நாராயணீயம் பாராயணம்—குருவாயூர் பயணம்.
( சில நாட்களாகப் பதிவுலகுக்கு வர முடியவில்லை. அதில் ஒரு காரணம் நான் ஊரில் இல்லாதது. மற்றொரு காரணம் என் கணினியில் ups செயலிழந்து விட்டது சரிசெய்து இதோ மீண்டும்)
கண்டேன் நான் கண்ணனை
கார்மேக வண்ணனைக்
குருவாயூர் கோவில் நடையில்
கருநிறம் சுருட்டைமுடி
ரத்தினம் பதித்த தலையணி
மயில் பீலி செருக
வெண்ணிறப் பிறை நெற்றி ,
மேல்நோக்கி இடப் பெற்ற
குறியுடன் முடியும்
நெற்றியும் கண்ணாரக்
( கண்டேன் நான் கண்ணனை )
விபுவே.!அசைகின்ற புருவங்கள்
அடியில் அருள்தரும் உன் கண்கள்
ஒளிவீசி என் அகம் குளிர்விக்கக்
( கண்டேன் நான் கண்ணனை )
எடுப்பான நாசி கண்ணாடிக் கன்னங்கள்
சுடரிடும் மகர குண்டலங்கள் அசைந்தாட,
ஒளிவீசும் முத்துப் பற்கள் செவ்விதழ்களின்
நடுவே பளீரிடப் புன்னகைக்கும் உன் முகம்
( கண்டேன் நான் கண்ணனை )
இரத்தினம் பதித்தக் கை வளைக் குலுங்க
செந்தளிர் விரல்கள் மீட்ட
வேணுகானம் காற்றில் தவழ
நாத கீதந்தனில் எனை மறந்து
( கண்டேன் நான் கண்ணனை )
மென் கழுத்தில் மணிமாலைகள்
மலர்மாலைகள் தொங்க
நிற மாலைகளில் வண்டினம் வந்தாடக்
( கண்டேன் நான் கண்ணனை )
சந்தண மணம் பரப்பும் உன்
திருமேனியில் உலகமே ஒன்றியிருந்தும்
மெல்லிடையோய் பொன்னிறப் பட்டாடையுடன்
கதிர் பரப்பும் மணி அரைஞாணின்
சலங்கைகள் சல சலக்கக் கண்டு
நீலவண்ணக் கண்ணா எனை மறந்து
( கண்டேன் நான் கண்ணனை )
அழகு தொடை இரண்டும் பருத்தவை
அழகுடன் உறுதியும் கலந்தவை
மனம் மயக்கும் கலங்கடிக்கும்
எனவே பட்டாடை மறைத்தனவோ
காணும் கணுக்கால்பிடித்து வணங்கக்
( கண்டேன் நான் கண்ணனை )
உன் கழலடி தொழலே இன்பம்
அறியாமையில் மூழ்கியவர்களை
மந்தார மலையை உயர்த்தும் ஆமைக்கு
ஒப்பாக உள்ளது உன் நுனிக்கால்
அடைக்கல மடைந்த என் அறியாமை
துன்பங்கள் களைய வேண்டியே
( கண்டேன் நான் கண்ணனை )
குருவாயூரின் தலைவனே அருட்கடலே
கிருஷ்ணா.! உன் உறுப்புகளில் திருவடிகளே
சிறந்தவை மோட்சம் தருபவை தலைவைத்து
பற்றவே வந்த எனைக் காத்தருளக்
( கண்டேன் நான் கண்ணனை.)
”பாகவதசாரம்” என்றும் அழைக்கப்படும் நாராயணீயம்
எனும் நூல் 1560-ம் ஆண்டு மேலப்பத்தூர் எனும் ஊரில் பிறந்த நாராயண
பட்டத்திரி என்பவரால் பாடப் பட்டது. வாத நோயால் உழன்றவர் நாராயணீயம் பாடி நலம்
பெற்றார் என்றும் தெரிகிறது. நூறு தசகங்கள் கொண்ட நூல் நாராயணீயம் ஒவ்வொரு
தசகத்திலும் பத்துக்குக் குறையாத பாட்டுக்கள், மொத்தம் 1034 கொண்டது.
பகவானின் இயல்பிலும் பெருமையிலும் தொடங்கி கேசாதி பாதம் வரை போற்றி வணங்கி
முடிக்கும் வண்ணம் அமைந்துள்ளன நாராயணீயம் பாடல்கள். நாராயணனின் பெருமைகளைப்
பாடுவதாலும் நாராயண பட்டத்திரியால் இயற்றப்பட்டதாலும் நாராயணீயம் என்ற பெயரோ.?
இந்த நாராயணீயம் பாராயணம் செய்தால் நலமுண்டாகும் என்னும் நம்பிக்கை
பக்தர்களிடையே காணப் படுகிறது. இந்த நாராயணீயம் பற்றிய எந்த விஷயமும் தெரியாமலேயே
என் மனைவி 40 ஆண்டுகளுக்கு முன் இந்த நூலை வாங்கிப் படிக்க ஆரம்பித்தார். சம்ஸ்கிருதத்தில்
உள்ள இதனை உச்சரிப்புப் பிறழாமல் படிக்க வடமொழி அறியாதவர்களுக்கு பயிற்சி மிகவும்
தேவை.
இங்கு நாங்கள் இருக்கும் பகுதியில் “ அகில இந்திய விஷ்ணு சகஸ்ரநாம மண்டலியில்” அங்கம் வகிக்கும் ஐயப்பன் விஷ்ணு சகஸ்ர நாம மண்டலியின்
குழுவினர், வாரம் ஒரு முறை குழுவாக இதனைக் கோயிலில் பாராயணம் செய்கின்றனர். இதே
பாராயணம் அந்த குருவாயூரப்பன் முன்னிலையிலும் செய்ய விழைந்தனர். பல நாட்கள்
முன்பாகவே திட்டமிட்டு அதற்காகப் பாடுபட்டு பாராயணம் செய்தும் முடித்தனர்.
நாராயணீயம் பாராயணம் பற்றிக் கூறும்போது நான் இரண்டு விஷயங்களைப் பகிர்ந்து
கொள்ள விரும்புகிறேன். என் மூத்த பேரனுக்கு பெயர் சூட்டலின் போது தேர்ந்தெடுத்த
பெயர் “விபு”.என்பதாகும்.
நாராயணீயத்தில் ஆங்காங்கே ஆண்டவனைக் கூப்பிடும் முறையாக இது வருகிறது. இரண்டாவதாக
அவதாரக் கதைகள் பற்றிப் பதிவிட்டுக் கொண்டிருந்த நான் கிருஷ்ணாவதாரக் கதையை “
கிருஷ்ணாயணம்” என்று எழுதி இருந்தேன்.
கண்ணனின் அவதாரத்தில் நிகழ்ந்த பல
சம்பவங்களின் நிகழ்வுகளைக் கோர்வையாகக் கூற எனக்கு நாராயணீயமே வழிகாட்டியாக
இருந்தது.
குருவாயூரில் அண்மையில் ‘சம்பூர்ண நாராயணீய நித்ய பாராயண மண்டபம்’என்று நிறுவி இருக்கிறார்கள். கிழக்கு நடையின் எதிரே
சற்று வலப் பக்கத்தில் அமைந்திருக்கிறது. அங்குதான் இந்தப் பாராயணம் நடைபெற்றது.
பெங்களூரில் இருந்து சுமார் 40 பெண்கள் ( அனைவரும் நாற்பது வயதைத்
தாண்டியவர்கள் ) ட்னமிழ் மலையாள கன்னட மொழியினர் சேர்ந்து ஒருங்கிணைந்து பாராயணம்
செய்தனர். மேடையில் கிருஷ்ணனின் உருவப் பொம்மைகள் சுமார் 20 க்கு மேல் வரிசையாக
வைக்கப் பட்டிருந்தன. கன்னட வழக்கப்படி பஞ்சு மாலைகளும் சார்த்தப் பட்டன.
கண்ணனுக்குப் படைக்க என்று பலவகை இனிப்பு வகைகளுடன், சீடை முறுக்கு போன்ற பல்வேறு
உணவு வகைகளும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தன. பூவையர்கள் பாராயணம் செய்பவர்கள்
என்று ( வாயனக் காரர்கள் என்று மலையாளத்தில் கூறுகின்றனர் )அடையாளப் படுத்திக்
கொள்ளப் ப்ரௌன் நீற சேலை உடுத்தி இருந்தனர். காலை சுமார் 6 மணிக்குத் துவங்கி
இடைவிடாப் பாராயணம் முடிய மதியம் 12 மணி ஆகிவிட்டது.
குருவாயூருக்குப் பல முறைப் பயணம் செய்துள்ள நாங்கள் ஒவ்வொரு முறையும் ஏதாவது
மாற்றத்தைக் காண்கிறோம். முன்பு போல் கோயிலுக்குச் சென்று மனம் ஒன்றி தரிசனம்
செய்வது மிகவும் கடினமாக உள்ளது. தரிசனத்துக்கு வருபவர் எண்ணிக்கை எண்ணிலடங்காமல்
போகிறது. அதுவும் உதயாஸ்தமனப் பூசை என்று இருந்து விட்டால் கோயிலின் நடையை
அடிக்கடி மூடி விடுகிறார்கள். மணிக்கணக்கில் வரிசையில் நிற்க வேண்டி உள்ளது.
குருவாயூரில் சடங்குகளுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். இந்த வெயில்
காலத்தில் ஆண்கள் மேலாடையின்றி ஒருவரை ஒருவர் நெருக்கி . அப்பப்ப்ப்பா ஒவ்வொரு முறையும் சலிப்பே அதிகம் உண்டாகிறது.
கூட்ட நெரிசலில் பெண்கள் மேல் இடிக்கக் கூடாது என்று எண்ணினால் , அவர்களுக்கோ
அந்தக் கவலை ஏதுமின்றி நம்மையே நெருக்கி யடித்து முன்னேறுகிறார்கள். அண்மைக்
காலமாக வயதில் மூத்தவர்களுக்கென்று மாலையில் 4.30 முதல் 5.30 வரை தனி வரிசை
இருக்கிறது. அதனால் கண்ணனின் தரிசனம் கிடைத்தது. குருவாயூரப்பனின் விக்கிரகம்
சிறியது. சுமார் 30 அடி முன்னால் இருந்துதான் ஓரிரண்டு வினாடிகள் தரிசனம்
செய்யலாம். இந்த முறை தரிசனம் செய்யும்போது எங்கும் நிறைந்த உருவம் இல்லாதவனை
படங்களில் காணும் உருவத்தை நினைத்து வழிபட்டேன்.
கோயிலுக்கு கிழக்கு மேற்கு என்று இரண்டு வாசல்கள் உள்ளன. இந்த முறை என்
மாமியார் கூறி இருந்தபடி மேற்கு வாயிலில் இருந்து ஸ்ரீகோயிலின் கர்ப்பக்கிருக
விதானத்தையும் கொடி மரத்தின் உச்சியையும் ஒரே இடத்தில் காண முடிந்தது. இது இதுவரை
நான் அறியாதது.
பிருகஸ்பதியும்( குரு ) வாயுவும் சேர்ந்து கட்டியதால் குருவாயூர் என்று பெயர்
வந்ததாகச் சொல்வார்கள். 1970-ம் ஆண்டு குருவாயூர் கோயிலில் பயங்கரத் தீ விபத்து
நடந்தது ஸ்ரீ கோயிலை சுற்றி இருந்த விளக்கு மாடம் முழுவதும் தீயால் சேதப் பட்ட
போதும் ஸ்ரீகோயிலும் ஐயப்பன் வினாயகர் சன்னதிகளுக்கு எந்த சேதமும் நிகழவில்லையாம்.
கர்மயோகம் பக்தியோகம் ஞான யோகம் என்று ஆண்டவனை அடைய மூன்று மார்க்கங்களில் சாதாரணமானவர்
அவரவர் கடமைகளைச் செய்து பலனை அவனிடம் விட வேண்டும் என்றே நினைக்கின்றனர். ஞான
யோகம் சாதாரணர்களுக்குப் புரிவது கடினம். எது நடந்தாலும் அவனே சரணாகதி என்று அவன்
தாள் பற்றுவதும் எளிது போல் தோன்றுகிறது. இருந்தாலும் ஒரு பதிவின் பின்னூட்டமாக
நான் எழுதி இருந்தது இங்கும் தெரிவிக்கலாம் என்று தோன்றுகிறது.
-----------------------------------------------------------
.
(சில நாட்களாகப் பதிவுலகுக்கு வர முடியவில்லை. அதில் ஒரு காரணம் நான் ஊரில் இல்லாதது. மற்றொரு காரணம் என் கணினியில் ups செயலிழந்து விட்டது சரிசெய்து இதோ மீண்டும்)
ReplyDeleteபதிவின் முதல் வரிகள்...
இனிய தெய்வீக பயணம்... வியப்பூட்டும் தகவல்களுக்கும் நன்றி ஐயா...
ReplyDeleteபாராட்டுகள்.
ReplyDeleteஉங்கள் பாணியில் பட்டவர்த்தனமான கோணத்துடன் குருவாயூரப்பனை தரிசித்தேன்.
ReplyDeleteஅருமை பாலு சார். நிறைய எழுதியிருக்கிறீர்கள். இந்த எழுத்துதான் உங்கள் இளமை.
தெய்வ மணம் கமழும் பயணம் அய்யா
ReplyDeleteகுருவாயூர் பற்றிய தகவல்கள் மிகவும் உபயோகமானவை. முதியோர்களுக்காக தரிசன் நேரம் ஒதுக்கப் பட்டிருப்பது சௌகர்யம். எல்லாக் கோவில்களிலும் இதைப் பின் பற்றினால் நலம்.
ReplyDeleteஅறிந்த கோவில் அறியாத தகவல்கள்.
நன்றி.
எது நடந்தாலும் அவனே சரணாகதி என்று அவன் தாள் பற்றுவதும் எளிது போல் தோன்றுகிறது.
ReplyDeleteஅனுசரிக்கமுற்ப்பட்டால் அதன் கடினம் புரியும் ..
அவரவர் அகந்தை சரணாகதிக்கு தடையாக நிற்கும் ..
அகந்தைக்கிழங்கைக் வேரோடு
அகற்ற இறைவன் கருணையினால் தான் இயலும் ..
அவனருளாலே
அவன் தாள் வணங்கி ..!
//கர்மயோகம் பக்தியோகம் ஞான யோகம் என்று ஆண்டவனை அடைய மூன்று மார்க்கங்களில் சாதாரணமானவர் அவரவர் கடமைகளைச் செய்து பலனை அவனிடம் விட வேண்டும் என்றே நினைக்கின்றனர். ஞான யோகம் சாதாரணர்களுக்குப் புரிவது கடினம். எது நடந்தாலும் அவனே சரணாகதி என்று அவன் தாள் பற்றுவதும் எளிது போல் தோன்றுகிறது.///
ReplyDeleteநீங்கள் சொல்வது சரி சரணாகதி தத்துவம் எளிமையானது.
உங்கள் குருவாயூர் பயணவிளக்கம் மிகவும் பயனுள்ளது.
பலவருடங்களுக்கு முன்பு போனது குருவாயூர்,
போக வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தி விட்டீர்கள்.
உங்கள் மனைவிஅவர்களின் நாராயணீயம் பாராயணம் சிறப்பாய் நடந்தமை அறிந்து மகிழ்ச்சி.
இந்த நாராயணீயம் பாராயணம் செய்தால் நலமுண்டாகும் என்னும் நம்பிக்கை பக்தர்களிடையே காணப் படுகிறது. //
ReplyDeleteஉங்கள் நாராயணீயம் பாடல்கள் விளக்கம் கேட்டு எங்களுக்கும் நலமுண்டாக குருவாயூர் கண்ணன் அருள்புரிவார்.
நன்றி.
நாராயணீயம் எப்போ வேணாப் படிக்கலாம் என்பார்கள். குழந்தை பிறக்காதவர்கள் படித்தால் குழந்தை பிறக்கும் என்றும் ஐதீகம். தினம் பாராயணம் செய்வது போற்றத் தக்கதே.
ReplyDeleteகுருவாயூருக்கு ஒரே ஒரு முறை பதினைந்து ஆண்டுகள் முன்னர் போனேன். அப்போ சிவன் கோயில் போகலை. ஆனாலும் அப்போவே கூட்டம் தாங்கலை. உள்ளூர்க்காரங்க பார்க்கவும் விடலை. :( தள்ளு, முள்ளு தான் காலை மூன்று மணிக்கே.:(((((
பாடல்களின் முதல் இரண்டு மூன்று பத்திகள் பொடி எழுத்தில் வருகின்றன. அதை முடிந்தால் சரி செய்யுங்கள். படிக்க முடியவில்லை. :(
ReplyDelete@ திண்டுக்கல் தனபாலன்
@ டாக்டர் கந்தசாமி
@ சுந்தர்ஜி
@ கரந்தை ஜெயக்குமார்
@ ராஜலக்ஷ்மி பரமசிவம்
@ இராஜராஜேஸ்வரி
@ கோமதி அரசு
@ கீதா சாம்பசிவம்
வருகை தந்து கருத்துரைத்த அனைவருக்கும் என் நன்றி. ஒரு விஷயம் பகிர்ந்து கொள்ளத் தவறி விட்டேன். பெயர் பெற்ற இந்த வைணவத் தலம் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக இல்லை. ஏன் என்று தெரியவில்லை.
குருவாயூர் இனிய பயணம். விளக்கமாக அறிந்துகொண்டோம்.
ReplyDeleteநானும் உடன் பயணிப்பதாக உணர்ந்தேன்
ReplyDeleteவிஸ்தாரமாக கோவில் நடைமுறைகள் பற்றி
நல்லதையும் அது அல்லாததையும்
சொல்லிப்போனது புதிதாகச் செல்பவர்களுக்கு
அதிகம் உதவும்.விரிவான பகிர்வுக்கு
மனமார்ந்த நன்றி
குருவாயூர் எந்த ஆழ்வார்களாலும் பாடப்பட்டு திவ்ய ப்ரபந்தத்தில் அதைக் குறித்து இடம் பெற்றிருக்கவில்லை. பனிரண்டு ஆழ்வார்களாலும் பாடப்பட்டு நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில் இடம் பெற்றிருக்கும் வைணவ திருத்தலங்களே திவ்ய தேசங்கள் என அழைக்கப் படும்./ படுகின்றன.
ReplyDeleteகுருவாயூர்க் குழந்தை கண்ணனை கண்முன் கொண்டுவந்து நிறுத்திய அழகு வர்ணனை. நாராயணீயம் பற்றி இதுவரை அறிந்ததில்லை. இன்று அறிந்துகொண்டேன். குருவாயூருக்குச் சென்றுவந்த அனுபவத்தையும் எண்ணங்களையும் இனிதே பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி ஐயா.
ReplyDeleteகூட்டம் இல்லாத கோவிலே கிடையாது போல.
ReplyDeleteகுருவாயூர் பயணத்தை அனுபவிக்க வேண்டியது தான்.
முதியோருக்கெனத் தனி நேரம் நல்ல ஐடியா. ஒழுங்காக நடத்தினால் சரி.
விபுவே என்றால் என்ன?
ReplyDelete@ மாதேவி.
@ ரமணி.
@ கீதா சாம்பசிவம்.
@ கீதமஞ்சரி.
@ அப்பாதுரை
உற்சாகப் படுத்தும் கருத்துக்களுக்கு நன்றி. அதெப்படி குருவாயூர் கிருஷ்ணன் கோயில் ஆழவார்களால் பாடப் படாமல் போயிற்று.? அப்பாதுரை முதியோருக்காக தனிநேரம் அல்ல. தனி வரிசை .அவ்வளவுதான்.விபு என்றால் எங்கும் நிறைந்தவன் என்று பொருள் (பகவானைக் குறிக்கும்.)
தனி வரிசையினால என்ன பிரயோஜனம்? கடைசியில் கும்பல்ல தானே சேரணும்.. கூட்டத்துல நிக்குறப்ப கொஞ்சம் வசதியா இருக்குமா இல்லை தனி வரிசையிலும் முதியவர்கள் கூட்டமா?
ReplyDeleteதனி வரிசையினால என்ன பிரயோஜனம்? கடைசியில் கும்பல்ல தானே சேரணும்.. கூட்டத்துல நிக்குறப்ப கொஞ்சம் வசதியா இருக்குமா இல்லை தனி வரிசையிலும் முதியவர்கள் கூட்டமா?
ReplyDelete
ReplyDelete@/ தனிவரிசையிலும் கூட்டம் முதியவர்கள் கூட்டம் அதிகமா.?/
4.30 மணிக்குக் கோயிலில் முதியவர்களுக்கான வரிசை துவங்கும் என்று வெளியில் 4.00 மணிக்கே நின்றோம். 4.30 மணிக்கு கதவு திறந்து உள்ளே போனால் ஏற்கனவே அங்கு சுமார் 400 பேர் வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.
இவர்கள் எல்லோரும் மெயின் கும்பலில் சேர வேண்டியவர்களே.
நாரயணீயத்தை சப்தாஹமாக (பாகவத சப்தாஹம் போன்று 7 தினங்களில்) பாராயணம் செய்யும் முறை என்ன எனத் தெரிந்தால் எனக்கு மெயில் செய்யவும். ஏனெனில் நான் அடிக்கடி கணினி பார்ப்பவளோ ப்ளாக்குகள் படிப்பவளோ அல்ல. தாங்கள் மெயில் செய்து விட்டால் அவசியம் படிப்பேன். நன்றி
ReplyDeleteமீரா
my mail id- asg.meera@gmail.com
ReplyDeletethank u
meera
அருமையான தகவல்களுக்கு நன்றி ஐயா.
ReplyDeleteமேற்கு நடை தரிசனத்தகவல் எனக்கு இப்போதுதான் தெரியவந்தது. அடுத்தமுறை போனால்(!) கட்டாயம் அந்தப்பக்கம் போவேன்.
முதியோர்கள் நேரம் ஒதுக்கி இருப்பதும் புதுத்தகவல்.
நன்றிகள் பல.