கான மயிலாட............
---------------------------
இங்கேயும் ஒரு கலிடாஸ்கோப்....?
-------------------------------------------------
சமுத்ராவின் பதிவுகளில் என்னைக் கவருவது அவருடைய
கலிடாஸ்கோப் பதிவுகளே.வெவ்வேறு விஷயங்களை அவர்
தொகுத்து, சுவையாக எழுதுவது எனக்குப் படிக்க மிகவும்
பிடிக்கும். என் போன்றோரின் எழுத்து மிகக் குறைந்த
வாசகர்களையே கவரும்.யாருக்கும் சீரியஸான பதிவுகளை
படிக்க விருப்பமிருப்பதில்லை. என் எழுத்துக்களை தொடர்ந்து
படிப்பவர்களுக்கும் என் எண்ணங்களில் உடன்பாடு உண்டா
அத்தகைய எழுத்துக்களை ரசிக்கிறார்களா தெரியாது. நானும்
சலிக்காமல் எழுதுகிறேன். சரி. ஒரு மாற்றத்துக்கு கலிடாஸ்கோப்
மாதிரி எழுதிப் பார்க்கலாமே என்றே இந்த முயற்சி. காப்பியடிக்கும்
எண்ணம் இல்லை.
சமுத்ராவின் ஒரு பதிவில் தமிழ் சோறு போட்டது என்பது
போல , என் வீட்டிற்கு நான் அவரை அழைத்தது குறித்து எழுதி
இருந்தார். அவரை சந்தித்ததிலும் அவரை சந்தித்ததிலும் சிறிது
நேரம் உரையாடியதிலும் மகிழ்ச்சி எனக்கும்தான் இருந்தது. .
இருநூறுக்கும் மேலாக தொடர்பாளர்களைக் கொண்டுள்ளவர்,
மிகவும் எளிமையாகவும் இனிமையாகவும் இருந்தார். பின்
நூட்டங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது டெம்ப்லேட்
பின்னூட்டம் இடுவோர் பற்றியும் பேச்சு வந்தது. அவருடைய
அடுத்த பதிவிலேயே சில மாதிரி பின்னுட்டம் எழுதுபவர்களை
சாடியிருந்தார். அதற்கு எங்கள் பேச்சு காரணமோ என்று எனக்கு
தோன்றியது. இத்தனை தொடர்பாளர்கள் இருந்தும் கருத்திடு
பவர்கள் மிகவும் குறைவே. அவருக்கே அப்படியென்றால்
எனக்கு வரும் கருத்துக்கள் எண்ணிக்கை பற்றி நான் குறைபடு
வது சரியல்ல.எல்லோருக்கும் பிடிக்கும் விதத்தில் எழுதுவது
கடினம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித எழுத்து பிடிக்கும்.
மேலும் நான் என் எண்ணங்களைக் கடத்தி படிப்பவர் சிந்தனை
களை தூண்டவே விரும்புகிறேன். கருத்து திணிப்பே கிடையாது.
இந்த முறை சற்றே வித்தியாசமாக எழுத முயல்கிறேன். உபயம்.:-
சமுத்ரா.
ஆங்காங்கே கேட்டவைகளையும் படித்தவைகளையும்
நினைவில் வைத்து எழுதுவது கொஞ்சம் சிரமமாக இருந்தாலும்
இது ஒரு முயற்சியே.
ஒரு காதலன் காதலிக்கு எழுதுவது.
------------------------------------------------
மரம் வாடினால் தண்ணீர் விடுவேன்.
இதயம் வாடினால் கண்ணீர் விடுவேன்.
நீ வாடினால் என் உயிரை விடுவேன்.
நீ சந்தோஷப்பட அடிக்கடி இப்படி ரீல் விடுவேன்.
சில பொன் மொழிகள்
-------------------------------
நல்ல முடிவுகள் அனுபவத்திலிருந்து பிறக்கின்றன.
ஆனால் அனுபவமோ, தவறான முடிவுகளிலிருந்து
கிடைக்கிறது. --------------(பில் கேட்ஸ்.)
நீ தனிமையாய் இருக்கும்போது உனக்கு என்ன என்ன
தோன்றுகிறதோ அதுவே உன் வாழ்க்கையை தீர்மானிக்கும்.
( விவேகானந்தர் )
மிகவும் நேர்மையாய் இருக்காதீர்கள்.ஏனெனில் நேரான
மரங்களே முதலில் வெட்டப்படுகின்றன. நேர்மையானவரே
முதலில் பழி தூற்றப் படுகிறார்கள். கொஞ்சம் வளைந்து
கொடுங்கள். வாழ்க்கை லகுவாய் இருக்கும்.
(சாணக்கியர் )
தவறு செய்வது மனித குணம்;அதற்கு வருத்தப்படுவது
தெய்வ குணம். மேலும் மேலும் செய்வது அரக்கத்தனம்.
( பெஞசமின் ஃப்ராங்க்லின்)
அந்தக் காலத்தில் அவன் புத்திசாலியாக இருந்தான்.
அப்போதெல்லாம் அவன் என் அறிவரைப்படிதான் நடப்பான்.
(வின்ஸ்டன் சர்ச்சில்)
சிக்கல்கள் என்பது ஒரு ரயிலில் இருந்து பார்க்கப்படும்
மரங்களைப் போன்றது. அருகில் போனால் அவை பெரிதாகத்
தெரியும். அவற்றைக் கடந்து சென்றால் அவை சிறிதாகி விடும்.
இதுதான் வாழ்க்கை. (யாரோ)
வெற்றி என்பது நிரந்தரமானதல்ல. தோல்வியானது இறுதி
யானதுமல்ல. ஒரு நொடி துணிந்தால் இறந்து விடலாம்.
ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம்.
( யாரோ)
எல்லா விஷயங்களிலும் உண்மை நிலையை அறிந்துகொள்.
பிறகு அவற்றை உன் இஷ்டப்படி திரித்துக்கொள்ளலாம்.
( யாரோ)
ஏதாவது தவறு நடக்க வேண்டும் என்றால் அது நடந்தே தீரும்
நியூட்டனின் மேலே செல்வது கீழே வரும் எனும் நியதி போல.
(மர்ஃபி)
வாயைப்போல் எதுவுமே அடிக்கடி தவறாகத் திறக்கப்படுவது
இல்லை. ( யாரோ )
மெழுகு வர்த்திக்கு உயிர் கொடுக்க உயிர் விட்டது தீக்குச்சி.
அதை நினைத்து நினைத்து உருகியது
மெழுகு வர்த்தி.
விட்டுக்கொடுங்கள் , விருப்பங்கள் நிறைவேறும். தட்டிக்
கொடுங்கள் தவறுகள் குறையும். மனம் விட்டுப் பேசுங்கள்
அன்பு பெருகும்.
காலங்கடந்து அறியப்படும் தவற்றின் விதை ஆரம்பத்திலேயே
விதைக்கப் பட்டது.
அறிவுக்கும் மனசுக்கும் சிக்கல் இருக்கும்போது நீங்கள் மனசு
சொல்வது மட்டும் கேளுங்கள் .ஏனென்றால் அறிவு..........சரி.
விடுங்கள்,இல்லாததைப் பற்றி ஏன் பேச வேண்டும்.?
நவீன இந்தியாவில் முன்னேறிய மாணவர்கள் ( F C ) எல்லாக்
கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும்.
கொஞ்சம் சிரிக்க.
------------------------
மேலாளர்:-உன் தகுதி என்ன.?
சர்தார்.:-நான் Ph. D.
மேலாளர் :--Ph. D. என்றால் என்ன.?
சர்தார்:- Passed high school with difficulty.
நண்பன் 1:-நான் எது செய்தாலும் என் மனைவி குறுக்கே
நிற்கிறாள்.
நண்பன் 2:- காரை ஓட்டிப் பாரேன்.
பல பொருட்களை வாங்கும்போது, அதன் விலை எம்.ஆர்.பி.
என்று ஒரு குறிப்பிட்ட தொகை எழுதியிருப்பதைக் காணலாம்
சில கடைகளை மார்ஜின் ஃப்ரீ ஷாப் என்று விளம்பரப்படுத்து
கிறார்கள்.அவர்கள் MRP யிலிருந்து கொஞ்சம் குறைத்து விற்கி
றார்கள். இருந்தும் லாபமில்லாமலா விற்கிறார்கள்.?அநேக
கடைகளில் MRP-க்கே விற்கிறார்கள்.சுத்திகரிக்கப்பட்ட சூரிய
காந்தி எண்ணை, சில கடைகளில் 3 அல்லது 4 ரூபாய் குறை
வாகவும், சில கடைகளில் 7 அல்லது 8 ரூபாய் குறைவாகவும்,
அநேக கடைகளில் MRP-க்கே யும் விற்கிறார்கள்.
இந்த MRP யாரால் நிர்ணயிக்கப்படுகிறது.?சாதாரண மனிதன்
குறிப்பிட்டுள்ள விலையை விட அதிகம் கொடுக்காமல் இருந்
தால் சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டுமா.?உற்பத்தியாளர்
களுக்கும், டீலர்களுக்கும் ஏதோ அண்டர்ஸ்டாண்டிங் இருப்பது
போல் தோன்றுகிறது. நான் ஒரு மிக்சர் க்ரைண்டர் ரூ.2400-/
கொடுத்து வாங்கினேன். அதில் MRP யாக ரூ.3345-/ குறிப்பிட்டு
இருந்தது. கடைக்காரர் அவருக்குள்ள லாபத்தைக் குறைத்து
அந்த விலைக்கு எனக்குக் கொடுத்ததாகக் கூறினார். கடைக்காரர்
அதை ரூ.2000-/ க்கு வாங்கி யிருப்பதாக வைத்துக் கொண்டாலும்
MRP யாக ரூ.3345-/ இருப்பது, மிகவும் நெருடுகிறது. வாடிக்கை
யாளன் எஜமான் என்று கூறுவதெல்லாம் வெறும் கதைதானோ.?
-----------------------------------------------------------------------------------
.
( எழுதியதை படித்துப் பார்க்கும்போது கலிடாஸ்கோபில் வெரைட்டி
இல்லை என்று தெரிகிறது. தலைப்பைப் பாருங்கள், புரியும்.)
-------------------------------------------------------------------------------------------------------.

தங்கள் பதிவுகள் சிறப்பாகவே உள்ளன
ReplyDeleteமாற்றுக் கருத்து இல்லை
பின்னூட்டத்தின் எண்ணிகையை வைத்தோ
தொடர்பவர்களின் எண்ணிக்கையைக் கொண்டோ
பதிவினை மதிப்பிடுதல் சரியான மதிப்பிடுதல் இல்லை
அண்ணா அழகாகச் சொல்வார்
எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து என்றால்
காக்கைதானே தேசீயப் பறவையாக இருக்கவேண்டும்
மயிலை ஏன் வைத்துருக்கிறோம்.
அதன் சிறப்பு வைத்துத்தானே என்பார்
தங்கள் பதிவின் த்லைப்பை
கான மயிலாட என இல்லாமல்
கானகத்து மயிலாட என வைத்திருக்கலாம்
பல்சுவைப் பதிவு அருமை
தொடர வாழ்த்துக்கள்
ரமனி சார் சொன்னதை முழுமையாக வழிமொழிகிறேன்
ReplyDeleteநல்ல சுவாரஸ்யமான பகிர்வு, சார்.
ReplyDeleteதிரு. ரமணி சார், வெகு அழகாகவே சொல்லிவிட்டார். அதையே நானும் வழிமொழிகிறேன்.
சிறப்பான பல வண்ணங்கள் காட்டிய கலைடாஸ்கோப் அழகாக எளிமையாக மனம் கவர்ந்தது.பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
ReplyDelete//"சிக்கல்கள் என்பது ஒரு ரயிலில் இருந்து பார்க்கப்படும்
ReplyDeleteமரங்களைப் போன்றது. அருகில் போனால் அவை பெரிதாகத்.........."//
இதைப் படிக்கும்போது அபூர்வராகங்கள் படத்தில் நாகேஷ் சொல்லும் ஒரு சிறு கல்லை கண்ணுக்கு அருகில் வைத்தும், தூரத்தில் வைத்தும் பார்ப்பது பற்றிய அருமையான வசனம் நினைவுக்கு வருகிறது.
MRP பற்றிச் சொல்லும்போது எனக்கு உடனே நினைவுக்கு வருவது சிவகாசிப் பட்டாசுகள்தான்! அதில் போட்டுள்ள எம் ஆர் பிக்கும் விற்கும் விளைக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருக்கும் என்பது மட்டுமல்ல, அந்த எம் ஆர் பி கொடுத்து வாங்க வேண்டுமென்றால் யாரும் அதை வாங்கவே மாட்டார்கள்!!
கலிடாஸ்கோப்பில் அந்த அழகான கிருஷ்ணர் படம் பற்றிய உங்கள் நினைவுகளையும் சேர்த்திருக்கக் கூடாதா?.. பூஜை மணிமாடப் பின்னணியில் அந்தப் படம் வெகு அழகாக இருக்கிறது.
ReplyDeleteஆட்டம் என்று எடுத்துக் கொண்டால் ஆட்டத்தின் நெளிவு சுளிவுகள் தெரிந்து ஆடுவது தான் முக்கியமாகப் போகுமே தவிர, யார் ஆடுகிறார்கள் என்பது பொருட்டல்ல. மயிலுக்கு பெருமை கொடுக்க வேண்டி, வான் கோழியைப் பழித்தல் ஆகாது. யார் ஆடுகிறார்கள் என்று ஆடுகின்ற நபரின் மேல் கவனம் போகுமேயானால், ஆட்டத்தின் மீதான ரசிப்பு சிதருண்டு போகும்.
\\\நவீன இந்தியாவில் முன்னேறிய மாணவர்கள் ( F C ) எல்லாக்
ReplyDeleteகேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும்.///
சிந்திக்க வைத்தது.
கலைடாஸ்கோப் அருமை. நீங்கள் மயில் தான் . சந்தேகம் வேண்டாம்.
பின்னூட்டம் பற்றிக் கவலை வேண்டாம். வலைப்பக்கம் நம் எண்ணங்களின் வடிகால். அது போதும். பின்னூட்டமிடுதல் ஒரு கொடுக்கல் வாங்கல். என்னையே எடுத்துக் கொள்ளுங்கள், வாரம் ஒருமுறை தான் வலைப்பக்கம் வர முடிகிறது. எனக்கு பின்நூட்டமிடுவோரின் வலைகளுக்கு செல்வதற்கே நேரம் போதவில்லை. இதில் பிடித்த வலைப்பக்கம் செலவது அரிதாகி விட்டது.
என்ன செய்வது