ஐயப்பன் திருவிழா
---------------------------------
இது டிசெம்பர் மாதம்
என்று தெரிய எனக்குஒரு வழி கிடைத்திருக்கிறது சாலையில் எல்லாம் ஐயப்ப பக்தர்க்ள் போய் வந்து
கொண்டிருப்பார்கள் கோவிலில்கூட்டம் அதிகமாக இருக்கும் நான் கோவில்போய் வந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் இருக்கும் அது சரி நான் வெளியெ நடந்துசென்றே ஆகியிருக்குமே இரண்டு ஆண்டுகள் டிசம்பர்
மாதம் பதினாறாம்நா;ள் கோவிலில்
கொடியேற்றுவார்கள் (இந்த ஆண்டு 17ம் தேதி) அன்று நடக்குமெல்லா வழிபாடுகளுக்கும் ஏரியா வில் இருப்போர்தான் பொறுப்பு ஏரியா பூஜை என்பார்கள் ஆக இருக்கும்
செலவினங்களை இங்கு வசிப்போரே
ஏற்கிறார்கள் இன்ங்லூடிங் நாங்களும் முன்பெல்லாம் ஊர்வலம்வரும்போது அக்கரையுடன்
பார்ப்பேன் இப்போதும்தான் ஆனால்கலந்து கொள்ள முடியாததால் ஒரு
டிடாச்மெண்ட் இருக்கிறது இருந்தாலும்
வீட்டிலிருந்தே பார்க்கலாம்
மலையாளிகள் அதிகம் வசிக்குமிடத்தில் நிச்சயம் ஒரு ஐயப்பன்
கோவில் இருக்கும் நாங்கள் இருக்குமிடம் ஒரு மினி கேரளா கோவில் பாரம்பரிய பூஜைகள் மற்றும் திருவிழா காலங்களில்
இருக்கும் கலாச்சார அம்சங்களும் இருக்கும்
இல்லா விட்டால் இந்த பாரம்பரிய கலைகள்
அயலூர்களில் காணக்கிடைக்காதது
சரி இப்போது நிகழ்ச்சிக்கு வருவோம் சபரிமலை ஐயப்ப்ன் கோவிலில்
நடக்கும் அதே விதமான பூஜைகள் இங்கும் விஸ்தாரமாக நடக்கும் .
இங்கு கோவிலில் இருந்தபூஜாரி ஒருவர் சபரிமலையில் மேல் சாந்தியாக
தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார் டிசம்பர் 16
ம் நாள் கொடியேற்றப்படும்பின் சபரி மலையில் இருக்கும் அதே வழிபாடுகள் பின் பற்றப்படும் ஆராட்டு மற்றும் அபிஷேக முறைகள்
எல்லாம் பின்பற்றப்படும்
கொடியேற்றும் நாளில் ஒருபெரிய ஊர்வலமிருக்கும் கேரளத்தில்
எல்லாவிசேஷங்களிலும் தாலப்பொலி என்று கூறப்படும் தட்டில் பெண் குழந்தைகள் தீபமேந்தி வரும் காட்சியுமிருக்கும் முன்பெல்லாம் கோவில் யானயும் இருக்கும் இப்போது அவ்வாறு இல்லை யானை ஊர்வலம்தடை செய்யப்பட்டு இருக்கிறது
சில முக்கிய விவரங்கள் தினமும்மதியம் கோவிலில் அன்னதானம் செய்யப்படுகிறது கோவில் கேஜி ஒன் முதல் ப்ளஸ் டூ வரை பள்ளியை நிர்வகிக்கிறது கோவிலுக்கு என்று ஒரு மருத்துவ மனை உண்டு இங்கு எல்லாவிதபரிசோதனைகளு ம் செய்யப்படுகின்றன ஒரு திருமண மண்டபமும் உண்டு
கோவில் துவஜஸ்தம்பம் பொன் வேயப்பட்டது மொத்ததில் பெங்களூரின் ஒருலாண்ட் மார்க்காக உள்ளது டிசம்பர் பதினாறாம் நாள் இங்குஎங்கள் ஏரியா பூஜையாக கொண்டாடப்படும் அதைச்சொல்ல வந்த நான் பாதை விலகி விட்டேன் இந்த ஆண்டு என்னால் புகைப்படமெடுக்க இயlலாது ஆகவே நினைவுக்காக முன்பு எடுத்த படங்களும்
சில காணொளிகளும் பதிவிடுகிறேன்
சில முக்கிய விவரங்கள் தினமும்மதியம் கோவிலில் அன்னதானம் செய்யப்படுகிறது கோவில் கேஜி ஒன் முதல் ப்ளஸ் டூ வரை பள்ளியை நிர்வகிக்கிறது கோவிலுக்கு என்று ஒரு மருத்துவ மனை உண்டு இங்கு எல்லாவிதபரிசோதனைகளு ம் செய்யப்படுகின்றன ஒரு திருமண மண்டபமும் உண்டு
கோவில் துவஜஸ்தம்பம் பொன் வேயப்பட்டது மொத்ததில் பெங்களூரின் ஒருலாண்ட் மார்க்காக உள்ளது டிசம்பர் பதினாறாம் நாள் இங்குஎங்கள் ஏரியா பூஜையாக கொண்டாடப்படும் அதைச்சொல்ல வந்த நான் பாதை விலகி விட்டேன் இந்த ஆண்டு என்னால் புகைப்படமெடுக்க இயlலாது ஆகவே நினைவுக்காக முன்பு எடுத்த படங்களும்
சில காணொளிகளும் பதிவிடுகிறேன்
ஊர்வலத்தில் கேரள பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் பார்க்கலாம் புராண கதைகளின் சில காட்சிகளை tableau ஆகக் காண்பிப்பார்கள்
மேலேகாணும் சிங்காரி மேளம் கின்னஸ் சாதனை படைத்தது மொத்தம் 2028 பேர்கள்பங்கு கொண்டது எங்கள் வீதியில் வரும்சிங்காரி மேளம் காணொலியும் காணலாம்
நீங்கள் வெளியே நடந்து சென்று வந்தே நாட்கள் பல ஆகின்றன என்பது வருத்தத்தைத் தருகிறது. காம்பவுண்ட் உள்ளேயே தினசரி நடைப்பயிற்சி செய்து வருவதாக முன்பு நீங்கள் குறிப்பிட்டிருந்த நினைவு.
ReplyDeleteஉங்கள் நினைவு சரியே இன்றும் நடை தொடர்கிறது
Deleteஅந்தக் கோவில் ஸ்டாப்பிலிருந்து உங்கள் வீட்டுக்கு நடந்துவந்திருக்கிறேன். உங்களுக்கு நடக்க சிரமம் என்றால், ஒரு ஆட்டோவை வைத்துக்கொண்டு மனைவியுடன் கோவில் போய்வரலாமே.
ReplyDeleteசிறுமிகள் கையில் தட்டும் விளக்குமாக நிற்பது பரவசம். இன்னும் நிறைய கோலாகலங்கள் இருக்கும் நமது கோவில் வழிபாட்டு முறைகளில். எங்கள் பகுதியிலும் வினாயகர், முருகனோடு, சிறு ஐயப்பன் கோவில் ஒன்று உண்டு. விளக்குகள் ஜொலிக்கும். சங்கீதம் ஒலிக்கும். நமது பாரம்பர்யம் அலாதியானது. ஆனந்தம் தருவது. இன்னும் சொல்லிச் செல்லலாம்.
எனக்குக் இம்மாதிரி விழாகளை பார்ப்பது பிடிக்கும் பாரம்பரியகலைகள் இன்னும்கோவில் விழாக்ளால் தான் தெரிந்து கொள்ள முடிகிறது
Deleteசிங்காரி மேளம் கின்னஸ் சாதனை சிறப்பு...
ReplyDeleteவாட்ஸாப்பில் வந்தசெய்தி
Deleteஏன் வெளியில் வருவதில்லை? சூரிய ஒளி உடலில் பட வேண்டுமே. வளாகத்திலாவது நடைப்பயிற்சி உண்டா?
ReplyDeleteஉங்கள் அக்கறைக்கு நன்றி
Delete//டிசம்பர் பதினாறாம் நாள் இங்குஎங்கள் ஏரியா பூஜையாக கொண்டாடப்படும்//
ReplyDeleteவிழா படம், விழா காணொளிகள் அருமை.
நினைவுகள் மகிழ்ச்சியை தரும்.
இந்த ஆண்டு பதினேழாம் தேதி மார்கழி முதல் நாள்படங்களும்காணொளிகளும் முன்பு எடுத்தது இன்று மாலை என்ன மாதிரியாக ஊர்வலம் இருக்கும் தெரியாது
Deleteகாணொளிகளில் கடைசி காணொளி பிரமிக்க வைத்தது.
ReplyDeleteஅது கின்னஸ் சாதனை படைத்ததல்லவா
Deleteகாணொளிகளுடன் சிறந்த அனுபவ விளக்கம்
ReplyDeleteவருகைக்கு நன்றி முதல் வரவா
Deleteமுடிஞ்சப்போக் கொஞ்சமானும் வெளியே வந்து நிகழ்ச்சிகளைப் பாருங்க! மனதுக்கு நிறைவாக இருக்கும். மற்றபடி இந்தப் படங்கள் சிலவற்றை முன்னரே பார்த்த நினைவு உள்ளது! இப்போதும் பார்த்தேன். வீட்டுக்கு வெளியே நடைப்பயிற்சி செய்வதும் நல்லதே!
ReplyDeleteநான் விட்டிலேயெ அடைஞ்சு கிடக்கவில்லை நடப்பதில் பாலன்ஸ் இல்லாததே குறை எப்படியும் வீட்டைச்சுற்றி தினமும் தத்தி தத்தி சுமார் ஒரு கிமீ தூரம் நடந்து விடுகிறேன் ஒரு மணிநேரம் ஆகிறது வெளியே தனியே போகமுடிவதில்லை மற்றபடி ஐ ஆம் ஓகே பதிவே கிட்டத்தடட மீள்பதிவு தான்
Deleteகாணொளிக் காட்சிகள் மிகவும் சிறப்பு. உங்கள் எழுத்து அதற்கு இன்னும் மெருகூட்டியது.
ReplyDeleteவருகைக்கும் பாரட்டுக்கும் நன்றி சார்
Delete