துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே
-------------------------------------------------------
பதிவுகள் எழுதுவதில் தொய்வு
கற்பனை வற்றி விட்டதோ
எழுதியும் பலனேது என்னும்
எண்ணம் வந்து விட்டதோ
எழுதிக் கிழித்து என்ன கண்டோம்
என்ற சலிப்பு நல்லதல்லவே.
பாரதி எழுதாததா, நரேந்திரன் சொல்லாததா
பாவேந்தர் பகராததா
நான் என்ன புதிதாய்
சொல்லமுடியும்.? பெரியோர் சொன்னதை
மீண்டும் மீண்டும்
நாம் வாசிப்பதில்லையா
அன்று நான் எழுதியது என்றைக்கும்
பொருந்தும்போது, என் எழுத்தை மீண்டும்
வாசித்தவர் வாசிக்கலாமே, அன்றி
வாசிக்காதவர் சுவாசிக்கலாமே
குறை ஒன்றும் நிகழ்ந்து விடாதே
ஆகவே நண்பர்களே (இதை) சுவாசிப்பீர்.
வெற்றியும் தோல்வியும் பகலும் இரவும்போல
நாணயத்தின் இரு பக்கம் போல
தோல்வியில் துவளவேண்டாம்
வெற்றியில் தலைக் கனமும் வேண்டாம்.
சுவாசிக்க இணைப்பு பகிர்வுக்கு செல்கிறேன் ஐயா...
ReplyDeleteஇணைப்புக்கும் செல்கிறேன். நன்றி.
ReplyDeleteஇணைப்புக் கவிதை ஏற்கெனவே
ReplyDeleteபடித்ததாயினும் மீண்டும் ஒருமுறைப் படிக்க
ஒரு புதிய அனுபவத்தை தந்தது
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
உண்மையான வார்த்தைகள்... சிந்திக்கத் தக்கவை..நன்றி ஐயா!..
ReplyDeleteஅன்புள்ள ஐயா.
ReplyDeleteஉண்மை.எப்போதும் உண்மைதான்.
ReplyDelete@ திண்டுக்கல் தனபாலன்
@ கீதா சாம்பசிவம்
இணைப்புக்குச் சென்று வாசித்தமைக்கு நன்றிகள்.
@ ரமணி
பதிவு பழையதுதானென்றாலும் கூறிய செய்திகள் என்றைக்கும் பொருந்துபவைதானே ரமணி சார்.ஊக்கமளிக்கும் கருத்துக்கு நன்றி.
@ துரை செல்வராஜ்
இணைப்புக்கும் சென்று வாசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
@ ஹரணி.உங்கள் வருகை எனக்கு மிக்க மகிழ்ச்சியத் தந்தது. நன்றி.
தோல்விகள் எல்லாம் தீதல்ல –காணும் வெற்றிகள் எல்லாம் நன்றும் அல்ல என்ற கட்டுரையைப் படித்தேன். தங்கள் வாழ்வியல் சிந்தனை அனைவருக்கும் பயன் தரும்.
ReplyDeleteசுவாசிக்க இணைப்பு பகிர்வுக்கு செல்கிறேன் ஐயா...
ReplyDeleteயார் நரேந்திரன்?
ReplyDeletehaahaahaa, Appadurai, நிஜம்மாத் தெரியாதா? விவேகாநந்தரோட உண்மைப் பெயர் நரேந்திரன் தானே! :)))))
ReplyDelete
ReplyDelete@ தி. தமிழ் இளங்கோ
@ கரந்தை ஜெயக்குமார்
@ அப்பாதுரை
@ கீதா சாம்பசிவம்
அனைவருக்கும் வருகைக்கு நன்றி.இந்தப் பதிவின் நோக்கமே அந்த இணைப்புப் பதிவை இன்னும் பலரும் படிக்க வேண்டும் என்பதுதான். ஒரு வேளை இதுவே முழுப் பதிவு என்று நினைப்பு வந்துவிட்டதோ. கீதா மேடத்துக்கு நன்றி. அப்பாதுரை அந்தப் பழைய பதிவை இன்னும் படிக்கவில்லையே.