ஞாயிறு, 15 டிசம்பர், 2013

வெற்றியும் தோல்வியும் மீண்டும்


                                வெற்றியும் தோல்வியும்  மீண்டும்
                                ------------------------------------------------



கனவுகளில் மூழ்கி இருக்கும்போது எல்லாமே இன்பமயமாய் இருக்கும்விழித்து எழுந்து விட்டால் கடமைக் கடலாய் நிற்கும் கடமைகளைச்செய்யும்போது வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரலாம்,.... வரும்....தோல்வி கண்டு துவளாமலும் வெற்றிக் களிப்பில் மிதந்து தன்னை இழக்காமலும் இருப்பது என்பது அநேகமாக நம்மில் பலரும் உணர வேண்டிய நிலை. பல நாட்களுக்கு முன் ஒரு பதிவு எழுதி இருந்தேன். அதனைப் படித்துப் பார்த்தபோது மீள் பதிவாக்கினாலும் குணம் குறையாது என்று தோன்றியது. வெற்றியையும் தோல்வியையும் நாம் எதிர்கொள்ளும்போது நினைத்துப் பார்க்க வேண்டிய வரிகள் என்று தோன்றுகிறது

வெற்றியும் தோல்வியும் 
----------------------------------
           தீதும் நன்றும் பிறர் தர வாரா
               வெற்றியும் தோல்வியும் பிறர் தர வாரா 
               நாளும் நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் --நல்ல
               படிப்பினையே யன்றி வேறொன்றோ  

தோல்விகள் எல்லாம் தீதல்ல -காணும்
வெற்றிகள் எல்லாம் நன்றும் அல்ல 


             விழுந்து எழுந்து முட்டி மோதி 
              இலக்கடைந்தால் கிடைப்பதன் அருமை கூடிவிடும். 
 
ஊர் கூடி வடம் பிடித்து தேரிழுக்க 
தேரோட்டம் இனிதே நடக்கையில் தேரும்
நேர் செல்ல கட்டுக்குள் வைக்க இடும்
முட்டுக்கட்டையும் தீதாமோ இல்லை
தேரோட்டந்தான் தோல்வியாமோ

            வாழ்வியலில் சந்திக்கும் சறுக்கல்களும் 
            தேரின் முட்டுக்கட்டைக்கு நேரன்றோ
            நட்பிடமும் உறவிடமும் வெற்றி தோல்வி 
            தேடாதே, நடப்பவை எல்லாம் அனுபவமே,
           ஆற அமர சிந்தித்தால் அறிவில் தெளிவைக் காண்போமே.

ஆடும் ஆட்டத்தில் வந்து விழும் பந்துகளை 
நேர்கொள்ள இயலாது சில நேரம் கோட்டை
விடுபவனே ஆட்டம் ஆடியவனாகிறான்
விடாதவன் என்றும் ஆடாதவனேயன்றோ
நீ ஆடுகிறாய் வெற்றியும் தோல்வியும் அடைகிறாய்.

             வாழ்வியலில் வீழ்ந்து பட்டாய்
             நீ ஆடித்தான் ஆகவேண்டும் -தேர்வு
             செய்யும் உரிமை இங்கில்லை உனக்கு. 

வேண்டுமென்றே தோற்பதும் சில சமயம்
சுகமாகத் தோற்பதும் உற்றாரின் வெற்றிக்கே -அது
மகனோ மகளோ, பெயர் சொல்ல வந்த பெயரனோ,
உற்ற நட்போ,காதல் ஜோடியோ, கடிமணத்துணையோ
யாரேனும் ஆகலாம் - அவர்கள் காணும் உவகையிலே
நீ  அடையும் மகிழ்ச்சிக்கே.


               தோல்வி தீதல்ல எனும்போதே
               வெற்றி என்றும், நன்றென்று ஆவதில்லை.
               வெற்றி என்றும் நன்று, என்றும் ஆவதில்லை.
              அதனை ஏற்கும் முறையே தீர்மானிக்கும்

வெற்றி சில சமயம் தலைக்கனம் ஏற்றும்
சுற்றில் நடக்கும் நிகழ்வுகள் கண்ணில் படாது,
கருத்தினில் படியாது,முயற்சிகளை முறியடிக்கும்,
கடந்து வந்த பாதை காணாது போகும்.    
வெற்றியின் உச்சியிலிருந்து வீழ்ந்து பட்டால்,
பின் மிச்சம் ஏதும் கிட்டாது மீண்டும் துவங்க.

              விழுவது எழுவதற்கே என்றே உணர்ந்து விட்டால்
              உடலம் விழும்போது காலனிடம் கூறலாம்,
             "வாடா, உன்னை சற்றே மிதிக்கிறேன் என் காலால்"

 



 

11 கருத்துகள்:

  1. தோல்வி தீதல்ல எனும் போதே வெற்றி என்றும், நன்றென்று ஆவதில்லை. வெற்றி என்றும் நன்று, என்றும் ஆவதில்லை.

    மனதில் நிலை நிறுத்த வேண்டிய வாசகங்கள்..

    பதிலளிநீக்கு
  2. வாழ்வியலில் சந்திக்கும் சறுக்கல்களும்

    தேரின் முட்டுக்கட்டைக்கு நேரன்றோ

    நேரான அருமையான சிந்தனைப்பகிர்வுகள்.
    .பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  3. //வேண்டுமென்றே தோற்பதும் சில சமயம்
    சுகமாகத் தோற்பதும் உற்றாரின் வெற்றிக்கே -

    அது மகனோ மகளோ, பெயர் சொல்ல வந்த பேரனோ, உற்ற நட்போ, காதல் ஜோடியோ, கடிமணத்துணையோ,
    யாரேனும் ஆகலாம் -

    அவர்கள் காணும் உவகையிலே
    நீ அடையும் மகிழ்ச்சிக்கே.//

    அருமை, உண்மை.

    இதை ரஸித்தேன். ;)

    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  4. நல்ல கருத்துக்கள் உள்ளடங்கிய வரிகள்... வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  5. உண்மைதான் ஐயா.தோல்வியே வெற்றிக்கு அடிப்படை.ஒருவன் தோல்வியை சந்திக்காவிட்டால் அவனுக்கு நிச்சயம் மமதை ஏற்பட வாய்ப்புண்டு.

    பதிலளிநீக்கு
  6. எல்லாமே நன்றாய் இருக்கின்றன. வாதத்தில் தோற்றாலும் உறவில், நட்பில் ஜெயிக்கலாம்.

    பதிலளிநீக்கு
  7. வெற்றி சில சமயம் தலைக்கனம் ஏற்றும்
    சுற்றில் நடக்கும் நிகழ்வுகள் கண்ணில் படாது,
    கருத்தினில் படியாது,முயற்சிகளை முறியடிக்கும்,
    கடந்து வந்த பாதை காணாது போகும். //

    அருமையா சொல்லியிருக்கீங்க.

    பதிலளிநீக்கு

  8. @ துரை செல்வராஜு
    @ டாக்டர் கந்தசாமி
    @ இராஜராஜேஸ்வரி
    @ கோபு சார்
    @ வெங்கட் நாகராஜ்
    @ திண்டுக்கல் தனபாலன்
    @ வே.நடனசபாபதி
    @ ஸ்ரீராம்
    @ டிபிஆர்.ஜோசப்
    வருகை தந்து பின்னூட்டமிட்டு பாராட்டி வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் !
    அன்போடு என்னை அழைத்துக் கவி பாடச் சொன்ன நன் மனதை
    வணங்கி இதோ விரைவாக என் கவிதைகளை அரங்கேற்றி விடுகின்றேன்
    ஐயா .மிக்க நன்றி ஐயா அழைப்பிற்கு .

    பதிலளிநீக்கு