மண நாளும் பிறந்த நாளும்.
---------------------------------------
சில நல்ல நிகழ்ச்சிகள் நடைபெறும்போது மனம் மகிழ்ச்சி அடைகிறது. மே மாதம் என் பதிவு ஒன்றில் sky dive என்னும் தலைப்பில் எனது மைத்துனன் மகள் பற்றி எழுதி இருந்தேன்.( இங்கே சொடுக்கிப் பார்க்கவும்) அந்தப் பெண்ணுக்கு திருமணம் நிச்சயம் 10-11-2013-ல் நடைபெற்றது.( திருமணம் எதிர்வரும் ஜனவரி மாதம் 12-ம் நாள் நடைபெறும் ) இது என் மாமியாரின் பேரக் குழந்தைகளின் திருமணத்தில் கடைசித் திருமணமாக இருக்கும். இதற்குப்பின் அடுத்த தலைமுறைத் திருமணங்களே நடக்கும்.
அடுத்த தலைமுறையினர் சிலர் |
குடும்பத்தார் சிலர் |
சில நாட்களுக்கு முன் திரு கரந்தை ஜெயக் குமார் அவர்கள் ”நெஞ்சில் நின்ற திருமணம்” என்னும் ஒரு பதிவு எழுதி இருந்தார்,அவர் கூறி இருந்த முறைப்படி ( தமிழில் வாழ்த்து என்பது தவிர )அநேகமாக எல்லாத் திருமணங்களும் கேரளத்தில் நடக்கின்றன. விளக்கேற்றி வைத்து ஒரு கலத்தில் நெல் நிரப்பி. அதில் மலர்ந்த தென்னம்பூக் கதிர்களை வைத்து. குடும்பத்தில் மூத்தவர் எடுத்துக் கொடுக்க மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டி இருவரும் மோதிரம் மாற்றிக் கொள்கிறார்கள். . உறவினர் வாழ்த்துவதும் பரிசுகள் தருவதும் விருந்து உண்பதும் பின் தொடரும். மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடக்கும் சிலர் கோவிலில் தாலி கட்டி பிற நிகழ்ச்சிகளை வேறு இடத்தில் நடத்துகின்றனர். எந்த விதமாகத் திருமணம் நடத்தப்பட்டாலும் சட்ட அங்கீகாரம் பெற ரெஜிஸ்தர் செய்தல் அவசியம்
”நவம்பர் மாதத்தில் பல பிரபலங்கள் பிறந்திருக்கிறார்கள்.முதல் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு, பெயர் பெற்ற பெண் பிரதமர் இந்திரா காந்தி, பிரபல தமிழ்ப் பதிவர் ஜி.எம்.பாலசுப்பிரஅணியம் ( பிரபல பதிவர் சுந்தர்ஜியும் நவம்பர் மாதப் பிறவி என்று படித்ததாக நினைவு) இவர்களும் இதில் அடங்குவர். ஜீஎம்பியின் பிறந்த நாளும் திருமண நாளும் ஒரே நாளில் வருவது இன்னும் விசேஷம்...! இந்த நிகழ்ச்சி இந்த வருடமும் விமரிசையாகக் கொண்டாடப் பட்டது. ஜீஎம்பியின் சிறுகதைத் தொகுப்பு “வாழ்வின் விளிம்பில்“ எனும் தலைப்பில் அன்று அவரது மகன்களால் வெளியிடப் பட்டது குறிப்பிடத்தக்கது. குடும்பத்தினர் ஒரு வாழ்த்து அட்டையை அவருக்குக் கொடுத்து அவர்கள் அன்பைத் தெரிவித்துக்கொண்டனர்”
வாழ்த்து அட்டை |
-----------------------------------
To
The new author in town
From
The people who love you.
அட்டையின் வாசகங்கள்
It is said that a person has different
roles to be played in a single life ¬
one has been able to keep up all the
roles as beautifully as you, be it a
husband,father,grandfather, son, brother,
teacher,author, philosopher, and
many more.The world is lucky to have
a person like you and we are the most
blessed to be around you and loved by
you.
We are your 7 flowers and we
wouldn't have nurtured into one if
it wasn;t for you
We love U அப்பா
HAPPY B'DAY APPA
HAPPY ANNIVERSARY TO our
Lovely Parents With love from
2 sweet sons
2 loving daughters
3 Blessed grand children.
வாழ்த்து அட்டையின் உள்ளே
திறந்தாலொரு பொன் நிற மலர் விரிய அதன் உள்ளே இதழ்களில் என் வாரிசுகளின் புகைப் படங்கள் ஒட்டப் பட்டிருக்கின்றன. கடையில் சென்று வாழ்த்து அட்டை இதைவிட சிறந்த வடிவமைப்பில் வாங்கி இருக்கலாம். ஆனால் என் மீது உள்ள அன்பின் வெளிப்பாடாக அவர்களே வடிவமைத்துக் கொடுத்த இந்த வாழ்த்து அட்டை என்னைக் கசியச் செய்து விட்டது. வடக்கு திசை நோக்கிப் பயணம் செய்யக் காத்திருக்கும் எனக்கு வேறென்ன வேண்டும். ?
என் எழுத்துக்களில் சிலவற்றைப் புத்தக வடிவில் காண விரும்புகிறேன் என்று தெரிந்ததும் அதற்குத் தேவையான எல்லாப் ப்ணிகளையும் செய்து முடித்து அதை என் பிறந்த நாள் பரிசாகக் கொடுத்ததை எண்ணிப் பார்க்கும் போது நான் கொடுத்து வைத்தவன் என்று புலனாகிறது.
புத்தகம் மணிமேகலைப் பிரசுரத்தாரால் வெளியிடப் பட்டிருக்கிறது.புத்தகம் படிக்க விரும்புவோர் என்னைத் அல்லது பிரசுரத்தாரைத் தொடர்பு கொள்ளலாம் . என் முகவரி
G.M. BALASUBRAMANIAM
1649, "MAHADEV AISWARYA"
PIPE LINE ROAD
T-DASARAHALLI
BANGALORE-560,057.
Tel. No. 080-28394331.
.
புத்தகம் வெளிவந்து விட்ட செய்தி அறிந்தேன். நல்லது.
ReplyDeleteநீங்கள் சென்னை வந்திருந்த நாட்களில் நான் வெளியூர் சென்றிருந்ததினால் உங்களைச் நேரில் சந்திக்க முடியவில்லை.
பெங்களூர் வந்தாச்சா?..
நவம்பரில் பிறந்த பிரபல தமிழ் பதிவர்கள் லிஸ்டில் என் பெயரைத் தேடிப் பார்த்தேன். விட்டுப் போயிருக்கிறதே.என் பிறந்த நாளும் நேற்று தான் சார்.
ReplyDeleteஉங்களுக்கு இனிய பிறந்த நாள் திருமணநாள் வாழ்த்துக்கள்.
அன்புடையீர்!.. தாங்கள் இன்னும் பல்லாண்டு பல்லாண்டு ஆரோக்கியமாக வாழ வேண்டிக் கொள்கின்றேன்!..
ReplyDeleteஇனிய பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள், ஐயா.
ReplyDeleteநாம் பிறந்த தமிழ்க் கார்த்திகை மாதத்தை பெரும்பாலானோர் வீடுகளிலும் கோயில்களிலும் விளக்கேற்றிக் கொண்டாடுகிறார்கள் என்பதை நினைத்து நாமும் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்வோம். ;)))))
வாழ்த்துக்கள் ஐயா...
ReplyDelete// என் எழுத்துக்களில் சிலவற்றைப் புத்தக வடிவில் காண விரும்புகிறேன் என்று தெரிந்ததும் அதற்குத் தேவையான எல்லாப் ப்ணிகளையும் செய்து முடித்து அதை என் பிறந்த நாள் பரிசாகக் கொடுத்ததை எண்ணிப் பார்க்கும் போது நான் கொடுத்து வைத்தவன் என்று புலனாகிறது. //
ReplyDeleteஅய்யா GMB அவர்களுக்கு இனிய பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்! இந்த இனிய நாளில் தங்களது சிறுகதை நூல் வெளிவந்தது என்பதை அறியும்போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஜீஎம்பியின் பிறந்த நாளும் திருமண நாளும் ஒரே நாளில் வருவது இன்னும் விசேஷம்...! இந்த நிகழ்ச்சி இந்த வருடமும் விமரிசையாகக் கொண்டாடப் பட்டது.
ReplyDeleteஇனிய நமஸ்காரங்கள் ஐயா..!
அனைத்து விஷயங்களிலும்
ReplyDeleteசிறப்பாய் இருப்பது அரிதுதான்
அதையும் விட
அந்த அருமை உணர்ந்தவர்கள் உடனிருப்பது
அதுவும் குடும்பத்தவராய் இருப்பது
அனைவருக்கும் வாய்த்துவிடுவதில்லை
நிறைவான வாழ்வு வாழும் தாங்கள்
தொடர்ந்து பல்லாண்டு பல்லாண்டு
இதே சிறப்போடும் நலத்தோடும் வாழ
மனதார வேண்டிக் கொள்கிறேன்
ReplyDelete@ ஜீவி.
நான் தீபாவளி வாழ்த்து அனுப்பி இருந்தேன். சென்னை வருகை குறித்தும் அஞ்சல் அனுப்பி இருந்தேன். பதில் ஏதும் இல்லாததால் நீங்கள் அங்கு இருந்திருக்க மாட்டீர்கள் என்றும் நினைத்தேன். நான் நேற்று காலை 17-11-2013 பெங்களூர் வந்து விட்டேன். வருகைக்கு நன்றி.
ReplyDelete@ ராஜலக்ஷ்மி பரமசிவம்
Pity that I didn't know you were also born in November. இருந்தால் என்ன. இப்போது தெரிந்து விட்டதே. நீங்கள் நம்ம கட்சி...! வாழ்த்துக்கு நன்றி.
ReplyDelete@ துரை செல்வராஜு
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா.
ReplyDelete@ கோபு சார்
கார்த்திகை மாதம் என்றால் (நவம்பரிலா?) அப்போ நீங்களும் நம்ம கட்சியா? ஆனால் பதிவுகளில் என்னைவிட பிரபலமானவர் அல்லவா.? வாழ்த்துக்கு நன்றி கோபு சார்.
ReplyDelete@ திண்டுக்கல் தனபாலன்
வாழ்த்துக்கு நன்றி டிடி.
ReplyDelete@ தி.தமிழ் இளங்கோ
மனம் திறந்த பாராட்டுக்கு நன்றி ஐயா.
ReplyDelete@ இராஜராஜேஸ்வரி. வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் கண்டு பழக்கப் பட்ட நான் இனிய நமஸ்காரங்களால் clean bowled...!
ReplyDelete@ ரமணி
மனம் திறந்து பாராட்டுவதில் உங்களுக்கு நிகர் நீங்களே. நன்றி ரமணி சார்.
//கோபு சார், கார்த்திகை மாதம் என்றால் (நவம்பரிலா?)//
ReplyDeleteதமிழ் கார்த்திகை மாதம் என்பது பொதுவாக நவம்பர் 15 தேதியை ஒட்டிப்பிறக்கும். அது டிஸம்பர் 15 தேதியை ஒட்டி முடியும்.
இந்த ஆண்டு 17.11.2013 ஞாயிறன்று கார்த்திகை முதல் தேதி ஆரம்பித்து, 15.12.2013 அன்று கார்த்திகை கடைசி தேதியான 29 - ஞாயிறன்றே - கார்த்திகை மாதமும் முடிகிறது.
தமிழ் கணக்குப்படியும், சாஸ்திர சம்ப்ரதாயங்கள் படியும் பிறந்த தமிழ் மாதம் + பிறந்த நக்ஷத்திரம் அடிப்படையில் மட்டுமே ஜன்ம தினம் என்பது அனுஷ்டிக்கப்படுகிறது.
நான் பிறந்தது கார்த்திகை மாதம். புனர்பூச நக்ஷத்திரம்.
இதை மிகவும் வேடிக்கையாக இந்த என் “பெயர் காரணம்” என்ற பதிவினில் கூட எழுதியிருக்கிறேன்:
http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_09.html
அதன்படி இந்த ஆண்டு 22.11.2013 அன்று என் STAR BIRTH DAY வருகிறது.
ஆனால் ஆங்கில கணக்குப்படி நான் பிறந்தது 8th DECEMBER.
//அப்போ நீங்களும் நம்ம கட்சியா? //
பிறந்த தமிழ்மாதம் கார்த்திகை என்ற அடிப்படையில் உங்கள் கட்சியாக இருக்கக்கூடும்.
//ஆனால் பதிவுகளில் என்னைவிட பிரபலமானவர் அல்லவா.?//
அப்படியெல்லாம் இல்லை ஐயா. நான் மிகச்சாதாரணமானவன். மிகவும் சாமான்யமானவன் மட்டுமே.
// வாழ்த்துக்கு நன்றி கோபு சார்.//
மிகவும் சந்தோஷம். தங்கள் நன்றிகளுக்கு என் நன்றிகள் ஐயா.
வாழ்த்துகள் ஸார்.
ReplyDeleteபிறந்த நாளும் திருமண நாளும் ஒருங்கே அமைந்தது மகிழ்ச்சி ஐயா.
ReplyDeleteதங்களின் நூல் படித்து மகிழ்ந்தேன் ஐயா. விரைவில் தங்களது நூல் பற்றிய பதிவினையும் பகிர வேண்டும் என்பது என் ஆவல்.
தங்கள் வாரிசுகள் வழங்கிய வாழ்த்து அட்டை கவனத்தைக் கவருகிறது. தங்கள் மீது தொடர்ந்து கவனம் செலுத்துகிறார்கள் என்பது மிகவும் பாராட்டுக்குரிய விஷயம்.
ReplyDeleteஇனிய பிறந்தநாள், மணநாள் வாழ்த்துகள். புத்தக வெளியீட்டுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்! விரைவில் தங்களிடமிருந்து பெற்றுக் கொள்கிறேன்.
ReplyDeleteபிறந்த நாளும் திருமண நாளும் ஒரே தேதியிலா? பேஷ்!
ReplyDeleteஇரண்டுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அன்றைய தினம் வெளியிடப்பட்ட புத்தகமும் மகத்தான வெற்றிபெற வாழ்த்துக்கள்.
இனிய பிறந்த நாள் திருமணநாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteதாங்கள் இன்னும் பல்லாண்டு ஆரோக்கியமாக வாழ வேண்டிக் கொள்கின்றேன்!.
செய்தி அறிந்து மகிழ்ந்தேன்.
ReplyDeleteவாழ்த்த எனக்கு வயதில்லை. வணங்குகிறேன்.
(நவம்பர் மாத பிறந்த நாள் வரிசையில் என்னையும் சேர்த்து விடுங்கள். நான் நவம்பர் 3)
ReplyDelete@ ஸ்ரீராம்
வாழ்த்துக்களுக்கு நன்றி ஸ்ரீ
ReplyDelete@ கரந்தை ஜெயக் குமார்
நூல் பற்றிப் பகிர என்ன இருக்கிறது ஐயா. அதைப் படிப்பவர்கள் அல்லவா கருத்துப் பகிரவேண்டும். வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி ஜெயக்குமார்.
ReplyDelete@ செல்லப்பா யக்ஞஸ்வாமி
வாழ்த்து அட்டை பற்றிய கருத்துக்கு நன்றி சார்.
ReplyDelete@ ராமலக்ஷ்மி
வாழ்த்துக்களுக்கு நன்றி. ஒரு நாள் வீட்டுக்கு வாருங்களேன்.நிறையப் பேசலாம். புத்தகமும் பெறலாம்.
ReplyDelete@ டி.பி.ஆர் ஜோசப்
வாழ்த்துக்கு நன்றி சார். புத்தக வெற்றி அதை எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது. படித்துக் கருத்து சொல்லுங்களேன்
ReplyDelete@ அபயா அருணா.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
ReplyDelete@ அருணா செல்வம்
வாழ்த்துக்கு நன்றி. நவம்பர் மாதம் பிறந்த பிரபலங்கள் எண்ணிக்கை தெரிய வருகிறது.
ReplyDelete@ கோபு சார்.
நவம்பர் மாதத்தில் பிறந்தவர்களை scorpions என்பார்கள். இவர்களது சில விசேஷ குணாதிசயங்கள் என்று கூறப்படுபவை- பெரும்பாலானோர் முன் கோபிகள். யாரையும் எளிதில் நம்ப மாட்டார்கள். எந்தக் காரியமும் அவர்களே செய்தால்தான் திருப்தி அடைவார்கள். பெரும்பாலும் புத்திசாலிகள். சிகரத்தைத் தொடுவார்கள்--எனக்கு உங்களைத் தெரிந்தவரை நீங்கள் சாந்தஸ்வரூபி.சரியா. ?
//@ கோபு சார்.
ReplyDeleteநவம்பர் மாதத்தில் பிறந்தவர்களை scorpions என்பார்கள்.//
நான் பிறந்தது நவம்பர் அல்ல. டிஸம்பர் மட்டுமே.
//இவர்களது சில விசேஷ குணாதிசயங்கள் என்று கூறப்படுபவை-
பெரும்பாலானோர் முன் கோபிகள்.//
ஆமாம். நானும் ஓர் முன்கோபியாக இருந்தவன் தான். கோபம் இருக்கும் இடத்தில் தான் நல்ல குணங்களும் இருக்கும் என்பார்கள்.
மேலும் நம் நியாயமான கோபத்தையும் கூட எல்லோரிடமும் எல்லா நேரங்களிலும் காட்டிவிட முடியாது. சில நேரங்களில் மட்டும் சிலரிடம் மட்டும் வேறு வழியில்லாமல், அதுவும் ஓர் உரிமையில் காட்டிவிட நேரிடும்.
//யாரையும் எளிதில் நம்ப மாட்டார்கள்.//
Yes. நானும் அப்படித்தான்.
//எந்தக் காரியமும் அவர்களே செய்தால்தான் திருப்தி அடைவார்கள்.//
YES! 200% correctly matching to me. I expect most perfectness in doing things. I myself will do to get full satisfaction.
//பெரும்பாலும் புத்திசாலிகள்.//
இதைப்பற்றி நானே எப்படி ஐயா தீர்மானிக்க முடியும்?
பெரும்பாலானோர் என்னைப்பற்றி அப்படித்தான் சொல்லிக்கேள்விப் பட்டுள்ளேன்.
//சிகரத்தைத் தொடுவார்கள்//
நான் இன்னும் அதைத் தொட்டதில்லை.
//எனக்கு உங்களைத் தெரிந்தவரை நீங்கள் சாந்தஸ்வரூபி.சரியா.?//
பிறரிடம் பெரும்பாலும் சாந்தஸ்வரூபியாகவே நான் நடந்து கொள்வேன்.
தங்களைப்போலவே பெரும்பாலானவர்களுக்கு அதுபோல ஒரு எண்ணம் என்னைப்பற்றி உருவாகியுள்ளது, என்பது மட்டுமே சரி.
அன்புடன் VGK
மனம் நிறைந்த பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள் GMB சார்.
ReplyDeleteபுத்தகம் ஆன்லைன் மூலம் வாங்க இயலுமா? தகவல் சொல்லுங்கள்.....
தங்களது எழுத்துகளை புத்தகமாக ஆக்கியதற்கு வாழ்த்துகள்.