SKY DIVE....!!!! (செய்வது எங்கள் பேத்தி.)
-------------------------------------------------------
’ வெலியச்சா, எனக்கு இந்த இடம் பிடிக்கலை”
” ஏம்மா... அப்படிச் சொல்றே..?”
“ பின்ன என்ன வெலியச்சா. இது ஒரு ஹாஸ்டெல் போல இருக்கு.”
ஒரு எட்டு வயது சிறுமி. தவிர்க்க முடியாத காரணங்களால் இவன் வீட்டில் விடப் பட்டிருந்தாள். இவன் மனைவியின் தம்பி மகள் அவள். இவன் மனைவியின் தம்பி இவர்கள் மகன் போல் இவர்களிடம் வளர்ந்தவன். அவன் படிப்பு முடிந்த நேரம் இவனுக்கு திருச்சியிலிருந்து விஜயவாடா மாற்றலாகி இருந்தது. விஜயவாடாவில் அனல் மின் நிலைய நிர்மாணப் பணிகள் துவங்கி இருந்த வேளை.டிப்லொமோ இன் மெகானிகல் இஞ்சினீரிங் முடித்திருந்தவனுக்கு ஒரு வேலை தேடித்தர வேண்டும் என்று எண்ணியிருந்த இவனுக்கே அவனை நிர்மாணப் பணியில் ஏதாவது வேலையில் அமர்த்த முடியும் என்றாலும் உறவினனுக்கு வேலை என்றால் ஏதாவது பேச்சு எழலாம் என்பதால் ஏதும் செய்யாதிருந்தான். இந்த நேரத்தில் இவனை விஜயவாடாவுக்கு வரவழைத்த இவனது மேலதிகாரிக்கு பர்லி என்னும் இடத்துக்கு மாற்றல் ஆக, அதற்கு முன் இவர்கள் வீட்டிற்கு வந்திருந்தார்.இவனது மச்சினனைப் பார்த்து யாரென்று விசாரிக்க விவரங்கள் தெரிந்ததும் இவனைக் கடிந்து கொண்டு அவனைத் தன்னுடன் பர்லிக்கு அழைத்துச் சென்று வேலையிலும் அமர்த்தினார். இன்று அவன் ஓரிரு ஆண்டுகளில் தனது ஓய்வுக்காகக் காத்திருக்கிறான்.
அன்று வந்த மின் அஞ்சல் ஒன்று பழைய நினைவுகளைக் கிளறிவிட்டது.இவனது மச்சினனின் அந்தப் பெண்தான் இவன் வீடு ஹாஸ்டெல் போல் இருக்கிறது என்று சொன்னவள். அவனது திருமணத்துக்குப் பெண் பார்த்திருந்தார்கள்.உறவிலேயே ; அவனது மாமா பெண். இந்தத் திருமணம் இவனது ஒப்புதலுக்காகக் காத்திருந்தது.மாமாவின் ஒப்புதல் இல்லாவிட்டால் நடக்காது என்று அவன் சொல்லியிருந்தான்.,மாமாவுக்கு உறவுகளில் திருமணம் கூடாது என்னும் கொள்கை இருப்பது அவனுக்குத் தெரியும். ஆனால் இவனது மாமியாருக்கோ தன் மகனை தன் அண்ணா பெண்ணுக்குக் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று ஊரறிந்த ஆசை. தந்தையில்லாப் பெண் என்று ஒரு கூடுதல் காரணம். இவனுக்கு ஒரு இக்கட்டான நிலை. மச்சினனுக்கும் தன் அம்மாவின் ஆசையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று விருப்பம். ஆனால் தன்னை வளர்த்துப் படிக்க வைக்கும் மாமாவின் கொள்கையும் தெரியும். இருதலைக் கொள்ளி எறும்பானான். இவனுக்கு உற்றார் எல்லோரது அபிலாக்ஷைகளையும் மதிக்காது திருமணத்துக்கு தடைபோடவும் எண்ணமில்லை. மருத்துவர்களின் எண்ணம் குடும்பத்தில் மணமுடித்தால் சந்ததிகளுக்கு நல்லதல்ல என்பதாலும் வீணே எதற்கு சான்ஸ் எடுக்க வேண்டும் என்பதாலும்தான். கடைசியில் மச்சினனிடமே அந்தப் பெண்மேல் அவனுக்கு ஆசையா என்று கேட்டான். அவனும் ஆம் என்று சொல்லவே இவனும் திருமணத்துக்கு ஒப்புதல் கூறினான்.
என்ன காரணமோ மச்சினனுக்குப் பிறந்த குழந்தைகள் எதுவுமே தக்கவில்லை. அப்படி யிருந்த வேளையில் பிறந்த பெண்தான்.இவனிடம் இவன் வீடு ஹாஸ்டெல் போல இருக்கிறது என்று குறைபட்டுக் கொண்டிருந்தாள் எந்தக் காரணம் கொண்டும் குழந்தைக்குப் படிப்பில் பிடிப்பு விட்டுப் போகக் கூடாது என்ற காரணத்துக்காகவே ஸ்ட்ரிக்டாக டைம் டேபிள் போட்டு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான் இவன்.சின்னக் குழந்தைதானே .மனதில் தோன்றியதைச் சொல்லிவிட்டாள். அந்தப் பெண் இப்போது வளர்ந்து பெரியவளாகி இஞ்சினீரிங் முடித்து நல்ல பணியில் அமர்ந்து கம்பெனி வேலையாக அவளை இங்கிலாந்துக்கு அனுப்பி இருக்கிறது. அவளிடம் இருந்து வந்த மின் அஞ்சல் தான் நினைவுகளை கிளறிவிட்டது தாய் தந்தையருக்குப் பிறந்து உயிருடன் இருக்கும் ஒரே பெண், இவன் மச்சினன் கூறுவதுபோல் ஆணின் தைரியமும் திறமைகளும் கொண்டு அதே நேரத்தில் ஒரு நல்ல பெண்ணின் குணங்கள் எல்லாம் கொண்டு வளர்ந்தவள் இங்கிலாந்தில் தான் SKY DIVING செய்ததை மின் அஞ்சலில் வீடியோவாக அனுப்பியிருந்தாள். அந்த வீடியோவை இவன் பதிவில் இணைத்து வெளியிட இவன் செய்த முயற்சிகள் வெற்றி பெற வில்லை. இருந்தாலும் விடாக்கண்டனாக அதை GOOGLE-ல் SHARE செய்து வெளியிட்டிருக்கிறான். இந்தப் பதிவுக்கு முன்னேயே அதை ஷேர் செய்து இருப்பதால் கூகிளில் நண்பர்கள் அதனைக் காணக் கூடும். கண்டவர்கள் இவனுக்குத் தெரிவித்தால் மகிழ்ச்சியடைவான்..
எங்களுக்குப் பிறக்காத நாங்கள் வளர்த்து ஆளாக்கியவன் மகள் எங்கள் பேத்திதான் என்று எண்ணினாலும் பதிவை எழுதும்போது என்னை மூன்றாவது ஆளாக எண்ணியே இப்பதிவை எழுதி இருக்கிறேன்,
.
இணைப்பு எங்கு உள்ளது ஐயா...?
பதிலளிநீக்குஆனந்தப் பகிர்வுகள்...!
பதிலளிநீக்குநினைச்சேன், உங்க சொந்தக்காரப் பெண்ணாகத் தான் இருக்கும்னு. முதலில் கூகிளில் வீடியோவைப் பார்த்துட்டேன். நல்லா இருக்கு. இப்போதைய பெண்கள் எல்லாவிதமான அட்வென்சர்களிலும் பங்கெடுக்கின்றனர். வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதனபாலன் சார் போலவே எனக்கும் இணைப்பு எங்கே என்று தெரியவில்லையே!
பதிலளிநீக்குமெயிலில் பார்க்க வேண்டுமோ?
அட்டகாசம் ஐயா...
பதிலளிநீக்குபார்க்க ஆர்வம் உள்ளவர்கள் : → இங்கே ← சொடுக்கவும்
அல்லது : https://plus.google.com/100473112449337212237/posts/exNGuCksWEK
ரசித்தேன்.
பதிலளிநீக்குAwesome! Congratulations to her! இப்படி ஒரு சுதந்திரப் பறவையாய் சிறகு விரித்துப் பறக்க இருந்தவளுக்கு அன்றைய அட்டவணை வாழ்க்கை அலுத்துப்போனதிலும், வீடு, ஹாஸ்டல் போல் தோன்றியதிலும் வியப்பென்ன?
பதிலளிநீக்குவானளாவிப் பறந்த வளர்ப்புப் பேத்தியின் பெருமையை வலையுலகில் பகிர்ந்துகொண்ட தங்களுக்கு நன்றி ஐயா.
தாங்கள் பகிர விரும்பிய பதிவை எங்களுக்குச் சுட்டி, நாங்கள் கண்டு ரசிக்க உதவிய திண்டுக்கல் தனபாலனுக்கு சிறப்பு நன்றிகள்.
பதிலளிநீக்கு@ திண்டுக்கல் தனபாலன்
மிக்க நன்றி. இணைப்பு கொடுக்கத் தெரியாமல் கூகிள் ப்ளஸ்ஸில் ஷேர் செய்திருந்தேன். நீங்கள் சுட்டி கொடுத்ததில் பலருக்கும்பலனாயிருக்கும்
பதிலளிநீக்கு@ இராஜராஜேஸ்வரி
@ கீதா சாம்பசிவம்
@ ராஜலக்ஷ்மி பரமசிவம்
@ கீத மஞ்சரி
என் பெருமையில் பங்கெடுத்துப் பாராட்டி எழுதியதற்கு அனைவருக்கும் நன்றி.
பதிலளிநீக்கு@ xyz
இது ஒரு புதியவரின் கருத்தோ என்று பார்க்கப் போனால், அட நம்ம டாக்டர் சார். அந்த க்ரிஸ்ப்பான பின்னூட்டமே அவரைக் காட்டிக்கொடுத்து விட்டது. வருகைக்கு நன்றி ஐயா.
வாழ்த்துக்கள்! கண்டேன்! ஒளியும்! ஒலியும்! தைரியமான பொண்ணுதான்!
பதிலளிநீக்குதிண்டுக்கல் தனபாலன் உதவியால் காணொளி பார்க்க முடிந்தது பாராட்டுக்கள்
பதிலளிநீக்குமாலி
பதிலளிநீக்கு@ தி. தமிழ் இளங்கோ
@ v. mawley.
பதிவில் எழுதி இருந்தபடி காணொளியைப் பதிவில் இணைக்க முடியாமல் google+ ல் பப்ளிக்காக ஷேர் செய்திருந்தேன். வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி.
இது ஏற்கெனவே பார்த்துட்டேனே!
பதிலளிநீக்குbreathtaking!
பதிலளிநீக்குசுட்டிக்கு நன்றி தனபாலன்!