தொடர் பயணம் நாகர் கோவில் -2
--------------------------------------------------
சுற்றுலாவின் கடைசி நாள் நாகர் கோவிலிலிருந்து
திருச்செந்தூர் செல்லத் திட்டம். காலையில் எழுந்ததும் ஒரு புறம் மகிழ்ச்சி, ஒரு
புறம் இன்றுடன் சுற்றுலா முடியப் போவது எண்ணி சற்றே வருத்தம் காலையில் காஃபி
குடித்து பின் திருச் செந்தூர் நோக்கிப் புறப்பட்டோம் சற்றே நீண்ட பயணம் முதலில்
செந்தூர் சென்றதும் காலை உணவு உண்டு பின் சுவாமி தரிசனம்செய்யக் குறை ஏதும் இல்லை.
ஆங்காங்குதான் அதற்கான ஆட்கள் இருக்கிறார்களே சிறப்பு தரிசனம் என்று ஆளுக்கு
ரூபாய் நூறு என்றும் அழைத்துச் செல்ல அவருக்கு ரூபாய் நானூறு என்று மொத்தமாக
ரூபாய் 1500-/ கை மாறியது அதிக சிரமம் இல்லாமல் முருகனை அருகில் இருந்து
கண்டோம் அங்கிருந்து பஞ்ச லிங்க தரிசனம் நான் சில முறை செந்தூர் சென்றிருந்தாலும் இந்த
பஞ்ச லிங்க தரிசனம் இதுவே முதல் தடவை
குனிந்து பணிவாகச் செல்ல என்றே இருந்த வழி. அங்கே ஒருவர் தெய்வத்தின் முன்னால் நின்று கொண்டு கதறி அழுது கொண்டிருந்தார் அவருக்கு என்ன குறையோ மனம் விட்டுக் குறைகளைக் கூறி மனப் பாரத்தைக்
குறைத்துக் கொண்டிருந்தார் அதில் ஒரு மன சமாதானம் பாரம் குறைக்க இதுவும்
வழிதான் சக மனிதனிடம் சொல்லிக் குறை
பட்டுக் கொண்டால் நிம்மதி கிடைப்பதில்லைஅவனும்
காது கொடுத்துக் கேட்பது சந்தேகம் கடவுளிடம் கொட்டித் தீர்த்தால் ஒரு நிம்மதி.
| திருச்செந்தூர் கோவில் முகப்பு |
கடலில் குளித்தபின் நல்ல நீரில் நீராட என்றே அங்கே நாழிக் கிணறு என்று இருக்கிறது அதற்கும் ஏகப்பட்ட கூட்டம் எங்களில் யாரும் கடலில் குளிக்க வில்லையாதலால் நாழிக்கிணறை நாட வேண்டிய அவசியமிருக்கவில்லை. அங்கே என்ன எதிர்பார்க்கலாம் என்று கூறியதே அனைவருக்கும் போதுமானதாக இருந்தது.
| நாழிக் கிணறு காண ஆவலில்லாமல் ( போகும் வழியில் ) |
| செந்தூர்க் கோவில் முன் |
திருச்செந்தூர் கடல் ஒரு காட்சி
மேய்ப்பனுக்கு நன்றி காணொளி
மறுநாள் காலை பத்து மணி அளவில் ரயில் ஏறி
மறுநாள் 27-ம் தேதி ஊர்வந்து சேர்ந்தோம்
இப்பதிவுகளின் மூலம் மீண்டுமொருமுறை பயணப்பட்ட உணர்வுடன்முடிக்கிறேன்
| சுடிதார் உடையில் பெண்கள் |
( முற்றும் )