Wednesday, November 16, 2011

கடவுளோடு ஒரு உரையாடல்....

                               கடவுளோடு ஒரு உரையாடல்..
                              --------------------------------------------
( கனவொன்று கண்டேன்.அதில் கடவுளைக் கண்டேன். 
  அவருடன் உரையாடினேன். விழித்துப் பார்த்தேன். கண்டது 
  அனைத்தும் தெளிந்தும் தெளியாமலும் உள்ளத்தில் ஓட, 
  காகிதத்தில் எழுதி வைத்தேன்.உங்களிடம் பகிர்கிறேன். ) 


கடவுள்:-என்னைக் கூப்பிட்டாயா.?

நான் :-    கூப்பிட்டேனா.? இல்லையே...யார் நீங்கள் .?

கடவுள்:-நான் தான் கடவுள். உன் வேண்டுதல்கள் எனக்குக்
                  கேட்டது.உன்னுடன் கொஞ்சம் உரையாடலாமே
                  என்று வந்தேன்.

நான்:-    நான் அவ்வப்போது வேண்டுவது உண்டு. வேண்டும்
                போது மனம் லேசானதுபோல் தோன்றும். இப்போது
                 நான் மும்முரமாய் ( BUSY )இருக்கிறேன்


கடவுள்:-நீ எதில் மும்முரமாய் இருக்கிறாய்.? எறும்புகளும்தான்
                  வேலையில் மும்முரமாய் இருக்கின்றன..

நான்:-    தெரியவில்லை. ஆனால் எனக்கு நேரம் கிடைப்பது
                 இல்லை. வாழ்க்கை எப்போதும் ஒரே ஓட்டமாய்
                 இருக்கிறது

கடவுள்:-உண்மைதான். செயல்பாடுகள் (ACTIVITIES )உன்னை
                 மும்முரமாக்கும். பயன்பாடுகள் (PRODUCTIVITY )பலனை
                 தரும்.செயல்பாடுகள் நேரத்தைக் குடிக்கும். பயன்பாடு
                 அந்தத் தளையிலிருந்து விடுவிக்கும்.

நான்:-    புரிகிறார்போல் இருக்கிறது. இருந்தாலும் பூராவும்
                 விளங்க வில்லை. எப்படியானாலும் நீங்கள் பேசவருவீர்.
                கள் என்று நான் எண்ணவில்லை.

கடவுள்:-உன் நேரத்துக்கு எதிரான போராட்டத்துக்கு தீர்வு
                 காணவும்,சில தெளிவுகளைச் சொல்லவும் வந்துள்ளேன்

நான்:-    வாழ்க்கை ஏன் இவ்வளவு சிக்கலாக இருக்கிறது.?

கடவுள்:-முதலில் வாழ்க்கையை ஆராய்ச்சி செய்வதை நிறுத்து.
                  வாழ்க்கையை வாழ். அதை ஆராய்ச்சிசெய்வதே அதை
                  சிக்கலாக்கும்.

நான்:-    ஏன் வாழ்க்கை எப்போதும் சந்தோஷமாக இல்லை.?

கடவுள்:-உன்னுடைய இன்று பற்றி, நேற்றின் நாளையாய் இருந்த
                  போதேஆராயத் தொடங்கி விட்டாய்.ஆராய்ந்து கவலைப்
                  படுவதே உன் வாடிக்கையாகிவிட்டது அதுவே நீ மகிழ்ச்சி
                  யாக இல்லாததன் காரணம்.

நான்:-     இவ்வளவு நிச்சயமில்லாத்தன்மை இருக்கும்போது
                  எப்படிக் கவலைப்படாமல் இருக்க முடியும்.?

கடவுள்:-நிச்சயமின்மை தவிர்க்க இயலாதது. கவலை தேவை
                  இல்லாதது; தேடிக்கொள்வது.

நான்:-     நிச்சயமின்மை வலி தருகிறதே.

கடவுள்:-வலி தவிர்க்க முடியாதது; ஆனால் வேதனையாக
                  எண்ணுவது நாமே தேடுவது. ( PAIN IS INEVITABLE. BUT
                  SUFFERING IS OPTIONAL )

நான்:--  வேதனையால் வாடுவது நாம் தேடுவதென்றால் ஏன்
                 எப்போதும் நல்லவர்கள் கஷ்டப் படுகிறார்கள்.?

கடவுள்:-வைரம் அறுக்கப்படாமல் பளபளப்பாகாது,மின்னாது.
                  தங்கம் நெருப்பில் புடம் போடாமல் புனிதமாகாது.
                  நல்லவர்கள் சோதனைக்கு உள்ளாவார்கள்,ஆனால்
                  வேதனைப்பட மாட்டார்கள். வாழ்வின் அனுபவங்கள்
                 அவர்களை சிறப்பிக்கும். கசப்பிக்காது.

நான்:-    இந்த வெதனைகளும் சோதனைகளும் உதவும் என்று
                 சொல்கிறீர்களா.?

கடவுள்:-அனுபவம் ஒரு ஆசான். அவன் முதலில் தேர்வு வைத்து
                  பின் அதன் மூலம் பாடம் கற்பிக்கிறான்.

நான்:-    இருந்தாலும் நாம் ஏன் இந்த சோதனைகளுக்கு உட்பட
                 வேண்டும். ?இவற்றிலிருந்து விடுபட முடியாதா.?

கடவுள்:-சோதனைகள் என்பது, மனோதிடத்தை அதிகரிக்க 
                  உதவும் ,விதிக்கப்பட்ட தடைக் கற்கள் தரும் 
                  பாடங்களே. போராட்டங்களிலும் சகிப்பிலுமே மன
                  வலிமை வரும். சோதனைகள் இல்லாதபோது அல்ல.

நான்:-    உண்மையில், இவ்வளவு வேதனைகளுக்கு உள்ளாகியும்
                 எங்குதான் போகிறோம் என்பதே புரிவதில்லை.

கடவுள்:-புறமே தேடினால் போகுமிடம் தெரியாது. உன் அகத்தில்
                  தேடு. வெளியே தேடினால் கனவாய்த் தெரியும். உள்ளே
                  தேடினால் காட்சிகள் விரியும். கண்களால் காண்பது
                  பொருட்களின் காட்சி. இதயக் கண் காட்டும்
                  பொருண்மையின் மாட்சி.

நான்:-     நேரான வழியில் செல்வதைவிட, வேகமாக வெற்றி
                  கிடைக்காதிருப்பதே நோகிறது. இதற்கு என்ன செய்ய.?

கடவுள்:-வெற்றி என்பது மற்றவர் தரும் குறியீடு. கடக்கப்போகும்
                   பாதையை உணர்ந்து, நீ நிர்ணயிக்கும் திருப்தி எனும்
                  வெற்றியின் அளவுகோல் கடந்துவந்த பாதையினால்
                  ஏற்பட்டதைவிட சிறப்பாக இருக்கும்.நீ திசைமானியை
                  உபயோகி. மற்றவர்கள் கடிகாரத்தை உபயோகிக்கட்டும்.

நான்:-     கஷ்ட காலங்களில் எப்படி திசை நோக்கி நிற்பது.?

கடவுள்:-கடக்கப்போகும் பாதையைவிட கடந்து வந்த பாதையை
                  கணக்கில் கொள்.உனக்குக் கிடைத்த வரங்களை
                  எண்ணில் கொள்.கிடைக்காததையும் தவறவிட்டதையும்
                  நினைத்துத் தளராதே.

நான்:-     மக்களிடம், உன்னை ஆச்சரியப் படுத்துவது எது.?

கடவுள்:-கஷ்டங்களை அனுபவிக்கும்போது “ ஏன் எனக்கு “
                  என்பவர்கள் வளர்ச்சி யடைகையில் ”எனக்கு ஏன் “ என்று
                  கேட்பதேயில்லை. உண்மை அவர்கள் பக்கம் இருப்பதை
                  விரும்புவோர் அநேகர். உண்மையின் பக்கம் இருப்பதை
                  விரும்புவோர் சிலரே.

நான்:-   சில நேரங்களில்“ நான் யார்.? நான் ஏன் இங்கிருக்கிறேன்?”
                 என்று கேள்வி எழுகிறது. பதில்தான் கிடைப்பதில்லை.

கடவுள்:- நீ யார் என்று கேள்வி கேட்டு வீணாகாதே. நீ யாராக
                   வேண்டும் என்று தீர்மானி. ஏன் வந்தேன் என்று
                   கேட்காதே. காரணத்தை ஏற்படுத்து. வாழ்க்கை என்பது
                   கண்டுபிடிப்புகளின் ( DISCOVERY ) தொகுப்பல்ல.
                  தோற்றுவிப்பின் செயல்பாடே. (WORK OF CREATION.)

நான்:-      வாழ்வில் ஏற்றமளிக்க ,பலன் கிடைக்க என்ன செய்ய
                   வேண்டும்.?

கடவுள்:-கடந்த காலத்தை கலக்கமில்லாமல் உணர்ந்து கொள்.
                  நிகழ் காலத்தை ஊக்கத்துடன் அணுகு. வருங்காலத்தை
                  தைரியமாக எதிர்கொள்.

நான்:-     கடைசியாக ஒரு கேள்வி சில நேரங்களில் என் வேண்டு
                 தல்களுக்கு விடை கிடைப்பதில்லை என்று
                 உணர்கிறேன்.

கடவுள்:-விடை கிடைக்காத பிரார்த்தனைகள் என்று சொல்வதை
                  விட, விடை “ இல்லை “ என்பதே பதிலாயிருக்கும்.

நான்:-    உங்கள் வரவுக்கும் அறிவுரைக்கும் நன்றி.புதுப்பொலி
                வுடன் ஒவ்வொரு புது நாளையும் எதிர் கொள்வேன்.

கடவுள்”-நன்று. பயத்தைக் களை. நம்பிக்கையை தக்கவை.
                  சந்தேகங்களை நம்பாதே. நம்பிக்கையை
                  சந்தேகிக்காதே.
                  -----------------------------------------------------------------------      


 



26 comments:

  1. //நல்லவர்கள் சோதனைக்கு உள்ளாவார்கள்,ஆனால்
    வேதனைப்பட மாட்டார்கள். //

    நல்லவர்கள் வேதனை படமாட்டார்கள் என்பது கொஞ்சம் இடறுகிறது... மற்றப் படி வழக்கமான ஊக்குவிக்கும் கட்டுரை...

    வாடிய பயிரை கண்ட பொழுதெல்லாம் வாடினேன் என்பது வேதனைபட்டார்கள் என்ற சொல்குறிப்பு தானே

    உங்கள் அளவுக்கு அனுபவம் இல்லை... இருந்தாலும் இடறுகிறது...

    ReplyDelete
  2. கடந்த காலத்தை கலக்கமில்லாமல் உணர்ந்து கொள்.
    நிகழ் காலத்தை ஊக்கத்துடன் அணுகு. வருங்காலத்தை
    தைரியமாக எதிர்கொள்.

    கடவுளே சொன்ன மாதிரி இருக்கு..
    நல்ல அறவுரை

    ReplyDelete
  3. //வைரம் அறுக்கப்படாமல் பளபளப்பாகாது,மின்னாது.
    தங்கம் நெருப்பில் புடம் போடாமல் புனிதமாகாது.
    நல்லவர்கள் சோதனைக்கு உள்ளாவார்கள்,ஆனால்
    வேதனைப்பட மாட்டார்கள். வாழ்வின் அனுபவங்கள்
    அவர்களை சிறப்பிக்கும். கசப்பிக்காது.//

    கடவுள் சொற்கள் அருமையோ அருமை.

    //கடந்த காலத்தை கலக்கமில்லாமல் உணர்ந்து கொள்.
    நிகழ் காலத்தை ஊக்கத்துடன் அணுகு. வருங்காலத்தை
    தைரியமாக எதிர்கொள்.//

    சூப்பர் சார். கடவுள் தங்கள் மூலமாக பேசியிருக்கிறார்.

    அருமையான பதிவு. vgk

    ReplyDelete
  4. எந்த வரியை பாராட்டன்னு தெரியல்லே ஒன்னொன்னும் ஜொலிக்குது. ரொம்ப நல்லா சொல்லி இருக்கீங்க சார்

    ReplyDelete
  5. ’’’உன்னுடைய இன்று பற்றி, நேற்றின் நாளையாய் இருந்த போதேஆராயத் தொடங்கி விட்டாய்.ஆராய்ந்து கவலைப் படுவதே உன் வாடிக்கையாகிவிட்டது அதுவே நீ மகிழ்ச்சியாக இல்லாததன் காரணம்.’’’

    அற்புதமாக சொன்னீர்கள் அய்யா, மனம் லயித்து போன பதிவு.

    ReplyDelete
  6. @சூர்யஜீவா....PAIN IS INEVITABLE. BUT SUFFERING IS OPTIONAL என்று எழுதியதுடன் இதையும் சேர்த்துபடித்தால் இடறாது என்று எண்ணுகிறேன்.GOOD PEOPLE UNDERGO TRIALS BUT THEY DO NOT SUFFER BECAUSE OF THAT. BECAUSE OF THIS THEIR LIFE BECOMES BETTER AND NOT BITTER. ஓரளவு தெளிவுபடுத்தி இருக்கிறேன் என்று நம்புகிறேன். வரவுக்கும் கருத்துக்கும் நன்றி சூர்ய ஜீவா.

    ReplyDelete
  7. வாழ்க்கைக்கு என்றும் கடவுளுடனான உங்கள் உரையாடல் என்றைக்கும் உதவியாக இருக்கும் பாலு சார்.

    அனுபவத்தின் விழுதுகளில் ஆடியதுபோலவும் ஒரு பரந்த ஆலமரத்தின் அடியில் பாதுகாப்பாய் நிற்ப்தாயும் உணர்த்துகிறது உங்களின் சிந்தனைகள்.

    அபாரமான பாடம். அபாரமான போதகன்.

    ReplyDelete
  8. வித்தியாசமான புனைவு.வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. ஆழமான மனமுதிர்ச்சியின் அனுபவத்தின் வெளிப்பாடு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  10. Great one!!!

    especially "Pain is Inevitable, Suffering is Optional" conveys a great message.

    ReplyDelete
  11. //வலி தவிர்க்க முடியாதது; ஆனால் வேதனையாக எண்ணுவது நாமே தேடுவது.//

    வலியின் இயல்பு வேதனை தருவது.
    நாமே தேடுவதினால் கிடைக்கும் எண்ணம் அல்ல வேதனை.

    வேதனையாக இருப்பதற்குப் பெயர் வலி. அப்படி இருப்பதாக எண்ணவில்லை எனில் வேதனை இல்லை; ஆக வலியும் இல்லை.

    ReplyDelete
  12. /வைரம் அறுக்கப்படாமல் பளபளப்பாகாது,மின்னாது.
    தங்கம் நெருப்பில் புடம் போடாமல் புனிதமாகாது.
    நல்லவர்கள் சோதனைக்கு உள்ளாவார்கள்,ஆனால்
    வேதனைப்பட மாட்டார்கள். வாழ்வின் அனுபவங்கள்
    அவர்களை சிறப்பிக்கும். கசப்பிக்காது.//
    very practial conversation. I enjoyed more sir.

    ReplyDelete
  13. //சோதனைகள் என்பது, மனோதிடத்தை அதிகரிக்க
    உதவும் ,விதிக்கப்பட்ட தடைக் கற்கள் தரும்
    பாடங்களே. போராட்டங்களிலும் சகிப்பிலுமே மன
    வலிமை வரும்//

    சோர்ந்து போயுள்ள என் போன்றோர்க்கு நல்ல ஊக்குவிப்பு பதிவு. உண்மையில் கடவுள் பேரில் கோபமுடன் வந்தேன். கடவுளாக நீங்கள் பதில் அளித்து மனத்தை ஆறுதல் படுத்திவிட்டீர்கள். நல்ல பயனுள்ள பதிவுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  14. பரவாயில்லையே. கடவுளுடன் உரையாடும் அளவிற்கு வளர்ந்துள்ளதைக் காண மகிழ்ச்சி!

    ReplyDelete
  15. @ரிஷபன்
    @கோபு சார்
    @லக்ஷ்மி
    @ஏ.ஆர்.ஆர்
    @சாதிகா
    @ஷக்திப்ரபா
    @ஆர்.எஸ்
    @டாக்டர் ஐயா----அனைவருக்கும் மேலான வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. கடவுளிடம் உரையாடும் அளவுக்கு வளர்ந்து விட்டேனா என டாக்டர் கேட்கிறார். எல்லாம் ஒரு மாற்றத்துக்குத்தான். கனவில்தானே உரையாடல்.!சொல்ல நினைப்பதைக் கூற இது ஒரு உத்தி.

    ReplyDelete
  16. @சுந்தர்ஜி உங்களால் மட்டும்தான் இப்படி உற்சாகமூட்டும் பின்னூட்டம் இடமுடியும். நன்றி

    ReplyDelete
  17. @ஜீவி. வலி என்னும்போது ஃபிசிசல் ஆக இருந்தால் வலியும் கூடவே இருக்கும். ஆனால் நான் சொல்லும் வலி அதுவல்ல. கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  18. @ஹரணி. நான் பலமுறை எழுதி உள்ளேன்.உங்கள் பின்னூட்டம் எனக்கு ஒரு டானிக் மாதிரி என்று. மிக்க நன்றி.

    ReplyDelete
  19. @ஆதிரா. நம் செயலுக்கு நாமே பொறுப்பு என்று உண்மையாக எண்ணுபவன் நான். யாரிடமும் கோபப்படத் தேவையில்லை. (கடவுள் உட்பட.)பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete
  20. இரண்டு வலிகளுக்குமே வேதனை பொது தானே?..

    ReplyDelete
  21. @ஜீவி...வேதனை பொதுவாக இருப்பினும் சில வேதனைகள் optional
    வேதனையாக உணருவதோ இல்லை என்பதோ மனம் சம்பந்தப் பட்டது. நன்றி.

    ReplyDelete
  22. தலைப்புகளின் கவர்ச்சியில் சிக்கித் தேடி வந்ததைப் படிக்காமல் தோன்றியதைப் படிக்கிறேன் சார் :)

    கடவுளைத் தவிர மற்றதெல்லாம் புரிகிறது பேட்டியில் :) suffering is optional பிரமாதம்! ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  23. மிகவும் அருமையாக உள்ளது. சில இடங்களில் என் சிந்தனைக்கு ஒத்துப்போகவில்லை. எப்படியிருப்பினும் நேர்மறையான எண்ணங்களை கற்றுத்தருவது அற்புதம். நினைவில் கொள்ள வேண்டிய பதிவு.
    அன்புடன்
    பக்கிரிசாமி நீலகண்டம்.

    ReplyDelete
  24. பயத்தைக் களை. நம்பிக்கையை தக்கவை.//

    இது எனக்கு மிகவும் பிடிக்கிறது.

    ReplyDelete
  25. மடலைக் கண்டேன்... ஆரம்ப காலத்தில் அனைவருக்கும் மறுமொழி எழுதினேன்... நிறைய கருத்துரைகள் வருவதாலும், "நன்றி..." என்று ஒரே "template" மறுமொழி சொல்வதும் பிடிக்கவில்லை... நேரமும் வீண்... கிட்டத்தட்ட 1500 மறுமொழி கருத்துரைகளை நீக்கி உள்ளேன்... கொஞ்சம் விளக்கமாக சொல்வதென்றால் கீழ் உள்ள பதிவில் சொல்லி உள்ளேன்... நேரம் கிடைக்கும் போது வாசிக்கவும்...

    http://dindiguldhanabalan.blogspot.com/2014/12/Speed-Wisdom-9.html

    இந்தப் பதிவில் பிடித்த வரிகள் :-

    // வாழ்க்கையை வாழ்... அதை ஆராய்ச்சிசெய்வதே அதை சிக்கலாக்கும்... //

    // அனுபவம் ஒரு ஆசான் //

    ReplyDelete
  26. நான் அந்தப்பதிவை வாசித்திருக்கிறேனே கடவுளோடு உரையாடியதில் நீங்கள் பார்த்திருப்பீர்கள் ஒவ்வொருவருக்குமொவ்வொன்று பிடித்தது எல்லோருக்கும் ஏதோ ரசிக்க இருந்ததே மகிழ்ச்சி வருகைக்கு நன்றி டிடி

    ReplyDelete