Saturday, July 2, 2016

தனிமைப் பறவை 2016


                                        தனிமைப் பறவை 2016
                                       --------------------------------
 கவிதை மாதிரி எழுதி நாட்களாகி விட்டன. நானும் ஒரு சில ஆங்கிலக் கவிதைகளுக்குத் தமிழாக்கம் கேட்டுச் சோர்ந்து போய் விட்டேன் 2011-ல் நான் எழுதிய ஒரு தமிழாக்கக் கவிதை நினைவுக்கு வந்தது. அப்போது வெறுமே  என் தமிழாக்கத்தை மட்டுமே வெளியிட்டிருந்தேன் இப்போது என்னை எழுதத் தூண்டிய ஆங்கிலக் கவிதையும் சேர்த்து வெளியிடுகிறேன் ஆங்கிலத்தில்செல்வி மாதங்கி மாலி 2011-ல்  எழுதியது. இரண்டையும் படித்துக் கருத்துக் கூறுங்களேன் 
மாதங்கி மாலியின்  ஆங்கிலக் கவிதை
------------------------------------------------------- 

The dusk was a rage of red

And melted away, was gold

The breeze was a welcome bliss

But in came a cruel cold.


The sun was away for a while
Stars, waiting for the moon
The sky was an empty heart
Oh Night! Be here soon.

Through the gray, gold and red
Fluttered a little lone bird
"Where were his friends"? I wondered
And it seemed, for a moment- he heard.

"What had kept you back?
Why did you wait so long?
Is it for a grain of rice?
Or some poet's sad- bird song?

You flutter as you fight with the breeze
Your wings growing tired as I see
What had kept you back- waiting?
While you watched your friends fly, free?

Fly home safe, little bird
Worry not, for the grain of rice
Your little ones wait for you, back home
Keep them safe from a world of lies
.
Return to them, help them live
Return to them, to life
For rice is rice, and song- a song
But life- not something rife"!

He fluttered along- soon, was gone
The sky now dark- an empty space,
I closed my eyes, to feel through the sky
And I found his little wings' pace.

He was home, he was safe
That was all, I needed to know
The night was here- and so was the cold
"Au Revoir, little bird- for now, I must go"

நான் எழுதிய்து ( மொழிபெயர்ப்பு அல்ல கருத்தை எடுத்தாண்டு எழுதியது)
------------------------------------..
 மஞ்சள் வெயில் மாலை மதி மயங்கும் வேளை
ஆதவன் மேற்கே மறைய மறைய
செக்கர் வானச் சிவப்பினூடே கருமேகம்
களைகட்ட ,இருட்டு கோலோச்சத் துவங்க
மென்காற்று வீச மெய் குளிரத் துவங்கியது.

அகண்ட வானில் புள்ளினங்கள் அழகாக ஓர்
ஒழுங்கில் சீராகப் பறந்து தத்தம் கூடுகள் நாட,
எல்லாம் சென்றதைக் கண்ட நான்
தூரத்தே தன்னந்தனியே ஒரு சிறு பறவை
ஆயாசத்துடன் பறந்து வருதல் கண்டேன்.

புள்ளே நீ ஏன் பின் தங்கி விட்டாய்.?
சிறகில் வலிமை குறைந்ததோ ?
உன் குஞ்சுகளுக்கு இரை கிடைக்க நீ
வெகுவாகப் பாடுபட்டாயோ.?
தானியங்கள் சிதறிக் கிடக்க வில்லையோ.?
புழுக்கள் மண்ணுக்கடியில் பதுங்கி விட்டனவோ?
இரையின்றி நீ சென்றால் அவற்றின்
ஏமாற்றம் தாங்க முடியாததோ.?

இருந்தாலும் சின்னப் பறவையே
உன் கூட்டம் விட்டு நீ பின் தங்கிச் செல்வது
எனக்கு என்னவோ போல் தோன்றுகிறது
இருட்டி விட்டால் உனக்குப் பாதை தெரியுமா.?
விரைவாய் சிறகசைத்துச் செல் சின்னப் பறவையே
தனியே இருத்தல் இவ்வுலகில் கொடிது.நான் கண்களை மூடிக் கொள்கிறேன்.
நீ உன் சிறகசைப்பை விரைவாக்குகிறாய்
இருட்டினூடே நீ மறைந்து விடுகிறாய்.
உன் கூட்டிற்குள் சேர்ந்து விடுகிறாய்.
உன் குஞ்சுகள் ஆர்பரிக்க உன் அலகால்
அவற்றுக்கு ஆகாரம் ஊட்டுகிறாய்.

நன்றாயிரு பறவையே .நீ நலமாயிரு.
உன் நலம் நாடி கண்களை விழிக்கிறேன்.
சென்று வா என் சின்னப் பறவையே.”
-------------------------------------------------
 

16 comments:

 1. பெரும்பாலும்மொழிபெயர்ப்பு போன்றே அருமையாய் இருக்கின்றது !

  ReplyDelete
 2. மொழிபெயர்ப்பு நன்று.

  ReplyDelete
 3. நன்றாயிருக்கிறது.

  ReplyDelete
 4. கவிதையை ரசித்தேன் ஐயா
  தனிமை மனிதனுக்கு மட்டுமல்ல பறவைகளுக்கும் கொடியதுதானோ.... அருமை

  ReplyDelete
 5. நல்ல நேர்த்தியான கவிதை...

  சிறு பறவைக்கும் இரக்கம் கொள்தல் - மனித நேயம்..

  வாழ்க நலம்!..

  ReplyDelete
 6. அருமையான வரிகள்

  ReplyDelete
 7. நன்றாக இருக்கிறது.... பாராட்டுகள்.

  ReplyDelete
 8. அடர்த்தியான ஓர் ஆங்கிலக் கவிதையை மொழிபெயர்த்த விதம் அருமை ஐயா.

  ReplyDelete

 9. @ பகவான் ஜி
  @ டாக்டர் கந்தசாமி
  @ ஸ்ரீராம்
  @ கில்லர்ஜி
  @ துரை செல்வராஜு
  @ ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்
  @ வெங்கட் நாகராஜ்
  @ கோமதி அரசு
  @ கீதா சாம்பசிவம்
  @டாக்டர் ஜம்புலிங்கம்
  அனைவரது வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும்நன்றி இது மொழிபெயர்ப்பு அல்ல மொழியாக்கமே . கருத்துக்களின் தாக்கம் சொல்லியதைத் தமிழ்ப்படுத்தி இருக்கிறேன்

  ReplyDelete
 10. சிறப்பான மொழியாக்கம்! வாழ்த்துக்கள் ஐயா!

  ReplyDelete

 11. @ தளிர் சுரேஷ்
  வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சார்

  ReplyDelete
 12. நல்ல கவிதை,வாழ்த்துக்கள்,,

  ReplyDelete

 13. @ விமலன் பேரளி
  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்

  ReplyDelete