Friday, January 10, 2014

சும்மா சிரிச்சிட்டுப் போங்க...!


                                    சும்மா சிரிச்சிட்டுப் போங்க.....!
                                    --------------------------------------



நான் ஒரு சீரியஸ் மனிதன். என்னால் பிறரை சிரிக்க வைக்க முடிவதில்லை. இந்த என் குறை எனக்குத் தெரியும். ஆனால் எனக்கு நகைச் சுவை உணர்வு கிடையாது என்று அர்த்தமல்ல. நன்கு ரசிப்பேன். என் ரசிப்பின் வெளிப்பாடு என் இதழோரப் புன்னகையில் மட்டுமே தெரியும். அப்படி நான் அண்மையில் ரசித்த சில கடி ஜோக்ஸ் ( உபயம்-என் நண்பர்) உங்கள் பார்வைக்கு.முடிந்தால் இவற்றின் தரத்தை வரிசைப் படுத்துங்களேன்.

சே!சே! வர வர செல்போனை எதெதுக்குத்தான் யூஸ் பண்றதுன்னே இல்லாம போயிடுச்சு!
ஏன் என்ன சலிப்பு உனக்கு?
கல்யாணம் ஒண்ணுல பந்தியில கடைசில உக்காந்துருக்கறவரு முதல்ல ஒக்காந்தவருக்கு ஃபோன் பண்ணி பாயசம் அங்கேயே தீந்துடுமா இல்ல கடைசி இலை வரைக்கும் வருமான்னு கேக்கறாரு

நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்

உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்.



காதலி:      நாளைக்கு என் பொறந்த நாள்.. எனக்கு ஒரு ரிங் தருவியா?
காதலன்:  ஓ! லேண்ட்லைன்லயா.. செல்ஃபோன்லயா?

என்னதான் பில் கேட்ஸோட பையனா இருந்தாலும், கழித்தல் கணக்கு போடும்போது, கடன் வாங்கித்தான் ஆகனும்.

பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும், ஃப்ரன்ட் வீல முந்த முடியாது.  இதுதான் உலகம்.

இளநீர்லயும் தண்ணி இருக்கு., பூமிலயும் தண்ணி இருக்கு., அதுக்காக இளநீர்ல போர் போடவும் முடியாது., பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது.  என்ன நா சொல்றது சரிதானே.

ஓடுற எலி வாலை புடிச்சா நீ கிங்கு…  ஆனா தூங்குற புலி வாலை நீ மிதிச்சா  உனக்கு சங்கு’.
.

சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னாட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா?   இல்ல………. பிளேன் ஓட்டுறது பிளானிங்கா?

என்னதான் கிளி கீ..கீ.. என்று கத்தினாலும் அதால ஒரு லாக்கை கூட ஒப்பன் பண்ண முடியாது.

நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி நாம ஓடலாம்.  ஆனாஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நாம நிக்க முடியாது.

சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும்.  அதுக்காக  மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா?

டிசம்பர் 31 க்கும், ஜனவரி 1 க்கும் ஒரு நாள்தான் வித்தியாசம். ஆனால், ஜனவரி 1 க்கும், டிசம்பர் 31 க்கும், ஒரு வருசம் வித்தியாசம்.. இதுதான் உலகம்.

குதிரை தெரிகிறதா கண்டு பிடியுங்கள் 



 

23 comments:

  1. ரஸித்தேன். சிரித்தேன். பகிர்வுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  2. தவளைப்படத்தை தனியாக COPY & SAVE செய்து விட்டு,
    அதை பிறகு ROTATE செய்து கொண்டே வந்தால் குதிரை மட்டுமே தெரியும்.

    குதிரை தெரியும் போது தவளை தெரியவே தெரியாது.

    ReplyDelete
  3. நகைச்சுவை துணுக்குகளை இரசித்தேன்.சிரித்தேன்.

    தவளைப் படத்தில் குதிரையையும் கண்டேன்.

    பகிர்ந்தமைக்கு நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  4. டிசம்பர் 31 க்கும், ஜனவரி 1 க்கும் ஒரு நாள்தான் வித்தியாசம். ஆனால், ஜனவரி 1 க்கும், டிசம்பர் 31 க்கும், ஒரு வருசம் வித்தியாசம்.. இதுதான் உலகம்..... சரியான அறுவை ஐட்டம்! இருந்தாலும் நன்றி ஐயா! அடிக்கடி இப்படி சிரிக்க வையுங்கள்!

    ReplyDelete
  5. அன்றாட வாழ்வில் இவ்வாறான சிந்தனைகள் தேவையே. சிரிக்க வைத்து அதே சமயம் சிந்திக்கவும் வைத்துவிட்டீர்கள். நன்றி.

    ReplyDelete
  6. ஹா... ஹா... ரசிக்க வைக்கும் துணுக்குகள்...

    நன்றி ஐயா...

    ReplyDelete
  7. செம ப்ளேடாக இருந்தாலும் சிலவற்றை ராசக்க முடிந்தது! :)))

    ReplyDelete
  8. சிரிப்புத்தான் வருகுதைய்யா! செல்போனும் பாயாசமும் ரசித்தேன்!

    ReplyDelete
  9. நன்றாகவே ரசித்து சிரித்தேன்.

    ReplyDelete
  10. ரசிக்க வைத்த சிரிப்புகள்.

    ReplyDelete
  11. நீங்கள் இரசித்ததை நானும் இரசித்தேன். பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  12. ரசிக்கவைக்கும் சிரிப்புகள்..~

    ReplyDelete
  13. கலகல(ப்பான) நகைச்சுவைகளின் தொகுப்பு. படித்து மனம் இலேசானது.

    ReplyDelete
  14. நிறைய ஜோக்ஸ் எங்கயோ எப்பவோ படிச்சதுதான்னாலும் இன்னும் ஒரு முறை ரசிக்க வைத்தது. பகிர்வுக்கு நன்றி.

    சீரியஸா தெரியறவங்களுக்கு ஹ்யூமர் சென்ஸ் ஜாஸ்தி இருக்கும்னு சொல்வாங்க. அது உண்மைதான்.

    ReplyDelete
  15. வணக்கம்
    ஐயா.
    நகைச்சுவை கருத்தாடல் நன்றாக உள்ளது... நானும் ரசித்தேன்.வாழ்த்துக்கள் ஐயா

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  16. என்னால் குதிரையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

    ReplyDelete
  17. மிக அருமை ஐயா...
    தவளையைக் கண்டால் குதிரையைக் காணவில்லை... குதிரையைக் கண்டால் தவளையைக் காணவில்லை...!

    ReplyDelete
  18. தவளையை மறைத்தது கம்பீரக் குதிரை..
    தவளையில் மறைந்தது கம்பீரக் குதிரை!

    ReplyDelete
  19. துணுக்குகள் அனைத்தையும் ரசித்தேன். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  20. சூப்பர் சார். நான் சமீபத்தில் படித்த ஜோக் ஒன்று:

    ஒரு கறார் வக்கீலிடம் கஸ்டமர் ஒருவர் வருகிறார்.

    கஸ்டமர்: "ஊரில் நீங்கள் பிரபல வக்கீல் என்று கேள்விப்பட்டு இங்கே வந்தேன். உங்களுடைய ஃபீஸ் எவ்வளவு?

    வக்கீல்: மூன்று கேள்விகளுக்கு ஆயிரம் ரூபாய்!

    கஸ்டமர்: என்ன, ஆயிரம் ரூபாயா, ரொம்ப அதிகமாக இருக்கிறதே?

    வக்கீல்: ஆமாம், அதிகம் தான். சீக்கிரம், உங்களுடைய மூன்றாவது கேள்வி என்ன?
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

    எஸ்.வி.சேகர் டிராமாவில் வரும் ஒரு ஜோக்:

    '"ஏம்ப்பா, எப்போ பார்த்தாலும் பணம் பணம்னு பேயா அலையுறியே, உனக்கு 'பணப்பேய்' அப்படின்னு ஒரு பட்டம் கொடுத்துடலாமா?"

    எஸ்.வி.சேகர் பதில்:

    "ஹி ஹி, பட்டம் எல்லாம் வேண்டாம். பணமா கொடுத்திடுங்க!"

    ReplyDelete
  21. தவளை என்பது பின்னூட்டம் படித்த பிறகு தான் தெரிந்தது.

    சில ஜொக்குகள் வாய் விட்டுச் சிரிக்க வைத்தன. குருவின் பின்னூட்ட ஜோக் உள்பட.

    ReplyDelete

  22. @ கோபு சார்
    @ தமிழ்முகில் ப்ரகாசம்
    @ செல்லப்பா யக்ஞஸாமி
    @ கரந்தை ஜெயக்குமார்
    @ ஜம்புலிங்கம்
    2 ஈன்ஊஆள் ஆணாஆஆளாண்
    2 ஸ்ரீராம்
    @ தமிழ் இளங்கோ
    @ ராஜலக்ஷ்மி பரமசிவம்
    @ கோமதி அரசு
    @ வே.நடனசபாபதி
    @ ராஜராஜேஸ்வரி
    @ முகமது நிஜாமுதின்
    @ டி.பி.ஆர். ஜோசப்
    @ ரூபன்
    @ டாக்டர் கந்தசாமி
    @ முட்டா நைனா
    @ பந்து
    @ வெங்கட் நாகராஜ்
    @ எக்ஸ்பாட்குரு
    @ அப்பாதுரை.
    அனைவரது வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. அப்பாதுரை சில நேரங்களில் ஆச்சரியப்பட வைக்கிறீர்கள்.

    ReplyDelete