அறியாமை எனும் வரம்.
--------------------------------
இன்று மே மாதம் ஏழாம் நாள். சில நாட்கள் மறக்க முடியாதவை.அந்த நாளின் நினைவுகள் மனதில் மோதி ஒரு introspection-க்கு வழி வகுக்கிறது.என் இரண்டாம் மகன் பிறந்த நாள். நாங்கள் அப்போது BHEL குடியிருப்பில் இருந்தோம்.அன்று விடியற்காலை சுமார் நான்கு மணி இருக்கும். என் மனைவி எழுந்து குளித்து அறையில் அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தாள். நான் விழித்துக் கொண்டு என்ன ஆயிற்று என்று கேட்டேன். பிரசவ நேரம் நெருங்கி விட்டது போல் தெரிகிறது என்றாள். நானும் என் நண்பனும் ( அவன் அப்போது என்னுடன் தங்கிக் கொண்டிருந்தான்)தயாராகி BHEL மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றோம். அது எங்கள் வீட்டில்
இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கும். நான் ஒரு புறமும் அவன்
மறுபுறமும் நடந்து வர அவளைக் காலையில் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச் சென்றோம். அவளது
நிலையைப் பரிசோதித்த டாக்டர் அவளை நேராக லேபர் வார்டில் அட்மிட் செய்தார். அவ்வளவு
தூரம் நடந்து வந்தீர்களா என்று ஆச்சரியத்துடன் கேட்டார். அட்மிட் செய்த ஒரு மணி
நேரத்தில் என் இரண்டாம் மகனைப் பிரசவித்தாள்.
இப்பொழுதும் ஏதாவது பேச்சின் ஊடே “ என்னைப் பிரசவத்துக்கு நடத்திச்
சென்றீர்களே . ஏதாவது ஏடாகூடமாய் நடந்திருந்தால் “ என்று சொல்லிக் காட்டுவாள்.
என்ன செய்வது. ? சில நேரங்களில் IGNORANCE IS BLISS என்று நினைத்துக் கொள்வேன். அவளை அன்று லேபர்
வார்டில் பார்த்தபோது அவள் முகத்தில் தெரிந்த வலியின் வேதனையைக் கண்டு தீர்மானம் செய்தேன்..இதற்கு மேல் குழந்தைகள் வேண்டாம். இவள்
இந்த அவஸ்தைக்கு இனி உள்ளாகக் கூடாது” என்று.
இரண்டாவது குழந்தை பெண்ணாக இருக்க விரும்பினாலும் ஆணாகப் பிறந்தாலும் மூன்றாவது
குழந்தை என்னும் பேச்சுக்கே இடம் கொடுக்கவில்லை.
என் மாமியார் சமையலை எல்லாம் முடிச்சு, குழந்தை பிறக்க வேண்டிய அறையையும் மற்ற சாமான்களையும் வலி வந்த உடனே அவங்களே தயார் செய்து கொண்டு பின்னர் மத்தவங்களைத் துணைக்கு அழைப்பாராம். மனோபலம், உடல்பலம் இரண்டும் சேர்ந்து இருந்த ஒரு நற்காலம் அது.
பதிலளிநீக்குஅறியாமைனு சொல்ல முடியாது, நீங்க யதார்த்தமா எடுத்துட்டு இருக்கீங்க, அவ்வளவு தான்.
பதிலளிநீக்குரொம்ப ரிஸ்க் எடுத்திருக்கீங்க. ஆனா நீங்க வாகனத்தைத் தேடிப்போயிருந்தா, (அங்க ஏது வாகனம்?) என்ன ஆகியிருக்கும்னு சொல்ல முடியாது!
பதிலளிநீக்குஅறியாமை எனும் வரம்.
பதிலளிநீக்குமறக்க முடியாத மகன் பிறந்த நாளுக்கு இனிய வாழ்த்துகள்..!
உங்கள் மகனுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா... நல்ல முடிவும் எடுத்துள்ளீர்கள்... உங்களுக்கும் வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஉங்கள் மகன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஉங்கள் மனைவியும் அன்று ஒன்றும் சொல்லாமல் மனவலிமையுடன் உங்களுடன் நடந்து வந்து இருக்கிறார்கள் அவர்களை பாராட்ட வேண்டும்.
உங்கள் மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.லேட்டாகி விட்டதோ.
பதிலளிநீக்குஅப்படியானால் belated wishes.
பல சமயங்களில் அறியாமை வரமே தான் என்றே தோன்ற வைக்கும்.
பிரமிக்கவும் வைக்கும்.
அருமையான அனுபவம். அருமையான தீர்மானம்.பிரசாத் உங்கள் மகனாகப் பிறந்தது அவன் செய்த வரம். நேற்றே நான் அவனை வாழ்த்திவிட்டேன்.அருமையான நண்பனைக் இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி ஐயா.
பதிலளிநீக்குஅறியாமை வரம் தான்! எல்லாம் நன்மையாய் முடிஞ்சதும் வரம்தான்!
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்
என் செய்கை மனோபலத்தின் விளைவல்ல. அறியாமை என்றே தோன்றுகிறது. ஒரு வேளை நீங்கள் சொல்வதுபோல் “யதார்த்தமாக எடுத்துக்கொண்டு “ இருந்தேனோ என்னவோ.
@ டாக்டர் கந்தசாமி
வாகனமெல்லாம் லகுவாகக் கிடைத்திருக்கும். எனக்குத்தான் எதுவுமே தோன்றவில்லை
@ இராஜராஜேஸ்வரி
@ திண்டுக்கல் தனபாலன்
@ கொமதி அரசு
@ ராஜலக்ஷ்மி பரமசிவம்
@ உமேஷ் ஸ்ரீநிவாசன்
@ ஷைலஜா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அம்மா கேட்பதில் தவறொன்றும் இல்லையே.... ஏதாவது ஏடாகூடமாக ஆகியிருந்தால்...?
பதிலளிநீக்குதன்னால் முடியவில்லை என்று சொல்லாமல் அந்த வேதனையிலும் அவர்கள் நடந்துவருகையில்.... உங்களைக் காலமெல்லாம் சாட ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறதே என்று உள்ளூர மகிழ்ந்திருப்பாரோ? Just kidding!
பிரசவத்தின் இறுதிக்கணம் வரையிலும் இதுபோல் ஆக்டிவாக இருந்ததால்தான் அந்நாளில் சிசேரியன் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் இருந்தது.
மகனுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமனைவியின் துணிவுக்கு பாராட்டுகள்.
தங்கள் மகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஎன் மனைவி, பிரசவ வலி எடுத்தபின் ஆட்டோ பிடித்து வழியில் எஸ் டி டி பூத்தில் நிறுத்தி அப்போது வேலையில் இருந்த தன் அம்மாவுக்கு போன் பண்ணிவிட்டு ஆஸ்பிட்டல் போனாள். சுகப்ரசவம். கீதா சாம்பசிவம் அவர்கள் சொல்வது போல் மனோபலம் தான்!
பதிலளிநீக்குதலைப்பும் பகிர்வும் மிகப் பொருத்தம்
பதிலளிநீக்குபல சமயங்களில் அறிவு சாபமாகவும்
அறியாமையே வரமாகவும் அமைந்ததை
கண்டு வியந்திருக்கிறேன்
மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்
தலைப்பும் பகிர்வும் மிகப் பொருத்தம்
பதிலளிநீக்குபல சமயங்களில் அறிவு சாபமாகவும்
அறியாமையே வரமாகவும் அமைந்ததை
கண்டு வியந்திருக்கிறேன்
மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்
உணராமல் நேர்ந்த தவறுக்கு சிலுவையை சுமக்க வேண்டிய அவசியமில்லை என்பது எனது அபிப்பிராயம்.
பதிலளிநீக்கு//என்னவாயிருந்தாலும் அவளுக்கு என் அறியாமையை ( அலட்சியம் என்பாள் அவள் ) சுட்டிக்காட்ட அது ஒரு வாய்ப்பாக இருக்கிறது (இன்றும்) //
அப்புறம் உங்கள் வீட்டம்மாதானே நடந்துவிடலாம் என்று முதலில் யோசனை கூறினார்கள். மூன்று முறை சொன்னால் எதுவும் உண்மை!.
//அப்புறம் உங்கள் வீட்டம்மாதானே நடந்துவிடலாம் என்று முதலில் யோசனை கூறினார்கள். மூன்று முறை சொன்னால் எதுவும் உண்மை!.//
பதிலளிநீக்குThis is just for joke. Don't mistake me.
தங்கள் மனனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஇங்கே அறியாமை என்பது இடக்கரடக்கலா?
பதிலளிநீக்குஅந்த நிலையிலும் காலை நாலு மணிக்குக் குளித்துத் தயாரான உங்கள் மனைவி.. சொற்களுக்கப்பாற்பட்ட சுறுசுறுப்பு.
அன்னையர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அப்பாதுரை, சரியான சமயத்தில் வாழ்த்து.
பதிலளிநீக்குஅன்னையர் தின வாழ்த்துகளைத் தெரிவிச்சுடுங்க சார். :)))))