செவ்வாய், 31 டிசம்பர், 2013

புத்தாண்டுச் சிந்தனைகள்


                               புத்தாண்டுச் சிந்தனைகள்.
                               ------------------------------------



புத்தாண்டு பிறக்கிறது

நாளும்தான் இரவுக்குப் பின் பகல் விடிகிறது.
இன்று மட்டும் இது என்ன புதிதா.?
பல்லெல்லாம் தெரியக் காட்டி முகமெல்லாம்
புன்னகை கூட்டி கைகுலுக்கி வரும் ஆண்டு
பிரகாசிக்க வாழ்த்துக்கள் கூறுகிறோம்
சற்றே சிந்தித்துப்  பார்க்கிறோமா.
சம்பிரதாய முகமன்கள் ஒரு புறம் இருக்கட்டும்
புத்தாண்டு வாழ்த்துக் கூறுமுன் கடந்து சென்ற
ஆண்டை நினைத்துப் பார்க்க வேண்டாமா.
கடந்த ஆண்டு என்ன செய்ய நினைத்தோம்
நினைத்ததெல்லாம் செய்து முடித்தோமா?

நம்பிக்கைகள் வாழ்வின் கட்டாய ஊன்றுகோல்
ஆண்டொன்று போக அகவை ஒன்று கூடுகிறது.
அனுபவங்களும் கூடத்தானே வேண்டும்
அனுபவங்கள் தரும் படிப்பினைகள் சிந்திக்கிறோமா,
வினாடி நிமிடம் மணி நாள் வாரம் மாதம் வருடம்
எல்லாம் காலத்தின் குறியீடுகள் இவற்றின்
ஒவ்வொரு நொடியும் புதிதாய்ப் பிறப்பதே-அதேபோல்
நாளும் நொடியும் நாமும் புதிதாய்ப் பிறக்கிறோம்
இந்நொடியில் நிகழ்வதே நிதரிசனம் . அடுத்து நிகழப்
போவது யாரே அறிவார். யாரும் யாரையும்
காணவோ முகமன் கூறவோ உறுதி சொல்ல முடியுமா

புத்தாண்டை எப்படி வரவேற்கிறோம்--முன் இரவு
கூடிக்களித்து சோமபானம் அருந்தி சீயர்ஸ் சொல்லி
வாழ்த்துதல் ஒரு சம்பிரதாயமாகே மாறுகிறது......
பிரதிக்ஞைகள் பல பலரும் எடுக்கிறார்கள்-( இருமுடி
எடுக்கும் ஐயப்ப பகதர்கள் பலரும் விரதம் இருத்தல்போல்
விரதகாலம் முடிந்ததும் தொடரும் பழைய பலவீனங்கள் ).
பிரதிக்ஞைகள் பெயரளவில்மட்டும் இருந்தால் போதுமா.?.
கடந்து வந்தபாதை கற்பித்தது என்ன, பட்டியல் வேண்டாமா.?.
இன்று நாம் காண்பவரை அடுத்த நாள்---நாளென்ன அடுதத் நொடி
காண்பதே நிச்சயமில்லை....காணும்போதும் பழகும்போதும்
அன்பு செய்வோம், ஆறுதல் அளிப்போம், தோள்கொடுப்போம்
ஆக என்றும் நல்லவராக வாழ பிரதிக்ஞை எடுப்போம்
இன்றுபோல் என்றும் மனித நேயம் பழக  அன்பர்களே
என் மனங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

21 கருத்துகள்:

  1. அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. //இன்று நாம் காண்பவரை அடுத்த நாள்---நாளென்ன அடுத்த நொடி காண்பதே நிச்சயமில்லை....காணும்
    போதும் பழகும்போதும்
    அன்பு செய்வோம், ஆறுதல் அளிப்போம், தோள்கொடுப்போம்//

    அழகாகச் சொன்னீர்கள்,ஐயா.
    அதே! அதே!!

    தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  3. அவசரகதியில் ஓடும் நமக்கு அதைப் பற்றி சிந்திக்க நேரம்தான் உண்டா? நல்லதொரு சிறப்பான சிந்தனைகள் தான் ஐயா. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  4. //காணும்
    போதும் பழகும்போதும்
    அன்பு செய்வோம், ஆறுதல் அளிப்போம், தோள்கொடுப்போம்//
    புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா

    பதிலளிநீக்கு
  5. கடந்த ஆண்டின் நிகழ்வுகளைச் சிந்தித்துப் பார்ப்பது நல்லதுதான். சந்தோஷ நினைவுகளை நினைவில் நிறுத்தி, அல்லவைகளை அகற்றி நேற்று என்பது உடைந்த பானை, நாளை என்பது மதில் மேல் பூனை, இன்று என்பதே கையில் உள்ள வீணை என்று இன்றைய தினத்தில் வாழ்பவன் நான்! அனாவசிய புத்தாண்டுச் சபதங்கள் எல்லாம் எடுப்பதில்லை! :)))

    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும், சக வாசக நண்பர்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  7. பெயரளவில் வாழ்க்கையே ஓடுகின்றது பலருக்கு. சிந்திப்பதால் மனிதராகிறோம்.. உண்மை. (அதையும்நினைவு படுத்த சேண்டியிருக்குதே:)

    வாழ்த்துக்கள், வணக்கங்கள்.

    பதிலளிநீக்கு

  8. "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே' என்கிறது நன்னூல்.

    எனவே பழையவைகளுக்கு விடைகொடுத்து புதியவற்றை வரவேற்போம். தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் GMB ஸார்!

    பதிலளிநீக்கு
  10. நல்ல பதிவு.

    தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்:)!

    பதிலளிநீக்கு
  11. வாழ்க வளமுடன்!..
    வளர்க நலமுடன்!..
    எல்லாம் வல்ல இறைவனை வேண்டி
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..

    பதிலளிநீக்கு
  12. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் GMB சார்!

    பதிலளிநீக்கு
  13. காணும்போதும் பழகும்போதும்
    அன்பு செய்வோம், ஆறுதல் அளிப்போம்//

    இவைகளையே புத்தாண்டின் உறுதிமொழிகளாக ஏற்போம்.

    அருமையான சிந்தனைகள் சார். புத்தாண்டு உங்களுக்கு அனைத்து நலன்களையும் வழங்கட்டும்.

    பதிலளிநீக்கு

  14. @ ஜீவி
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்.

    @ கோபு சார்
    வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி.
    @ ராபெர்ட்
    என்னதான் அவசரகதியானாலும் ஆண்டில் ஒரு முறையாவது ஒரு இண்ட்ரொஸ்பெக்‌ஷன் அவசியம் என்று கருதுகிறேன் வாழ்த்துக்கு நன்றி சார்..
    @ கரந்தை ஜெயக்குமார்
    வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி ஐயா.
    @ ஸ்ரீராம்
    புத்தாண்டு சபதமாக ஏன் எண்ணவேண்டும் . வாழ்வில் பயிலும் குணங்களாகக் கொள்ளலாமே. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
    @ திண்டுக்கல் தனபாலன்.
    வாழ்த்துக்கு நன்றி டிடி.
    @ அப்பாதுரை
    சிந்திக்கும் சக்தி இருப்பதே தெரியாமல் வாழ்க்கை ஓட்டுவதில் என்ன பலன். கருத்துரைக்கு நன்றி சார்.
    @ வே.நடன சபாபதி
    வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி சார்.
    @ ரஞ்சனி நாராயணன்
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மேடம்.
    @ ராமலக்ஷ்மி
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மேடம்
    @ துரை செல்வராஜு
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா,
    @expatguru
    வருகைக்கும் வாழ்துக்கும் நன்றி சார்
    @ டி.பி.ஆர். ஜோசப்
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  15. இன்றுபோல் என்றும் மனித நேயம் பழக அன்பர்களே
    என் மனங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.//

    அருமையான் புத்தாண்டு செய்தி.
    உங்களுக்கும், உங்கள் அனபு குடுமபத்தினர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம்
    ஐயா.

    அற்புதமான சிந்தனை.. வாழ்த்துக்கள்

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  17. அருமையான புத்தாண்டுச் செய்தியான பதிவு ஐயா!

    எல்லோரையும் நேசிப்போம்!
    இருக்கும்வரை உதவியாக, மகிழ்வாக அடுத்தவர் மனம் நோகா வண்ணம் வாழுவோம்!...

    புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
  18. இன்று நாம் காண்பவரை அடுத்த நாள்---நாளென்ன அடுதத் நொடி
    காண்பதே நிச்சயமில்லை....காணும்போதும் பழகும்போதும்
    அன்பு செய்வோம், ஆறுதல் அளிப்போம், தோள்கொடுப்போம்
    ஆக என்றும் நல்லவராக வாழ பிரதிக்ஞை எடுப்போம்
    இன்றுபோல் என்றும் மனித நேயம் பழக அன்பர்களே
    என் மனங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.//


    புத்தாண்டின் சிறப்புச் செய்தியாக
    பதிவு செய்த வரிகள் மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

  19. @ கோமதி அரசு
    @ ரூபன்
    @ இளமதி
    @ ரமணி
    அனைவரது வருகைக்கும் மேலான கருத்துப் பதிவுக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  20. அருமையான சிந்தனை ஐயா. விடியும் ஒவ்வொரு நாளும் வரமே. கிடைக்கும் ஒவ்வொரு மணித்துளியையும் பயனுறச் செய்தலே வாழ்க்கையின் சிறப்பு. சிறப்பானதொரு சிந்தனைப்பகிர்வுக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  21. கவிதை அருமை. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு