ஸ்ரீ லலிதாம்பாள்..... |
அமுத சுரபி அட்சய பாத்திரம் இன்னும் சில எண்ணங்கள்
----------------------------------------------------------------------------------
சூதாட்டத்தில்
எல்லாம் தோற்றுப் போன பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்தனர். அப்போது மிகவும்
மகிழ்ச்சியில் இருந்த துரியோதனன் ராஜசூய யாகம் செய்ய விரும்பினான். மூத்தவர்களான
திருதராஷ்டிரனும் யுதிஷ்டிரனும் உயிருடன் இருக்கும்போது ராஜசூய யாகம் செய்யக்
கூடாது என்பதால் அதற்குப் பதில் வைஷ்ணவ யாகம் செய்யலாம் என்று எடுத்துக்கூறப்பட்டு
அதை விமரிசையாகச் செய்து முடித்தான்.அவ்வாறு இருக்கையில் ஒரு நாள் துர்வாச முனிவர்
தன் பதினாயிரம் சிஷ்யர்களுடன் துரியோதனனிடம் வந்தார். ரிஷியின் சாபத்துக்குப் பயந்து
துரியோதனனே முன் நின்று அதிதி பூஜையை வெற்றிகரமாக முடித்தான். மிகவும்
மகிழ்ச்சியடைந்த துர்வாசர் என்ன வரம் வேண்டும் என்றுகேட்க, அவன் எங்களிடம் வந்து
அதிதியாக இருந்தது போலவே வனத்தில் இருக்கும் பாண்டவர்களிடமும் , பாஞ்சாலி தன்
பரிவாரங்களுக்குப் போஜனம் செய்வித்து களைப்பாறிக் கொண்டிருக்கும் நேரத்தில் ,
அதிதியாகச் சென்று ஆசி அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தான் ஜனங்களை சோதனை
செய்வதில் விருப்பம் கொண்ட துர்வாசரும் ஒப்புதல் அளித்தார்.அதிதி பூஜையை
திருப்தியாகச் செய்ய இயலாமல் பாண்டவர்கள் துர்வாசரின் கோபத்துக்கு ஆளாகி சாபம் பெற
வேண்டும் என்பதே துரியோதனன் திட்டம்.
அதன்படியே துர்வாசர்
காட்டில் இருக்கும் பாண்டவர்களைக் காணச்சென்றார் தரும புத்திரன் தம்பிகளுடன் அவரை
வரவேற்று உபசரித்தான்.அவர்கள் ஆற்றுக்குச் சென்று குளித்து வருவதற்குள் உணவு
தயாராய் இருக்க வேண்டும் என்று சொல்லி முனிவர் தன் பரிவாரம் தொடரச் சென்றார்.
வனவாச ஆரம்பத்தில்
யுதிஷ்டிரன் செய்த தவத்தால் சூரிய பகவான் பிரத்தியட்சமாகி ஒரு அட்சய பாத்திரத்தைப்
பாண்டவர்களுக்குக் கொடுத்திருந்தார். அதன்படி அவர்களுக்குப் பனிரெண்டு
ஆண்டுகளுக்கு உணவு தட்டுப்பாடின்றிக் கிடைக்க வழிபிறந்தது. தினமும் திரௌபதி அந்தப்
பாத்திரத்தைக் கொண்டு எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் உணவு , தேவையான அளவு உணவு
படைத்துக் கடைசியில் அவள் உண்ணும் வரை அன்னம் வரும் அவளுண்ட பிறகு அந்த அட்சய
பாட்திரத்தின் சக்தி அன்றைக்குக் குறைந்து விடும் எல்லோருக்கும் உணவு படைத்து
திரௌபதியும் உண்டு முடித்திருந்த நேரத்தில் துர்வாச முனிவர் தம் சிஷ்யர்களுடன்
உணவுக்கு வந்தபோது என்ன செய்வது என்று தெரியாமல் கவலையில் இருந்தாள். அந்த
நேரத்தில் கிருஷ்ணர் வந்து திரௌபதியிடம் தனக்குப் பசி என்று கூறி உணவு கேட்டார்.
திரௌபதி இருந்த நிலையை விளக்கினாள். நான் பார்க்கிறேன். அட்சய பாத்திரத்தைக்
காட்டு என்ற கிருஷ்ணர் பாத்திரத்தில் இருந்த ஒரு சோற்றுப் பருக்கையை உண்டார். தான்
சரியாக பாத்திரத்தை அலம்பாததால் கண்ணன் சோற்றுப் பருக்கையை உண்ணும் படியாயிற்றே
என்றும் பாஞ்சாலி வருந்தினாள். கிருஷ்ணர் பீமனிடம் துர்வாசமுனிவரையும்
சிஷ்யர்களையும் உணவுக்கு அழைத்துவரச் சொன்னார்.அதன்படி அங்கு சென்ற பீமனிடம்
துர்வாசர் நாங்கள் உண்டாயிற்று, எங்கள் தவறை மன்னிக்க வேண்டும் என்று யுதிஷ்டரிடம்
கூறு என்று சொல்லி மறைந்தனர். அகில உலகமும்கண்ணனுக்குள் அடங்கி இருப்பதால் அவன் உண்ட
ஒரு சோற்றுப் பருக்கை ரிஷிக்கும் சீடர்களுக்கும் பசி ஆற்றிவிட்டது
எனக்கு இதன் ஊடே இன்னொரு கதையும் நினைவுக்கு
வந்தது. மணிமேகலைக்கு மணிமேகலா தெய்வம் அவளது முற்பிறப்பை உணர்த்திச்சென்றது தீவதிலகை என்னும் காவல் தெய்வம் அன்று கோமுகிப்
பொய்கையில் ஆபுத்திரன் எறிந்த அமுதசுரபி எனும் அட்சய பாத்திரம் தோன்றும் என்றும்
அதை அவள் எடுத்துச் சென்று பத்தினிப் பெண்டிர் பண்புடன் இடும் பிச்சையை முதன்
முதலில் ஏற்றால் அளவு குன்றா அமுத சுரபியால் பசிப் பிணி ஒழிக்கலாம் என்று கூற
மணிமேகலை அந்த அமுத சுரபியை ஏற்று காயசண்டிகை என்னும் தோழி மூலம் ஆதிரை என்பாளின்
கதை கேட்டு இவளே முதல் பிச்சையிடத் தக்கவள் என்று தெளிந்து பிச்சை ஏற்ற கதையும்
நினைவுக்கு வந்தது.
சரி, அட்சயப்
பாத்திரக்கதைகள் ஏன் நினைவுக்கு வரவேண்டும்? நான் பலமுறை என் பதிவுகளில் எழுதி
வந்திருக்கிறேன் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொல்லும் நாம் நம்மிடையே
தெரிந்தோ தெரியாமலோ, கலாச்சாரக் காரணங்களால் சமுதாயத்தில் ஏற்ற தாழ்வுக்கு இடம்
கொடுத்து விட்டோம். உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்னும் எண்ணம் பலரது இரத்தத்தில் ஊறிப்
போய் இருக்கிறது. இதற்கு மாற்று கொண்டு வர வேண்டுமென்றால் நாம் அனைவரும் சமம்
என்னும் உணர்வு வர வேண்டும். ஆனால் நாட்பட நாட்பட ஏற்ற தாழ்வுகள் அதிகரித்துக்
கொண்டே வருகிறது. போதாததற்கு இப்போது இன்னொரு சாதியாக பணக்காரன் ஏழை என்று
பாகுபாடும் அதிகரித்து வருகிறது. இளவயதிலிருந்தே அனைவரும் சமம் என்று சொன்னால்
மட்டும் போதாது. அதற்கான சூழ்நிலையும் உருவாகவேண்டும் அந்த மாதிரி நிலை ஏற்பட
கல்வி அவசியம். அதிலும் எல்லோருக்கும் சமமான கல்வி அவசியம் ஏழை பணக்காரனென்னும்
பேதமில்லாமல் அனைவரையும் ஒரே மாதிரி பாவிக்கும் கல்வி அவசியம். கல்விக்கூடங்களில் அம்மாதிரி
குழந்தைகள் உணர வேண்டுமானால் எல்லாக் குழந்தைகளுக்கும் ஏழை பணக்காரன் என்ற
வித்தியாசமில்லாமல் ஒரே மாதிரி உணவு, ஒரே மாதிரி உடை, ஒரே மாதிரி கல்வி
அத்தியாவசியம் கல்வியை மத்திய அரசாங்கம்
பொறுப்பெடுத்துப் போதிக்க வேண்டும் மொத்தத்தில் கல்வி அரசுடமை ஆக்கப் பட்டு
எல்லோருக்கும் இலவசமாக அளிக்கப் பட்டால் சிறார்கள் மனதில் இந்த ஏற்ற தாழ்வு
பாகுபாடு வராமல் போக வாய்ப்பு அதிகரிக்கும். அரசு இதை ஓரளவு உணர்ந்து இருக்கிறது
என்று சொல்லத் தோன்றுகிறது, ஏழைக் குழந்தைகளுக்கு அரசாங்கப் பள்ளிகளில் மதிய உணவு
இலவசமாக வழங்கப் படுகிறது
இந்த மதிய உணவு
திட்டம் பல மாநிலங்களிலும் செயல் படுத்தப் படுகிறது. இதன் செயல் முறை எந்த அளவில்
இருக்கிறது என்று அண்மையில் படித்தேன். அதன் பலனே இந்த அமுதசுரபி அட்சயபாத்திர நினைவுகளுடனான இக்கட்டுரை.
தமிழ் நாட்டில் இந்த
இலவச மதிய உணவுத் திட்டம் அரசாலேயே நடத்தப் படுகிறது என்று நினைத்துக்
கொண்டிருந்தேன். ஆனால் வேறு NGO-க்களும்
இருக்கிற மாதிரியும் தெரிகிறது
கொல்கொத்தா அருகில்
ஒரு கிராமம் ஒன்றில் எச்சில் இலைகளுக்குப் போராடும் சிறுவர்களைக் கண்டபோது
பக்திவேதாந்த ஸ்வாமி பிரபுபாதருக்குத் தோன்றிய சிறு பொறியே அக்ஷ்யபாத்திர
ஃபௌண்டேஷனாக உருவெடுத்ததாகப் படித்தேன் பெங்களூரில் அநேகமாக எல்லாப் பள்ளிகளுக்கும்
மதிய உணவு இந்த ஃபௌண்டேஷனால்தான் செயல் படுத்தப் படுகிறது.தனியார் மற்றும் மாநில
மத்திய அரசின் மானியத்தால் நடைபெறும் இப்பணியால் ஏழைக் குழந்தைகள் ஒருவேளையாவது
உணவு உட்கொள்ள முடிவதால்பள்ளியில்படிக்கும் சிறார்களின் எண்ணிக்கை கணிசமாக
உயர்ந்திருக்கிறது. ஒரு வேளை மதிய உணவு ஒரு ஆண்டு காலத்துக்கு ஒரு மாணவனுக்குக்
கொடுக்க வருடச் செலவு ரூபாய் 750-/ மட்டுமே என்கிறார்கள்.
ஒருங்கிணைக்கப்பட்ட நவீன முறை உணவு தயாரிப்பால் செலவினங்கள்
குறைவதோடு ஆரோக்கியமான உணவும் வழங்கப் படுகிறது. இம்மாதிரி CENTRALISED சமையல் கூடங்கள் ஒன்பது மாநிலங்களில் இருபது
இடங்களில் செயல்படுவதாகத் தெரிகிறது இதில் ஒரு இடம் சென்னையிலும் இயங்குகிறது
என்று தெரிகிறது.
அண்மையில்
பத்திரிகை செய்தி ஒன்று படித்தேன். அதில் இந்த மதிய உணவு பள்ளிகளுக்கு வழங்கும்
செயலில் கர்நாடகம் முதல் இடத்தை பிடித்துள்ளது. 77.79% கவரேஜ் ஆகி இருப்பதாகவும்
அதை அடுத்து பஞ்சாப், டாமண்டையூ, ஹிமாசல் ப்ரதேஷ், பீஹார் என்று முதல் கற்றையில்
வருகின்றன. குஜராத் ,தமிழ்நாடு, ராஜஸ்தான், கேரளா போன்ற மாநிலங்கள் இரண்டாவது
கற்றையிலும் வருகின்றன. தமிழ் நாட்டில் 50சதவீதத்துக்கும் சற்றே அதிக மதிப்பெண்
வழங்கப் பட்டிருக்கிறதுஒதுக்கப்படும் நிதி அளவு , அதில் உபயோகிப்பது , என்பன போன்ற
குறியீடுகளைக் கொண்டு
கணக்கிடுகிறார்கள்.
இந்த அட்சய பாத்திரா ஃபௌண்டேஷன் ISCON-இன்
பொறுப்பில் இயக்கப் படுகிறது. மதிய உணவு திட்டம் இன்னும் பூரணமாக செயல் பட
வேண்டும் எல்லாப் பள்ளிகளிலும்
எல்லோருக்கும் உணவு கட்டாயமாக வழங்கப் படவேண்டும். குறைந்தது உண்ணும் உணவிலாவது
சமநிலை ஏற்பட வேண்டும் பள்ளிகள் எல்லாம்
அரசுடமை ஆக்கப் பட வேண்டும் கல்வி வியாபாரிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப் பட
வேண்டும்
தெரிந்த அட்சயப் பாத்திரம் பற்றி சொல்லி அதோடு தெரியாத அட்சய பாத்திரா ஃபௌண்டேஷன் பற்றிய தகவல்களையும் பகிர்ந்தமைக்கு நன்றி. அறிவுப் பிணியைப் போக்க அமுதசுரபி இருக்கிறதா எனக் கேட்டு இருக்கிறீர்கள். இருக்கும் என எண்ணுகிறேன்.
ReplyDeleteஅக்ஷயமாக பலவிஷயங்கள் சொல்லியுள்ளீர்கள். ;)
ReplyDeleteபாராட்டுக்கள்.
பள்ளிகள் எல்லாம் அரசுடமை ஆக்கப் பட வேண்டும் கல்வி வியாபாரிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப் பட வேண்டும்
ReplyDeleteஉன்னதமான கருத்துகள்..
அட்சய பாத்திரா ஃபௌண்டேஷன் பற்றிய தகவல்களுக்கு நன்றி ஐயா...
ReplyDeleteஉயர்ந்த சிந்தனைகள்.
ReplyDeleteஅக்ஷய பாத்திரா பவுண்டேஷன் பற்றிய விவரம் அறிந்து கொண்டேன். நன்றி.
ReplyDeleteபள்ளிகள் எல்லாம் அரசுடமை ஆக்கப் பட வேண்டும் கல்வி வியாபாரிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப் பட வேண்டும்
ReplyDeleteஉண்மை ஐயா. நன்றி
அட்சய பாத்திரா நிறுவனம் பற்றி அறியத்தந்தமைக்கு நன்றி ஐயா.
ReplyDeleteசெவிக்கு உணவில்லாதபோது வயிற்றுக்கும் சிறிது ஈயப்படும் என்றார் வள்ளுவர். ஆனால் வயிற்றுக்கு உணவில்லாதபோது செவிக்கு ஈயப்படுவது சிந்தையில் ஏறுமா சின்னஞ்சிறு பிள்ளைகளுக்கு? நல்லதொரு முயற்சியைக் கையிலெடுத்து நடத்தும் இதைப் போன்ற நிறுவனங்களை மனதார வாழ்த்துவோம்.
எல்லாப் பள்ளிகளிலும் எல்லோருக்கும் உணவு கட்டாயமாக வழங்கப் படவேண்டும். குறைந்தது உண்ணும் உணவிலாவது சமநிலை ஏற்பட வேண்டும் பள்ளிகள் எல்லாம் அரசுடமை ஆக்கப் பட வேண்டும் கல்வி வியாபாரிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப் பட வேண்டும்//
ReplyDeleteநல்ல கருத்து.
நல்லவர்கள் விருப்பம் நிறைவேறும்.
நல்ல எண்ணங்கள் காலத்தால் சாத்தியம் ஆகும்.
வாழ்த்துக்கள்.
தமிழகத்தில் பக்தவத்சலம் முதலமைச்சராக இருந்த காலத்திலேயே ஆரம்ப சுகாதார பள்ளிகளில் இலவச மதிய உணவுத் திட்டத்தை அமுல்படுத்தினார்கள். ஏறக்குறைய ஐம்பதாண்டு காலம் சென்றபின்னரும் இன்றளவும் இத்திட்டம் பெயரளவுக்குத்தான் இருப்பது வேதனை. சுகாதாரமற்ற சூழல்களில் சமைத்துப் பரிமாறப்படும் இந்த உணவு எந்த அளவுக்கு குழந்தைகளுக்கு பயனுள்ளதாக அமைகிறது என்பது கேள்விக்குறிதான். நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோன்ற தனியார் தொண்டு நிறுவனங்கள் (அவற்றிலும் ஃப்ராடுகள் இல்லாமல் இல்லை) முன்வந்தால் இத்திட்டம் இன்னும் சிறப்புற வாய்ப்புண்டு.
ReplyDeleteஆறாம் வகுப்பில் 'மணிமேகலை' பாடம் நடக்கும்போது, 'ஆபுத்திரன்' வேடம் அணிந்து நான் நடித்ததை நினைவுபடுத்திவிட்டீர்கள். மதிய உணவு திட்டம் ஒரு மகத்தான திட்டம். அமெரிக்கப் பள்ளிகளிலும் இது உண்டு. ஆனால் இங்கோ அதுவொரு தீண்டத்தகாத காரியம் மாதிரியே அசிங்கப்படுத்தப்படுகிறது.
ReplyDelete
ReplyDelete@ வே.நடனசபாபதி
அறிவுப்பிணியைப் போக்கும் அட்சய பாத்திரம் இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும். முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ReplyDelete@ கோபு சார்
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி
ReplyDelete@ இராஜராஜேஸ்வரி
கருத்துப் பதிவுக்கு நன்றி
ReplyDelete@ திண்டுக்கல் தனபாலன்
வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி
ReplyDelete@ டாக்டர் கந்தசாமி
வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றி.
ReplyDelete@ ராஜலக்ஷ்மி பரமசிவம்
வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி.
ReplyDelete@ கரந்தை ஜெயக்குமார்
வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றி ஐயா
ReplyDelete@ கீதமஞ்சரி
வருகைக்கும் சிந்தித்தெழுதிய கருத்துக்கும் நன்றி
ReplyDelete@ கோமதி அரசு
நல்ல எண்ணங்கள் காலத்தால் சாத்தியமாகும் காலத்துக்குக் காத்திருப்போம். வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி.
ReplyDelete@ டி.பி.ஆர்.ஜோசப்
அரசாங்கப் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு வழங்கப் படுகிறது என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். என் கருத்து எல்லாக் குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான இலவச உணவு வழங்கப் பட வேண்டும் என்பதே. சிறார்களின் மனதில் ஏற்ற தாழ்வு எண்ணங்கள் எழாமல் இருக்க உதவும் என்பதாலெழுந்த எண்ணம் இது.கருத்துப் பகிர்வுக்கு நன்றி.
ReplyDelete@ செல்லப்பா யக்ஞஸ்வாமி
பசித்திருப்பவன் முன் கடவுளே கூட உணவு வடிவத்தில்தான் வரமுடியும் என்று ஒரு கருத்து உண்டு.என் சிந்தனையே இந்த உயர்வு தாழ்வு மனப் பான்மையை எப்படி நீக்குவது என்ற அடிப்படையில் பதிவாகப் பதிவானது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அட்சயபாத்திரம் வேண்டுமானால்
ReplyDeleteஅனைவருக்கும் பொதுவானதாய் இருக்கலாம்
பசியும் செரிக்கும் திறனும் அவரவர் அளவில்
ஏற்படுத்திக் கொள்வதே
வலையில் எல்லாம்தான் கிடைக்கிறது
அவரவர் நிலைக்கேற்ற விஷயங்களை
அவரவர்கள் தேடியலைதலைப்போல
வசதிகளை நாம் செய்து கொடுக்கலாம்
நிலைகளை அவரவர்கள்தான் முடிவு செய்யமுடியும்
முடிவு செய்து கொள்கிறார்கள்
தாங்கள் முடிவாகச் சொன்ன அறிவுப் பசியில் கூட
எந்த அறிவுப் பசி என்பது அவரவர சம்பத்தப்பட்டதுதானே
பள்ளிகட்டணம் மதிய உணவு இலவச புத்தகம்
பொதுவான கற்பித்தல் என அனைத்தும் சமமாக
இருந்தால் கூட ஒருவன் முதல்வனாய் இருக்க
ஒருவன் கடைசிப் பையனாய் இருந்துதானே போகிறான்
சம வாய்ப்பு மட்டும் சம நிலையைத் தருவதில்லை
என்பதே என் கருத்து
அட்சய பாத்திரம், அட்சயா ஃபவுண்டேஷன் என நல்ல விஷயம் சொன்ன பகிர்வு.....
ReplyDeleteஅரசு செய்ய வேண்டிய விஷயங்கள் எத்தனை எத்தனை... அவர்கள் பை நிறைப்பதிலேயே முக்கிய கவனம் இருப்பதால் எந்த வேலையையும் கவனிப்பதில்லை...
ReplyDelete@ ரமணி
சமவாய்ப்பு என்பது இருந்தால்தானே முன்னுக்கு வர முண்டியடிக்க முடியும்.இப்போது இருப்பது ஒரு ஹாண்டிகப் பந்தயம்.ஒருவர் மிகவும் முன்னே நிற்கிறார். இன்னொருவர் அவருக்குப்பின் எங்கோ நிற்கிறார். இந்த நிலை போக்கத்தான் சம வாய்ப்பு என்று கூறினேன்,பிறகு பந்தயத்தில் முன் வருவதோ தோல்வி அடைவதோ அவன் பாடு. காலங்காலமாக அடக்கி ஒடுக்கப்பட்டவன் வாழ்க்கைப் பந்தயத்தில் ஓடுவதற்கே முடியாமல் இருக்கும் போது உள்ளத்தளவிலும் கூட எம்பதி எனும் புரிதல் இல்லாத நிலையேவருத்தம் தருகிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ReplyDelete@ வெங்கட் நாகராஜ்
எத்தனையோ நலத்திட்டங்கள் நிலுவையில் இருக்கின்றன. தேன் எடுப்பவன் முழங்கையை நக்காமல் இருப்பானா என்று ஒரு சொல் வழக்கு உண்டு. ஆனால் தற்போது உள்ள நிலவரம் மக்களுக்குக் கிடைப்பது முழங்கையில் வழியும் தேன்தான்.என்னைப் பொறுத்தவரை நம் நாட்டுக்கு தேவை ஒரு நல்லவனின் சர்வாதிகாரம்தான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
முதலில் வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள், GMB ஸார்!
ReplyDeleteஅறிவுப்பிணிக்கு வலைபதிவுகள் இருக்கின்றன என்று சொல்லலாமா? ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைப்பற்றி எழுதி நம் அறிவை வளர்க்கிறார்களே!