நான் வரைந்த கண்ணாடி ஓவியம் |
---------------
தையலே தைப் பெண்ணே வருக வருக...
-----------------------------------------------------
பொங்கல் வாழ்த்துக்கள்.
----------------------------------
மார்கழிப் பனி விலக
பாவையர் நோன்பு முற்ற,
தையலே தைப் பெண்ணே-வருக
உன் வரவால் வழி பிறக்க
முற்றிய கன்னலுடன் சூல் முற்றிக்
கதிர் சாய்ந்த செந்நெல் குத்திய
புத்தரிசி கொண்டு புதுப் பானையதனில்
பொங்கலாக்கிப் படைத்திடவே
பகலவனும் பாதை மாறிப்
பயணம் செய்யத் துவங்கும்
இந்நாளில் பொங்கும் மங்களம்
எங்கும் தங்க வணங்குகிறோம்
அனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
----------------------------------------------------------.
நன்றி. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும், நம் வாசக நண்பர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கும் பொங்கல் வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குஸ்ரீ காயத்ரி தேவி -கண்ணாடி ஓவியம்
கண்களை நிறைத்தது ..பாராட்டுக்கள்..!!
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..!
அன்பான பொங்கல் வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குகண்ணாடி ஓவியம் கண்களுக்கு விருந்தாய் அமைந்துள்ளது.
பதிலளிநீக்குஇனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..!
கண்ணாடிக்குள் காயத்ரி . தெய்வாம்சம் பொருந்திய ஓவியம்.
பதிலளிநீக்குஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
மனம் நிறைந்த தைப் பொங்கல் நல் வாழ்த்துக்கள் ஐயா !
பதிலளிநீக்குஅழகிய பகிர்வுக்கும் என் அகம் குளிர்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ஐயா .
வணக்கம் ஐயா
பதிலளிநீக்குதங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..
தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குபொங்கும் மங்கலம் எங்கும் தங்கிட
பதிலளிநீக்குபொங்கலோ.. பொங்கல்!..
அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!..
எனதினிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் .
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ ஸ்ரீராம்
@ இராஜராஜேஸ்வரி
@ ஜீவி
@ கோபு சார்
@ ராஜலக்ஷ்மி பரமசிவம்
@ அம்பாளடியாள்
@ அ.பாண்டியன்
@ திண்டுக்கல் தனபாலன்
@ துரை செல்வராஜு
@ நண்டு@ நொரண்டு
வருகைதந்து வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.காயத்ரி தேவி கண்ணாடி ஓவியத்தைப் பாராட்டியதற்கும் நன்றி.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குநீங்கள் வரைந்துள்ள ஸ்ரீ காயத்ரி தேவி ஓவியம் அருமை. கவிதையும் தான்.உங்களுக்கு எனது பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
தைப்பெண்ணை வரவேற்கும் கவிதை
பதிலளிநீக்குஅருமை.
உங்களுக்கும், உங்கள் குடுமபத்தினர்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
நீங்கள் வரைந்த கண்ணாடி ஓவிடம் மிக அழகு.
வாழ்த்துக்கள்.
தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய தைப் பொங்கல், உழவர்திருநாள் நல்வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவாழ்த்துடன், தாங்கள் வரைந்த ஓவியம் அருமையான பொங்கல் பகிர்வு. நன்றி.
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்து
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அழகிய அருமையான ஓவியமும்
பதிலளிநீக்குகவிக்காவியமாய் வாழ்த்தும் மிக அருமை ஐயா!
பொங்கலிட்டுப் போற்றியே பூமிவளம் காத்திடுவோம்
எங்களுக்கும் ஈய்ந்தருள் என்று!
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் உளமார்ந்த
இனித்திடும் தமிழ்ப்புத்தாண்டுப் பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
இனிய கவிதைக்கு நன்றி!
பதிலளிநீக்குதங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குசிறப்புக் கவிதை வெகு சிறப்பு
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
சிறப்பான பொங்கல் வாழ்த்து......
பதிலளிநீக்குஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.
அற்புதமான ஓவியம். மிகவும் பொறுமையும் நுட்பமான கைத்திறனும் கொண்டிருந்தால் மட்டுமே இதைப்போன்ற கலைப்படைப்புகளை நேர்த்தியாய் வடிக்க இயலும். மனமார்ந்த பாராட்டுகள் ஐயா.
பதிலளிநீக்குபொங்கல் கவிதை ருசிக்கிறது. ரசித்தேன். நல்வாழ்த்துக்கள் ஐயா.
பதிலளிநீக்கு@ டி.பி.ஆர்.ஜோசப்
2 வே.நடனசபாபதி
@ கோமதி அரசு
@ கவியாழி கண்ணதாசன்
@ ஜம்புலிங்கம்
@ புலவர் இராமானுசம்
@ ரூபன்
@ இளமதி.
@ செல்லப்பா யக்ஞசாமி
@ கரந்தை ஜெயக்குமார்
@ ரமணி
@ வெங்கட் நாகராஜ்
@ கீத மஞ்சரி
அனைவரது வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. ஓவியத்தினைப் பாராட்டியவர்களுக்கும் நன்றி
வணக்கம். இன்றைய வலைச்சரத்தில் தங்கள் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நன்றி.
பதிலளிநீக்குhttp://blogintamil.blogspot.com.au/2014/01/blog-post_23.html
ஓவியமும் கவிதையும் அருமை.
பதிலளிநீக்கு