மறக்க மனம் கூட வில்லையே
--------------------------------------------------
என்னால் இன்னமும் நம்ப முடியவில்லை தவறாக ஏதும் எழுத வில்லையே டாக்டர் கந்தசாமி மறைந்து விட்டாரா நான் தெரிந்துகொண்ட செய்தி தவறில்லையே
யாராவது
ஊர்ஜிதப்படுத்துங்களேன் ப்ளீஸ்,,1
அன்னாரது நினைவுகள் நிறையவே வருகின்றன பதிவுலகில் என்முதல் நண்பரே
அவர்தானிருக்கும் மூன்று நான்கு முறை சந்தித்து இருப்பேன் என்னை ஒரு பிரபலவலைப்பதிவராக ஆக்க வேண்டுமா என்று ஒரு முறை கேட்டிருந்தார் நான் தான் என்னை
என் எழுத்து மூலம்தெரியப்படுவதையே நான்விரும்புகிறேன்
என்று பதில் அளித்தேன், சுருங்க அவர்பற்றி சொல்வதானால் ஒருநல்ல எளிய மனிதர்
அவர்
என் வீட்டுக்கு இரண்டு முறை
வந்திருக்கிறார் ஒரு முறைஅவரது மனைவியுடன்
வந்தார்அவர் பற்றி ஓரிரு பதிவுகள் எழுதி இருகிறேன்மதுரை வலைப்பதிவர்
கூட்டத்துக்கு வரவில்லை ஏதோகாரணம்
கூறினார் என் வீட்டில் இரவு தங்க
விரும்பவில்லை அவரதுகுறட்டை தான் காரணம்
என்றார் அவர் வந்தபோது சொன்ன சில
வார்த்தைகள் எனக்குள் ஆழப்படிந்து விட்டது
உலகில் மூன்று காரியங்களை மிசசம் மீதி இல்லாமல் முடித்து விட வே ண்டும் முதலில் ஒருவருக்குண்டான கடமைகள் .இரண்டாவது ஒருவர் பட்ட கடன் .மூன்றாவது நெருப்பை அணைத்தல் நான்காவதாக ஒன்றும் சொன்னார் .
கர்நாடக
சங்கீதத்தில் ஈடுபாடுள்ளவர்பல பாடல்களை தரமிறக்கி வைத்தவர் ஒரு சங்கோஜியும் கூட
என் வீட்டுக்கு வந்திருந்தபோது என்மனைவி பிசி பேளா ஹுளி அன்னா சமைத்திருந்தார்
சாப்பாட்டின் அளவு குறைந்து இருப்பது பார்த்துஅவருக்கு பிடிக்கவில்லையோ என்று மனைவி நினைத்தார் கோவை சென்றபின் எழுதி
இருந்தார் உணவை மிகவும் ரசித்ததாகவும் மரியாதை
நிமித்தம் இன்னும் கேட்டு சாப்பிட வில்லை என்றும்
கூறி இருந்தார்
புதுக்கோட்டை
வலைபதிவர் மாநாட்டை ப்பற்றி நான் எழுதியபதிவில் சில குரங்குகள்வரிசையாக உண்பதுபோல் ஒரு படம்
வெளியிட்டு ப் பதிவுக்கும் படத்துக்கும் சம்பந்தம் இல்லை என்றும் எழுதி இருந்தேன் அந்தப்படத்தை நீக்கச்சொல்லி பலரும் கேட்டார்கள் காந்தசாமி அவர்கள் எழுதியபின் நீக்கினேன் அவர்
நினைவுகள் ஏராளம் சில படங்களை பகிர்கிறேன்
![]() |
எந்தஞ்சாவூர் ஓவியம் நினைவுக்காக |
![]() |
நானெழுதிய நூல் பரிசாக |
![]() |
அவரை ஒரு கோவிலுக்கு கூட்டிச் சென்றபோது |
![]() |
அங்கிருந்த காயத்திரி சிலை முன் |
![]() |
கீதோபதேசம் |
கந்தசாமி தம்பதியருடன் நான் |
கந்தசாமி தம்பதியருடன் என் மனைவி |
புதுக்கோட்டை சந்திப்பில் ஒரு காணொளி
என் போட்டோக்களுக்கு விளம்பரமும் கொடுத்து விட்டார். அதற்கு அவருக்கு நன்றி.