இரண்டு கொலை வழக்குகள்
------------------------------------------
பொதுவாக
என்பதிவுகளில் பரபரப்பான செய்திகளையோ, திரைப்படங்கள் மற்றும் அரசியல் பற்றியொ
எழுதுவதில்லை. ஆனால் அண்மையில் இரண்டு கொலை வழக்குகளின் தீர்ப்பு பற்றி பதிவர்களின்
கருத்தறிய இப்பதிவினை எழுதுகிறேன். ஒரு 14 வயதுச் சிறுமியும் அவர்கள் வீட்டில் பணியில் இருந்த ஒரு வாலிபரும்
கொல்லப் பட்டு பல ஆண்டுகளாக நீதி மன்றத்தில் நிலுவையில் இருந்த கொலை வழக்கில்
அச்சிறுமியின் பெற்றோர்கள் , (இருவரும் பல் மருத்துவர்கள்) குற்றவாளிகளாக
விசாரிக்கப்பட்டு ஆயுள் தண்டனை வழங்கப் பட்டிருக்கிறார்கள். நேரில் பார்த்த
சாட்சிகளோ, எந்த சந்தேகத்துக்கும் இடமளிக்காத உறுதியான சாட்சியங்களோ இல்லாத
நிலையிலும் தண்டனை வழங்கப் பட்டிருக்கிறது தீர்ப்பினைக் குறைசொல்லியும் ஆதரித்தும்
கருத்துக்கள் பத்திரிக்கைகளிலும் ஊடகங்களிலும் வந்த வண்ணம் இருக்கின்றன. கொலைக்கான
காரணமாகப் பேசப்படுவதுஅந்தச் சிறுமிக்கும் அவர்கள் வீட்டில் பணியில் இருந்த
வனுக்கும் இருந்த தகாத தொடர்பு கண்டு பிடிக்கப் பட்டு நடந்த ஒரு “கௌரவக் கொலை” என்பதாகும் .கூடவே இருந்திருக்கும் பெற்றோர்களுக்கு அவர்கள் தொடர்பு
தெரியக்கூட முடியாத படி நடத்திய வாழ்க்கையையா இல்லை தலைமுறை இடைவெளி காரணமாக
புரிதல் போதாத காரணமா, எதுவாயிருந்தாலும் வருத்தம் அளிக்கிறது. பெற்று சீராட்டி
வளர்த்த ஒரே பெண்ணைக் கொலை செய்யும் அளவுக்கு தகுதி அந்தஸ்து போன்றவைகளுக்கு அதிக
முக்கியத்துவம் கொடுத்ததால் வந்த விளைவா.?.மறுக்க முடியாத சந்தர்ப்ப
சாட்சியங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப் பட்டிருப்பதாகச் சொல்லப் படுகிறது
குற்றவாளிகள் தப்பித்தாலும் நிரபராதிகள் தண்டிக்கப் படக் கூடாது என்னும் நீதியின் கொள்கை
இருந்தும் பெற்றோர்களே தண்டனைக்குள்ளாகின்றனர் என்றால் .......நீதி தேவதைக்கு பாரபட்சம்
கிடையாது என்று நிலைநாட்டப் படுகிறதா.?
ஆனால் இன்னொரு கொலை
வழக்கில் சட்சியங்கள் பிறழ்ந்து விட்டனர் என்னும் காரணத்தால் குற்றம் சாட்டப்பட்ட
அனைவருமே விடுதலை ஆகி விட்டார்கள்.. ஒருவர் மீது குற்றம் சாட்டும்போது அவர்களுக்கெதிராக
தடயங்களும் சாட்சிகளும் இருக்கின்றனர் என்றுதானே பொருள்.? காவல் துறையினர்
யாரையாவது கைது செய்து குற்றம் சாட்டி வழக்குப் பதிவு செய்கிறார்கள் என்றால் என்ன
தெரிகிறது.? ஏதாவது முன் விரோதமா....?, இல்லையென்று சொல்வதானால் குற்றம் சாட்டப்
பட்டவர்கள் எதற்கு வேறு மாநிலத்துக்கு வழக்கை மாற்றக் கோரி மனு செய்து அதற்கு
ஒப்புதல் பெறுவதும் நடக்கிறது. குற்றம் சாட்டப் பட்டவரில் ஒருவர் கொலையுண்டு
சாவதும் , இன்னொருவர் அப்ரூவராக மாறி வழக்கின் போது பிற்ழ்சாட்சியம் கூறுவதும்
திரை மறைவில் என்னென்னவோ நடக்கிறது என்பதை உறுதி செய்கிறது. கொலை நடந்த சில
நாட்களில் சிலர் குற்றத்தைச் செய்ததாகக் கூறி சரண்டர் ஆவதும் பின் அந்த நேரத்தில்
அவர்கள் அங்கே இருக்கவில்லை என்று தெரியவருவதும் , கொலையுண்டவரின் உறவுகளே
சாட்சியளிக்கத் தடுமாறுவதும் கற்பனை
செய்துகூட பார்க்க முடியாதபடி இருக்கிறது. பட்டப் பகலில் கோவில் வளாகத்தில் ஒருவர்
படுகொலை செய்யப் படுகிறார். கொலைக்கான காரணம் என்ன.?கொலையாளிகள் கூலிப்
படையினரா.....அப்படியானால் ஏவியது யார் ... என்றெல்லாம் கண்டுபிடிக்கப் படாமலேயே
போய் விடுமானால் மக்களுக்கு குற்றவியல் நீதியில் நம்பிக்கை குறைந்து விடும்.
முதல் கொலையில் பெற்றோர்கள் தங்கள் குடும்பத்தைப் பற்றி அக்கரை இல்லாதவர்களாக இருந்திருக்கிறார்கள். பெண் குழந்தையை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்ற அறிவற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களை இந்தக் காரணத்திற்காக மட்டுமே தண்டிக்கலாம். தவறில்லை.
ReplyDeleteகுழந்தையினைக் கவனிக்கத் தவறிய சரியான முறையில் வளர்க்கத் தவறிய பெற்றோர்கள் இவர்கள்.
ReplyDeleteஇரண்டாம் வழக்கைப் பொறுத்த வரை பிறழ் சாட்சிகளை அனும்திக்கக் கூடாது, பிறழ் சாட்சிகளாக மாறுபவர்கள் தண்டிக்கப் படுவார்கள் என்னும் நிலை வருமேயானால், சட்டம் காக்கப்படும் என்று எண்ணுகின்றேன். யாருமே கொலை செய்யவில்லை என்றால், குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவேண்டும்
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
ReplyDeleteஉயிரினும் ஓம்பப் படும்.
ஒருவர் மற்றவற்றால் - உயர்ந்தவராகக் கருதப்படுவதைக் காட்டிலும்
ஒழுக்கம் உடைய அதனாலேயே உயர்ந்தவராகக் கருதப்படுவார்.
சொன்னது உண்மை ஐயா... குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவேண்டும்...
ReplyDeleteஇரண்டாவது வழக்கில் ஆரம்ப முதலே எண்ணற்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டன: ஓர் அரசியல் தலைமை, வேண்டுமென்றே ஒரு துறவியைப் பழிவாங்குவதற்கு இந்தக் கொலை வழக்கைப் பயன்படுத்திக்கொண்டதாக அனைவராலும் பேசப்பட்டது. இப்போது உண்மை வெளிவந்திருக்கிறது. அதாவது வழக்கின் நோக்கம் உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடித்து தண்டனை வழங்குவதல்ல என்பது தான் விந்தையிலும் விந்தை. இதே போல் வேறு சமயத்தைச் சேர்ந்த துறவிகளை அவர்களால் அசிங்கப்படுத்த முடியுமா? வோட்டு விழுமா? சிந்திக்கவேண்டும்.
ReplyDeleteநானும் இவ்விரு வழக்குகளைப் பற்றியும் ஒரு பதிவு எழுதி வைத்திருக்கிறேன். ஏறக்குறைய அதே கண்ணோட்டத்துடன் வருகிறது உங்களுடைய பதிவு.
ReplyDeleteஅருமை. இதைத்தான் Great men think alike என்கிறார்களோ :))
தவறிழைப்பவர்கள் யாராகிலும் தண்டிக்கப்பட வேண்டியதுதான்...
ReplyDelete=================
வணக்கம்...
நீங்க செல்போன் வச்சிருக்கீங்களா?
அப்போ கண்டிப்பா ஆண்ட்ராய்ட் போனாதான் இருக்கும்..
சரியா...?
உங்களோட செல்போனை மத்தவங்க அநாவசியமா பயன்படுத்த கூடாதுன்னு நினைக்கிறீங்களா?
அப்போ தொடர்ந்து படிங்க...
ஸ்மார்ட் போன்களை பாதுகாக்க புதிய சாப்ட்வேர்..!
ReplyDelete@ டாக்டர் கந்தசாமி
@ கரந்தை ஜெயக்குமார்
@ துரை செல்வராஜு
@ திண்டுக்கல் தனபாலன்
@ செல்லப்பா யக்ஞஸ்வாமி
@ டி.பி.ஆர்.ஜோசப்
@ சுப்புடு
அனைவரது வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி.
இவை எல்லாம் ஒண்ணுமே இல்லைங்கற அளவுக்கு தூக்கிச் சாப்பிடும் வழக்கு ஒண்ணு இப்போ இங்கே பரபரப்பாக இருக்கிறது. திருவானைக்காவில் யமுனா என்னும் பெண்மணியும், அவளுடைய காதலரும்(கள்ளக்காதல்னு சொல்லக் கூடாதாமே) சேர்ந்து யமுனாவின் கணவன், அவர் வியாபாரத்துக்குக் கடன் கொடுத்த நண்பர், அவங்க கார் டிரைவர், பின்னர் யமுனாவின் இரண்டு குழந்தைகள் இரண்டுபேருமே வயது வந்தவர்கள் கிட்டத்தட்ட ஐந்து கொலைகள் செய்துவிட்டுப் பாவத்தைக் கழுவப் புண்ணிய நதிகளில் நீராடி ஷிர்டியில் தரிசனமும் செய்தார்களாம். கடைசியாச் செய்த யமுனாவின் பெண்ணின் கொலை மூலம் உண்மை புரிய வந்தது. இத்தனைக்கும் காரணம் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னரும் வேறொருவர் மீது ஆசை கொண்ட பெண்ணின் மோகமும், அந்த ஆணின் காதலும் தான். ஒரு வழியா விவாகரத்து வாங்கிட்டு அந்த ஆணோடு சேர்ந்து குடும்பம் நடத்தி இருந்திருக்கலாம். :((((
ReplyDeleteஇதுக்கு அந்த யமுனாவின் தாயும் உடந்தை. மாப்பிள்ளை, பேரக்குழந்தைகள் கொலைக்கு அவங்க உதவியா இருந்திருக்காங்க. எப்படிச் செய்தாங்கனு புரியலை. எப்படி மனசு வந்ததுனும் புரியலை! :(((
மற்றபடி நீங்க எழுதி இருக்கும் இரண்டிலும் உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.
ReplyDeleteமடத்துல உள்ளவா தப்பு பண்ணினா அதை தப்பா எடுத்துக்ககூடாதுன்னு இந்திய சட்டம் சொல்லுதுங்க
ReplyDelete
ReplyDelete@ கீதா சாம்பசிவம்
நினைத்துப் பார்க்கவே முடியாத ரீதியில் கொலைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. குற்றம்புரிபவர்கள் யாராய் இருந்தாலும் தண்டனை பெற வேண்டியவர்களே.
ReplyDelete@ அவர்கள் உண்மைகள்
அத்தி பூத்தாற்போல் வந்ததற்கு நன்றி. உங்கள் பின்னூட்டத்தில் ஒரு எள்ளல் தெரிகிறது. இரண்டு கொலைகளுமே திட்டமிடப்பட்டு செய்த கொலைகளே. கொலை செய்தவர்கள் யாராயிருந்தாலும் தண்டனை கிடைக்க வேண்டும். கூலிக்குக் கொலை செய்தவர்களுக்கு இணையாக அதைச் செய்யத் தூண்டியவர்களும் தண்டிக்கப் பட வேண்டும். நாம் விரும்பியோ விரும்பாமலோ அநேக குற்றங்கள் தண்டிக்கப் படாமலேயே போகிறது. பட்டப் பகலில் கூட்டம் கூட்டமாக 1984-லும் 2002 -லும் கொலை செய்தவர்களும் செய்யத் தூண்டியவர்களும் எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல் பெரிய மனிதர்களாக உலாவிக்கொண்டுதானே இருக்கிறார்கள் EVEN IF JUSTICE IS DELAYED, IT IS JUSTICE DENIED ONLY.
உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும்
ReplyDelete