.மடேஸ்நானமா இல்லை மடஸ்நானமா.?
----------------------------------------------------------
கர்நாடகத்தில் ஏறத்தாழ எல்லா பிரசித்தி பெற்ற கோயில்களுக்கும் சென்றிருக்கிறோம். தர்மஸ்தலா மல்லிகார்ஜுனா ஆலயம். ஹொரநாடு அன்னபூரணி ஆலயம், சிருங்கேரி சாரதா தேவி கோயில், உடுப்பி கிருஷ்ணர் கோயில், கொல்லூர் மூகாம்பிகை ஆலயம், குக்கே சுப்பிரமணியா கோயில்போன்றவற்றில் அன்னதானம் பிரசித்தம். பலரும் ஆண்டவனின் பிரசாதமாக உணவை உட்கொள்ளுகின்றனர். எல்லோருக்கும் உணவு என்ற மட்டில் மகிழ்ச்சியளித்தாலும் உணவு பரிமாறப் படுவதில் பேதம் காட்டுகிறார்கள். எல்லா இடத்திலும் அந்த பேதம் கடைபிடிக்கப் படுகிறதா என்று அனுபவத்தில் சொல்ல முடியாவிட்டாலும், குக்கே சுப்பிரமணியாவில் அதை நேரிலே பார்த்தேன். பிராமணர்களுக்கு தனி பந்தி .பிராமணன் என்று நிலை நாட்ட வேட்டியணிந்து பூணூல் இருக்கவேண்டும். எனக்கு இந்த வித்தியாசம் உடன்பாடில்லாததால் அங்கு உணவருந்துவதைத் தவிர்த்தோம். எங்களுடன் வந்த அந்தண நண்பர்கள், உணவருந்தி வந்தனர்.
இதையெல்லாம் மீறி அங்கு நடைமுறையில் இருக்கும் இன்னொரு வழக்கம்/ சடங்கு மிகவும் வருத்த மளிக்கிறது. அப்படி பிராமணர்கள் உண்டு முடித்த இலைகளின் மேல் அங்கப் பிரதட்சிணம்போல் உருண்டு வேண்டுதல்கள் நிறை வேற்றுகிறார்கள். அதற்கு மடே ஸ்நானா என்று பெயர். இதனை எதிர்த்துக் குரல் எழுப்பி நீதிமன்றம் வரை போய் உயர் நீதி மன்றம் தடை விதித்தது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்து இப்போது உச்ச நீதிமன்றம் அந்தத் தடையை நீக்கி விட்டது. இனி என்ன .? எல்லோரும் பிராமணர் உண்ட எச்சில் இலையில் தாராளமாக உருண்டு பிரார்த்தனைகளை நிறைவேற்றலாம்.
நம்பிக்கை என்னும் பெயரில் என்னென்னவோ நடக்கிறது. மனசு வலிக்கிறது. உயர்வு தாழ்வு பற்றி எழுதுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணிய எனக்கு செய்தித் தாள்களில் படித்தபோது மனசில் பட்டதைச் சொல்லாமல் இருக்கமுடியவில்லை இந்த கதியில் நாம் முன்னேறுவது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கும். குருட்டு நம்பிக்கைகளை வளர விட்டு வேற்றுமை காட்டும் பழக்கங்களை தொடர்வதில் யாருக்கோ பலன் இருக்க வேண்டும்.இந்த மாதிரி கோயில்களில் உணவு அளிப்பதில் வேற்றுமை காண்பிக்கும் போது நெஞ்சில் நியாய நிலை கொண்டவர் அதை முற்றிலும் புறக்கணிக்க வேண்டாமா.? ஆண்டவன் பெயரில், அவனிருக்கும் இடத்தில் வித்தியாசம் பாராட்டுவது பலரது கீழான எண்ணங்களின் வெளிப்பாடல்லவா. வர்ணாசிரம தர்மத்தின் (?) மிச்ச மீதிகளைக் கண்டு பொங்கி எழ வேண்டாமா. ? என் பதிவுகளுக்கு ஆதரவாகப் பின்னூட்டங்கள் இல்லாதிருப்பது , நம்மில் பலரும் மாறவில்லையோ, அல்லது மாற விரும்பவில்லையோ என்பதைத்தானே காட்டுகிறது. .உச்ச நீதிமன்றமே இந்த நம்பிக்கைகளில் தலையிடுவதில்லை என்பது இன்னும் வருந்தத்தக்
தானம் என்பது இல்லாதவருக்கு ஈயப்படுவது. அன்னதானம் சாப்பிடுபவர்கள் யாரும் இல்லாதவர் இல்லை. பின் ஏன் இந்த இலவசத்திற்கு கூடுகிறார்கள் என்று புரியவில்லை. இது ஏன் சொந்தக் கருத்து.
ReplyDeleteJayakumar
இதனை நானும் யோசித்திருக்கிறேன். ஏழைக்கு ஒரு இட்லி வாங்கிக்கொடுப்பதால் வரும் புண்ணியம், இருப்பவருக்கு உணவிடுவதால் கிடைக்காது. தானம் பெற ஒரு தகுதி வேண்டும். என்னிடம் காசு இருந்து, ஜெயகுமார் சார், அவர் வீட்டிற்கு வருபவர்களுக்கெல்லாம் 100 ரூபாய் கொடுக்கிறார் என்று இருந்தால், நானும் போய் 100 ரூ பெற்றுக்கொண்டால், அது என் கணக்கில் கடன் என்று சேரும், ஜெயகுமார் சாருக்கு பத்துப் பைசா பிரயோசனம் கிடையாது. ஆனால் ஏதிலிக்கு 50 ரூ கொடுத்தாலும் அது நமக்குப் புண்ணியமாகச் சேரும். இது என் நம்பிக்கை. பாத்திரம் அறிந்து பிச்சையிடு.
Deleteஜெகே அண்ணா உங்கள் கருத்தை டிட்டோ செய்கிறேன்.
Deleteகீதா
அந்தக் காலத்தில் நீண்ட தூரம் யாத்திரை செல்லும் பயணிகளுக்கு வசதியான ஹோட்டல் போன்ற அமைப்புகள் இருந்ததில்லை. சத்திரங்கள், இளைப்பாறும் மண்டபங்கள், வீடுகளின் திண்ணைகள் முதலியவையே தங்கும் இடங்களாக பயன் பட்டன. சாப்பாடு? இப்படிப்பட்ட கோயில்களில் கிடைக்கும் விலையில்லா அன்னமே அவர்களுக்கு பசியாற்ற உதவியது. ஆக இது தானம் என்பதில்லை. அவரவர் சக்திக்கேற்ப விரும்பியதைக் கோயிலுக்குத் தரலாம். ஒன்றும் தராமலும் இருக்கலாம்.
Deleteஇங்கு கேரளத்தில் ஒரு வழிபாடு என்ற பெயரில் "வெள்ளை நைவேத்தியம்" என்று பணம் கட்டினால் மதியம் உச்ச பூஜையில் நைவேத்தியம் ஆக படைக்கப் பட்ட வெள்ளை சோறு கிடைக்கும். இப்படி ஒரு ஏற்பாடு ஒரு சில கோயில்களில் உண்டு.
Jayakumar
பதிவின் கருத்தே அன்னதானம்பற்றியதல்லஎச்சி இலையில் உருளுவதுபற்றியதாகும்
Deleteவர்ணாசிரம தர்மம் மனித குலத்தை அழிக்கும்...
ReplyDeleteஇக்கருத்து பலரும் ஏற்க மாட்டார்கள்
Delete//பிராமணர்களுக்கு தனி பந்தி .பிராமணன் என்று நிலை நாட்ட வேட்டியணிந்து பூணூல் இருக்கவேண்டும். எனக்கு இந்த வித்தியாசம் உடன்பாடில்லாததால் அங்கு உணவருந்துவதைத் தவிர்த்தோம்.// - உங்கள் உணர்வைப் புரிந்துகொள்ள முடிகிறது. உங்களுக்கு நியமம் எதுவும் கிடையாததால், அந்த அந்த தர்மத்துக்குள்ள கடமைகள், பழக்கங்களைப் பின்பற்றாததான் உங்களுக்கு இந்த வித்தியாசங்கள் புரியாது. பிறப்பால் பிராமணன், ஆனால் அதற்குரிய எந்தவித கடமைகளோ பழக்கவழக்கங்களோ உங்களுக்குத் தெரியாது, அதன்படி நடந்ததும் இல்லை. அதனால் அது தவறு என்று எண்ணுவதுதான் தவறு.
ReplyDeleteசாப்பிட்ட இலையில் அங்கப்பிரதட்சணம் செய்வது - இதை நான் என் சிறு வயதில் திருக்கோஷ்டியூரில் ஒரு திருவிழாவில் கண்டிருக்கிறேன். எனக்கு இது மூடநம்பிக்கை என்றுதான் தோன்றுகிறது. அல்லது ஏதேனும் ஒரு பழக்கம்/நம்பிக்கை, திரிந்து இப்படி ஆகிவிட்டதா என்று தெரியவில்லை. திருக்கோஷ்டியூரில் பிறகு அந்தப் பழக்கம் இல்லை. உடுபி யில் இன்னும் அந்த வழக்கம் இருக்கிறது என்று படித்திருக்கிறேன்.
ReplyDeleteஇதைச் செய்பவர்கள், அவர்கள் நம்பிக்கையின்படி செய்கிறார்கள். அதனைக் குறைகூற நாம் யார்? என்பது என் அபிப்ராயம்
Deleteஎங்கள் தளத்திலும் இதைப் பற்றிய ஒரு பதிவு துளசி எழுதியிருக்கிறார்.
ReplyDeleteஇப்பழக்கம் பற்றி அறிந்த போது (முதன் முறையாக) எனக்கு வேதனை அளித்தது. என் தனிப்பட்டக் கருத்து இது உடன்பாடற்ற செயல்.
கீதா
நாம்யார் என்று எண்ணுவதால்ஏற்படும்பிழையே இம்மாதிரிபழக்கங்கள்
Delete2012, 2015 என்று அவ்வப்போது இந்தப் பதிவையும் மீள்பதிவு செய்து வருகிறீர்கள். "எம்மா செய்வது... இன்னும் அவர்கள் மாறவில்லையே என்பீர்கள்! இங்கு நமக்குள் பேசிக்கொள்வதால் மாறுதல் வராது. மீள் மீள் பதிவுகளில் சொல்லபப்ட்டிருக்கும் விஷயத்தைப் பொறுத்த வரை நான் அதைச் செய்ய மாட்டேன். அப்படிச் செய்ய என்று மற்றவர்களால் கட்டாயப்படுத்தப்படாத / மிரட்டப்படாத வரை செய்பவர்களின் நம்பிக்கையில் தலையிட மாட்டேன்.
ReplyDeleteயாரும் யாரையும்மிரட்ட முடியாது
Deleteஎன்ன செய்வது மீள் பதிவுமகள் இப்போதெல்லாம் தவிர்க்க ,உமுடிவதில்லைபெரும் பாலும் மீள்பதிவுகளே
Deleteஅன்னதானம் என்பது இல்லாதவருக்கு அளிக்கப்பட வேண்டும். ஆண்டவன் சந்நிதானத்தில் வித்தியாசம் பார்ப்பது கூடாது.
ReplyDeleteபிறக்கும் பொழுது யாரும் எந்த நம்பிக்கையுடன் பிறப்பது இல்லை. நம்பிக்கை என்பது பிறப்புக்குப் பிறகு ஊட்டப்படுகிறது. நீ தெண்டம், மட்டம், நான் உயர்வானவன் போன்ற எண்ணங்களும் தானே வருவதில்லை. எனக்கு சாதகமானவற்றை, அடுத்தவர்கள் ஏமாந்தாலும் நான் ஏன் அதை மாற்ற விரும்பவேண்டும், அவர்கள் என்னை சார்ந்தவர்கள் கிடையாது என்று நினைக்காத உங்களை மதிக்கிறேன்.
ReplyDeleteஅறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை.
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.
அன்பில்லாத எந்த சட்டமும், அறமும், நம்பிக்கையும் என்பிலதனை வெயில்போலக் காயும்.
வெகு நாட்கலுக்குப்பின் உஙகளது பின்னூட்டம் ,மகிழ்ச்சி தருகிறது
Deletehttps://www.facebook.com/watch?v=1138653689989810
ReplyDeleteஎண்னால் பெஸ்புக் காண இயலாது என க்கு அக்கவுன் ஈள்ளாஈ
ReplyDeleteதங்கள் பதிவுகளை தொடர்ந்து வாசிக்கிறேன். ஆனால் கருத்து தெரிவிக்கவில்லை. இந்தப் பதிவுக்கு என்னுடைய எண்ணத்தை எழுத விரும்பினேன். பெஸ்புக் அக்கவுண்ட் தேவையில்லை. இந்த லிங்க்கை பேஸ்ட் செய்யுங்கள், போதும்.
ReplyDelete