Monday, August 22, 2022

ஊழல் சில எண்ணங்கள்

 

J⁸

ஊழல்  லஞ்சம்

ஊழல் லஞ்சம்  குறித்து எழுத வேண்டும் என்றுநெடுநாளாக யோசனை இருந்தது ஆனால் எழுதி [பிரயோசனம் இல்லை என்றே தோன்றியது ஊழல் லஞ்சம் என்றால் உயர் மட்டத்தில்தான்  இருக்க வேண்டுமா  நம்மிடையே இருக்கும் பொதுவான குணம்தானே லஞ்சம் என்பது  நம்கலாச்சாரத்திலேயே ஊறிய ஒன்றுதானே கையூட்டு என்பது கடவுளுக்கு கொடுத்தால் அது வேண்டுதல்  மனிதனுக்குக் கொடுத்தால்அது லஞ்சம்  நம்மில்   யார்தான்லஞ்சம் கொடுக்காதவர் எந்த அரசு அலுவலகத்தில்எந்த வேலையாக  வேண்டுமானால் லஞ்சம்கொடுத்துதான் ஆகவேண்டும் கொடுக்க வேண்டிய கட்டாயமில்லைநான்கொடுக்க மாட்டேன்  என்று அடம் பிடித்தால் நம் வேலை நடைபெறாது வெறுமனே அலைகழிக்கப்படுவோம்   இதற்கு பதில்  கொஞ்சம் தண்டம் அழவெ நாம் தயாராய் இருக்கிறோம் பைக் அல்லது கார் ஓட்ட உரிமம் பெறுபவர்கள்  எல்லோருக்கும் தெரிந்தது தான்

 என்பேரனின்   திருமணம்நடந்தது அதற்கு மேரேஜ் சர்டிஃபிகேட் பெற  கட்டணம் ரூ 300 / ஆனால் அது கிடைக்கப்பெற கையுட்டு ரூ 500/  எனக்கு காவேரி தண்ணீர் வர கனெக்‌ஷன்பெற  பலஅண்டுகளுக்கு முன் ரூ 8000/கொடுக்கவேண்டும் என்றனர்  நானும்  அந்தப்பணத்தோடு  அது சார்ந்த அலுவலகத்துக்கு இரண்டு மூன்று முறை அலைந்தேன்   ஒரு வழியாக பணம் பெற ஒப்புக்கொண்டனர்  கையூட்டு வாங்க ஒரு நூதன வழி அறிந்தேன் கைபேசியில் எவ்வளவு பணம் தரர வேண்டும் என்று குற்ப்பிடுகின்றனர் ரூ 8000 உடன்  அவர்களுக்கான பண்மும் சேர்த்து   கைபேசியில் காட்டுகின்றனர் அதை செலுத்த நான் ஒப்புக்கொண்டபிறகே நமக்கு ரசீதுக்கான வழிகள்பிறக்கின்றன

 2011 ம் ஆண்டு அன்னா ஹசாரே ஒரு மாபெரும் உண்ணா விரதப் போராட்டம்நடத்தினார் லோக் ஆயுக்த  மற்றும் லோக்பால்  போன்ற அமைப்புகள் கோரி யது  அந்தப் போராட்டம் அந்தப் போராட்டம்குறித்து அறிந்த பலரும்   அதற்கு ஆதரவு தெரிவித்தனர் உயர்மட்டத்து ல்ஞ்ச லாவண்யங்கள் மட்டுமே முன்   நிறுத்தப்பட்டன ஆனால் தினசரி கண்முன்னே நடந்தேறும் கைய்யூட்டுகளை  விசாரிக்க யாராவது  புகார் கொடுக்க வேண்டுமாம்   கடவுளுக்கே லஞ்சம்கொடுக்கும் நாம்  இம்மாதிரி சிறிய குற்றங்களுக்கா புகார்கொடுப்போம்நம்காரியம் நடக்க  நாம்கொடுத்துதான்  தீரவேண்டும் வாழ்கையில் இதெல்லாம் சகஜம் என்று ஏற்றுக் கொள்வோம்

பெரிய அளவில் பணம் பெறுபவர்களையே நாம் குறி வைக்கிறோம்   அதுதான்  நம்கண்களுக்கு  குற்றமாகத் தெரிந்தது  

நாம் தினப்படி காணும்லஞ்சங்கள் பெரிதாய்  தெரிவதில்லை உயர் அதிகாரிகளே  ஊழல் செய்கிறார்களென்று சமாதானமடைவோம் சிறிய அளவிலோ பெரிய அளவிலோ  நடந்தாலும் திருட்டு என்பது திருட்டுதான் அதேபோல் எந்த அளவில்  ஆனாலும்லஞ்சம் லஞ்சமே 

                      ‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’

🔵உலகத்திலேயே சிறந்த ஜோடி
செருப்புதான்
ஒன்றை பிரிந்தால் மற்றொன்று
வாழவே வாழாது

                    ‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’


🔴
மாமா பொண்ணும், உப்புமாவும் ஒன்னு!! வேற எதுவுமே கிடைக்காத பட்சத்துல நம்மளோட தலையில கட்டப்படும்!!


🔵
எல்லா பெண்களையும் விசிலடித்து திரும்பி பார்க்க வைத்தாலும் செருப்படி வாங்காத ஒரே ஜீவன் குக்கர் தான்..!!

                     ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;


🔴
இந்த உலகத்தில் என்னையும் ஒரு மனிதனாக மதித்து பொன்னாடை போர்த்தும் ஒரே நபர்.. சலூன் கடைக்காரர் மட்டுமே.. "நீங்க வெட்டுங்க பாஸ்..

                                      ‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’


 

12 comments:

  1. ஜோக்குகள் நன்றாக உள்ளன. அதிலும் மாமா பெண்ணையும் உப்புமாவையும் ஒப்பிட்டதும், சலூன்காரர் பொன்னாடை போர்த்துவதும் டாப். 
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. மெயின் பாயிண்டை தொடொவில்லையே

      Delete
  2. நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
    அன்றே ஒழிய விடல்

    ReplyDelete
  3. இறைவனுக்கு சிதறு தேங்காய் அடித்தோமே அதுதான் முதல் லஞ்சம் ஐயா.

    நகைச்சுவைகள் அருமை

    ReplyDelete
    Replies
    1. லஞ்சம் பலவிதம்அதில் சிதறு தேங்காய் ஒரு விதம்

      Delete
  4. ஜோக்ஸ் ரசிக்க வைத்தன.

    நீங்கள் சிறிய லஞ்சங்களைப் பற்றி பேசுகிறீர்கள்.  நான் செய்தித்தாள்களில் ஆயிரம் ரூபாய், ஐயாயிரம் ரூபாய், நூறு ரூபாய் லஞ்சம் வாங்கி மாட்டியவர்கள் பற்றிய செய்தியைப் படிக்கும்போது கோடிகோடியாக அடித்தவர்கள் பற்றி மட்டும் பெருமையாகவே செய்தி போடுகிறார்களே என்று தோன்றும்.

    ReplyDelete
    Replies
    1. நான்லஞ்சம்கடவுள் வழிபாட்டில்லஞ்சம் துவங்கும் நம் கலாச்சார்த்தில் துவங்குகிறதுஎன்றேன்எங்கும் லஞ்சத்தை நியாயப் படுத்தவில்லைசிறியது பெரியது உண்டா என்ன

      Delete
  5. ஜோக்ஸ் சிரிக்க வைத்தன.

    லைசென்ஸ், முதல் இறப்புச் சான்றிதழ் வரை கையூட்டு இல்லாமல் எதுவும் இல்லை. இப்போதெல்லாம் ஆன்லைனில் வாங்கலாம் என்று சொல்கிறார்கள். தெரியவில்லை. ஆன்லைன் என்றால் கையூட்டு இல்லாமல் பெற்றுவிடலாம் என்று நினைக்கிறேன்.

    ஆனால் வெளியில் இப்படி ஆன்லைனில் பெற்றுத் தரும் முகவர்கள் நிறைய வந்துவிட்டார்கள் இப்போது கண்டிப்பாக செர்வீஸ் சார்ஜ் இருக்கும்

    இதெல்லாம் தம்மாத்துண்டு. கொள்ளை அடிப்பவர்கள் நம் முன்னேயே உலாவுகிறார்கள் ஆனால் மாலை மரியாதையுடன்!!! மறைமுகமாக நம் வரிப்பணம் முழுவதும் கொள்ளையடிக்கப்படுகிறதே!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. கோலம் தடுக்கு கதை ஆகு ம்

      Delete