அரசியல் ஆலோசனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் ஆலோசனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 30 மே, 2016

செல்வி ஜெயலலிதாவுக்கு ஒரு திறந்த மடல்


                                 செல்வி ஜெயலலிதாவுக்கு ஒரு திறந்த மடல்
                                    =======================================
வெற்றிக்கனி பறித்த முதல்வர்  செல்வி ஜெயலலிதா 
மதிப்பிற்குரிய முதலமைச்சர் மேடம் ஜெய லலிதாவுக்கு  முதலில் என் பாராட்டுக்களையும்  வாழ்த்துகளையும்  தெரிவித்துக் கொள்கிறேன் ஒரு மாநில முதலமைச்சருக்கு ஒரு nondescript personality   கடிதம் எழுதுவது சரியா என்று  நினைக்க மாட்டீர்கள் என்று தெரியும் மக்களின் மனதில் உங்களுக்கென்று ஒரு இடம் பிடித்துள்ளீர்கள்  என்பது தெரிகிறது. இருந்தாலும் எல்லோர் மனதிலும் அல்ல என்பதும் உங்களுக்குத் தெரியும் பல இடங்களிலும்  வெற்றி பெற்று விட்டீர்கள் என்பது சட்டப்படி உண்மையானாலும்  பெரும்பான்மையினர் மனதில் அந்த இடம் இருக்கிறதா என்று ஆராயாமல் இருந்திருக்க மாட்டீர்கள் என்பதும் தெரியும் வாக்களித்தவர்களில் ஐம்பது சதவீதத்துக்கும் மேல் உங்கள் கட்சிக்கு ஓட்டளித்திருந்தால் பெரும்பான்மையினரின் நிஜமான ஆதரவு இருப்பதாகக் கொள்ளலாம் இதையெல்லாம் நான்  சொல்லித்தான்  உங்களுக்குத் தெரிய வேண்டும் என்றில்லை. பல தேர்தல்களைச் சந்தித்த உங்களுக்கு தேர்தலின்  உண்மை நிலை தெரியாமலா இருக்கும் . இருந்தாலும் உங்கள் மேல் மரியாதை கொண்டவன்  என்ற முறையிலும்  ஒரு மூத்த குடிமகன் என்ற  முறையிலும்  என்  கருத்துக்கள் சிலவற்றை முன்  வைப்பது தவறாகாது என்று தோன்றுவதாலும் இதைப் பதிக்கிறேன்
பொறுப்பு ஏற்றுக் கொண்ட வுடன் நீங்கள் அறிவித்திருக்கும்  500 டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லும் உத்தரவு பாராட்டுக்குரியது இதுவே கூடிய சீக்கிரத்தில் பூரண மது விலக்குக்கு அடிகோலாய் அமைய வேண்டுகிறேன்
உங்கள் ஆட்சி விலையில்லா இலவசங்களுக்குப் பெயர் போனது இத்தனை இலவசங்களுக்கும்  நிதி ஆதாரத்தை  டாஸ்மாக் விற்பனையிலிருந்தே பெற்றீர்கள் என்று ஒரு வலுவான கருத்து இருக்கிறது இல்லை என்றால் இலவசங்களுக்கான நிதி ஆதாரங்கள்   transparent  ஆக இருக்க வேண்டும் மின்சார வினியோகமே தடை இல்லாமல் இல்லை என்னும் நிலையில் இப்போது முதல் நூறு யூனிட்டுகள் மின்சாரம் இலவசம் ( உங்கள் மொழியில் விலையில்லாதது) என்னும் அறிவிப்பும்  இன்னும் நிறையக் கேள்விகளைக் கேட்க வைக்கிறது யாருமே கேள்வி கேட்க முடியாதபடி நிர்வாகம் திறந்த  முறையில் இருக்க வேண்டும் என்பதும்  என்  வேண்டுகோள்
நான் இந்த மடலை எழுதக் காரணமே  உங்கள் ஆட்சியில் இப்போதிருக்கும் ஏற்ற தாழ்வுகள் மறைய வேண்டும் என்னும் விருப்பமும்  அதற்காக என் ஒரு ஆலோசனையும்  தான்  .
உயர்வு தாழ்வுகளுக்குக் காரணம் என்னைப் பொறுத்தவரை இப்போதிருக்கும் நிலையில் நமக்குள் ஊன்றி விட்ட  சமுதாய சித்தாந்தங்களேயேகும்  இவை நம்  இரத்ததில் ஊறி விட்டது சாதிமத வேறுபாடுகள் நம் கலாச்சாரவிளைவுகளே  இதற்கு யாரையும் குறை சொல்லாமல் இவற்றை நீக்குவது எப்படி என்று சிந்தித்தால் இனிவரும்  புதிய தலைமுறையினரால்தான் சாத்தியமாகும் இதற்கான ஏற்பாடுகள் கல்வி சாலைகளிலிருந்தே தொடங்கப் பட வேண்டும் ஆனால் இப்போதெல்லாம் கல்வியுமே ஏற்ற தாழ்வுக்கு வித்தூன்றுவது தெரியும் ஏழைக்கல்வி பணக்காரக் கல்வி என்று தலை விரித்தாடுகிறது  எனக்குத் தெரியும்  நீங்கள் அசாதாதாரணமாகச் சிந்திக்கக் கூடியவர் என்று.-. இரத்தத்தில் ஊட்டிவளர்க்கப்படும்  பிரிவினை எண்ணங்களைப் போக்க கல்விக் கூடமே சிறந்த இடமாகும் இதற்கான தீர்வாக நான்  சிந்தித்ததை முன்  மொழிகிறேன் பள்ளிப்படிப்பு அரசுடைமை ஆக்கப் படவேண்டும்   
பள்ளியிறுதி வரை கல்வி எல்லோருக்கும்  கட்டாயமாக்கப் பட வேண்டும் எந்தப் பாகுபாடும் இல்லாத சமமான கல்வி வழங்க அவை எல்லோருக்கும்  இலவசமாக இருக்க வேண்டும் இதில் பணம் படைத்தவன் இல்லாதவன் என்னும்  வேற்றுமை கூடாது  பள்ளியில் படிக்கும் சிறார்களும் அனைவரும்  சமம் என்று எண்ண  அத்தனை பேருக்கும்  மதிய உணவும் சீருடைகளும்  கட்டாயமாக இலவசமாக இருக்க வேண்டும் பாடப்புத்தகங்களும்  இன்ன பிறவும்  அனைவருக்கும்  இலவசமாக இருக்க வேண்டும்
 இந்நிலை தொடர்ந்தால் சின்னஞ்சிறியவர்கள்  மனதில் உயர்வு தாழ்வு எண்ணம்வராது நாளாவட்டத்தில் சிறார்கள் மனதில் அதாவது ஒரு புதிய தலை முறை வேறுபாடுகள் பற்றி சிந்திக்காமல் வளருவார்கள் இவர்களே நாளை நம் நாட்டின் தலைவிதியை நிர்ணயிப்பவர்கள் ஆவார்கள்
 இதற்கு எதிர்ப்பு இருக்காதா? நிச்சயம்  இருக்கும் ஆனால் இவற்றை சமாளிக்கும் திறன்  உங்களுக்கு இருப்பது தெரிந்ததே பணம் படைத்தவர்களும்  கல்வியை வியாபாரமாகக் கையாள்பவர்களும் கடும் எதிர்ப்பினைத் தெரிவிப்பார்கள் எல்லா செய்கைகளும்  திறந்த மனதோடு செய்தால் நிச்சயம் பலன்  தரும்
மாநில அரசின் பல செயல் பாடுகளில்  எனக்கு கருத்து வேற்றுமை இருந்தாலும் உங்கள் திறமையில் நம்பிக்கை இருக்கிறது இலவசங்கள் எனக்கு ஏற்புடையதல்ல. ஆனால் கல்வியில் இலவசம் நாட்டின் தலைவிதியை மாற்றும் என்று நம்புகிறேன் பசித்திருப்பவனுக்கு மீனைக் கொடுப்பதை விட மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பதே சிறந்தது என்று நினைப்பவன்  நான் தவறுகளுக்கான  ஆதார காரணங்களைக் களைய வேண்டும்  என்று நம்புபவன் அதற்கான மன உறுதியும் தன்னம்பிக்கையும் உங்களிடம் இருப்பது தெரிந்தே இந்த மடலை அனுப்புகிறேன்
உங்களுக்கு இந்த மடலை அனுப்புவதால்  நிர்வாகத்தில் எங்காவது ஒரு புதிய சிந்தனை உதித்தால் அதுவே பலனைப் பெற்றுத்தரும் 
அ இ அதிமுகவில் உங்களுக்குப் பின் இரண்டாம் நிலைத் தலைவர்கள் இல்லை. ஆலமரம் போல் அனைவரையும் உங்கள்  நிழலிலேயே  இருத்தி இருக்கிறீர்கள் அவர்களும் வேர் ஊன்றி வளர வேண்டாமா இதையும்  கருத்தில் கொள்ள வேண்டுகிறேன்


( பம் தவி---- இணையத்துக்கு  நன்றி)