----------------------------------------------------------------------------------
திட்டமிட்டுசெய்
திட்டமிடுவதைச் செய் என்பதைச் சொல்வதோடு
மட்டுமல்லாமல் கடை பிடிப்பதிலும் அக்கறை காட்டுபவன் நான் நான் திட்டமிடுவதில்
செயலாற்ற வேண்டியது பிறரும் என்பதால் எதிர்பார்ப்பைவிட ஏமாற்றம் சில நேரங்களில் வருகிறது
என் மூத்த
மகனின்வெள்ளிவிழா மண நாள் இம்மாதம் 15-ம் தேதி வந்ததுவாழ்க்கையின் ஒரு முக்கிய
நாள் அன்று அவனுடன் இருக்க விரும்பினோம் பொன் விழாகண்ட நாங்கள் அங்கிருப்பது சுவை
சேர்க்கும் என்றே நினைத்தோம் ஆனால்
வெள்ளிவிழாமணநாள் நான்கைந்து நாட்களுக்கு முன்பாகவே அவனது நண்பர் குழுவால்
விமரிசையாகக் கொண்டாடப் பட்டு விட்டது ஆகவே அந்த நாளில் இருக்க வேண்டிய சுவை குறைந்திருந்தது ஒரு மாத
முன்பாகவே என் பேரன் நன்கு திட்டமிட்டு
நண்பர்களிடமிருந்து வாழ்த்து ஒளி நாடாவைச்
சேகரித்து ஒருங்கிணைத்து அவன்
பெற்றோரிடம் கொடுத்திருந்தான் அதை
நாங்கள் 15-ம் தேதி அன்றுதான் கண்டோம் . சும்மா சொல்லக் கூடாது அது ஒரு வித்தியாசமான முயற்சிதான் அதை ரகசியமாக வைத்திருந்தது நாங்கள்
எதிர்பார்க்காதது
எனக்கும் சென்னைக்கும்
ராசி இல்லை என்பேன் சென்றமுறை வந்தபோது மழைகாரணமாக பதிவுலக நண்பர்களை சந்திக்க
முடியாமல் போய் விட்டது இந்த முறையும் மழை
இருந்தது ஆனால் இயல்பு வாழ்க்கையை
பாதிக்காமல் இரவு நேரத்தில் மட்டும்
இரண்டு நாட்கள் பெய்தது
சென்னை செல்வது ஒரு வாரகாலத்துக்கும் முன்பாகவே உறுதியாகி விட்டது இந்தமுறை நட்புகள்
பலரையும் சந்திக்க விரும்பினேன்
எல்லோரையும் ஓரிடத்திற்கு வரவழைத்து சந்திப்பதே நல்லது என்று தோன்றியது.
நான் பெங்களூரில் இருந்து கொண்டு ஒருக்கிணைப்பது இயலாதது என்று தோன்றவே தில்லையகத்து
கீதாவிடமும் எங்கள் ப்ளாக் ஸ்ரீராமிடமும்
வேண்டினேன் ஸ்ரீராம் தான் அப்பணிக்கு
ஏற்றவர் அல்ல என்று கூறி மறுதளித்து விட்டார். கீதா இயன்ற அளவு முயற்சிப்பதாகக்
கூறினார் நானும் நண்பர்களுக்கு சுமார் 15 பேருக்கு மடல் அனுப்பி இருந்தேன் மடல் அனுப்பப்
பட்டவர்கள் எல்லோரும் வர முடியாவிட்டாலும்
பதில் எழுதி இருந்தால் மகிழ்ந்திருப்பேன்
வருகிறேன் என்று சொல்லி பின் வர இயலாது
என்று பதில் போட்டவரும் வர இயலாது என்று
பதில் போட்டவரும் குறிப்பிட்ட நேரத்தில் வருவது சிரமம் என்று பதில் போட்டவரும்
விருந்தினர் வருகையால் வருவது சிரமம் என்று பதில் போட்டவரும் தவிர அவசியம் வருவேன்
என்று கூறி வராதவரும் வந்தவரும் போக ஏனையோர் எந்த பதிலும் கூறாமல் இருந்து விட்டனர். நான்தான் வலையுலக நட்புகளைச்
சந்திப்பதில் ஆர்வம் காட்டினேன்ஆனால் வலை உலகத்தில் நட்புகள் என்பதை விட அறிமுகங்களே நிஜம்/, அதிகம் என்று தோன்றுகிறது கடைசியில் அன்று சந்திக்க முடிந்தது திரு
செல்லப்பா மூங்கில் காற்று முரளிதரன் தில்லை யகத்து கீதா மற்றும் திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன் அவரது
கணவருடனும் மட்டும்தான் திருமதி பானுமதி (இன்சிடெண்ட்லி என் தம்பி சித்தப்பா மகன்) வெங்கடேஸ்வரனின் மனைவியாவார்
என் மூத்தமகன் பெரும்பாக்கத்தில் ஒரு வீடு புக்
செய்திருக்கிறான் அநேகமாக நாங்கள் அடுத்த
முறை சென்னை வரும்போது அந்த வீட்டுக்குத்தான் இருக்கும்
வலை நண்பர்களுடன்
கூடிப்பேசி இனிவரப்போகும் பதிவர் சந்திப்புகள் பற்றிய அபிப்பிராயங்களைப் பெறலாம் என்றிருந்தேன்
சென்னைக்கு வந்தால்
தனியாக என்னால் எங்கும் போக முடிவதில்லை. என் மகனையே நம்ப வேண்டி இருக்கிறது
அவனும் வேலை முடிந்து வீட்டுக்கு வர இரவு எட்டுமணி ஆகிறது.பிறகு எங்கு செல்ல
யாரைப் பார்க்க….?
சென்னையில் எடுத்த சில
புகைப்படங்களைப் பதிவிடுகிறேன்
மகனும் மருமகளும் |
வெள்ளிவிழா மணநாள் |
காசா க்ராண்ட் அடுக்குமாடிக் குடியிருப்பு |
தில்லையகத்து கீதா என் மனைவியுடன் |
செவிக்கு உணவு.இல்லாதபோது சிறிது........ |
மதிய உணவு......? |
திரு முரளிதரன் , திரு செல்லப்பா |
வெள்ளி விழாத் தம்பதிகளுக்கு வாழ்த்துகள். இனிமையாகப் பொழுது போயிருக்கும் என நினைக்கிறேன். பானுமதி வெங்கடேஸ்வரன் உங்கள் உறவினர் என்பது மகிழ்ச்சி! மற்றபடி படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன.
பதிலளிநீக்குதங்களையும் அம்மாவையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி சார்.
பதிலளிநீக்குகீதா
வெள்ளிவிழா தம்பதிகள் பொன்விழா காண வாழ்த்துகல் ஐயா.
பதிலளிநீக்குதாங்கள் சென்னையில் சந்தித்த விபரம் அறிவேன் அனைவருக்கும் வாழ்த்துகள்.
சந்திக்க முடியாமல் போனதில் வருத்தம்தான். சென்றமுறை நான் உங்களைச் சந்திக்க வந்தபோது பாலகணேஷ், சீனு, செல்லப்பா ஸார் ஆகியோர் இருந்தனர். இம்முறை பின்னர் முயற்சித்தும்கூட வரமுடியாமல் போனது.
பதிலளிநீக்குவெள்ளிவிழா மனா நாள் கண்ட தம்பதிகளுக்கு வாழ்த்துகள்.
அனைவருக்கும்அலுவலகத்தில் ஆணி பிடுங்கிற வேலை அதிகமாய் ஆகி விட்டது ,சந்திப்புக்கு தடையாய் ஆகி விடுகிறது :)
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ கீதாசாம்பசிவம்
உலகம் மிகச் சிறியது பானுமதியின் கணவர் என் சித்தப்பாவின் மகன் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மேம்
பதிலளிநீக்கு@ துளசிதரன் தில்லையகத்து /கீதா
பிரச்சனைக்கும் நடுவில் வந்து சந்தித்தது மகிழ்ச்சி எனக்கும் வருகைக்கு நன்றி
பதிலளிநீக்கு@ கில்லர்ஜி
வெள்ளிவிழா காணும் தம்பதிகளை பொன் விழாக்கண்ட தம்பதிகள் வாழ்த்தினோம் வருகைக்கு நன்றி ஜி
பதிலளிநீக்கு@ ஸ்ரீ ராம்
சந்திக்க முடியாதது மிகுந்த ஏமாற்றம் அளித்தது சென்றமுரை மழை வந்து தடுத்தது 2013-ல் தான் ஒரே முறை சந்தித்தோம். இங்கு வந்ததற்கு நன்றி ஸ்ரீ
பதிலளிநீக்கு@ பகவான் ஜி
அனைவருக்கும் அலுவலகத்தில் ஆணி பிடுங்கும் வேலை அதிகமாக இருக்கும் என்று தெரிந்தே சந்திப்பை ஞாயிறன்று வேண்டிக் கொண்டேன் வராததை விட என் வேண்டுகோளுக்கு ஒரு பதில் அஞ்சல் போடாததே அதிகம் வருத்தம்
உங்கள் அனைவரையும் கண்டதில் மகிழ்ச்சி ஐயா. சூழலறிந்து வராத நண்பர்களை விட்டுவிடுவோம். இருந்தாலும் உங்களின் ஆதங்கம் புரிகிறது.
பதிலளிநீக்குவெள்ளி விழா தம்பதியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்......
பதிலளிநீக்குநினைப்பதெல்லாம் நடந்து விட்டால்...... சில சமயங்களில் நினைத்தாலும், சந்தர்ப்பங்கள் காரணம் சந்திக்க முடியாமல் போகின்றது.
அன்பின் இனிய நல்வாழ்த்துகள்..
பதிலளிநீக்குநன்று சார். :)
பதிலளிநீக்குஎதிர்பார்ப்பும், ஏமாற்றமும் வேண்டாமென்றால் புத்தரைப் போன்று போதி மரத்தடியில் நாமும் ஐக்கியமாக வேண்டியதுதான்.
உண்மையில் இந்த வகை சந்திப்புக்களில் கலந்துகொள்ள ஆர்வமுடன் இருப்பேன். நீங்கள் ஒருவாரம் முந்தி மெயில் அனுப்பி இருந்தும் எனது மாமனார் இறந்து போன நிகழ்வுக்கு சென்றிருந்ததால் தாமதமாகத்தான் மெயில் பார்க்க முடிந்தது. அச்சமயம் எனது ரிலையன்ஸ் நெட் இணைப்பு சரிவர வேலை செய்யவில்லை அதனால் உடனடியாக பதில் தர முடியவில்லை! மாமனாரின் தசாஹ காரியங்களுக்கு கரூர் சென்றுவிட்டதால் இந்த சந்திப்பில் என்னால் கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது. தங்களது போன் நெம்பரையும் குறித்துக் கொள்ள மறந்து போனதால் தில்லையகம் கீதா அவர்களுக்கு போன் செய்து என்னுடைய வர இயலாத நிலையை தெரிவித்து தங்களிடம் தெரிவிக்கச் சொன்னேன். இறைவனுடைய சித்தம் இருப்பின் மற்றுமொரு தினத்தில் தங்களை சந்திக்க ஆவலாக உள்ளேன். நன்றி!
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ டாக்டர் ஜம்புலிங்கம்
ஐயா வணக்கம் . வர இயலாதவர்களைப் பற்றி புரிந்து கொள்ள முடிகிறதுஆனால் வேண்டு கோளைக் கண்டு கொள்ளாமல் இருந்தவர்களை நினைத்தால்தான் ஆதங்கம் அதிகரிக்கிறதுவருகைக்கும் உங்கள் புரிதலுக்கும் நன்றி
பதிலளிநீக்கு@ வெங்கட் நாகராஜ்
வர இயலாதவர்கள் வேண்டுகோளை மதித்து ஒரு வரி எழுதி இருக்கலாம் உதாசீனம் போல் இருக்கிறது வருகைக்கு நனறி.
பதிலளிநீக்கு@ துரை செல்வராஜு
வாழ்த்துக்கு நன்றி
பதிலளிநீக்கு@ வருண்
வலை நட்புகள் எல்லாம் வெறும் அறிமுகங்களே என்று உறுதியாகிறது. வருகைக்கு நன்றி சார்
அடுத்த முறையாவது உங்கள் விருப்பப்படி பதிவர்கள் அனைவரையும் சந்திக்க வாழ்த்துக்கள் ஐயா! தங்கள் மகன் - மருமகள் ஆகியோருக்கு நானும் என் பணிவன்பான வெள்ளிவிழா நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறேன்!
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ தளிர் சுரேஷ்
எப்போதோ எங்கேயோ என்னை சந்திக்க விருப்பம் என்று படித்த நினைவே என்னை உங்களுக்கு அஞ்சல் போட வைத்தது திருவள்ளூரிலிருந்து சென்னை வந்து சந்திப்பது சிரமம் என்பதை அறிவேன் உங்கள் நிலையை தில்லையகத்து கீதா சந்திப்பின் போது தெரிவித்தார்கள்
சந்தர்ப்பம் அமைந்தால் சந்திப்போம் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி ஐயா
பதிலளிநீக்கு@ இ பு ஞானப்பிரகாசன்
அறிமுகங்களை நட்புகளாக்கிக் கொள்ளவே விரும்பினேன் உங்கள் வருகைக்கு நன்றி சார்
பதிலளிநீக்குவெள்ளிவிழாத் தம்பதியருக்கு எனது வாழ்த்துகள்!
ஐயா இந்த தடவை தாங்கள் சென்னை வருவதாக அனுப்பிய 6 ஆம் தேதியிட்ட மின்னஞ்சல் வந்தபோது நான் ஊரில் இல்லை (காரணம் உங்களுக்குத் தெரியும்.) நான் சென்னையில் இருந்திருந்தால் சென்றமுறை தாங்கள் வந்தபோது தங்களை சந்தித்ததுபோல இந்த முறையும் சந்தித்து இருப்பேன். அடுத்த தடவை வரும்போது அவசியம் சந்திப்பேன். ஒருவேளை பெங்களூரு வர எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அங்கு வந்து சந்திப்பேன்!
படங்கள் அருமை!
பதிலளிநீக்கு@ வே. நடனசபாபதி
காரணம் எனக்குத் தெரியவில்லை வருவதும் வராததும் அவரவர் சௌகரியம் பொறுத்தது. ஆனால் ஒரு பதில் அஞ்சலாவது எழுதி இருக்கலாம் என்பதே ஆதங்கம் வருகைக்கு நன்றி
ஐயா! 04-07-2016 அன்று விருத்தாசலத்தில் என் அண்ணன் மறைந்த செய்தி கேட்டு அன்றே ஊருக்கு சென்றுவிட்டேன். அவர் காலமானது பற்றி எனது பதிவில் 08-07-2016.அன்று எழுதியிருந்தேன். அதற்கு தாங்களும் பின்னூட்டம் தந்திருந்தீர்கள். அதனால் தான் தங்களுக்கும் காரணம் தெரியும் என எழுதியிருந்தேன்.
பதிலளிநீக்குமேலும் என் அண்ணனின் மகள் வெளி நாட்டிலிருந்து 06-07-2016 அன்று தான் வந்ததால் அன்று தான் கருமகாரியங்கள் நடைபெற்றன. அன்று ஊரில் துக்கம் அனுசரித்துக்கொண்டு இருக்கும்போது தங்களின் மின்னஞ்சலை பார்க்கவில்லை. அதனால் பதில் எழுதவில்லை. இப்போதாவது என்னால் பதில் எழுதமுடியாததன் காரணம் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.
@ வே நடனசபாபதி
பதிலளிநீக்குதயை கூர்ந்து நான் உங்களுக்கு இப்போது அனுப்பியுள்ள மின் அஞ்சலைப்பார்க்கவும் நன்றி