Thursday, July 28, 2016

music with a difference


நேற்று  ஒரு நண்பரின் மகன் வீட்டுக்குச் சென்றேன் சங்கீதத்தில் அலாதி ஆர்வம் இருக்கக் கண்டேன்  வீட்டில் ஒரு ஹோம் தியேட்டர் வைத்திருக்கிறான்  எனக்குச் சில பாடல்களைப் போட்டுக் காண்பித்தான் இசையில் சிறிதேஆர்வம் உள்ள எனக்கு  கர்நாடக சங்கீதத்தை மேலை இசையுடன் தருவது சற்று  வித்ட்க்ஹியாசமாக இருந்தது அதன் காணொளியை இத்துடன் இணைக்கிறேன்  கர்நாடக இசை வல்லுனர்கள் வாசகர்களில் பலரும் இருப்பதுதெரியும்  இம்மாதிரி ஒரு இசைக் கலப்பு  பற்றிய  உங்கள் கருத்து  அறிய ஆவலாய் இருக்கிறேன்


43 comments:

 1. சுவாரஸ்யம்தான். திரை இசைப் பாடகர் கார்த்திக் கூட இப்படியான முயற்சிகள் ணெய்துள்ளார்.

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. ஸார், நம் திரைப்படப் பாடகர் ஹரிஹரன் கொலோனியல் கசின்ஸ் என்று ஆல்பம் போட்டிருக்கிறார் அது இப்படித்தான் ஈஸ்ட் அண்ட் வெஸ்ட் கலந்த கலவை. ஆனால் பல வருடங்களுக்கு முன்னரே வீணை ஜீனியஸ் சிட்டிபாபு வெட்டிங்க் பெல்ஸ் என்று வீணையில் கர்நாடக இசை + வெஸ்டர்ன் என்று கலந்து கட்டி விளையாடியிருப்பார். அப்போது இத்தனை டெக்னாலஜி முன்னேற்றம் இல்லையே.

  சமீபத்தில் கூட பாரதிதாசனின் தமிழுக்கு அமுதென்னும் பேர் பாடலை கல்லூரி மாணவ மாணவிகள் மிக அருமையாக இப்போதைய ட்ரெண்டில் பாடியிருந்தார்கள். நன்றாகவே இருந்தது. அப்படியேனும் கர்நாடக இசைப்பாடல்கள், தமிழ்பாடல்கள் பலரையும் சென்றடைகிறது என்று மகிழலாம். திரைப்படப்பாடகர் கார்த்திக்கும் இது போன்று செய்திருக்கிறார் அருமையாக....

  இதுவும் மிக நன்றாக இருக்கிறது சார்..

  கீதா

  ReplyDelete
 4. சிட்டி பாபுவின் சிஷ்யர் வீணை ராஜேஷ் வைத்யாவும் நிறைய செய்திருக்கிறார்...மிக நன்றாகவே இருக்கும் சார்

  கீதா

  ReplyDelete
 5. GMB சார்! நலம் தானே? கர்னாடக சங்கீத்த்தில் உள்ள ஈடுபாடு போன்றே ஹிந்துஸ்தானியிலும், வெஸ்டர்ன் கிளாசிக்கலிலுமுள்ள நாட்டத்தால் இதை எழுத்த்துணிந்தேன். ஒவ்வொரு இசைமுறையும் தனித்துவம் கொண்டவை. அவற்றுக்கேயுரிய பாரம்பரியமும் நளினமும் கொண்டவை. ஜுகல்பந்தி என்று ஹிந்துஸ்தானி மற்றும் கர்னாடக சங்கீத்த்தில் சேர்ந்திசை உண்டல்லவா? ஒத்த ராகங்களிலில், அவரவர் பாணியில் கலந்து பாடுவார்கள் அல்லது இசைப்பார்கள். பரஸ்பர புரிதலோடும், மற்றவர்க்கு சமவாய்ப்பும் நல்கி பெரும் இசையனுபவங்கள் தந்திருக்கிறார்கள். இப்போதெல்லாம் சில பியூஷன் முயற்சிகளில் ,கர்னாடக சங்கீதத்தை பாடும் பாணியே வேற்றிசையாயும் இன்றி, தன் தரமும் அன்றி கசாப்பு நடக்கிறது. இந்த 'எந்தரோ மகானிபாவலோவும்' இதில் சேரத்தி. புதுமுயற்சிகள் தொடங்குமுன் இருவகை சங்கீதமும் அறியும் முயற்சி செய்ய வேண்டும். இல்லையெனில் சின்னபுள்ளைத் தனமாகவே இருக்கும்.

  ஆங்கிலேயர்கள் இங்கு வந்தபின் அவர்கள் சங்கீத்த்தை உணர்ந்து கொண்டு ,"இங்கிலீஷ் நோட்ஸும், ஸாஹித்தியங்களும்செய்தவர்கள நம் வித்வான்கள்.
  நல்ல சங்கீதம் எங்கும் உண்டு. கெட்ட சங்கீதம் என எதுவும் இல்லை. பாடக்கூடாத வகையில் பாடி வேண்டுமானால் அதைப் கெடுக்கலாம்!

  ReplyDelete
 6. சங்கீதக் கொலை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

  ReplyDelete
 7. சங்கீதக் கொலை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

  ReplyDelete
 8. கேட்டுட்டுச் சொல்றேன்.

  ReplyDelete
 9. This comment has been removed by the author.

  ReplyDelete
 10. இந்தப் பாடலை முதலில் க்ளிக் செய்த போது கேட்ட போது இதே போன்று முயற்சி செய்யப்பட்ட வேறு ஒரு பாடலுக்குச் சென்றது....அது நன்றாக இருந்தது. ஆனால் பின்னர்தான் தெரிந்தது நீங்கள் கொடுத்தது நான் கேட்ட பாடல் அல்ல என்று. எந்தரோ மஹானுபாவு....அந்தோ பரிதாபமாகத் தோன்றுகிறது.....நானும் இரு கலப்புகளையும் விரும்புபவள்தான். ஆனால் இதில் வெஸ்டர்ன் இசைக்கருவிகள் தூக்கிப் பாடலை முழுங்கிவிட்டது அதன் தனித்துவம் மறைந்துவிட்டது போல் உள்ளது சார்..இந்தப் பாடல்

  கீதா

  ReplyDelete
 11. பெண்ணின் குரல் வளம் அருமை! ஆனால்.............. :(

  ReplyDelete
 12. ம்யூசிக் சுவாரசியமில்லை.. ஹ்ம்ம்

  ReplyDelete
 13. கலப்பு என்பதே தனித்தன்மையினை குறைத்துவிடும்.,மறைத்துவிடும் ஒன்றுதானே

  ReplyDelete
 14. எந்தரோ மஹானுபாவலு நம்முடைய கலாம் அய்யாவின் பிரிய பாடல். இந்த ஒரு தியாகராஜர் கீர்த்தனையை மட்டுமே வீணையில் வாசிக்க அவருக்குத் தெரியும்.

  --
  Jayakumar

  ReplyDelete

 15. @ ஸ்ரீராம்
  இந்தப்பாடலைக் கேட்டபின் யூ ட்யூபில் சற்றுநேரம் பார்த்தேன் பலவிதமான பாடல்கள் இது சற்றே வித்தியாசமாய் இருந்தது இசை குறித்த பிரத்தியேக ஞானம் இல்லாதவன் நான் வாசகர்களின் கருத்தை அறிய விரும்பினேன் வருகைக்கு நன்றி ஸ்ரீ

  ReplyDelete

 16. @ துளசிதரன் தில்லையகத்து கீதா
  எனக்கு என்னவோ நல்ல தமிழ் பேசுபவர் நடுவில் ஆங்கிலத்தைக் கலந்துபேசுவதுபோல் தோன்றியது வருகைக்கு நன்றி

  ReplyDelete

 17. @ துளசிதரன் தில்லையகத்து கீதா
  எனக்கு சங்கீத ஞானம் மிகக் குறைவு . இசைக்கருவிகள் பெயரே சரியாகத் தெரியாது சூப்பர் சிங்கரில் ராஜேஷ் வைத்தியாவைக் கேட்டிருக்கிறேன் வருகைக்கு நன்றி

  ReplyDelete

 18. @ மோகன் ஜி
  விஷய ஞானமுள்ள உங்கள் கருத்துகள் சரியாய்த்தான் இருக்கும் எனக்கு காதுக்கு இனிமை சேர்க்கும் எந்த இசையும் சரியே வருகைக்கு நன்றி ஜூலை மாதம் முடியப் போகிறதே நினைவில் இருக்கிறதா வருகைக்கு நன்றி ஜி

  ReplyDelete

 19. @ துளசிதரன் தில்லையகத்து கீதா/ இந்தப் பாடலை முதலில் க்ளிக் செய்த போது கேட்ட போது இதே போன்று முயற்சி செய்யப்பட்ட வேறு ஒரு பாடலுக்குச் சென்றது..../
  அது எப்படி என்றுதான் புரியவில்லை. இதை க்ளிக்கினால் வேறு ஒரு பாடல் கர்நாடக இசைகேட்கப் பிடிக்கும் ஆனால் அதன் nuances பிடிபடாதது வருகைக்கு மீண்டும் நன்றி

  ReplyDelete

 20. @ கீதா சாம்பசிவம்
  குரல் வளம் எனக்கும் பிடித்தது இந்த இசை ஃப்யூஷனா தெரியவில்லை வருகைக்கு நன்றி மேம்

  ReplyDelete

 21. @ டாக்டர் கந்தசாமி
  சங்கீதக் கொலை....?பாடக் கூடாதவகையில் பாடிக் கெடுத்திருக்கிறார்களோ வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 22. @ தேனம்மை லக்ஷ்மணன்
  ம்யூசிக் சுவாரசியப்படவில்லையா வருகைக்கு நன்றி மேம்

  ReplyDelete

 23. @ கரந்தை ஜெயக்குமார்
  /
  கலப்பு என்பதே தனித்தன்மையினை குறைத்துவிடும்.,மறைத்துவிடும் ஒன்றுதானே/
  கலப்பினங்கள் மேன்மை தரும் என்றல்லவா கேள்வி பட்டிருக்கிறேன் வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete
 24. @ஜேகே22384
  கேள்விப்படாத தகவலுக்கு நன்றி சார்

  ReplyDelete
 25. காலத்தின் கோலமென்பது பல நிலைகளுக்கு நம்மை இட்டுச்செல்கிறது. ஒரு புறம் பழமையைத் தொலைத்துக்கொண்டிருக்கிறோம். மற்றொரு புறம் வித்தியாச முயற்சி என்பனவற்றை எதிர்கொள்ளவேண்டிய நிலை. இதனையும் ஒரு பரிமாணமாகக் கொள்வோம்.

  ReplyDelete
 26. வணக்கம் ஐயா
  பிரபலமானவர்கள் புதுமை என்ற பெயரில் எதைச் செய்தாலும் இந்த சமூகம் ஏற்றுக்கொள்கின்றது இதுவே அடிப்படை காரணம்.

  மேலும் இந்த இசை இன்றைய தமிழ்ப்பட பாடல்களுக்கு மத்தியில் கொஞ்சம் உயர்வானதாகவே தெரிகின்றது என்ற உண்மையையும் சொல்லி வைக்கின்றேன்.

  தற்போதுதான் இந்தப்பதிவு எனது டேஷ்போர்டில் கிடைத்தது ஆகவே தாமதம்.

  ReplyDelete
 27. Fusion music என்பது துரித உணவு போல. ஒரு மாறுதலுக்கு ரசிக்கலாம்.

  ReplyDelete
 28. Fusion music என்பது துரித உணவு போல. ஒரு மாறுதலுக்கு ரசிக்கலாம்.

  ReplyDelete

 29. @ டாக்டர் ஜம்புலிங்கம்
  இசையில் பழமை புதுமை என்றிருக்கிறதா அந்தந்த இசைக்கு என்று சில எல்லைக் கோடுகள் இருக்கின்றன, அவற்றை மீறுவது புதுமை ஆகுமா வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 30. @ கில்லர்ஜி
  இம்மாதிரி செய்தே சிலர் புகழ் அடைக்கிறார்கள் இதெல்லாம் சுத்தத் தங்கத்தில் செம்பு கலப்பது போல் ஆகிறது சாஸ்திரிய சங்கீதத்தை இழுத்த இழுப்புக்கு கொண்டு வரும் முயற்சியே இது. வருகைக்கு நன்றி ஜி

  ReplyDelete

 31. @ பானுமதி வெங்கடேஸ்வரன்
  இதுதான் fusion ம்யூசிக்கா ? வருகைக்கு நன்றி மேம்

  ReplyDelete
 32. எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ரசிக்கும்படியாக இல்லை.

  ReplyDelete
 33. புதுமைகளை தடுக்க முடியாது ,ரசிப்பவர்கள் ரசிக்கட்டுமே :)

  ReplyDelete

 34. @அருள்மொழி வர்மன்
  மனம் திறந்த கருத்துக்கு நன்றி

  ReplyDelete

 35. @ பகவான் ஜி
  அதனால்தான் பகிர்ந்து கொண்டேன் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 36. இசையை ரசிக்கத் தெரியும்.. சற்றே ஓய்வு நேரங்களில் நித்யஸ்ரீ மகாதேவன், பிரியா சகோதரிகள், சாருலதா மணி - ஆகியோரின் இசை விருந்தில் மகிழ்ந்திருப்பேன்..

  இந்த காணொளியையும் ரசித்தேன்.. வாழ்க நலம்..

  ReplyDelete

 37. @ துரை செல்வராஜு
  நானும் உங்கள் கட்சிதான் செவிக்கு இனிமையான எந்த இசையும் சம்மதமே தெரியாத விஷயங்களைத் தெரிந்து கொள்ளவே இப்பதிவு. வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete
 38. கலவை.... சில சமயங்களில் ரசிக்க முடிவதில்லை.....

  ReplyDelete

 39. @ வெங்கட் நாகராஜ்
  இசையின் nuances தெரிந்தால் ஒரு வேளை ரசிக்க முடியாதோ என்னவோ வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சார்

  ReplyDelete
 40. சில நாட்கள் முன்னர் பித்துக்குளி முருகதாஸின் ."வேல்முருகா மாபழனி வேல்முருகா வேல்வேல்" என்னும் பாடலை ஒரு பெண் ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து கொண்டு பேயாட்டம் ஆடிக்கொண்டே பாடும் வீடியோ பார்த்தேன்.
  எல்லாவற்றையும் ரசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் வேறு வழியில்லை.

  ReplyDelete

 41. @ சிவகுமாரன்
  ரசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்னும் கட்டாயம் ஏதுமில்லையே வருகைக்கு நன்றி

  ReplyDelete
 42. எனக்கு இசை ஞானம் இல்லாததால் இது பற்றி கருத்து கூற இயலவில்லை. இரசித்தேன்!

  ReplyDelete

 43. @ வே நடன சபாபதி,
  எனக்கும் இசை ஞானம் இல்லை. இசையை ரசிக்க ஞானம் வேண்டுமா.? வருகைக்கு நன்றி ஐயா

  ReplyDelete