மொழியின் அழுகை......!
-------------------------------
கைபேசிகள்( செல் ஃபோன்கள் )புழக்கத்தில் இருப்பதும் ,
அவற்றின் உபயோகங்களும் பாதிப்புகளும் ஆராய்ந்து
அவை சாபமா வரமா என்று கேள்வி கேட்கப்பட்டு ஒரு
பதிவில் எழுதப்பட்டு இருந்தது.கணினியின் சில சேவை
களை கற்றுக்கொண்டு உபயோகிக்க முயலும்போது இந்த
கேள்வி நினைவுக்கு வந்தது. கைபேசியில் குறுஞ் செய்தி
அனுப்ப இக்கால இளைஞர்கள் உபயோகிக்கும் ஆங்கிலம்
என் போன்றோருக்கு படித்து அறிய முடியாததாய் உள்ளது.
குறுஞ் செய்தி ஏதோ அவசரத்துக்கு அனுப்பப்படுகிறது
என்பது சரியல்ல. கணினியில் சாட்டிங் போல கைபேசியில்
குறுஞ் செய்தி உபயோகப்படுத்தப் படுகிறது. நவ இந்தியப்
பிரதிநிதிகளின் கைகள் எப்போதும் குறு குறு வென்று
இருக்கும்போல் தோன்றுகிறது.
யாரோ எதையோ எழுதட்டும் ,நமக்கென்ன என்று இருந்து
விடலாம்.ஆனால் இதனால் ஏற்படும் பாதிப்பு ஒரு மொழிக்கே
உண்டாகிறது காணும்போது திகைப்பாய் இருக்கிறது.
ஆங்கில வழிக் கல்வியிலும், கான்வெண்டிலும் படிக்கும்
சிறுவர் சிறுமிகள் ,எந்த மொழியிலும் குறைந்த பட்ச
தேர்ச்சியாவது பெறுவதில்லை. தாய் மொழியும் ,பிராந்திய
மொழியும் இரண்டாம் பட்ச நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கும்
போது, முன்னிலையில் பயிற்றுவிக்கப்படும் ஆங்கிலத்தில்
தேர்ச்சி பெற்று இருப்பது எதிர்பார்க்கப்படுவது. ஆனால்
நாம் இப்போது பார்ப்பது ஆங்கிலமே அல்ல. இவர்களாக
ஆங்கில எழுத்துக்களை உபயோகித்து, இவர்கள் உச்சரிப்
பிற்கு ஏற்றார்போல் ஏதேதோ எழுதுகிறார்கள். குறுஞ்
செய்தியாம்..!எதையாவது சொல்லப்போனால் தலைமுறை
இடைவெளி என்கிறார்கள்,நான் என் முந்தைய பதிவு
ஒன்றில் குறிப்பிட்டிருந்ததுபோல, உண்மை நிலையை
முதலில் அறிந்து கொண்டு பிறகு அதை நம் இஷ்டப்படி
திரிக்கலாம்.மொழியை முதலில் சரியாகக் கற்றுக்கொண்டு
பிறகு அதை மெல்லக் கொல்லுங்கள்.
" al of a sden u strt 2 lyk sm 1 dat u wanna c dem evriday"
இது ஒரு சின்ன மாதிரிதான்.ஆங்கில மொழிக்கு அழ
முடிந்தால் கைபேசியிலும் கணினியிலும் குறுஞ் செய்தி
களாலும் மற்ற பிரயோகங்களாலும் அனுபவிக்கும்
சித்திர வதைகளினால் ரத்தக் கண்ணீரே சிந்தும்.
----------------------------------------------------------------------

நீங்கள் சொல்வது சரிதான். இந்த பழக்கம் அலுவலகத்தில் மெயில் அனுப்பும்போதும், சிலர் பரிட்சையில் கூட இந்த short form - ஐ பயன்படுத்துகின்றனர்
ReplyDeleteநான் கூட இதபத்தி 2 மாசம் முன்பு
ReplyDeleteஒரு பதிவுபோட்டிருக்கேன். ஒன் டச்
எஸ். எம்.எஸ். நேரம் கிடைக்கும்போ
து வந்து பாருங்க
மிகவும் சரி, இப்போது பயன்படுத்தப்படுகிற ஆங்கிலம் கொடுமையாக இருக்கிறது என்பது சற்றே அதிர்ச்சியூட்டும் உண்மை.
ReplyDeleteஉங்கள் ஆதங்கம் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது. கேட்டால், எப்படி எழுதினால் என்ன, விஷயம் அடுத்தவருக்குப் புரிய வேண்டும், அது தானே முக்கியம் என்கிறார்கள். இந்த சுருக்கெழுத்தினால் உண்மையான வார்த்தைகளே (word and Spelling) நாளடைவில் மறந்து தான் போகும் என்பதில் சந்தேகமே இல்லை.
ReplyDeleteஆங்கில செய்தி தாள்களிலும் இதே மாதிரி எழுதுகிறார்கள்.
ReplyDeleteநல்ல பதிவு. வாழ்த்துக்கள்.
கல்லூரி மாணவர்களிடம் இந்த மொழியில் தான் பரிமாற்றமே நடக்கிறது.
ReplyDeleteஉங்களுக்கு புரியாவிட்டால் என்ன, புரிய வேண்டியவர்களுக்கு புரிந்து விடுகிறது.
அவர்கள் அவ்வாறு எழுதுவது கூட
ReplyDeleteபுரியவேண்டியவர்களுக்கு மட்டும்
புரிந்தால் போதும் என்பது மட்டுமல்ல
புரியக்கூடாதவர்களுக்கு புரியாமல் போகட்டும்
என்றும்தான்.
நான் சொல்லவருவது தங்களுக்கு புரிந்திருக்கும்
என நினைக்கிறேன்
''...மொழியை முதலில் சரியாகக் கற்றுக்கொண்டு
ReplyDeleteபிறகு அதை மெல்லக் கொல்லுங்கள்...''
இது சரி. குற்றமறக் கல்! பின் கொல்! 25 வருடமாக டென்மார்க்கில் வாழ்ந்து டெனிஸ் மொழியில் பரிச்சயமாகியதால் இப்போது அகராதி பிரித்துத் தான் எந்த ழ-ல வரவேண்டும் என்று உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. இதை எழுத வெட்கப்படுகிறேன். சிறு வயதிலிருந்து எந்தத் தடுமாற்றமின்றி தமிழோடு உறவாடினேன். உச்சரிப்பு; எழுத்துக் கூட்டல் அனைத்துமே சிறப்பாக இருக்கும். (உதாரணம் வலையில் கவிதை கேளுங்கள்- தலைப்பில் எனது குரலில கவிதை 1-2 உள்ளது.). எல்லாம் காலத்தின் மாற்றங்கள் தான்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
என் ஆதங்கத்தில் பங்கு கொண்டு கருத்துக்களை பகிர்ந்து கொண்ட நாகசுப்பிரமணியம், லக்ஷ்மி,சேட்டைக்காரன் ,கோபாலகிருஷ்ணன்,ரத்னவேல், சிவகுமாரன்,ரமணி, மற்றும் கவிதைக்கு என் நன்றி.
ReplyDelete