புதன், 13 ஜூலை, 2016

நல்லவன் எனக்கு நானே நல்லவன்


                                      நல்லவன் எனக்கு நானே நல்லவன்
                                      -------------------------------------------------------
எழுபதுடன் எட்டிலும்  நல்ல பையன் நான்
கண்முன்னே கார்குழல் விரித்த கன்னியர்
(இப்போதெல்லாம் பின்னிய கூந்தல் காண்பதரிது)
பத்மினி,சித்தினி,சங்கினி, அத்தினிப் பெண்டிர்
பவிசாக வந்தாலும் பத்திர காளியாய் நின்றாலும்
பயமாய் இருக்கிறது.. தலை தூக்கிக் கண்டாலே
காவலரிடம் புகார் செய்வரோ, என்றே அச்சம்.
அவர்களுக்கென்ன ..பாரதியே கூறிவிட்டான்
நிமிர்ந்து நடக்கவும்  நேர்கொண்டு பார்க்கவும்.

எனக்கேன் இந்த பயம்..?


பேதையோ, பெதும்பையோ
மங்கையோ மடந்தையோ , அரிவையோ தெரிவையோ
இல்லை பேரிளம்பெண்ணோ , பார்வையால்
துகில் உரியப்பட்டு பருவ பேதமின்றி சிதைக்கப்படும்
அச்சத்தின் உச்சத்தில் வளைய வரும் தாய்க்குலம்
யாரைப் பார்த்தாலும் பாம்பா பழுதையா என்றறியாது
தற்காப்புக்காக எதுவும் செய்யலாம்தானே



பாரதிதாசன் கூறியதுபோல் “ கிளையினில் பாம்பு தொங்க
விழுதென்று குரங்கு தொட்டு விளக்கினைத் தொட்ட பிள்ளை
வெடுக்கென குதித்ததைப் போல் கிளைதோறும் குதித்துத் தாவி
கீழுள்ள விழுதையெல்லாம் ஒளிப்பாம்பாய் எண்ணி எண்ணி
உச்சிபோய்த் தன் வால் பார்க்கும்.”


பாவிகள் பலரது செயல்கள்

பூவையரிடையே அச்சத்தை விளைவிக்க நானிருக்கிறேன்
எழுபதுடன் எட்டிலும்   நல்ல பையனாக.

                            --------------------------------

24 கருத்துகள்:

  1. கொஞ்சம் குழப்பமா இருக்கு! நீங்க உங்களைக் குறித்து எழுதி இருக்கீங்கனு நினைச்சால் பெண்கள் குறித்து!

    பதிலளிநீக்கு

  2. எல்லோரும் நல்லவராய் வாழ்வது அனைவருக்கும் நல்லது ஐயா.

    பதிலளிநீக்கு

  3. @ கீதா சாம்பசிவம்
    குழப்பத்துக்கு என்ன இருக்கிறது இந்தப் பதிவு பெண்களைப் பற்றியும் அவர்கள் மத்தியில் என்னையும் பற்றியும் கூறு கிறது

    பதிலளிநீக்கு
  4. @ ஸ்ரீராம்
    புரியவில்லை என்பது ஏன் என்று எனக்கும் புரியவில்லை நன்றி ஸ்ரீ

    பதிலளிநீக்கு
  5. @ கில்லர்ஜி
    எது செய்தாலும் பெண்களைப் பற்றிய அச்சம் இருந்து கொண்டே இருக்கிறது அது பற்றியதே பதிவு. இந்நிலையிலும் நான் நல்லவனாக இருக்கிறேன் .....!

    பதிலளிநீக்கு
  6. பா வரிகளை இணைத்த விதமும்
    கவிதையில் இளையோடும்
    சந்தமும் அருமை
    அது இரசித்த்ப் படிப்போருக்குப் புரியும்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. ஆணோ பெண்ணோ - சிலரைப் பார்க்கும் போதே தெரிந்து விடும்..

    அதில் - பெண்களுக்கே துப்பறியும் கண்கள்...

    ஆனால் பிரச்னையை வலிய வரவழைத்துக் கொள்வதும் அவர்களே!..

    பதிலளிநீக்கு
  8. #பூவையரிடையே அச்சத்தை விளைவிக்க நானிருக்கிறேன்#
    இதன் அர்த்தம் புரியவில்லை அய்யா :)

    பதிலளிநீக்கு

  9. @ ரமணி,
    ஃபுல்ஸ்டாப் காமா எல்லாம் சரியாக எழுதி இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் என்றே நினைக்கிறேன் பாராட்டுக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு

  10. @ துரை செல்வராஜு
    , சிலபல செய்திகளைப் படிக்கும் போது பெண்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என்றே புரியவில்லை பிரச்சனையை வலிய வரவழைத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் பிரச்சனைக்கே காரணமாகிறார்கள் வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு

  11. @ டாக்டர் கந்தசாமி,
    வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு

  12. @ கரந்தை ஜெயக்குமார்,
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா

    பதிலளிநீக்கு

  13. @ பகவான் ஜி
    “ பாவிகள் பலரது செயல்கள் பூவையரிடையே அச்சத்தை விளைவிக்க “
    நானிருக்கிறேன்..... என்று படிக்கக் கோருகிறேன் . முற்றுப்புள்ளி கால் புள்ளி எல்லாம் சரியாக இல்லாததால் வந்த குழப்பம் என்று தோன்றுகிறது வருகைக்கு நன்றி ஜி

    பதிலளிநீக்கு
  14. இந்தப் பதிவால் உங்கள் இல்லத்தில் ஏதேனும் பிரச்னைகள் வராமல் இருந்தால் சரி. ஏதோ எழுத ஆரம்பிக்க வேறு வகையில் பாதிப்பு வந்துவிடக்கூடாதே? (என் நிலையில் வைத்துப் பார்த்தேன், சற்றே ஐயம் வந்துவிட்டது)

    பதிலளிநீக்கு
  15. ஹாஹ்ஹா! நல்ல கவிதை முயற்சி! ஆனால், நீங்கள் புதிதாக இந்த எழுபத்து எட்டு வயதில் நல்ல பையனாக இருப்பதாய் எனக்குத் தோன்றவில்லை ஐயா! இளம் பருவத்திலிருந்தே நல்ல பையனாக இருந்து இன்றும் அப்படியே தொடர்கிறீர்கள்! ஆனால், எழுபத்து எட்டு வயதான நீங்கள் நல்லவராய் இருந்து மட்டும் என்ன பயன்? இளைஞர்கள் சிலர் அப்படி இல்லையே! :-)

    பதிலளிநீக்கு
  16. ​அதாவது நான் சைட் அடிப்பதில்லை என்கிறீர்கள். இந்தப் பதிவு எழுத மனைவியின் அனுமதி வாங்கினீர்களோ?

    ஜெயக்குமார்

    பதிலளிநீக்கு
  17. எழுபதுடன் எட்டு வயதில் என்றதும் ஜூலை 13 பிறந்தநாளோ என்று நினைத்தேன்...
    நல்லவராய் வாழ்தல் சிறப்புதானே அய்யா...

    பதிலளிநீக்கு

  18. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    என்ன பிரச்சனை வந்து விடும் அதுதான் நான் நல்ல பையன் என்று கூறி இருக்கிறேனே வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு

  19. @ இ பு ஞானப்பிரகாசம்
    இளைஞர்களுக்கு வாழ்ந்து காட்ட வேண்டும் நான் நல்லவனாயிருப்பது பார்த்து பலரும் நல்லவராகலாமே வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு

  20. @ஜேகே 22384
    சைட் அடிக்கவில்லை என்று சொல்லவும் மனைவியின் அனுமதி தேவையா. வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு
  21. @ பரிவை சே குமார்
    78 வயதுக்கும் ஜூலை 13 க்கும் என்ன சம்பந்தம் புரியவில்லையே குமார் பெண்களின் பிரிவுகள் பற்றியும் அவர்களை ஒவ்வொரு வயதிலும் என்ன பெயர் சொல்லி அழைக்கப் படுகிறார்கள் என்றும் கூறி இருப்பதையாரும் கண்டு கொள்ள வில்லையே எனிவே வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு