Thursday, August 8, 2019

ஒரு பாடலில் பிறந்த கதை



                                        ஒரு பாடலில் பிறந்தகதை
                                         -------------------------------------------------------------


 மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கி என்ன
உனக்கும் வாழ்வு வரும்
மனது மயங்கி என்ன
உனக்கும் வாழ்வு வரும்
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்
இரவில் நிலவொன்று உண்டு
உறவினில் சுகமொன்று உண்டு
இரவில் நிலவொன்று உண்டு
உறவினில் சுகமொன்று உண்டு
மனைவியின் கனவொன்று உண்டு
எனக்கது புரிந்தது இன்று
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கி என்ன
உனக்கும் வாழ்வு வரும்
பொருத்தம் உடலிலும் வேண்டும்
புரிந்தவன் துணையாக வேண்டும்
பொருத்தம் உடலிலும் வேண்டும்
புரிந்தவன் துணையாக வேண்டும்
கணவனின் துணையோடு தானே
காமனை வென்றாக வேண்டும்
மனைவி அமைவதெல்லாம்
இறைவன்

இன்று கேட்பதுபோல்  இருக்கிறது ஆயிற்று முப்பது வருடங்களுக்கு மேல்  என்னைப் பெண்பார்க்கும் படலம் போது வந்திருந்த ஒருவர் பாடியபாடல் எனக்கு அவ்வப்போது தோன்றும்
இரவில் நிலவொன்று உண்டு
உறவினில் சுகமொன்று உண்டு
இரவில் நிலவொன்று உண்டு
உறவினில் சுகமொன்று உண்டு
மனைவியின் கனவொன்று உண்டு
எனக்கது புரிந்தது இன்று
 இது சரிஉறவும் சுகமும் இருவருக்கும் பொதுதானே
பொருத்தம் உடலிலும் வேண்டும்
புரிந்தவன் துணையாக வேண்டும்
பொருத்தம் உடலிலும் வேண்டும்
புரிந்தவன் துணையாக வேண்டும்
கணவனின் துணையோடு தானே
காமனை வென்றாக வேண்டும்
உடலில் பொருத்தமென்பது இரவில் தெரியாததுஆனால் புரிந்தவன்  துணையாக வேண்டும் என்பதுமிகச்சரி அந்தநேரத்தில் காமனை வெல்லும்போது எதுவும் தெரிவதில்லை
 கவிதை காண்பவன் கண்டாலே காதல் கவிஞன் கண்டாலே கவிதை .
 ஆனால் பெரும்பாலும் அப்படி இருப்பது இல்லை கவிதை என்றாலேயே புனைவு என்றுபடித்த நினைவு
மணமென்றால் நம் சமுதாயத்தில் இருவர் மட்டும் சம்பந்தப்பட்ட நிகழ்வல்ல  கணவன் மாமனார் மாமியார் நாத்தனார் என்று எல்லோரும் உண்டு நாத்தனார் எனும்போது ஒரு நிகழ்வை மறக்க முடியவில்லை என் நாத்தனாருக்கு திருமணம்நிச்சயமாயிற்று  ஆனால் திருமண நாள் அன்று மணப்பையன் ரயில் முன்பு விழுந்து தற்கொlலை செய்து கொண்டான் நடக்கக் கூடாத துரதிர்ஷ்டம் ஆனால் அதற்கு நான்வந்த நேரம்தான் காரணம்  என்று கூறி என்னை வறுத்தெடுக்கத் துவங்கினார்கள்  எங்களை தனியெ அனுப்பி விட்டார்கள் அதுவும்நல்லதுக்குத்தான் ஒரு திரைப்படத்தில் விசு அவர்கள் கணவனும் மனைவியும் இணைந்தால் எல்லாம் சரியாகும் என்பதுபோல் சொல்லுவார் இணைவதுஎல்லாம் சரிதான்  உடல்கள் இணைந்தன மனங்கள்? விளைவுகளும் நிகழ்ந்தது இரு குழந்தைகள்
கணவன் சரியான அம்மா கோண்டுஎதிலும் தனக்கென்ற கருத்துஇல்லாதவர்
தனியே இருந்தாலும் எனக்கு கணவனை  வளைத்துபோடும் அளவுக்கு  அத்தனை  சாமர்த்தியம் இருக்கவில்லை வாழ்க்கையெ இயந்திரகதியில் சென்றது ஒரு சமயம் விவகாரம் முற்றிப்போய்  என் தனி உரிமையும் கணவனுடன் சேர இருந்தநிலையும் பறி போயிற்று
தனியெ புலம்பல் போய் என்வீட்டாரிடம் சொன்னேன் குய்யோ முறையோ என்று குதித்தனர்உறவை வெட்டி விடலாமென்றனர் நானும் நன்கு படித்திருக்கிறேன் தனியே இருக்க முடியும் யாரையும்   இன்க்ளூடிங்  கணவன் சார்ந்திருக்கத் தேவைப்படாது financially independent
 என்னதான் தனியே வாழமுடிந்தாலும் நம் சமூகத்தில் அது அவ்வளவாக ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை ஒரு ஸ்டிக்மா  கொடுக்கப்பட்டுவிடும்
ஆஃப்டெர் ஆல் வி ஆர் சோஷியல் அனிமலஸ்     


இத்தனை நாள் வாழ்ந்தாகி விட்டது இனி இன்னொரு மணம் என்பது சரியாகாது கணவன் இருந்தும்  உன்  தனித்தன்மைக்கு ஏதும் பங்கம் இல்லை இதுவரை  வளர்ந்த பிள்ளைகள் எல்லாம் நோக்கி முடிவெடு என்னுமஅறிவுரை  ஏற்கத்தகதாய் இருந்தது
       
கதையா இது ? இன்னும் நீட்டி இருக்க வேண்டுமோ பதிவி தலைபிலிருந்து உதித்த எண்ணங்கள் தானே கதை ஆயிற்று 







18 comments:

  1. அலசல் நன்று ஐயா.
    கணவனை சாராமல் வாழ்ந்தீ கடப்பது நமது நாட்டுக்கு சரியாக வராது.

    இருப்பினும் இப்பொழுது விவாகரத்துகள் பெருகித்தான் விட்டது.

    ReplyDelete
    Replies
    1. பெரும்பலான நடுத்தரக் குடும்பங்களில் விவாக ரத்து தடுக்கப்படுகிறது எதையும் பொறுத்துக்கொள்ளும் பாரத நாரிமணிகள் இன்னுமிருக்கிறார்கள்

      Delete
  2. தேவகோட்டையாரை வழி மொழிகின்றேன்

    ReplyDelete
    Replies
    1. ஒரு பாட்டு கதைக்கச் சொன்னது

      Delete
  3. வாழ்க்கையில் நடப்பதை வைத்துத் தானே கதைகளும் புனையப்படுகின்றன. அந்த சினிமாவிலும் கூட எல்லாமே வேண்டும் வேண்டும் என்று தான் வரிகள் முடியும். அதாவது அனைத்துமே நாயகனின் திருப்பங்கள். விருப்பங்கள் எல்லாம் நிறைவேறிவிட்டால் வாழ்க்கையில் சுவாரஸ்யமே இருக்காதே!

    ReplyDelete
    Replies
    1. சில டும்களையும்டாம்களையும் வைத்து/ ஒருபதிவு எழுதி இருந்தேன் சுட்டி இதோ https://gmbat1649.blogspot.com/2017/12/blog-post_22.html

      Delete
  4. வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் -
    ஆனாலும் அன்பு மாறாதது...
    மாலையிடும் சொந்தம் முடிப்போட்ட பந்தம் -
    பிரிவென்னும் சொல்லே அறியாதது...
    அழகான மனைவி அன்பான துணைவி -
    அமைந்தாலே பேரின்பமே...
    மடிமீது துயில சரசங்கள் பயில -
    மோகங்கள் ஆரம்பமே...
    நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி...
    நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி..
    சந்தோஷ சாம்ராஜ்யமே...

    படம்: புது புது அர்த்தங்கள்

    ReplyDelete
    Replies
    1. ஒரு பாட்டு இன்னொரு பாட்டை நினைக்க வைக்கிறதோ

      Delete
  5. உரத்த சிந்தனைகளின் தொகுப்பு. ஆணாதிக்க மனோநிலையைச் சாடுகிறதோ!

    ReplyDelete
  6. நம்நாட்டில் பெரும்பாலும் நடுத்தரவர்க்கப்பெண்கள் எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்கள்அதுவே பாட்டை கேட்டதும்கதைஆயிற்று

    ReplyDelete
  7. பெண்களின் நிலை அன்றும் இன்றும் என்றும் பரிதாபமே! இதிலாவது இந்தப் பெண் பொருளாதார ரீதியாகத் தனித்து இருக்கிறாள். அப்படி இல்லாமல் படிக்காத, வேலைக்குப் போக முடியாத பெண்கள் வீட்டு வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றுகின்றனர். அதையும் பார்த்து வருகிறோம். ஆணில்லாமல் பெண்ணால் தனித்து வாழ முடியும். ஆனால் ஆணுக்கு ஒரு பெண் தேவை. எந்த உருவிலாவது. அம்மா, மனைவி, சகோதரி, பெண் என எப்படியேனும் ஓர் உறவில்!

    ReplyDelete
    Replies
    1. ஆணுக்குப் பெண்ணும்பெண்ணுக்கு ஆணும் தேவை அதுவல்ல பிரச்சனை பாட்ல்வரிகள் என்ன சொல்கிறது என்பதே பதிவுக்கு மூல காரணம்

      Delete
  8. அப்போது, ஏன் இப்போதும்கூட, நான் ரசிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று. கணவன் மனைவி என்ற கோணத்தில் மட்டுமே இப்பாடல் அணுகப்படவேண்டும் என்பது என் எண்ணம்.

    ReplyDelete
    Replies
    1. பாடலில் அப்படியா சொல்லி இருக்கிற்து

      Delete
  9. சினிமா பாடல்கள் அந்த கதைக்கான சிச்சுவேஷனுக்காக எழுதப்படுபவை. நீங்கள் அதை திருப்பி விட்டீர்கள்.

    ReplyDelete
  10. இந்த சினிமாப்பாடலுக்கு ஏற்றசிசுவேஷன் கதையாகி விட்டது

    ReplyDelete
  11. இந்தப் பாடல் மிகவும் பிடித்த பாடல் சார்.

    அட! கதை அருமையான சிந்தனைகளின் வெளிப்பாட்டுடன் தொடங்கி இறுதியில் ..ஆமாம் சார் பல மத்தியத்ர வர்க குடும்பங்களில் பெண்களே கூட பிரியும் முடிவு எடுப்பதில்லை.

    படித்த பெண்களும் சரி, படிக்காதவர்களும் சரி. படிக்காதவர்களும் சரி. பல பெண்களின் நிலை இதுவே. கணவனிடம் இருந்து பிரியும் முடிவை பெண் எடுத்தாலும் கூட அதுவும் பெற்றோரின் ஆதரவு இல்லாமல் பல பெண்கள் எடுக்க முடியாமல் அவஸ்தைதான் படுகிறார்கள்.

    கதை மிக நன்றாக இருக்கிறது சார்...முடிந்தால் இன்னும் கொஞ்சம் விவரித்து கதையாகவே ஒரு பதிவு போடலாம் சார் நீங்கள்.

    கீதா

    ReplyDelete
  12. /கதை மிக நன்றாக இருக்கிறது சார்...முடிந்தால் இன்னும் கொஞ்சம் விவரித்து கதையாகவே ஒரு பதிவு போடலாம் சார் நீங்கள்./ ஏன் இது கதையாக இல்லையா

    ReplyDelete