Friday, August 2, 2019

ஒரு பதிவும் அதன் தாக்கங்களும்



                                ஒரு பதிவும் அதன் தாக்கங்களும்
                                 ----------------------------------------------------
ஒரு பதிவும் அதன் தாக்கங்களும்
---------------------------------------------------------------

என்ன எழுதுவது என்று மண்டையைக் குடைந்து கொண்டிருந்தபோதுபல பழைய இடுகைகளையும்  வாசிக்க நேர்ந்தது  எழுதுவது உரியபடி வாசகர்களுக்குப்போய் சேருகிறதா என்னும் என் கேள்விக்கு அர்த்தமில்லை என்று புரிந்தது எத்தனை வித தாக்கங்கள் பின்னூட்டங்கள்  . மேலும் என் எழுத்துகளைப் படிப்போரின் எண்ணிக்கை நாள் தோறும் கூடிக்கொண்டே போகிறது  இது ஒரு உந்துகோல்தான்  முன்பு எழுதிய இடுகைக்கு வந்தபின்னூட்டங்களும் இதிலிருந்து புறப்பட்ட எண்ணங்கள் எப்படி இன்னும் எழுதுவதற்கு துணை நின்றதுஎன்றும் கூறவே இந்த இடுகை 2015 ல் நீதிகேட்கிறேன் என்னுமொரு பதிவு எழுதி (சொடுக்க)இருந்தேன்பதிவின் சுட்டி கொடுத்துள்ளேன்  அவசியம்  பின்னூட்டங்களை பார்க்கவும்
 ஒரு பின்னூட்டமிவ்வாறு கூறுகிறது/  ஆனால் இக்குரல், உங்களின் குரல் இன்றொலிக்கப்பட்டதன்று.
பலநூற்றாண்டுப் பாரம்பரியம் இக்குரலினுக்கு உண்டு.
பதிவின் டிராஃபிடில் இடுவதா வேண்டாமா என இருமனநிலையின இடையில் தூங்கும் நான்கைந்து பதிவுகளில் இதன் கதையும் இருக்கிறது.
 பின் ஒரு இடுகையும் வந்தது  அதன் சுட்டி இங்கே

கடவுள் இருக்கிறான் என்றொரு கூச்சல் வலுப்பெற்று, மதத்தின்பால் மக்களின் ஒரு கூட்டம் ஈர்க்கப்பட்டது எவ்வளவு தொன்மை வாய்ந்ததோ ஏறக்குறைய அதே அளவிற்குக் கடவுள் இல்லை என்ற கொள்கையுடன் அதை எவ்வித சமரசங்களுக்கும் ஆட்படாமல், மிகுந்த எதிர்ப்பிற்கு மத்தியில் முழங்கிய கூட்டமும் பழங்காலத்தில் நம் மத்தியில் இருந்தது.

ஒருபுறம், ‘இது என் தெய்வம், அதன் வல்லமையைக் காண்!’ என்றெல்லாம் பக்தியின் பரவசத்தில் ஒரு தரப்பு, மக்களை வசீகரித்த போது,

இன்னொரு புறம் எதையும் கேள்வி கேட்டு,  ‘நீ சொல்வதை அப்படியே நான் ஏன் ஏற்கவேண்டும்?’ என்ற அறிவிற்கே உரிய ஆண்மையோடு மிகச்சிலர் தங்கள் தரப்பு வாதங்களை முன் வைத்து அவர்கள் கொள்கைகளைக் கேள்விக்குள்ளாக்கினர்.

அதுவே உலகாயதம்.

உலகாயதத்தின் குரல் – கடவுளைக் கொன்றவனின் குரல்
. என் பதிவு நீதி கேட்கிறேன் -ல் நான் எங்கும் கடவுள் மறுப்பு பற்றி கூறவில்லை. உண்டு இல்லை என்னும் இருமையை மீறி தெரியாது என்னும் நிலைப்பாட்டுடையவன். ஆனால் கடவுளின் பெயராலும் மதங்களின் பெயராலும் அநீதிகள் இழைக்கப் படுவதை நான் சாடி எழுதி இருக்கிறேன் இறைஇயல் நமக்கு நல்ல இலக்கியங்களைத் தந்திருக்கிறது மறுக்க முடியாது.இராமாயண காலம் முதற்கொண்டேநாத்திக வாதம்( ஜாபாலி) இருந்து வந்திருக்கிறது திரு இளங்கோ சொல்வது போல் உலகாயுதம் என்பது MATERIALISM என்று பொருள் கொள்வதாயிருந்தால் அது எனக்கு உடன்பாடே. ஆனால் அதுவே கடவுள் மறுப்பு என்று சொல்வதானால் நிறைய சிந்திக்க வேண்டியதே

உங்களின் பதிவு காண எனக்கு உலகாயுதம் குறித்து நானறிந்த கருத்துகள் தோன்றின. அது என் பார்வைக் கோளாறினாலோ அல்லது என் கருத்தின் பிழையாலோ நேர்ந்திருக்கும்

உலகாயுதம் என்பதைச் சமயிகள் எடுத்து மறுப்பதை நோக்க நான் முதன்மையாகக் கண்டது அவர்கள் இறைமறுப்பாளர்கள் என்பதனையே...!

அதை வலியுறுத்த அவர்கள் பொருள்முதல்வாதத்தை எடுத்துக் கொள்கின்றனர். உலகாயதம்  என்னும்பதிவில் கண்டதை யெல்லாம் கூறுவதை விட அந்த இடுகையைப் படித்து அறிந்து கொண்டால் நலமாயிருக்கும்



19 comments:

  1. சில குரல் ஒடுக்கப்பட்டவர்களின் குரல். சில குரல் ஒதுக்கப்பட்டவர்களின் குரல். தரப்பு வாதங்கள் தவறுகளைக் காட்டும். கொடுப்பது மட்டுமே அன்றி கொள்வதும் நிகழ்ந்தால் எங்கும் நிறைவே.

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் ஜோடா குடித்துவிட்டு வந்து மீண்டும் படித்துப் பார்க்கிறேன். எனக்கு இந்தப் பின்னூட்டமும் இடுகையும் புரியவில்லை....

      Delete
    2. ஸ்ரீ ராம் குரல்கள் எல்லாக்காலத்திலும் இருந்திருக்கிறது எது கொடுப்பது எது கொள்வது என்பதை விளக்கி இருக்கலாமே

      Delete
    3. @நெல்லைத் தமிழன் பதிவின் தலைப்பைப் பாருங்கள் இடுகைகளையும் பின்னூட்டங்களையும் ஊன்றி படித்தால் தாக்க்லங்கள் தெரியலாம்

      Delete
  2. நல்ல பதிவு. சமீபகாலமாக உங்கள் சிந்தனை இந்தக் கடவுளைச் சுற்றியே வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. எந்தக் கடவுளாஐ என்று சொல்லவில்லையே

      Delete
  3. உலகாயுதம் என்பதில் அனைத்துமே அடங்கிவிடுகின்றதே ஐயா.

    ReplyDelete
    Replies
    1. அப்படிய நினக்கிறீர்கள்

      Delete
  4. நல்லதொரு உள்ளத்தின் அலசல் ஐயா.
    சுட்டிக்கு பிறகு செல்வேன்.

    ReplyDelete
    Replies
    1. சுட்டிகளையும் பின்னூட்டங்களையும் படிக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்

      Delete
  5. ஆசிரியர் திரு ஜோசப் விஜூ அவர்கள், வலைப்பதிவுகளை தற்சமயம் எழுதுவதில்லை... ஏனென்று பலசமயம் வருத்தப்படுவதுண்டு...

    ReplyDelete
    Replies
    1. எழுதாவிட்டால் என்ன நிறையவே எழுதி இருக்கிறரே

      Delete
  6. தற்போது philosphy பதிவுகள் அதிகம் எழுத ஆரம்பித்து விட்டீர்கள்.

    ReplyDelete
  7. 2015 ல் படித்து கருத்துரை இட்டு இருக்கிறேன் இன்று மீண்டும் படித்தேன் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. கருத்து அப்படியேவா இருக்கிறது

      Delete
    2. நீதி கேட்கிறேன் பதிவை வாசித்திருக்கிறீர்கள் ஜோசப் விஜுவி ந்பதிவை வாசித்தீர்களா ஒன்றுக்கொன்று காம்ப்லிமெண்ட் செய்வது தெரிகிறதா அதைத்தான் தாக்கமென்கிறேன்

      Delete
  8. இது இப்போது எழுதியது அல்லஎப்போதோ எழுதியதி தாக்கம் இதுதான் philosophy யா

    ReplyDelete
  9. உங்களுடைய [சுட்டி] பதிவில் உலகாயதத்தை எத்தனை விரிவாக எழுதியுள்ளீர்கள்? படிக்கவே மலைப்பாக இருந்தது! என்னால் எல்லாம் இப்படி எழுதவே முடியாது என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கவும் சுட்டியில் எழுதி இருப்பது ஊமைக் கனவுகள் ஜோசஃப்விஜு என்னாலும் எழுத முடியாது குறிப்பிட்டிருப்பது சரியாக இல்லையாஅவரது எழுத்தில் பழைய சங்க காலஎழுத்துகள் தெரியும்

      Delete