சிந்திக்க ஒதுக்குங்கள் சில நொடிகள்.
---------------------------------------------------
கேள்விகள்.
-----------------
1) ஜானியின் தாயாருக்கு மூன்று குழந்தைகள்.மூத்தவன் பெயர்
ஏப்ரல், இரண்டாமவன் பெயர் மே. மூன்றாவது குழந்தையின் பெயர் என்ன.?
2) எவரெஸ்ட் சிகரம் கண்டுபிடிப்பதற்கு முன் உலகின் உயர்ந்த
சிகரம் எது.?
3) இரண்டடிக்கு மூன்றடிக்கு நான்கடிக் குழியில் எவ்வளவு மண்
இருக்கும்.
4) 1975-ல் ஜனாதிபதியின் பெயர் என்ன. ?
5) ஒரு ஓட்டப் பந்தயத்தில் இரண்டாவதாக வருபவனை நீ முந்தினால்
நீ எந்த இடத்தில் இருப்பாய்?
6) ஒரு குடியானவனுக்கு ஒரு தளத்தில் மூன்று வைக்கோல் போற்களும்
இன்னொரு தளத்தில் ஐந்து வைக்கோல் போற்களும் இருக்கின்றன. அவன் அவற்றை இன்னொரு
தளத்தில் சேர்த்துவைத்தால் எத்தனை வைக்கோல் போற்கள் இருக்கும்.?
7) ஒரு லாரி நிறைய பொருட்களுடன் ஒரு அண்டர்பிரிட்ஜ் அடியே செல்லவேண்டும்.
லாரியின் பொருட்களுடனான உயரம் பிரிட்ஜின் அடிபாகத்தை உரசும். அதே வழியில்தான்
செல்ல வேண்டும். அன்லோட் செய்து போகக் கூடாது. என்ன செய்வீர்கள்.?
பதில்கள்
--------
1)
ஜூன் அல்ல. ஜானிதான்.
2)
எவெரெஸ்ட்தான். அதை
யாரும் கண்டு பிடிக்கவில்லை. அது ஏற்கனவே இருந்தது.
3)
குழியில் மண் ஏதும் இருக்காது. இருந்த மண் எடுத்ததால்
குழியானது.
4)
இன்றுள்ள அதே பெயர்தான்.
5)
இரண்டாவது இடத்தில். இரண்டாமவனை முந்தித்தான் அந்த
இடத்துக்கு வந்தாய்
6) ஒரே வைக்கோல் போற்தான் இருக்கும். முதலாவது, இரண்டாவது தளத்தில் இருந்த வைக்கோலை மூன்றாவது தளத்தில் சேர்த்து வைக்கிறான்.
7) என்பேரக் குழந்தைகள் சொன்ன தீர்வு. லாரியின் நான்கு சக்கரங்களிலும் இருந்து கொஞ்சம் காற்றை இறக்கினால் லாரியின் உயரம் குறையும்.இடிக்காமல் போகலாம்.......!
7) என்பேரக் குழந்தைகள் சொன்ன தீர்வு. லாரியின் நான்கு சக்கரங்களிலும் இருந்து கொஞ்சம் காற்றை இறக்கினால் லாரியின் உயரம் குறையும்.இடிக்காமல் போகலாம்.......!
( சில சீரியசான பதிவுகளுக்குப் பிறகு ஒரு லைட்டான பதிவு...!)
அனைத்தும் அருமை...
பதிலளிநீக்குபேரக் குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள் ஐயா...
சிந்திக்கவும் சிரிக்கவும் அருமை அய்யா
பதிலளிநீக்குஅழகாய் சிந்திக்க வைத்தீர்கள்.
பதிலளிநீக்குஉங்க பேரக்குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்.
பதிவு நல்லா இருக்குங்க.
பதிலளிநீக்குஆஹா... அருமை. சிந்திக்க சில நொடிகளும் தேவைப்படாமல் கீழேயே விடையைக் கொடுத்துவிட்டீர்களே...
பதிலளிநீக்குபேரக்குழந்தைகள் சொன்ன தீர்வு வியக்கவைத்தது. மனத்தை இலகுவாக்கிய பதிவு. நன்றி ஐயா.
சிந்தித்துக்கொண்டோம். அருமை.
பதிலளிநீக்குநல்ல brain teasers.
பதிலளிநீக்குசுவாரஸ்யமாக இருந்தது.
பதிலளிநீக்கு@ திண்டுக்கல் தனபாலன்
@ கரந்தை ஜெயக்குமார்
@ கோமதி அரசு
@ டாக்டர் கந்தசாமி
@ கீத மஞ்சரி
@ மாதேவி
@ ராஜலக்ஷ்மி பரமசிவம்.
If one understands the cat in the question, the answers are easy. பதிவுக்கு வருகை தந்து கருத்திட்டவர்களுக்கு என் நன்றி. விடைகள் ஒப்பு நோக்குவதற்கே.
உங்க வாயால ஜீனியஸ்னு மறுபடி ஆசீர்வாதம் வாங்கலாம்னு பார்த்தா நீங்களே சொல்லிட்டீங்க. உங்கள் பேரக்குழந்தைகள் ஜித்தர்கள்.
பதிலளிநீக்கு