பயண அனுபவங்களும் சில சந்திப்புகளும்---3
----------------------------------------------------------------
( இந்த பதிவுத் தொடரின் முந்தைய பதிவுகளில் வெளியிட்ட புகைப் படங்கள் திறக்க வில்லை என்று பின்னூட்டங்களில் பலரும் எழுதி இருந்தனர். அவற்றை சரி செய்துவிட்டேன். இப்போது எந்த பிரச்சனையுமிருக்காது என்று நம்புகிறேன் சரி செய்ய உதவிய திண்டுக்கல் தனபாலனுக்கு நன்றிகள். இப்போது படங்களைக் காண வாரீர்.)
சென்னைக்கு வந்தால் என் மனைவிக்கு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு
அவசியம் செல்ல வேண்டும் சுவாமி தரிசனம் முடிந்து அருகில் இருக்கும் கிரி ட்ரேடிங்
கடைக்குப் போனோம். கைக்கு அடக்கமான சிறு சுலோக புத்தகங்கள் அவளுக்கும் பிறருக்குக் கொடுக்கவும் வேண்டும். அவள்
புத்தகங்களைத் தேடி எடுத்துக் கொண்டிருக்கும்போது நான் வில்லிபுத்தூராரின் பாரதம்
கிடைக்குமா என்று கேட்டேன். இருக்கிறது என்று கூறி தலையணை சைசில் நான்கு
புத்தகங்கள் காண்பித்தார்கள். அவற்றின் விலையைக் கேட்டதும் எனக்கு தலையை சுற்றாத
குறைதான் அந்த விலை கொடுத்துப் புத்தகம் வாங்கும் நிலையில் நான் இல்லை. தேவை
என்றும் படவில்லை.
நாங்கள் மயிலையில் இருக்கும்போது திரு. இராய.செல்லப்பா அவர்கள் தொலை
பேசியில் தொடர்பு கொண்டார்கள். நாங்கள் மதியம் மூன்று மணி அளவில் வீட்டில்
இருப்போமா என்றுகேட்டார். அவரும் அவரது துணைவியாரும் எங்களை சந்திக்க வந்தனர்.
சென்னையில் நாங்கள் இருந்த இடத்திலிருந்து சுமார் 40-கி.மீ. தூரத்தில் இருப்பதாக
என் பதிவின் பின்னூட்டத்தில் எழுதி இருந்தார். அவ்வளவு தூரத்திலிருந்து வருவது
சிரமம் என்று எனக்குத் தோன்றியதால் , அவர் சந்திக்க வருவதாகக் கூறியதும்
மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவரது பதிவுகளைப் படித்தபோது எனக்கிருந்த
எண்ணங்களுக்கு மாறாக எளிமையாய் இருந்தார். அவர் எழுதி இருந்த ஒரு கவிதைத்
தொகுப்பினை எனக்குக் கொடுத்தார். “இனிமைக்கவிஞர்” என்று அறியப்பட்டவர் என்று தெரிந்தது. அவர் புது டெல்லியில்
இருந்தபோது பாரதிக்கும் பாரதி தாசனுக்கும் விழா எடுத்தபோது எழுதிய கவிதைகளின் தொகுப்பை
எட்டைய புரத்து மீசைக்காரன் என்னும் தலைப்பில் புத்தகமாக வெளியிட்டிருந்ததைக்
கொடுத்தார். கவிதை எழுதி வாசித்தால் கவிஞனுக்கு என்ன கிடைக்கும் என்று கேள்வி கேட்டு பதிலும் சொல்கிறார்
n
வந்துபோக வாகனம் இருந்தால் கொண்டு போக’ துண்டு’ கிடைக்கலாம் (எதற்கும் அந்தஸ்து
வேண்டாமா?)
n
மணிவிழா நடத்தி மலர் வெளியிட்டால்,மாலை கிடைக்கலாம். அதுவும்
மாலையில் நடந்தால் மட்டுமே கிடைக்கும் ( மாலை, மாலையிலன்றோ மலிவு)
n
அரங்கம் அமைத்து அழைப்பிதழ் அச்சிட்டுவிழா நடத்தும்
பெரியோர்தம்மை உரிய சொற்களால் ஓங்கிப்புகழ்ந்தால் அடுத்த நிகழ்ச்சிக்கு அனுமதி
கிடைக்கலாம். மற்றபடி கவிஞனுக்கு என்ன கிடைக்கும்.?
திருமதி
செல்லப்பா கருவேலி V.கிருஷ்ணமூர்த்திக்கு
உறவு என்று தெரிந்தது.. அப்படியானால் ஒருவேளை திருச்சி பதிவர் திருமதி. கீதா
சாம்பசிவத்துக்கும் உறவாயிருக்கலாமோ.?
நாங்களே
என் மகன் வீட்டில் தங்கி இருந்தோம். என் மகன் டூரில் இருந்தான். அந்த நிலையில்
அவர்களுக்கு சரியாக விருந்தோம்பி உபசரிக்க முடியவில்லை. என் காமிராவிலும் சார்ஜ் தீர்ந்து போனதால் படம்
எடுக்க முடியவில்லை. அவரது காமிராவில் எடுத்த சில படங்களை அனுப்பிக் கொடுத்தார்
அவற்றில் சிலகீழே. “ வாழ்வின் விளிம்பில்” கதைத் தொகுப்பின் ஒரு பிரதியை
அவர்களுக்குக் கொடுத்தேன்.
அவர்கள்
சென்ற பிறகு என்னைச் சந்திக்க வருவதாகக் கூறியிருந்த நண்பர்களுக்காகக்
காத்திருந்தோம்.யாரும் வரவில்லை.முகப்பேரிலிருந்து என் தம்பி வந்தான்.அவனுக்கு நாங்கள் அவன் வீட்டுக்கு வரவில்லை என்று வருத்தம் பதிவுலக நண்பர்களை சந்திக்க வேளச்சேரிசௌகரியமாக இருக்கும் என்று நினைத்திருந்தோம்
அடுத்த நாள் (15-ம் தேதி) நாங்கள் சற்றும் எதிர்பார்க்காத இளைய பெண் பதிவர் ” மைத்துளிகள் ’ மாதங்கி அவரது தந்தையார் திரு மகாலிங்கத்துடன் வந்தார். இன்னும் சில நண்பர்கள் சந்திக்க வருகிறார்கள் என்று கூறினேன். செல்வி மாதங்கி என் பதிவுகளுக்கு அடிக்கடி வருபவர். அவரது தந்தை என் பதிவுகளை தொடர்ந்து படிப்பவர் என்று தெரியும் கோவிலில் கடவுளின் உருவத்தை சரியாக தரிசிக்க முடியவில்லையே என்று ஒரு பதிவில் எழுதி இருந்தேன். அதற்கு பின்னூட்டம் எழுதி இருந்த மாதங்கியிடம் எனக்கு ஒரு மதிப்பே ஏற்பட்டு விட்டது. பல கலைகளில் ( விசேஷமாக சங்கீதத்தில்) ஆர்வம் கொண்டவர். புத்திசாலி அவர் எங்களைத் தேடி வந்து சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். திரு .மகாலிங்கம் அவர்கள். ஒரு தேர்ந்த வாசகர்(avid reader). என்னுடைய பல பதிவுகளை நினைவில் வைத்துக் கொண்டு பேசினார் அண்மையில் நான் எழுதி இருந்த அடையாளங்கள் என்னும் பதிவை சிலாகித்துப் பேசினார். மாதங்கி எடுத்து அனுப்பி இருந்த புகைப்படம் கீழே.

அவர்களுக்கும் “ வாழ்வின் விளிம்பில்” ஒரு பிரதியைக் கொடுத்தேன்.ஐடி கம்பனி வேலையில் இருந்தவர், தற்போது ஒரு பாங்கில் அதிகாரியாக இருக்கிறார்.திரு. மகாலிங்கம் தஞ்சை கவிராயருக்கு அறிமுகமானவர் என்று தெரிந்தது. அவர் தான் ஒரு பதிவராக இல்லாவிட்டாலும் பலருடைய பதிவுகளைப் படிக்கிறார். திரு.நடன சபாபதி அவர்களுடைய பதிவுகள் நன்றாக இருப்பதாகக் கூறினார். நானும் அவரது வலைக்குச் செல்ல வேண்டும்
.
வருவதாகக் கூறியிருந்த நண்பர்கள் வராததால் சிறிது நேரத்துக்குப் பிறகு மாதங்கியும் அவரது தந்தையும் இரு சக்கர வாகனத்தில் மாதங்கி ஓட்ட மேற்கு மாம்பலம் சென்றனர்.வருவதாகச் சொன்ன பதிவர்கள் அடுத்த நாள் நான் ஊருக்குப் போகுமுன் வந்து பார்ப்பதாகச் செய்தி வரவே, அடுத்த நாளுக்காகக் காத்திருந்தோம்.
ஆனால் அடுத்த நாள் (16-ம்தேதி) என் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக நட்பாயும் தொடர்பிலும் இருக்கும் நண்பர் ஒருவர் வந்திருந்தார். உண்மையைச் சொல்லப் போனால் என் பதிப்புகளைப் புத்தகமாக்கத் தூண்டியவரே இவர்தான். முதலில் என் புத்தக வெளியீட்டுக்கு வாழ்த்து கூறினார். என் புத்தகங்களை அவரது தமிழ் அறிந்த நட்புகளுக்கு அறிமுகப் படுத்துவதாகக் கூறி பத்து புத்தகங்களை விலை கொடுத்து வாங்கிக் கொண்டார். பல்வேறு செய்திகளைப் பகிர்ந்து கொண்டபோது சில பொது நண்பர்கள் பற்றிப் பேச்சு வந்தது. அப்படி ஒரு நண்பரைப் பார்க்க எங்களை அவரது காரில் கூட்டிக்கொண்டு போனார். அவர்களுக்கும் என் புத்தகம் பற்றி அறிந்தபோது மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்தனர். சந்திப்பு முடிந்து எங்களை வீட்டில் சேர்த்துவிட்டு அவர் திரும்பினார். வருவதாகச் சொன்ன நண்பர்கள் கடைசிவரை வரவே இல்லை. அவர்களுக்கு என்ன பிரச்சனையோ வர முடியவில்லை.
இப்போது மீண்டும் இப்பதிவுத் தொகுப்பு எழுதும் முன் எழுதி இருந்ததை நினைவு கூறுகிறேன். நான் சரியாகத் திட்ட மிடாததால் காஞ்சியில் எல்லாக் கோயில்களுக்கும் போக முடியவில்லை. சென்னை வருமுன்பே சந்திக்க வேண்டுகிறேன் என்ற பதிவில் எழுதியதோடு அல்லாமல் நான் யார் யாரை சந்திக்க முடியும் என்பதை சிந்திக்கவில்லை. யார் யார் சென்னை வாசிகள் அவர்களைத் தொடர்பு கொள்வது எப்படி என்று சரியாகத் திட்ட மிடாததால் சந்திப்பு என்னும் அறுவடை திருப்தியாக இருக்கவில்லை. ஆங்கிலத்தில் ஒரு சொல் கேட்டிருக்கிறேன்
“ IT IS SAID THAT GOOD JUDGEMENT COMES FROM EXPERIENCE AND EXPERIENCE YOU GET FROM BAD JUDGEMENTS"

//சென்னை வருமுன்பே சந்திக்க வேண்டுகிறேன் என்ற பதிவில் எழுதியதோடு அல்லாமல் நான் யார் யாரை சந்திக்க முடியும் என்பதை சிந்திக்கவில்லை. யார் யார் சென்னை வாசிகள் அவர்களைத் தொடர்பு கொள்வது எப்படி என்று சரியாகத் திட்ட மிடாததால் சந்திப்பு என்னும் அறுவடை திருப்தியாக இருக்கவில்லை. //
ReplyDeleteஇதுபோன்ற சமயங்களில் தங்களைச் சந்திக்க விரும்புவோருக்கு, ஒரு குறிப்பிட்ட தேதி, குறிப்பிட்ட நேரம், குறிப்பிட்ட இடம் பற்றி தெளிவாக அறிவித்து விட வேண்டும்.
அந்த குறிப்பிட்ட நாளின் குறிப்பிட்ட மணித்துளிகள் மட்டும், குறிப்பிட்ட இடத்தில் தாங்களும் சந்திப்புக்குத் தயாராக இருக்க வேண்டும்.
இதனால் உங்கள் நேரமும், சந்திக்க வருபவர்கள் நேரமும் வீணாகாமல் தடுத்திருக்க முடிந்திருக்கும்.
’காத்திருத்தல்’ என்ற மிகவும் எரிச்சலூட்டும் வேலையும் யாருக்கும் நேராமல் இருந்திருக்கும்.
பதிவு, சந்திப்பு + படங்கள் எல்லாம் அருமை. பாராட்டுக்கள், ஐயா.
அன்புடன் VGK
பதிவர்கள் சந்திப்பு இனிமை..
ReplyDeleteஉங்களைப் பார்க்க வருவதாகச் சொல்லி வர முடியாத அந்தப் பதிவர், வர முடியாத காரணத்தைத் தனது பதிவில் சொல்லி மன்னிப்பும் கேட்டுள்ளார்! படித்தீர்களோ?
ReplyDeleteலிங்க் தர வேண்டாமோ...?
Deletehttp://minnalvarigal.blogspot.com/2013/11/22.html
சென்னைச் சந்திப்பு நீங்கள் எதிர்பார்த்தபடி அமையாவிட்டாலும் நன்றாகவே போயிருக்கிறது. திரு ராய.செல்லப்பா பற்றிக் கேட்டதில்லை. முதல்முறையாக உங்கள் பதிவில் படிக்கிறேன். திரு கிருஷ்ணமூர்த்தியை நன்றாகத் தெரியும். என் கணவர் பலமுறை கருவிலியில் பார்த்துப் பேசி இருக்கார். கிருஷ்ண மூர்த்தி என் மாமனாருக்கு கசின் முறை ஆகவேண்டும். மற்றபடி உங்கள் பதிவு அருமை
ReplyDeleteபுத்தகங்கள் வெளி வந்திருப்பதையும் இன்றே அறிந்தேன்.
ReplyDelete
ReplyDelete@ கோபு சார்
அதுதான் திட்டமிடலில் தவறிவிட்டேன் என்றுஎழுதி இருக்கிறேனே.பலருடைய முகவரியோ தொலைபேசி எண்ணோ இருக்கவில்லை. மேலும் சென்னைவாசிகள் யார் யார் என்றும் தெரியவில்லை. அதனால்தான் என் பதிவில் நான் அங்கிருக்கப் போகும் நாட்களை கொடுத்து எங்கள் தொலை பேசி எண்களையும் கொடுத்திருந்தேன். என் பதிவில் கடைசியில் எழுதி இருப்பதைப் பாருங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDelete@ ஸ்ரீராம்
நான் அவர் பதிவிலும் என் பதிவிலும் பின்னூட்டங்களில் எழுதி இருக்கிறேனே நீங்கள் பார்க்கவில்லையா?மன்னிப்பு என்பதெல்லாம் பெரிய வார்த்தை சார். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ReplyDelete@ கீதா சாம்பசிவம்
திருமதி செல்லப்பாவின் உறவு என்று சொன்ன நினைவு, பதிவைப் பாராட்டியதற்கு நன்றி.
ReplyDelete@ திண்டுக்கல் தனபாலன்
நான் வேண்டுமென்றே பெயர்களைத் தவிர்த்தேன் மின்னல் வரிகளைத் தொடபவன் நான் பாலகணேஷ் என் பதிவிலும் நான் அவர் பதிவிலும் எழுதிவிட்டோம்.
ReplyDelete@ இராஜராஜேஸ்வரி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
பதிவர்கள் சந்தித்ததை படத்துடன் போட்டிருப்பது நன்றாக உள்ளது.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபதிவர் சந்திப்பு விவரங்களும், படங்களும் அருமை ஐயா. இந்த அவசர கால உலகில், அதுவும் சென்னையில், குறித்த நேரத்தில ஒருவரைச் சந்திப்பது என்பது குதிரைக் கொம்புதான்.
ReplyDeleteதங்களின் நூலினை முழுவதும் வாசித்து விட்டேன் ஐயா.அருமையான நூல்
நூல் குறித்த விமர்சனம் எழுதவும் அதிக ஆவல் ஐயா. நன்றி
(எழுத்துப் பிழை காரணமான முந்தைய கருத்துரையை நீக்கிவிட்டேன் ஐயா)
சந்திப்பை சுவைபட சொல்லியிருக்கீங்க சார் .
ReplyDeleteநல்ல அனுபவம்.
ReplyDelete
ReplyDelete@ ராஜலக்ஷ்மி பரமசிவம்
பாராட்டுக்கு நன்றி
@ கரந்தை ஜெயக்குமார்
குறித்த நேரம் என்று ஒன்றும் இருக்கவில்லை. நான் அங்கிருந்த நான்கு நாட்களில்,முதல் நாள் தவிர எப்போது வேண்டுமானாலும் சந்திக்கத் தயாராயிருந்தேன் தொலைபேசி எண்களையும் கொடுத்திருந்தேன். என் திட்டமிடலிலும் கணிப்பிலும் தவறு தெரிகிறது. என் புத்தகத்தை வாசித்து விட்டீர்கள் என்றறிந்து மகிழ்ச்சி. அதை விமரிசையுங்கள், பதிவர்கள் பலரும் தெரிய ஏதுவாயிருக்கும் . வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ஐயா.
ReplyDelete@ மணிமாறன்
@ டாக்டர் கந்தசாமி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
இருநாட்களாக இனைய இணைப்பு பழுதாகி விட்டது. தாமதத்திற்கு மன்னிக்கவும்.
ReplyDeleteஐயா.. மிகவும் கொடுத்து வைத்து இருக்க வேண்டும். இப்படி கைபிடித்து அழைத்துச் செல்லும் அன்பு உள்ளங்களுடன் பயணிப்பதற்கு!..
சந்திப்பை சுவையாக பகிர்ந்தீர்கள் ஐயா!
ReplyDeleteஅனுபவங்கள்......
ReplyDeleteஒவ்வொரு முறை தமிழகம் வரும்போதும் இப்படி யாரையாவது சந்திக்க எண்ணுவதுண்டு. ஆனாலும் முடிவதில்லை. பதிவுலக நண்பர்களுக்கு தொந்தரவாக இருக்குமோ என்ற எண்ணமும் மனதில் ஒரு பக்கத்தில் இருக்க அப்படியே விட்டு விடுவேன். சில சமயங்களில் சென்னையில் சில பதிவுலக நட்புகளை சந்தித்திருக்கிறேன். இம்முறை யாரையும் சந்திக்க இயலவில்லை! கணேஷும் கொஞ்சம் வேலை அதிகமாக இருப்பதாக சொல்லிவிடவே சந்திக்கவில்லை....
ReplyDelete@ துரை செல்வராஜு
@ தனிமரம்
@ வெங்கட் நாகராஜ்
வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி.
மூன்று பகுதிகளையும் படித்தேன். சென்னை வரும் எண்ணம் எனக்கும் இருந்தது...முடியவில்லை.
ReplyDeleteநீங்கள் இருவருமே சற்று மெலிந்து இருக்கிறீர்கள்.
மாதங்கி ஒரு smart intellect என்பதே என் கருத்தும்.
சுந்தர்ஜியை சந்திக்காம வந்துட்டீங்களே?
புத்தகம் வெளியீட்டுள்ளீர்களா? சபாஷ்.
ReplyDeleteதெரியாமல் போனதே..