தீபாவளியும் வந்து போயாச்சு
-----------------------------------------------
ஒரு
வழியாய் இந்த ஆண்டு தீபாவளியும்வந்துபோயாச் எங்கே மழை வந்து கிடைக்க
இருக்கும் மகிழ்ச்சியையும்கெடுத்து விடுமோ
என்னும்பயம் அர்த்தமிலாது போயிற்று தீபாவளி திருநாளில் மட்டுமே நான் கலந்துகொள்வதுவழக்கம்என்மக்கள்
இதுவரை எப்படியாவது தீபாவளிக்கு
வீட்டுக்கு வந்து விடுவார்கள் அன்று என்
சக்திக்கு ஏற்றபடிபுதுத்துணிகள் எல்லோருக்கும்வாங்கி விடுவேன் என் குடும்ப உறவுகள்
என்றுசொல்லிக் கொள்ள சுமார் ஒருடஜன் உருப்படிகள் தேறும் என்மகன்கள்
அவர்களதுமனைவிமார்கள் அவர்களதுகுழந்தைகள் என் மைத்துனன் மனைவியுடன்
இந்த ஆண்டு என்பேரனும் அவன்
மனைவியும்எதிர்பார்த்தேன் என்
மூத்தமகனின் மாமியார் அவனுடன் தற்சமயம்
சென்னையில் இருப்பதால் அவர்களும்வருவார்கள்
என்று நினைத்தேன் அவர்களால் பயணப்பட
முடியாததால் என் மூத்தமருமகளும் வர
இயலவில்லை ஆனால் எனிளையமகன் அவனது செல்ல நாயுடன் ஆஜர்
சம்பிரதாய தீபாவளி எல்லாம் இல்லை எண்ணைக் குளியல் போன்றவை
நாங்கள்திருச்சியில் இருந்தபோது
விடியற்காலை சுமார் நான்கரை மணிக்கு
முதலில் ஒருலக்ஷ்மி வெடி கொளுத்தி தீபாவளி தொடங்கும் இந்த ஆண்டு பட்டாசே
இல்லை யாருக்கும் ஈடுபாடில்லை
பலகாரங்களில் குலாப் ஜாமூன்மாத்திரம்
மனைவி செய்தாள் மற்றபடி என் மகன்கள் தேன் குழல் மனோஹரம் நாடா பக்கோடா
லட்டு என்று வாங்கி வந்திருந்தனர்
எனக்கு
இம்முறை கார்டுராய் பாண்ட்இரண்டு வாங்கினேன் எல்லோருக்கும்புடவை சர்ட் எல்லாம்
வாங்கினேன்இதெல்லாவற்றையும் விட
எல்லோரும்கூடி இருந்ததே மகிழ்ச்சி அதை புகைப்படங்கள் எடுத்து பகிர்ந்து கொண்டோம் என் இரண்டாம் மகனின் செல்லதையும்
அழைத்து வந்திருந்தான்அது ஆளைக்கண்ட
சமுத்திரம்போல் அங்கும் இங்கு ஓடியது
எல்லோர் கவனமும் அதன் மேலேயே இருந்தது
|
மைத்துனன் நான்மகன் |
|
பேத்தி |
|
என் இரு மகன்கள் |
|
என் இரண்டாம் மகனின் குடும்பம் |
|
இண்டாம்மகன் நான் மைத்துனன் மூத்தமகன் |
|
பேரன் மருமகப் பேத்தியுடன் |
|
எங்கள் குடும்பம் |
தீபாவளியை மகிழ்ச்சியாய்க் கொண்டாடியதற்கு மகிழ்ச்சி. சந்தோஷங்கள் பெருகட்டும்.
ReplyDeleteசந்தோஷம்தான்
Deleteமகிழ்ச்சி தொடரட்டும் ஐயா
ReplyDeleteவாழ்க வளமுடன்...
வாழ்த்துக்கு நன்றிஜி
Deleteமிகவும் மகிழ்ச்சி ஐயா...
ReplyDeleteதொடர வாழ்த்துகள்...
குடும்பத்தினரோடு எனர்ஜெடிக்காக உங்களைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி.
ReplyDeleteஎல்லோரும் வாழ்க வளமுடன்.
எல்லோருடனும் இருப்பதே எனெர்ஜெடிக் ஆக இருக்க வைக்கும்
Deleteபண்டிகை நாட்கள் வருவதே கூடி மகிழத்தானே!
ReplyDeleteஎனக்கு தீபாவளிப் பண்டிகை மட்டுமே எல்லோரும் கூடும் தினம்
Deleteதீபாவளித் திருநாள் மகிழ்ச்சி என்றென்றும் தொடரட்டும்
ReplyDeleteமகிழ்ச்சி தொடர்ந்தால் நல்லது
Deleteஎனெர்ஜி பார் - ஒரு நல்ல இனிப்பு. அதில் பேரீட்சை, அத்தி, முந்திரி/பாதாம் போன்றவற்றை வைத்துச் செய்யலாம். எனக்கு மிகவும் பிடித்த இனிப்பு இது. இது செட் ஆவதற்காக (குழைக்க) நெய் உபயோகப்படுத்தினால் நல்லது. சிலர் எண்ணெய் உபயோகப்படுத்தி அதன் ருசியைக் கெடுத்துவிடுவார்கள்.
ReplyDeleteஇந்த இனிப்பு உங்களுக்கு பிடிக்கும் என்று தெரியும்
Deleteஎண்ணெய் வழியாத ரொம்பவும் பொரிக்காத எல்லா இனிப்புகளும் எனக்குப் பிடித்தமானது.
Deleteமனோஹரம் வந்ததாச் சொல்லியிருக்கீங்க. சரியாத்தான் சொல்லியிருக்கீங்களா? அது காரமில்லாத சேவில் (காராச்சேவு மாதிரி) வெல்லப்பாகு போட்டு தயார் செய்வது. திருநெல்வேலிக்கே உரித்தானது. அதை யார் வாங்கிக்கொண்டு வந்திருக்க முடியும் (சென்னையில் மந்தைவெளி சுஸ்வாதில் மட்டும்தான் கிடைக்கும்)
Delete//திருநெல்வேலிக்கே உரித்தானது.//
அநியாயமா இல்லையோ? இந்த மனோஹரம் மதுரைக்காரங்க மட்டும் பண்ணுவோம். கல்யாணங்களில் பருப்புத் தேங்காய் போலப் பிடித்து வைக்காமல் ஓர் அண்டாவில் உதிரியாகப் போட்டு அதில் மேலே இரண்டு கோபுரங்கள் கட்டி வைப்போம். அதோடு இதன் பக்குவமே தனி! தஞ்சாவூர்க்காரங்க மற்ற ஊர்க்காரங்க போல் உளுத்தமாவுத் தேன்குழலில் எல்லாம் பண்ண மாட்டோம்.
@நெத
Deleteஎன் மூத்த மகன் கொண்டு வந்தான் எங்கு வாங்கினான் போன்ற கேள்விகளைக் கேட்கவில்லை
கீதா சாம்பசிவம்
Deleteஎன் மனைவியே செய்து சாப்பிட்டதுண்டு அதற்குஇருகும் பாரம்பரியம்தெரியாது
பதிவைப் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது ஐயா.
ReplyDeleteநன்றி சார்
Deleteசொந்தங்களுடன் தீபாவளி கொண்டாட்டங்கள் எப்போதுமே அருமையாக இருக்கும். வாழ்த்துகள். மகிழ்ச்சி தொடர்ந்து வரட்டும் எல்லாப் பண்டிகைகளிலும்.
ReplyDeleteஉண்மைதான் ஆனால் இயலாதபோது வருத்தமும் உண்டு வாழ்த்துக்கு நன்றி
Deleteசந்தோசமான தீபாவளி. சீரியல் பார்- வீடியோ, செய்து பார்க்க நினைக்கிறேன்.
ReplyDeleteநான் செய்து பார்த்ததில்லை
Deleteநல்லதொரு குடும்பமாக அதுவும் மகிழ்ச்சியாக இருப்பதை பார்க்கும் போது மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.. இது போல என்றும் வாழ்க என்று வாழ்த்துகிறேன்
ReplyDeleteகூடி இருக்கும்போது மகிழ்ச்சிதானேசார்
ReplyDeleteபண்டிகையை முன்னிட்டு இனிதாக ஒரு குடும்ப சந்திப்பு. சந்தோஷங்கள். பளிச்சென்று படங்கள்.
ReplyDeleteஅருமை. Keep relishing good times..!
வருகை மகிழ்ச்சி சார்
ReplyDelete