Tuesday, June 7, 2016

ஊர் ஹ(b)ப்பா.........


                                             ஊர் ஹப்பா ( ஊர்த் திருவிழா)
                                            --------------------------------------------------
ஊர் ஹ(b)ப்பா
மே மாதம் 23-ம் தேதி மதியம் மூன்று மணி அளவில்  கணினியில் அமர்ந்திருந்தேன் வெளியே ஒரே சப்தமாக இருந்ததால் என்னவென்று பார்க்க வந்தேன் எங்கள் வீட்டின் முன் மூன்று நான்கு லாரிகள் வீட்டின் அருகேயே ஏழு சாலைகள் கூடும் சந்திப்பு இருக்கிறது எங்கள் வீடு பிரதான சாலையில் இருக்கிறதுஎங்கள் சாலையில் சந்திப்புக்கு சற்று முன்பாக ஒரு நாடக மேடை அமைப்பதற்காக வந்திருந்த பொருட்களைத் தாங்கியவையே அந்த லாரிகள் எங்கள் ஊர் தாசரஹள்ளி கிராம தேவதை  மஹேஸ்வரி அம்மன் வருடத்துக்கு ஒரு முறை திருவிழா விமரிசையாக நடக்கும் எங்கள் சாலைக்கு மேலே இருந்த சிறிய சாலையில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது  
சுற்று வட்டாரத்தில் இருந்து மேள  தாளத்துடன் முளைப்பாறி (என்று நினைக்கிறேன்) எடுத்துக் கொண்டு மகளிர் செல்வார்கள் கேட்டால் ஊர் ஹப்பா என்பார்கள் அதன் ஒரு பகுதியாக நாடகம் ஒன்று மேடையேற்ற ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. மூன்று மணி அளவில் ஏற்பாடுகள் தொடங்க  மாலை ஆறு மணிக்குள் மேடை தயாராய் விட்டது மேடையும் கூரையும் படுதாக்களும் ஒளி அலங்காரங்களும் இன் எ ஜிஃப்ஃபி என்பது போல் நடந்தேறியது. இரவு முழுவதும் நடக்கும் நாடகம் பழைய தெருக்கூத்தை சேர்த்தி அல்ல. நவீன நாடக அமைப்பும் அல்ல. இரண்ரும் கலந்து கட்டிய ஒரு நாடகம்  அன்றைய தூக்கத்தைத் தொலைக்கத் தயாரானோம்
நாடகத்தின் பெயர் குருக்ஷேத்ரா என்றார்கள் யுத்தக் காட்சிகளை எப்படிக் காட்டப் போகிறார்களோ  என்று நினைத்தேன் ஆனால் எப்படியும் நள்ளிரவு ஆகிவிடும் . மொழி தெரியாமல் உறக்கம் விழித்துக் காணும் நோக்கம் இருக்கவில்லை. வசனத்தை விட பாடல்களே அதிகம் மைக் செட் என் வீட்டு தென்னை மரத்தில் கட்டி இருந்தார்கள்  சப்தம் காதைத் துளைத்ததுமுதலில் இந்த இடருக்குக் காவல் நிலையத்தில் புகார் செய்யலாம் என்று தோன்றியது.ஆனால் எங்கள் தொகுதி எம் எல் ஏ தலைமையில் நாடகம் நடக்கப் போகிறது என்று தெரிந்ததும் அந்த எண்ணம் கைவிடப்பட்டது விடிய விடிய நாடகம் நடந்தது .காலை ஏழு மணிக்குள் நாடக மேடை இருந்த சுவடே இல்லாமல் போய் விட்டது சில புகைப்படங்களும்  ஒரு சிலக் காணொளிகளும் பதிவிடுகிறேன் எப்படியோ எனக்கு ஒரு பதிவுக்கான விஷயம் கிடைத்து விட்டது

நாடக மேடைக்கு ஆயத்தங்கள்
.                   
 
மேடை முடியும் தருவாயில்

                        அலங்கார விளக்குகளுடன் மேடை தயார் 
இடமிருந்து மூன்றாவதாக எங்கள் தொகுதி எம் எல் ஏ 

சாலையில் நாற்காலிகளில் பார்வையாளர்கள்
 

நாடகம் துவங்கும்  போது  அபிமன்யு உத்தரை நடனம்  

                              அபிமன்யு உத்தரை

26-ம் தேதி சுவாமி ஊர்வலமும் வாண வேடிக்கையுடன் விமரிசையாக  நடந்ததுபோக்குவரத்து நெரிசல் எங்கள்  சாலையில் அதிகம் ஆயிற்று. மறு நாள் வழக்கம் போல் வேலைக்குப் போகும் பெண்கள் பேரூந்துக்காக காத்திருப்பும் இருந்தது. ஒரு நாளாவது கடவுளுக்காக ஒதுக்கினார்கள்.
டின் முன் போக்குவரத்து நெரிசல்சுவாமி ஊர்வலம்
வாண வேடிக்கைகள்  காணொளி
   

 சுவாமி வரும் பின்னே ஆட்ட பாட்டங்கள் போகும் முன்னே என்பற்கேற்ப நிகழ்வுகள் இருந்தன அடுத்த நாள் வழக்கம் போல் வேலைக்குப் போகும் பெண்களின் கூட்டம்  வீட்டின் முன் பக்கம் 
அடுத்த நாள் இயல்பு நிலை

31 comments:

 1. எவ்வளவு வேகமான சுறுசுறுப்பான செயல்பாடு! தூக்கத்தைத் தொலைக்கத் தயாரானோம் என்கிற வரி புன்னகைக்க வைத்தது. சுவாரஸ்யம்தான்.

  ReplyDelete
 2. திருவிழா என்றாலே இப்படித்தான்! பொதுமக்களின் இடர் திருவிழா ஏற்பாட்டாளர்களுக்கு புரிவது இல்லை! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 3. இந்த தேசத்தின் அழிந்து படாத சொத்து இது தான் சார். எந்த மாநிலமாக இருந்தால் என்ன, என்ன மொழியாக இருந்தால் தான் என்ன, இந்தியாவின் முகம் ஒன்று தான். கிராமங்களில் அந்நாட்களில் நடைபெற்ற கூத்துகள், விழாக்கள் கால மாற்றங்களுக்கு ஏற்ப லேசான மாறுதல்களுடன் நகர்ப்புறங்களில் இன்றும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. சென்னையிலும் பேட்டைக்கு பேட்டை இதெல்லாம் இன்றும் நட்ந்து கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் அம்மன் திருவிழாக்களுடன் சேர்ந்து நடக்கும்.

  அந்நாளைய தஞ்சைப் பக்க மெலட்டூர் விழா என் நினைவுக்கு வந்தது.

  புகைப்படங்கள் துல்லியம் என்பதைத் தாண்டி கவித்துவமாக என் கண்ணுக்குப் பட்டது. மேடை போட்ட நிலையில் தெருவின் தோற்றமும், இந்தத் தெருதானா அது என்று அதிசயக்கத்தக்க போக்குவரத்து நெரிசல் படமும், ஓ.. ஊர் ஹப்பாக்கு அடுத்த நாள் இயல்பு நிலையில் வேலைக்குப் போகும் பெண்கள் கூட்டம் என்ற அந்தக் கடைசி படமும்.. ஒண்டர்புல்! வெகுவாக ரசித்தேன். நன்றி.

  ReplyDelete
 4. ஒரு நாள் கூத்து என்பது சரிதானோ :)

  ReplyDelete
 5. நல்ல அனுபவம்தான்.

  ReplyDelete
 6. அனுபவத்தை பகிந்தமைக்கு நன்றி ஐயா
  கடவுளுக்கு ஒருநாள்
  காணொளி அழகாக ஜூம் செய்து எடுத்து இருக்கின்றீர்கள்.

  ReplyDelete
 7. கொண்டட்டங்களின் பரிமாணங்கள் மாறிவிட்டன.இப்போதெல்லாம் காதலர் தினம் , நண்பர்கள் தினம் என்று தனிப்பட்ட கொண்டாட்டங்களாக மாறிவிட்டன.குழுக் கொண்டாட்டங்கள் அரிதாகி விட்டன. எந்தக் கொண்டாட்டமாக இருந்தாலும் எல்லோருக்கும் மகிழ்ச்சி தருவதில்லை.

  ReplyDelete
 8. சீரியல்களை ஒழிப்போம் தேசம் காப்போம் ... ஹாஹா அருமை

  ReplyDelete
 9. அருமை. எத்தனைதான் கடவுள் மறுப்பாளர்கள் இருந்தாலும் பெரும்பான்மை சாமானிய மக்களின் இந்த உணர்வுகளை எவராலும் அழிக்க முடியாது என்பதற்கு இன்னொரு சான்று. மேடை அலங்காரம் பிரமாதம். அனைத்துப் படங்களும் நன்றாக வந்துள்ளன. இனிய பகிர்வுக்கு நன்றி. நம் வீட்டுக்கருகே லவுட் ஸ்பீக்கர் வைச்சால் காதுக்குக் கேடுதான். :( முன்னரே தெரிந்திருந்தால் தடுத்திருக்கலாமோ என்னமோ!

  ReplyDelete
 10. திருவிழாவை நேரில் பார்த்த அனுபவம் கிடைத்தது. நாடகம் நன்றாக இருந்ததா? நடித்தவர்கள் எந்த ஊரிலிருந்து வந்து இருந்தார்கள்?

  ReplyDelete

 11. @ ஸ்ரீராம்
  நான் ஒரு நாடகக் காரன் மேடையேற செய்த முஸ்தீபுகளையே ரசித்தேன்வருகைக்கு நன்றி ஸ்ரீ

  ReplyDelete

 12. @ தளிர் சுரேஷ்
  இந்தமாதிரி நாடகங்களை எதாவது திறந்த வெளியில் வைத்திருக்கலாம் அப்படி வைத்தால் பார்வையாளர்களுக்கு எங்கு போவது வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 13. @ ஜீவி
  நான் என்ன மனநிலையில் பதிவை எழுத துவங்கினேனோ அதையே உங்கள் பின்னூட்டம் பிரதிபலிக்கிறது. நன்றி ஜீவிசார்

  ReplyDelete

 14. @ பகவான் ஜி
  இந்த ஒரு நாள் கூத்தையே தாங்கமுடியவில்லையே வருகைக்கு நன்றி ஜி

  ReplyDelete

 15. @ டாக்டர் கந்தசாமி
  வருகைக்கு நன்றி ஐயா

  ReplyDelete

 16. @ கில்லர்ஜி
  எங்கள் வீட்டு மாடியிலிருந்து எடுத்தது. பாராட்டுக்கு நன்றி ஜி.

  ReplyDelete

 17. @ டிஎன்முரளிதரன்
  சரியாய்ச் சொன்னீர்கள் நாங்கள் அம்பர்நாத்தில் பயிற்சியில் இருந்த போது ஹோலி கொண்டாட்டங்கள் நடக்கும் நான் வெறுத்த கொண்டாட்டம் அது. விருப்பமில்லாதவர்களையும் இழுத்து ஈடுபட வைப்பார்கள் வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 18. @ ஸ்ரீமலையப்பன் ஸ்ரீ ராம்
  இருந்தாலும் உங்களுக்குக் கற்பனை அதிகம்தான் வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 19. @ கீதா சாம்பசிவம்
  இந்த மாதிரி விழாக்களால் நம் பாரம்பரியக் கலைகள் நசிக்காமல் இருக்கின்றன. வருகைக்கு நன்றி மேம்

  ReplyDelete
 20. @ கோமதி அரசு
  நாடகத்தை எங்கே பார்ப்பது .கண்முழித்துப் பார்க்கும் அளவுக்கு மொழியும் தெரியாது ஆரம்ப சீன்களும் சோ சோ தான் வருகைக்கு நன்றி மேம்

  ReplyDelete
 21. திருவிழா முடிந்த மறுநாள் இயல்பு நிலை எந்த சுவடும் இல்லாமல். ஆச்சர்யமாக இருந்தது. இம்மாதிரியான திருவிழாக்கள் நமது பண்பாட்டின் பெருமையை எடுத்துக்கூறுகின்றன. ரசனையோடு நீங்கள் பகிர்ந்த விதம் அருமையாக இருந்தது. நன்றி.

  ReplyDelete

 22. @ டாக்டர் ஜம்புலிங்கம்
  இந்த மாதிரி திரு விழாக்கள் நம் பண்பாட்டின் பெருமையை எடுத்துச் சொல்கிறதோ இல்லையோ பலரது வயிற்றுப் பிழைப்புக்கு உதவுகிறது வருகைக்கு நன்றி ஐயா

  ReplyDelete
 23. நான் சிறுவனாக இருந்த சமயம், எங்கள் ஊரில் ஆண்டு தோறும் இரண்டு நாட்கள் விடிய விடிய நடக்கும் ‘சிறுத்தொண்டநாயனார்’ தெருக்கூத்தை தெரிந்த கதை/ தெரிந்த உள்ளூர் நடிகர்கள் தான் என்ற போதிலும் பல ஆண்டுகள் இரசித்திருக்கிறேன். திரும்பவும் அந்த அனுபவத்தை தங்களின் காணொளியின் மூலம் பெற உதவிமைக்கு நன்றி!

  ReplyDelete

 24. @ வே நடனசபாபதி
  ஐயா வருகைக்கு நன்றி நானும் என் சிறு வயதில் தெருக்கூத்து பார்த்திருக்கிறேன் இவர்கள் மேடையேற்றியதுதெருக்கூத்து போலும் இல்லை நாடகம் போலும் இல்லை.

  ReplyDelete
 25. ஆஹா... தெருவை அடைத்துப் பந்தல் போடும் விதமா தெருவை அடைத்து மேடையா!!!

  நாடகம் அருமை. காணொளிகளை ரசித்தேன். பழங்காலக் கலைகள் இப்படியாவது இன்னும் வாழ்கிறதே என்ற நிம்மதியும் வந்தது. இந்த டிவி சீரியல்களும், சினிமாக்களும் வந்து இப்படி மக்கள் கொண்டாடிய பழக்கங்களை ஒழித்துக்கட்டிக்கிட்டுல்லே இருக்கு :-(

  ReplyDelete
 26. @ துளசி கோபால்
  வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி மேம்

  ReplyDelete
 27. வருடத்தில், என்றோ ஒருநாள், நடக்கும் இந்த பாரம்பரிய விழாவிற்காக தூக்கத்தை துறந்ததில் தப்பில்லை.

  ReplyDelete
 28. இங்கேயும் இப்படி தெருவை அடைத்து மேடை போடுவதுண்டு. இரவு மேடை இருக்கும். அதிகாலை பார்த்தால் மேடை இருந்த சுவடே இருக்காது!

  நிகழ்ச்சிகளில் சில பகுதிகளை உங்கள் காணொளிகள் மூலம் கண்டு ரசித்தேன். நன்றி.

  ReplyDelete

 29. @ வெங்கட் நாகராஜ்
  வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சார் இங்கேயும் என்றால் எங்கே சார்

  ReplyDelete
 30. //இங்கேயும் என்றால் எங்கே//

  தலைநகர் தில்லியில் தான்!

  ReplyDelete

 31. @ வெங்கட் நாகராஜ்
  நான் திருவரங்கமோ என்று நினைத்தேன் தெளிவு செய்ததற்கு நன்றி

  ReplyDelete