்கும்என்னும் நம்பிக்கையே ஆதாரம்
முற்றிய கன்னலுடன் சூல் முற்றிக்
கதிர் சாய்ந்த செந்நெல் குத்திய
புத்தரிசி கொண்டு புதுப் பானையதனில்
 
பொங்கலாக்கிப் படைத்திடும் ந்நாளில் 
அனைவருக்கு மனம் கனிந்த பொங்கல் வாழ்த்துகள் 
 


22 comments:

 1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. இனிய தமிழர் தின வாழ்த்துக்கள் ஐயா...

  பதிவின் கீழ் வரும் :-

  ="http://valaiyakam.com/images/valaiyakam.gif" alt="வலையகம்" width="180" border="1" height="80">"

  தங்கள் தளத்தில் சிலவற்றை (Gadgets) நீக்க வேண்டும்... நேரமிருந்தால் சொல்லவும்... நன்றி...

  ReplyDelete
 3. தைப்பொங்கல் வாழ்த்துகள்!

  அருமையான பொங்கல் கதை

  ReplyDelete
 4. அருமை
  தமிழர் திருநாள் நல் வாழ்த்துக்கள் ஐயா

  ReplyDelete
 5. எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துகள். ப்ளாக்கரின் டேஷ்போர்டில் அவ்வப்போது சில தொழில்நுட்ப கோளாறுகள் வந்து தானாகவே மறைவது வழக்கமாக இருக்கிறது.

  ReplyDelete

 6. @ வெங்கட் நாகராஜ்
  @திண்டுக்கல் தனபலன்
  @ ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்
  @ கரந்தை ஜெயக்குமார்
  @ தி தமிழ் இளங்கோ
  அனைவருக்கும் வருகைக்கு நன்றி திரு தனபாலனுக்கு மடல் அனுப்புகிறேன் திரு தமிழ் இளங்கோவுக்கு இந்தப் பதிவு தானாக தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டுவிட்டது சில புரியாத விஷயங்கள் கணினியில் ஏதும் தெரியாமல் கை வைக்கப் பயம்

  ReplyDelete
 7. பொங்கல் நல்வாழ்த்துக்கள் சார்! எங்களுக்கும் தொழில்நுட்பக் கோளாறுகள் டேஷ் போர்டில் ஏற்படுவதுண்டு சார்.

  சார் ஒரு சின்ன வேண்டுகோள். தங்கள் பதிவுகளை முன்பெல்லாம் எங்கள் மின் அஞ்சலுக்கு அனுப்புவீர்கள். இப்போது வருவதில்லை. மீண்டும் அனுப்ப இயலுமா? நீங்கள் வாட்சப்பிலும் இல்லை. உடன் பார்க்க முடிவதில்லை. சில சமயம் தங்கள் பதிவு கீழே எங்கோயோ எங்கள் தளத்தில் சென்று விடுகிறது இணையம் ஸ்லோவாக இருந்தால் பார்ப்பதும் கடினமாகி விடுகிறது அதனால்தான் இந்தத் தாழ்மையான வேண்டுகோள்.

  மிக்க நன்றி சார்..

  கீதா

  ReplyDelete
 8. @துளசிதரன் தில்லையகத்து
  நான் எப்போதும்போல் என்பதிவுகளை உங்களுக்கு மின் அஞ்சலில் அனுப்புகிறேன் இந்தக் கடைசி பதிவு தவிர இதற்கு முன் இட்டதன் மீள் பதிவே இது. அதை அனுப்பி இருக்கிறேன் இந்தப் பிரச்சனைகளை தவிர்க்க என் பின் தொடர்பாளராக மாறலாமே follower

  ReplyDelete
 9. கதை கதையாம் காரணமாம் !
  வாழ்த்துக்கு நன்றி :)

  ReplyDelete
  Replies
  1. கதைகளும் தெரிந்திருக்க வேண்டுமல்லவா

   Delete
 10. நல்ல தகவல்கள் அடங்கிய பதிவு சார். பொங்கல் திருநாள் அறுவடை நாள்தான். அதை இந்தியா முழுவதுமே ஒவ்வொரு மாநிலத்திலும் கொண்டாடுகிறார்கள் தான். பிற மாநிலங்களில் மகரசங்கராந்தி என்று. நீங்கள் சொல்லியிருக்கும் காரணம்தான்...சூரியனின் பாதை மாற்றம்.

  பல நாடுகளிலும் அவரவரவர் அறுவடை மாதத்தில் கொண்டாடத்தான் செய்கிறார்கள் பெயர்தான் மாறுபடுகிறது. புது அரிசியில் பொங்கல் பொங்கி (புதுஅரிசி சீக்கிரம் வெந்து நன்றாகக் குழைந்து விடும் அதுவும் காரணமாக இருக்கலாம்)

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி மேம்

   Delete
 11. கதை அறிந்தேன்
  பொங்கல் வாழ்த்துகள் ஐயா

  ReplyDelete
  Replies
  1. எத்தனையோ கதைகள் எத்தனையோ பண்டிகைகள் பொங்கலுக்கானது இது வருகைக்கு நன்றி ஜி

   Delete
 12. இனிய பொங்கல் வாழ்த்துகள் அய்யா..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மேம் . உங்கள் தளம் சென்றிருந்தேன் கண்ணாடி ஓவியங்களில் உங்கள் ஆர்வம் தெரிந்தது நானும் தஞ்சாவூர் ஓவியங்களும் கண்ணாடி ஓவியங்களும் தீட்டி இருக்கிறேன் எல்லாம் சுயமாகக் கற்றுக் கொண்டது. பல பதிவுகளில் என் ஓவியங்களைபகிர்ந்து கொண்டது உண்டு

   Delete
 13. கதையை அறிந்தோம் ஐயா, அதுவும் உங்கள் பாணியில். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. அறிந்த கதைதான் ஐயா . நானும் சொல்லி இருக்கிறேன் நீங்கள் சொல்வதுபோல் என் பாணியில் வருகைக்கு நன்றி சார்

   Delete
 14. நீட்டி முழக்கி சொல்லப்பட்ட பொங்கல்வாழ்த்து கண்டேன் இன்று. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. பதிநான்காம் தேதிப் பொங்கல் வாழ்த்தை இன்றாவது பார்த்தீர்களே நன்றி

   Delete
 15. This comment has been removed by the author.

  ReplyDelete
 16. அரியத் தகவல்களுடன்
  கவிதையாகப் பொங்கல் வாழ்த்துச் சொன்னவிதம்
  மிக மிக அருமை

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்
  அனைவருக்கும் இனிய
  பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete