Just wondering
--------------------
ஒரு விஷயம் என்னை
ஆச்சரியத்துடன் சிந்திக்க வைக்கும். இப்பூவுலகில் கோடானுகோடி மக்கள் ஆண் பெண்
என்று இருக்கிறார்கள். உயரமானவர்கள், குட்டையானவர்கள்,கட்டையானவர்கள்,
ஒல்லியானவர்கள், சிவந்தவர்கள், கருத்தவர்கள், மாநிறத்தவர் என்று பல இடங்களில்
பலவிதமாக வாழ்பவர்கள். இவர்கள் எல்லோருக்கும் ஆணுக்குப் பெண் என்று ஜோடிகள்
இருக்கின்றன. 90% மேலானவர்கள் திருமணம் செய்து கொண்டு அவரவர் வம்ச விருத்தியில்
ஈடுபடுகின்றனர். இதில் ஆச்சரியப் படுவதற்கும் சிந்திப்பதற்கும் என்ன இருக்கிறது
என்றுதான் தோன்றும். இந்த ஜோடி சேர்வதுதான் என்னை ஆச்சரியப் படுத்துகிறது. ஒவ்வொருவருக்கும்
அவருடைய ஜோடி பற்றிய எண்ணங்கள்/கனவுகள் நிறைவேறுகிறதா.?சமூகத்தில் எத்தனையோ பொருத்தங்கள்
பார்க்கப் பட்டு திருமணங்கள் நடைபெறுகின்றன. ஒரு மூன்றாம் மனிதனாய் இருந்து இந்த
ஜோடிகளைப் பார்க்கும்போது ,அவரவர் எதிர்பார்ப்புகள்தான் என்ன, அவை எல்லாம் ஈடேறி
விடுகிறதா, என்றெல்லாம் சமயங்களில் நான் நினைப்பதுண்டு.
எனக்கு நெருங்கிய ஒரு உறவினர். நன்றாகப் படித்தவர். இப்போது
சினிமாக்களில் வரும் ஹீரோக்களை விட லட்சணமாகவும் அழகாகவும் இருப்பார். அவருக்குத்
திருமணம் செய்வது குறித்து முயற்சிகள் பல எடுக்கப் பட்டன. அவர் ஒரு விஷயத்தில்
தீர்மானமாய் இருந்தார். அவருடைய கனவுக்கன்னியை முடிவாகத் தேர்ந்தெடுக்கும் உரிமை
அவருக்கே என்றார். அவர் குடும்பத்தில் இதற்கு எதிர்ப்பு இருக்கவில்லை. பெரியவர்கள்
எல்லாப் பொருத்தங்களும் பார்த்து பெண்ணைக் காண்பிப்பார்கள். இவர் முறைப்படி பெண்
காணச் செல்வார். பலதடவை ,பல பெண்களைப் பார்த்தும் எதுவும் தோதாக அமையவில்லை. இவர்
ஒவ்வொரு பெண்ணையும் பார்க்கப் போகும்போது, பெண்ணுக்கு மதிப்பெண் போடுவார்( male chauvinism ?).
குறைந்தது 60 விழுக்காடாவது பெண் எடுக்க வேண்டும் என்பதே இவரது எதிர்பார்ப்பு . உயரம்
நிறம், படிப்பு, அழகு என்று பல பிரிவுகளுக்கும் மதிப் பெண் போடுவார். சாதாரணத்
தேர்வுக்கான மதிப்பெண்கூட அவரிடமிருந்து பெண்களால் வாங்க முடியவில்லை. அநேகமாக
எல்லோரும் சோர்ந்து போனார்கள். இவருக்கும் தன் கட் ஆஃப் மார்க் கூடுதலோ என்று ஐயம்
வந்து விட்டது. எட்டு பத்து பெண்களை பார்த்தபிறகு பாஸ் மார்க் வாங்கும் பெண்ணாவது
கிடைக்குமா என்று
எல்லோரும் எண்ணிக்
கொண்டிருக்கும்போது, ஒரு பெண்ணைப் பார்த்து இவர் சம்மதம் சொல்லி விட்டார். இவ்வளவு
தேர்வுகளுக்குப் பிறகு வந்த பெண்ணை பார்த்தபோது பலரும் ஆச்சரியப் பட்டனர். தேர்வான
பெண் மிகச் சாதாரணமாக இருந்தார். சராசரிக்கும் மேலாக அந்தப் பெண்ணிடம் இருந்த ஒரே
குவாலிஃபிகேஷன் அவர் நன்றாகப்
பாடுவார்.என்பதுதான். இவருக்கு இவர் என்பது யாருக்குத் தெரியும்.?
இன்னொரு நண்பர் வீட்டில் பெண்
பார்த்து அவர் வீட்டுக்கு மருமகளாய் வந்தவர் ஒல்லியாக, கருப்பாக, முன்பல்
துருத்திக் கொண்டு எந்த அழகும் இல்லாமல் இருந்தார். கல்யாணப் பையனிடம் என்ன இப்படி
என்று கேட்டபோது அவர் சொன்ன பதில் எல்லோர் வாயையும் அடைத்து விட்டது. அவர் சொன்னார்,” எனக்குப் பிடிததது , மணம் செய்து கொண்டேன் .அவ்வளவுதான்.”
ஆங்கிலத்தில் ஒரு சொலவடை” உண்டு. YOU CAN NOT MARRY ANOTHER MAN’S
WIFE.” உலகில் இருக்கும் அத்தனை மனிதனுக்கும்
அவனுக்கென்று ஒரு ஜோடி இருக்கிறது. அவனுக்கென்று ஒரு இல்லற வாழ்வு இருக்கிறது.
படிப்பும் பொருளும் அழகும் மட்டுமே ஜோடிகளைத் தீர்மானிப்பதில்லை. இவையெல்லாம்
அதிகமாகப் பேசப் பட்டாலும் எல்லோர்க்கும் எல்லாம் அமைவது இல்லை என்று சொல்வது
கூடத் தவறாகும். சில நேரங்களில் எனக்குத் தோன்றுவது பலருக்கும் தவறாகத் தோன்றலாம்.
அந்தந்த வயதின் தேவைகள் மற்ற எல்லா விஷயங்களையும் பின்னுக்குத் தள்ளிவிடலாம். மேலும்
அழகு என்பதற்கு எந்த Definition -ம் கிடையாது. BEAUTY LIES IN THE EYES OF
THE BEHOLDER இதையெல்லாம் ஆராய்ந்து பார்த்தால் விடை
கிடைக்காது என்று தெரிந்துதான் “ இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன்
அன்று “ என்று அறிய முடியாக் கடவுளிடம் பாரத்தை (பழியை ?) போடுகிறோமோ.?
நம் கலாச்சாரத்தில் ஒரு திருமணம் நடக்கும் முன் இருவருக்கும் உள்ள பொருத்தங்களை ஜாதக மூலமாகப் பார்க்கின்றனர் ஆனால் பண்டைக் காலத்தில் கடி-மணம், கரணம், மன்றல், வதுவை, வரைவு என்று பல பெயர்களில் அறியப் பட்டிருந்தது. அந்தக் காலத்திலேயே பொருத்தம் பார்த்து திருமணங்கள் நிச்சயிக்கப் பட்டிருக்கின்றன.
நம் கலாச்சாரத்தில் ஒரு திருமணம் நடக்கும் முன் இருவருக்கும் உள்ள பொருத்தங்களை ஜாதக மூலமாகப் பார்க்கின்றனர் ஆனால் பண்டைக் காலத்தில் கடி-மணம், கரணம், மன்றல், வதுவை, வரைவு என்று பல பெயர்களில் அறியப் பட்டிருந்தது. அந்தக் காலத்திலேயே பொருத்தம் பார்த்து திருமணங்கள் நிச்சயிக்கப் பட்டிருக்கின்றன.
”பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டோடு உருவு, நிறுத்த காமவாயில்
,நிறையே, அருளே உணர்வோடு திருவென முறையுளக் கிளந்த ஒப்பினது வகையே” என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.
இப்பொழுதும், இளமை ,வனப்பு,
வளமை, கல்வி, அறிவு என்று பல பொருத்தங்கள் பார்த்துத்தான் திருமணங்கள்
நிச்சயிக்கப் படுகின்றன, ஆனால் பல குடும்பங்களில் உறவின் வழியே நிச்சயமாகும்
திருமணங்களில் பெரும்பாலும் இதையெல்லாம் கவனிப்பதில்லை.அறிந்த மனிதர் ,இனம் குலம்
எல்லாம் ஒத்தது இதையெல்லாம் விட சொத்து பத்துகள் குடும்பத்தைவிட்டு வெளியேறாது
என்னும் எண்ணமும்கலந்தெ மணங்கள் நிச்சயிக்கப் படுகின்றன. இந்த வகைத் திருமணத்தில் ACCOUNTABILITY ---GUARANTEED
என்று எண்ணுகிறார்கள், இந்த வகைத் திருமணத்தில்
பெரும்பாலும் பெண்கள் தங்கள் சுதந்திரத்தை இழக்கிறார்கள். இம்மாதிரி உறவில்
விளையும் திருமணங்கள் வாயிலாகப் பிறக்கும் சந்ததிகள் உடல் நலம் குன்றி இருக்க
வாய்ப்பு அதிகம் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
என்ன இருந்து என்ன? சில கேள்விகள் மனதில் எழுகின்றன
பருவ வயசில் ஒரு ஆணைப் பெண்ணிடமோ பெண்ணை ஆணிடமோ ஈர்ப்பது எது. ?காதலா ?பருவ வயதில் காதலுக்குக் கண்ணில்லை என்பது சரியா ? இதற்கு சரியான டெஃபினிஷன் உண்டா.?இந்த ஈர்ப்பு நாளாக நாளாக ஒரே மாதிரி இருக்கிறதா?வயதானபின் கிழவனையும் கிழவியையும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்கச் செய்வது எது?ஒருவரை ஒருவர்ச் சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயமா? இந்தக் கட்டாயத்தை ஏற்படுத்திச் செல்வது எது?பாரதக் கலாச்சாரமா? இல்லை எல்லாம் தலைவிதி என்று எண்ணமா? அப்படியானால் இது அப்படியே தொடருமா?கேள்விகள் கேள்விகள்..கேள்விகள...............!
எப்போதெல்லாம் எனக்குச் சந்தேகங்கள் வந்து நான் கேள்விகள் கேட்கிறேனோ அப்போதெல்லாம் வாசகர்களிடமிருந்து பதில்கள் வருவதற்குப் பதில் திசை மாறிப் புரிந்து கொண்ட கருத்துக்களே பின்னூட்டங்களாக வருகிறது ஆனால் இம்முறை பதிவைப் புரிந்து கொள்ள சந்தர்ப்பம் மிகக் குறைவு/ ஆனால் கேள்விகள் பலதரமான பதில்களைக் கொண்டு வரலாம் I am prepared .Let us see.
எப்போதெல்லாம் எனக்குச் சந்தேகங்கள் வந்து நான் கேள்விகள் கேட்கிறேனோ அப்போதெல்லாம் வாசகர்களிடமிருந்து பதில்கள் வருவதற்குப் பதில் திசை மாறிப் புரிந்து கொண்ட கருத்துக்களே பின்னூட்டங்களாக வருகிறது ஆனால் இம்முறை பதிவைப் புரிந்து கொள்ள சந்தர்ப்பம் மிகக் குறைவு/ ஆனால் கேள்விகள் பலதரமான பதில்களைக் கொண்டு வரலாம் I am prepared .Let us see.