Sunday, August 25, 2013

தொடரும் நடப்புகள் நிகழ்வுகள் ஒரு கருத்து


                        நாம் என்னதான் செய்யப் போகிறோம்..
                                            ( புலம்புவது தவிர )
                                             --------------------



மீண்டும் ஒரு பெண் சிதைக்கப் பட்டிருக்கிறாள்,அதுவும் மும்பையில். அதுவும் மும்பையில் என்று எழுதும்போது மும்பை மட்டும் மேலோர்கள் மட்டும் இருக்கும் இருப்பிடமா எனும் கேள்வி எழுகிறது. மும்பையில் வாழ்க்கை முறை பெண்களும் எல்லா நேரங்களிலும் வெளியே சென்று வரப் பழக்கப் பட்டவர்கள். ஒரு cosmopolitan வாழ்க்கை முறை. இம்மாதிரி நிகழ்வுகள் நடக்கும் வாய்ப்பு குறைவு என்பதே ஆகும். ஒவ்வொரு முறையும் இம்மாதிரி சம்பவங்கள் நடக்கும்போது மனம் ஆத்திரப் படுவதும், அட்டைகள் ஏந்தி எதிர்ப்பு தெரிவிப்பதும். குற்றவாளிகள் தண்டிக்கப் படுவார்கள் என்று காவல்துறையும் அரசாங்கமும் கூறுவது ஒரு ரிசுவல் ஆகிவிட்டது. மனிதனுக்க் வக்கிர எண்ணங்கள் இருக்கும்வரை இம்மாதிரி நிகழ்வுகள் தொடரும். ஆனால் எதையும் செய்து தப்பிக்கலாம் என்னும் எண்ணம் மட்டும் வரக் கூடாது சென்ற ஆண்டு டெல்லியில் நடந்த பலாத்காரத்துக்குக் காரணமானவரே இன்னும் தண்டிக்கப் படவில்லை. குற்றவாளிகளின் வக்கீல்கள் காலம் கடத்துகின்றனர் என்று ஒரு வாதம் வைக்கப் படுகிறது. ஒரு குற்றவாளி தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப் படக் கூடாது என்னும் கரிசனமே இம்மாதிரி நீதி வழங்கப் படுவதன் தாமதத்துக்குக் காரணமாயிருக்கலாம். என்ன இருந்தாலும் justice delayed is justice denied  என்பது மறுக்க முடியாதது. நம் இந்தியகுணாதிசயமே எல்லாக் காரியங்களையும் இழுத்தடித்தால்  அது மறக்கப்பட்டுவிடும் என்னும் உயர்ந்த எண்ணமோ என்னவோ. ?

சரி. இம்மாதிரி நிகழ்வுகளுக்குக் காரணம் என்ன. ஆணாதிக்க மனோபாவமா.?நம் சமூகத்தில் இருக்கும் வாழ்வின் நெறி முறைகளா.?இம்மாதிரி நம் நாட்டில் மட்டும்தான் நடை பெறுகிறதா. இல்லை உலகளாவிய நடப்புதானா. ? கேள்விகள். .... பெரும்பாலும் இம்மாதிரி ஈனச் செயல்களில் ஈடுபடுவோர் தம் வசத்தில் இருப்பதில்லை என்றே தோன்றுகிறது. குடிக்கோ போதைக்கோ அடிமையாய் இருந்திருக்க வேண்டும்..அது எப்படி ஒரு பெண்ணைச் சீரழிக்கும்போது அருகில் இருப்பவரும் சேர்ந்து இச்செயலில் ஈடுபடமுடியும். எந்த ஒரு தனி மனிதனும் தன் வசத்தில் இருக்கும்போது இம்மாதிரிச் செயல்களில் ஈடுபடுவான் என்று நம்பமுடியவில்லை. ஆனாலும் நடக்கிறதே.patriarchial society ல் தான் இம்மாதிரி நடக்கும். பெண்ணுக்குச் சுதந்திரம் என்பதை இந்த சமூகத்தால் சீரணிக்க முடியவில்லை என்றே தோன்றுகிறது சமூக ரீதியில் பெண் இன்னும் அடிமையாகத்தான் எண்ணப்படுகிறாள் நடத்தப் படுகிறாள். பெண்ணுக்கு உரிமை அதிகம் என்னும் matriarchial சமூகமாயிருந்த கேரளமே patriarchial  சமூகமாக மாறி வருகிறது.

இம்மாதிரி நிகழ்வுகளுக்குக் காரணம் இந்த சமுதாயத்தில் இருக்கும் ஏற்றதாழ்வுகளோ என்னும் எண்ணம் எனக்கெழுகிறது. இந்த மும்பை நிகழ்வுகளில் சம்பந்தப் பட்டவர்கள் தங்களது இருபதுகளில் இருப்பவர்கள். எத்தனையோ கனவுகள் அவர்களுக்கு இருக்கலாம். ஒரு சாராரின் வாழ்க்கை நிலையோடு தங்களை ஒப்பிட்டு நோக்கும்போது எதிர்மறை எண்ணங்கள் உதயமாகலாம். திரைப்படங்களில் காண்போரின் வாழ்க்கைமுறை சித்தரிக்கப்படுவதில் இருந்து தங்களது முடியாமைகள் மேலோங்கி நிற்கலாம். அதற்கேற்றவாறு தங்களது அழகைப் பறைசாற்றும் பல பெண்களைக் காணும்போது இயலாமையைதாங்கிக் கொள்ள முடியாத மனசு வக்கிர எண்ணங்களுக்கு இடம் கொடுக்கலாம். மும்பையில் நடந்த நிகழ்ச்சி திட்டமிட்டு செய்யப் பட்டது போல் தெரியவில்லை. காலாபானி எனும் சேரியில் வசிக்கும் அவர்களுக்கு சில நிமிஷ வெறியும் தாங்களும் ஹீரோக்களே என்று நிலைநாட்டும் நாட்டமும். இம்மாதிரி செயல்களை செய்யத் தூண்டி இருக்கலாம் THAT MAY BE JUST A SHOW OF BRAVDO அந்த நேரத்தில். 
இதற்குத் துணை போகும் பல்வேறு காரணங்களில் எனக்கு இந்தத் திரைப்படங்களும் விளம்பரங்களுமே முக்கியக்  காரணமாகத் தெரிகிறது திரைப்படங்கள் நீதி போதிக்க அல்ல. வெறும் பொழுது போக்க உதவும் சாதனமே என்று கூறுவோர் இதனை ஒப்புக்கொள்ளத் தயங்கலாம். ஆனால் DISPARITY IN LIVING STYLES AND A FEELING OF HELPLESSNESS  சில நேரங்களில் இம்மாதிரியான செயல்களுக்குக் காரணமாகிறதோ என்றும் தோன்றுகிறது. 
பெண்ணுரிமை பற்றிப் பேசுவோர் பெண்களைப் போகப் பொருளாக சித்தரிப்பதைத் தவிர்த்தால் இந்த மாதிரி செயல்கள் குறையலாம். எத்தனை பெற்றொர் வயது வந்த தங்கள் மக்களுடன் இந்தத் திரைப் படங்களைப் பார்க்க முடியும் என்று நெஞ்சைத் தொட்டு சொல்லட்டும். ஏதாவது சொல்லப் போனால் ஜெனெரேஷன் காப் என்று சொல்வார்கள். எங்கள் ஜெனெரேஷனில் இம்மாதிரி நிகழ்வுகள் நடந்திருந்தாலும் அவை மேல் தட்டு வர்க்கம் தமக்கு அடங்கியவர்களிடம் பிரயோகித்ததாய் இருந்திருக்கும். 
இது போன்ற செயல்களுக்கும் நிகழ்வுகளுக்கும் நிலவும் ஏற்ற தாழ்வும் ஒரு முக்கிய காரணமாகப் படுகிறது. 

பெண்களைப் பெற்றவர்கள் எப்போதும் பயத்துடனும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். பள்ளிகளில் தற்காப்புக் கலையும் கட்டாயமாகப் போதிக்கப் படவேண்டும். But what you can do if the animals hunt in herds.as it happened in Mumbai.”

ஒரு வர்மா கமிஷன் சில வழிமுறைகளைப் பரிந்துரைத்தால் அதை ஒட்டு மொத்தமாக ஏற்க இந்த அரசியல்வாதிகளுக்கு என்ன தயக்கம்.?இந்த வியாதி நம் சமூகத்தில் இப்போதுதான் வேர்விடுகிறதா? வேரோடு கிள்ளி எறிய என்ன செய்ய வேண்டும். எனக்கு என்னவோ ஒரு தலை முறையே சீரழிந்து விட்டதோ என்ற சந்தேகமெழுகிறது. ஒழுக்கமான வாழ்வு முறைகளை வாழ்ந்து காட்ட வேண்டியவர்கள், பணம் சம்பாதிப்பதில் கவனம் செலுத்தி வாழ்க்கை நெறிமுறைகளைத் தொலைத்து விட்டார்களோ என்னும் கவலை எழுகிறது. என்னால் நான் ஒரு முறை எழுதியதை மீண்டும் நினைவு கூறாமல் இருக்கமுடியவில்லை.(இதைப் பார்க்க) 



ரூபாயின் மதிப்பு (?) சரிவு ,ஒரு புகம்பல் என்னும் எரிதழலின் பதிவைப் படித்தேன். நம் புலம்பலில் சிறிது நகைச் சுவையும் இருக்கட்டுமே.


 இந்தப் பதிவை நிறைவு செய்ய இதோ ஒரு எளிதான கேள்வி  I AM SURE YOU CAN SOLVE THIS.
உங்களிடம் ரூபாய் 15-/ இருக்கிறது. நீங்கள் சாக்கலேட் வாங்கப் போகிறீர்கள். ஒரு சாக்கலேட் விலை ரூ. ஒன்று. கடைக்காரர் ஒரு சலுகை தருகிறார். நீங்கள் வாங்கிய சாக்கலேட்டுகளின் மூன்று ராப்பர்களைக் ( WRAPPERS ) கொடுத்தால் அவர் உங்களுக்கு ஒரு சாக்கலேட் தருவார். இதோ கேள்வி. நீங்கள் பதினைந்து ரூபாய்க்கும் சாக்கலேட்டுகள் வாங்கினால் உங்களுக்கு எவ்வளவு சாக்கலேட்டுகள் கிடைக்கும்.?


  

17 comments:

  1. ஐயா, தண்டனைகள் கடுமையாகவும்,விரைவாகவும் நிறைவேற்றப் பட்டால் குற்றங்கள் குறைய வாய்ப்புண்டு. புதிருக்கு விடை 22.

    ReplyDelete
  2. விரைவாகவும் அதிகபட்டத் தண்டை வழங்கப்பட்டால் குறைய வாய்ப்பு உண்டு ஐயா

    ReplyDelete
  3. தனியொரு மனிதன் திருந்தி விட்டால் சிறைச்சாலைகள் தேவையில்லை!. நல் ஒழுக்கம் பேணுவது கூட கெளரவக் குறைவாக இருக்குமோ?..

    ReplyDelete
  4. தர்மத்தின் போக்கில் மனிதர்களை
    இருக்கவைத்து நாட்டில் இதுபோன்ற
    தவறுகள் நடைபெறாமல் செய்யலாம் என்றால்
    அறிவு தன் வீரியத்திக் காட்டி அவையெல்லாம்
    பொய்யான நாமே படைத்த கடவுளின் பெயரால்தான்
    சாத்தியம் என்பதால் அதை ஏற்காது
    நாம் சட்டத்திற்குத்தான் பயந்து வாழ்வேண்டிய
    சூழலில் அவர்களுக்கு தண்டனை கிடைத்தால் சரி
    இனி அடுத்து இது போன்று நடக்கையில்
    இதுபற்றி தீவீரமாக விவாதிக்கலாம்
    வேறு வழி ?

    ReplyDelete
  5. இதைப்பற்றி எழுதி மாளாது. தவறு வாழ்க்கை முறை, வளர்ப்பு முறை மாறியதில் இருந்து ஆரம்பம். அதைச் சொல்லப் போனால் பெண்ணடிமைத் தனம் என்பார்கள். :( பெற்றோரும் முக்கியக் காரணம் என்பதோடு திரைப்படம், பத்திரிகைகள், பெண்களின் ஆடை அலங்காரங்கள்னு சொல்லிக் கொண்டே போகலாம்.

    ReplyDelete
  6. சாக்லேட்டுக்கு விடை எல்லாரும் சொல்லிட்டாங்க. :))) வீடியோவை இன்னும் பார்க்கலை. மத்தியானம் தான் பார்க்கணும். :)

    ReplyDelete
  7. நாம் பேசிக் கொண்டேயிருக்கிறோம். ஆனால் நம் நாட்டில் எங்கோ ஒரு மூலையில் ஒரு பெண் , பெண்ணாய் பிறந்து விட்டதனால் கொடுமைக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறாள். நினைக்க வேதனை தரும் விஷயம் தான்.
    தண்டனைகள் கடுமையாக்கப் பட்டால் தான் பெண்களுக்கு விடிவு காலம் வரும்.

    ReplyDelete
  8. இத்தகைய நிகழ்வுகளை இந்தியா போன்ற நாடுகளில் முற்றிலுமாக ஒழித்துவிட முடியாது. சமீபத்தில் நடந்த மும்பை நிகழ்விலும் சரி சற்று முன்பு நடந்த தில்லி நிகழ்விலும் சரி இதில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் படிப்பறிவில்லாத பொருளாதாரத்தில் அடிமட்டத்திலுள்ள thugs (தமிழில் சொன்னால் ரவுடிகள்). இத்தகையோரை சமுதாயத்திலிருந்து முழுவதுமாக ஒழித்துவிட முடியுமா? அது முடியாதென்றால் இதுவும் முடியாதுதான். தண்டனை எத்தனை கடுமையாக்கப்பட்டாலும் இந்தியா போன்ற நாடுகளில் எங்காவது ஒரு மூலையில் இது நடந்துக்கொண்டுதான் இருக்கும்.

    ReplyDelete

  9. @ உமேஷ் ஸ்ரீநிவாசன்
    @ கோபு சார்
    @ திண்டுக்கல் தனபாலன்
    @ கரந்தை ஜெயக்குமார்
    @ துரை செல்வராஜ்
    @ ரமணி
    @ கீதா சாம்பசிவம்
    @ ராஜலக்ஷ்மி பரமசிவம்
    @ டி.பி.ஆர். ஜோசப்
    எனக்குத் தெரியும் சாக்கலேட் கேள்விக்கு பதில் சொல்லி விடுவீர்கள் என்று. குழந்தைகளை சிந்திக்கத் தூண்டும் கேள்வி அது. ஆனால் தனபாலன் I AM SURE YOU CAN SOLVE THIS என்று எழுதி விட்டார். நான் அதைப் பதிவில் எழுதிய விஷயத்தைக் குறிப்பிட வில்லை என்றே எண்ணுகிறேன்.குற்றம் செய்தால் தண்டனை என்பது அனைவருக்கும் தெரிந்ததே. நீதி வழங்கப் படுவதில் தாமதம் ஏன் என்றும் குறிப்பிட்டிருக்கிறேன். ஓரளவு நான் நினைக்கும் அலைவரிசையில் ஜோசப் எண்ணுகிறார். மற்றபடி பதிவுக்கு வந்து கருத்திட்ட அனைவருக்கும் நன்றி. காணொளி யாரும் பார்க்கவில்லையா.?

    ReplyDelete
  10. //. மனிதனுக்க் வக்கிர எண்ணங்கள் இருக்கும்வரை இம்மாதிரி நிகழ்வுகள் தொடரும். ஆனால் எதையும் செய்து தப்பிக்கலாம் என்னும் எண்ணம் மட்டும் வரக் கூடாது //

    குற்றவாளிகளைப் பற்றிய நல்ல அலசல் கட்டுரை.

    முன்பெல்லாம் போலீஸ், சிறைக் கஷ்டம் என்ற பயம் இருந்தது. நடைமுறையில் எதனைச் செய்தாலும் நாம் தப்பிவிடலாம், காப்பாற்ற ஆள் இருக்கிறது என்ற எண்ணம்தான் குற்றவாளிகள் மனதில் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் குற்றவாளிகளுக்கு அவர்கள் மீது எத்தனை வழக்குகள் இருந்தாலும் ஜாமீன் கொடுக்கிறார்கள். இந்த ஜாமீன் குற்றவாளிகளை உருவாக்குவது யார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்.

    ReplyDelete
  11. 15 choclates. wrapper திருப்பிக் கொடுக்காமல் இருந்தால்.

    ReplyDelete
  12. 15+(5)=20 எண்ணம் மிட்டாய் கிடைக்கும்.

    (that video is taking hell of time to load)

    ReplyDelete
  13. 15+(5)=20 எண்ணம் மிட்டாய் கிடைக்கும்.
    மீண்டும் மீண்டும் கொடுத்தால் இன்னும் இரண்டு கூடுதலாகக் கிடைக்கும்.மொத்தம் இருபத்தி இரண்டு.
    (that video is taking hell of time to load)

    ReplyDelete

  14. @ தி. தமிழ் இளங்கோ
    @ அப்பாதுரை
    @ சதீஷ்குமார்
    நான் என்னதான் சீரியஸாக எழுதினாலும்,பின்னூட்டங்கள் அதைப் பிரதிபலிப்பதில்லை. ஒரு வேளை நடக்கும் நிகழ்வுகள் நம்மை immune ஆக்கிவிட்டதோ. வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  15. எத்தனை சட்டங்கள் போட்டாலும், எத்தனை தண்டனைகள் கொடுத்தாலும்,
    குற்றங்கள் குறைய வாய்ப்பு இல்லை.
    தனிமனிதன் திருந்தினால் தான் உண்டு.
    ஒழுக்கம், அன்பு, கருணை ஆகியவற்றை மறப்பதால் வரும் தீங்கு.
    குழந்தை முதல் மூன்றும் கிடைத்து வளரும் குழந்தைகளே சமுதாயத்திற்கு நலம் தருவார்கள்.

    ReplyDelete