ஊர் ஹப்பா ( ஊர்த் திருவிழா)
--------------------------------------------------
ஊர் ஹ(b)ப்பா
மே மாதம் 23-ம் தேதி மதியம் மூன்று மணி அளவில் கணினியில் அமர்ந்திருந்தேன் வெளியே ஒரே சப்தமாக
இருந்ததால் என்னவென்று பார்க்க வந்தேன் எங்கள் வீட்டின் முன் மூன்று நான்கு
லாரிகள் வீட்டின் அருகேயே ஏழு சாலைகள் கூடும் சந்திப்பு இருக்கிறது எங்கள் வீடு
பிரதான சாலையில் இருக்கிறதுஎங்கள் சாலையில் சந்திப்புக்கு சற்று முன்பாக ஒரு நாடக
மேடை அமைப்பதற்காக வந்திருந்த பொருட்களைத் தாங்கியவையே அந்த லாரிகள் எங்கள் ஊர்
தாசரஹள்ளி கிராம தேவதை மஹேஸ்வரி அம்மன்
வருடத்துக்கு ஒரு முறை திருவிழா விமரிசையாக நடக்கும் எங்கள் சாலைக்கு மேலே இருந்த சிறிய சாலையில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது
சுற்று வட்டாரத்தில் இருந்து மேள
தாளத்துடன் முளைப்பாறி (என்று நினைக்கிறேன்) எடுத்துக் கொண்டு மகளிர் செல்வார்கள்
கேட்டால் ஊர் ஹப்பா என்பார்கள் அதன் ஒரு பகுதியாக நாடகம் ஒன்று மேடையேற்ற
ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. மூன்று மணி அளவில் ஏற்பாடுகள் தொடங்க மாலை ஆறு மணிக்குள் மேடை தயாராய் விட்டது
மேடையும் கூரையும் படுதாக்களும் ஒளி அலங்காரங்களும் இன் எ ஜிஃப்ஃபி என்பது போல்
நடந்தேறியது. இரவு முழுவதும் நடக்கும் நாடகம் பழைய தெருக்கூத்தை சேர்த்தி அல்ல.
நவீன நாடக அமைப்பும் அல்ல. இரண்ரும் கலந்து கட்டிய ஒரு நாடகம் அன்றைய தூக்கத்தைத் தொலைக்கத் தயாரானோம்
நாடகத்தின் பெயர் குருக்ஷேத்ரா என்றார்கள் யுத்தக் காட்சிகளை எப்படிக்
காட்டப் போகிறார்களோ என்று நினைத்தேன்
ஆனால் எப்படியும் நள்ளிரவு ஆகிவிடும் . மொழி தெரியாமல் உறக்கம் விழித்துக் காணும்
நோக்கம் இருக்கவில்லை. வசனத்தை விட பாடல்களே அதிகம் மைக் செட் என் வீட்டு தென்னை
மரத்தில் கட்டி இருந்தார்கள் சப்தம்
காதைத் துளைத்ததுமுதலில் இந்த இடருக்குக் காவல் நிலையத்தில் புகார் செய்யலாம்
என்று தோன்றியது.ஆனால் எங்கள் தொகுதி எம் எல் ஏ தலைமையில் நாடகம் நடக்கப் போகிறது
என்று தெரிந்ததும் அந்த எண்ணம் கைவிடப்பட்டது விடிய விடிய நாடகம் நடந்தது .காலை
ஏழு மணிக்குள் நாடக மேடை இருந்த சுவடே இல்லாமல் போய் விட்டது சில
புகைப்படங்களும் ஒரு சிலக் காணொளிகளும் பதிவிடுகிறேன்
எப்படியோ எனக்கு ஒரு பதிவுக்கான விஷயம் கிடைத்து விட்டது
| நாடக மேடைக்கு ஆயத்தங்கள் |
.
அலங்கார விளக்குகளுடன் மேடை தயார்
| இடமிருந்து மூன்றாவதாக எங்கள் தொகுதி எம் எல் ஏ |
| சாலையில் நாற்காலிகளில் பார்வையாளர்கள் நாடகம் துவங்கும் போது அபிமன்யு உத்தரை நடனம் |
அபிமன்யு உத்தரை
| டின் முன் போக்குவரத்து நெரிசல் |
| சுவாமி ஊர்வலம் வாண வேடிக்கைகள் காணொளி |
| அடுத்த நாள் இயல்பு நிலை |