தொடருகிறேன் லூகாஸ் டிவிஎஸ் கம்பனியில் நித்திய கண்டம் பூர்ண ஆயுசு என்பது போல் இருப்பது எனக்குப் பிடிக்கவில்லை. ஏறத்தாழ அதேநேரத்தில் திருச்சி பிஎச் இஎல் நிறுவனத்திலிருந்து அசிஸ்டண்ட் எஞ்சினீயர் வேலைக்கு விளம்பரம் வந்திருந்தது. மனுப்போட்டேன் . நேர்காணலுக்கு அழைப்பு வந்தது சுமார் 25 பேர் வந்திருந்தனர். அப்போதைய பொது மேலாளர் ஆர் எஸ் கிருஷ்ணன் நேர்காண்ல் செய்தார். நான் தேர்வாகி இருப்பதாகக் கூறப்பட்டேன் ஒரு தனியார் நிறுவனத்தில் சூபர்வைசராக இருப்பதைவிட ஒரு பப்ளிக் செக்டார் நிறுவனத்தில் அதிகாரியாகப் பணி என்பது மேலானது. சம்பளம் 400-920 என்றிருந்தது. அது நான் வாங்கிய சம்பளத்தைவிடக் கூடுதலாக இருந்தது. எப்படியும் அது நல்லதற்குத்தான் என்று எண்ணினேன் சாந்தியும் பிரசவத்துக்குப் பெங்களூர் போயிருந்தாள். இனி திருச்சியில் குடித்தனம் என்று முடிவெடுத்தேன் பொறுப்பு அளிக்கும் நியமனக் கடிதம் எதிர்நோக்கி இருந்தேன் திருச்சியில் ஏற்கனவே என் நண்பர்கள் ஆர் வி. சந்திர சேகரும் கே ஜி. ஹரிஹரனும் அசிஸ்டண்ட் ஃபோர்மனாகப் பணியிலிருந்தனர். அவர்கள் இந்த வேலை மிகவும் நல்லது நான் அதிர்ஷ்டக்காரன் எனது போல் கூறினார்கள் நியமன ஆர்டர் வரவில்லையே என்றேன் தேர்வாகிகிடைக்கும் முன்பே கொடுத்துவிட்டேன் அது நான் செய்த தவறா என்பதை என்னால் இன்னும் தீர்மானிக்கமுடியவில்லை. ஏன் என்றால் எனக்கு ஆர்டர் வந்தபோது அதில் நான் சீனியர் இன்ஸ்பெக்டர் வேலைக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறேன் என்று இருந்தது. சீனியர் இன்ஸ்பெக்டர் பணி அசிஸ்டன்ட் எஞ்சினீயர் பணியிலும் ஒரு க்ரேட் குறைவு. ஃபோர்மன் கிரேட். ஆனால சம்பளம் 400-750 கிரேட்..இருந்தாலும் பகல் இரவு மாறி மாறி வரும் ஷிஃப்ட், எப்போதும் ஒரு பயத்துடனேயே அணுக வேண்டிய பணி, என்னை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தியது. நியமன ஆர்டர் வரும்முன்பே நான் ராஜினாமா கடிதம் கொடுத்தது எல்லாம் நலனுக்கே என்று நினைத்தேன். பி எச் இ எல் லுக்கு கடிதம் எழுதீனேன். தேர்வு என்று கூறியது ஒரு க்ரேட் நியமன ஆர்டர் ஒரு க்ரேட் விளக்கம் கேட்டு எழுதினேன். என் படிப்பு எல்லாவற்றையும் கண்டபின் நான் சீனியர் இன்ஸ்பெக்டர் பதவிக்கே தகுதி என்று எழுதி இருந்தனர் மனம் உடைந்து போயிற்று வேறு வழி ஏதும் இல்லாததாலும் துவங்கும் சம்பளத்தில் மாற்றம் இல்லாததாலும் பணியை ஏற்க முடிவு செய்தேன். வேறு மாற்று வழி ஏதும் புலப்படவில்லை
லூகாஸ் டிவிஎஸ்ஸிலும் ராஜினாமவை திரும்பிப்பெறக் கோரினார்கள். என் தன் மானம் இடம் கொடுக்கவில்லை.ஒரு அரசாங்கப் பொது நிறுவனத்தில் அதிகாரி வேலை என்று வேறு கூறி இருந்தேன் நான் திருச்சிக்குப் பயணமானேன் என் அப்போதைய நிலை மிகவும் மோசமாக இருந்தது நான் சென்றபோது ஒருஅஸீஸ்டண்ட் என்ஜினீர் அறையையும் அதன் முக்கியத்துவத்தையும் பார்த்த நான் எவ்வளவு இழந்தேன் என்று தெரியவந்தது.பிற்காலத்தில் அவர் தொழிற்சாலையின் எம் டி ஆக உயர்ந்தார். ஆனால் நானோ............ .மறு நாள் எங்கள் மேலதிகாரியிடம் அசிஸ்டண்ட் சூப்பரிண்டெண்டண்ட் கிருஷ்ணமூர்த்தி என்ற பெயர்அறிமுகப்படுத்தப் பட்டேன் . அவர் என்னைப்பற்றி விசாரித்தபோது என் ஏமாற்றம் முழுவதையும் கொட்டிவிட்டேன் அவர் என்னை ஒரு அசிஸ்டண்ட் எஞ்சினீயர் மாதிரியே ட்ரீட் செய்வதாக உறுதி அளித்தார். அதன் படியே நடந்தும் கொண்டார். இது வலிக்கு ஒத்தடம் கொடுப்பது போல் இருந்தது. என் இழப்பின் விலை தெரிய வேண்டுமானால் எனக்கு எந்த அசிஸ்டண்ட் எஞ்சினீயர் வேலைக்குத் தேர்வு ஆனேன் என்று கூறி அதற்கு அடுத்த நிலைக்கு தேர்வுசெய்யப்பட்டேனோ, அதே அசிஸ்டண்ட் எஞ்சினீயர் பதவியை நான் பெற ஆறே முக்கால் வருடம் காத்திருக்க வேண்டியதாயிற்று. ஒரே காரணம் என் குவாலிஃபிகேஷன் .மேல்படிப்பு படிக்கவில்லை என்றாலும் வேலையில் மிக நல்ல பெயரும் மதிப்பும் பெற்றிருந்தேன்பெற்றிருந்தேன்.எழுதும்போது
சில அனுபவங்களும் நிகழ்வுகளும் மாறி மாறி வருகின்றனநினைவுகளும் நிகழ்வுகளும்
அலுவலகம் மட்டும் சார்ந்ததில்லையேதனிப்பட்ட சொந்த வாழ்வின் நிகழ்ச்சிகள் கோர்வையாக
சொல்லாமல் விட்டுப் போகின்றன,நான் லூகாஸ் டிவிஎஸ்ஸில் பணியில் இருந்தபோது
வில்லிவாக்கத்தில் வீடு எடுத்து வாழ்ந்திருந்தது குறித்து எழுதி இருந்தேன்.
சாந்தியின் கர்ப்பத்தை உறுதி செய்து கொண்டாலும் விசேஷ கவனிப்பு ஏதும்
இருக்கவில்லை. ஒன்று அறியாமை காரணம் மற்றது கைக்கும் வாய்க்குமே போதாத நிலை.
ஒன்பதாம் மாதம் சாந்தியை அவள் பெற்றோரிடம் பிரசவத்துக்கு அனுப்பினேன் ஒரு நாள் என்
தம்பி விச்சுவும்( அவன் அப்போது என்னிடம் வந்திருந்தான் ) நானும் ஹடாரி என்னும்
திரைப்படத்துக்குப் போய் வந்தோம் எனக்கு மகன் பிறந்திருந்த செய்தி வந்திருந்தது.அப்போது
எனக்குள் ஏற்பட்ட மனநிலை நினைவுக்கு வரவில்லை. அதையும் ஒரு சாதாரண நிகழ்வாகவே
எடுத்துக் கொண்டேன் போலிருக்கிறது சாந்தி பிரசவத்துக்குப்போயிருந்த காலகட்டத்தில்
சோமாவின் திருமணம் நடந்திருந்தது சோமாவும் லக்ஷ்மியும் வில்லிவாக்கத்தில்
இருந்தனர் என்னும் நினைவு.
பொன்மலைப்பட்டி வாழ்க்கையில் மறக்க முடியாத ஓரிரு நிகழ்வுகள். என் நண்பன் மயூரநாதன் ஒரு முறை என் வீட்டுக்கு வந்தான் குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டு சாந்தி சாந்தி என்று அவன் கொஞ்சியது தமாஷாக இருந்தது. நான் சாந்தியைக் கூப்பிடுவது அவன் மனதில் பதிந்து குழந்தையையும் அவனறியாமலேயே சாந்தி என்று நினைத்திருக்கிறான் இன்னொரு முறை வீட்டில் ஒரு பாம்பு நுழைந்தது என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம் பழைய வீடு அது.பின்கட்டு வாசல் நிலைப்படியில் ஒரு பொந்து போல் இருந்த இடைவெளியில் அது போய்ப் பதுங்கிக் கொண்டு அவ்வப்போது தன் நாக்கை நீட்டிக் கொண்டிருந்தது. நாங்கள் அதை .வெளியில் வரவழைக்கச் செய்த முயற்சிகள் எல்லாமே வீணாயின. இரவு நெருங்கிக் கொண்டிருந்தது.கைக்குழந்தை வேறு/ எப்படி உறக்கம் பிடிக்கும். ஒரு வேளை நாங்கள் தூங்கிப் போனால் அது அங்கேயே இருக்கிறதா போய் விட்டதா என்று எப்படித் தெரிந்து கொள்வது. சிறிது மண்ணை அந்த நிலைப்படியருகே பரப்பி வைத்தோம் அது வெளியே போனால் போன சுவடு பதிவாகும் அல்லவா. குழந்தையை அவர்கள் வீட்டுடனிருந்த ஒரு கயிற்றுக் கட்டிலில் படுக்கவைத்தோம். காகிதங்களை எரித்துஅந்தப் புகையை அந்த பொந்தருகே காட்டினோம் ஹூஹூம் அது வெளியே வரவே இல்லை.குழந்தைக்குக் காவலாகக் கட்டிலருகேயே இருந்தோம். ஒரு வழியாகப் பொழுது விடிந்தது. அது பொந்திலிருந்து போன அறி குறியே தென் படவில்லை. நாங்கள் இருவரும் நிலைப்படியருகே காவல் காத்தோம் இப்போதும் அவ்வப்போது தன் நாக்கை அது நீட்டியது. என் கையில் ஒரு இரும்புச் சட்டுவமும் ஒரு கழி சாந்தி கையிலுமாக்க் காத்திருந்தது வீண்போகவில்லை அது திடீரென்று வெளியே வந்தது. கையில் இருந்த சட்டுவத்தால் ஒரே போடு அது இரு துண்டாகியது. பார்த்தால் அது ஒரு அரணை.......!(தொடரும்)
இப்போது நினைத்துப் பார்க்க, கடந்த காலங்கள் பெரும்பாலும் நம் கையில் இருந்ததில்லை என்பது தெரியவரும்.
ReplyDeleteகடந்த காலம் மட்டுமல்ல எந்தகாலமும்நம் கையில் இல்லை
Deleteஇவ்வளவும் நினைவு வைத்திருந்து பகிர்வதே பெரிய விஷயம்தான் சார்.
ReplyDeleteஅப்போது இயல்பாக இருந்தவை இப்போது நினைத்துப்பார்த்தால் நாம் எப்படி எல்லாம் கடந்து வந்திருக்கிறோம் என்று பிரமிப்பாக இருக்கும். ஆனால் அந்த எளிய வாழ்க்கை நிறைவாக இருந்திருக்கும்.
வீட்டில் அதுவும் பழைய வீட்டில் பொந்து எல்லாம் இருந்தால் கஷ்டம்தான் சார். அந்தப் பொந்தை கற்கள் வைத்து அடைத்திருக்கலாமோ அல்லது பழைய துணி ஏதேனும் வைத்து...அப்புறம் சிமென்ட் வைத்து அடைத்திருக்கலாமோ என்றும் தோன்றியது
கீதா
அது பற்றி வீட்டு ஓனரிடம் கூறினோ ம்
Deleteநீங்கள் சொல்வது போல சில சம்பவங்கள் அந்தக் காலத்தை நினைவு படுத்துவது புரிகிறது. உதாரணமாக குதிரை வண்டி பயணம். அலுவலக ஏமாற்றங்களை எவ்வளவு கடினத்துடன் ஜீரணித்துக் கொண்டிருந்திருப்பீர்கள் என்றும் புரிகிறது. உங்கள் நண்பன் செய்த தவறை நான் செய்திருக்கிறேன். என் நண்பரிடம் அவர் மகளை விசாரிப்பதாக நினைத்து ஒவ்வொரு குறையும் பெயர் சொல்லி நலம் விசாரித்திருக்கிறேன். அவரும் ஒன்றும் சொன்னதில்லை. நன்றாயிருக்கிறாள் என்று மட்டுமே சொல்வார். ஒருநாள் என் மனைவி மூலம் விஷயம் தெரிந்தபோது வெட்கிப்போனேன்.
ReplyDeleteவீட்டுக்கு வீடு வாசல்படி
ReplyDelete