காக்கைகளும் குஞ்சுகளும்.
--------------------------------------
என் நண்பர் தம்பதிகள் ஒரு நாள் என் வீட்டுக்கு
வந்திருந்தனர்.கையில் ஒரு பெண்கைக்குழந்தை. பெங்களூர் சற்றுக் குளிர் அதிகமான ஊர்
என்பதால் தரையில் கால் வைத்தால் சில்லென்று இருக்கும். இந்தப்பிரச்சனையைத்
தவிர்க்க என்
வீட்டு ஹாலில் லினோலியம் கார்ப்பெட் மாதிரி போட்டு
வைத்திருக்கிறேன். எப்போதும் கைக் குழந்தைகளை
கையில் வைத்திருக்க முடியாது. மேலும் அம்மாதிரிக் குழந்தைகள் தரையில் அமரவோ
முட்டுக்குத்தவோ நீச்சல் அடிக்கவோ ஏதுவாய் இருக்கும். குறிப்பிட்ட நண்பரின்
குழந்தை ஆறு மாதத்திலேயே பிரசவமான ஒரு ப்ரிமசூர் குழந்தை. ஏறத்தாழ ஆறு வாரங்கள்
இன்குபேட்டரில் வைத்திருந்தார்களாம். பிறந்து ஆறு மாதமான அக்குழந்தையை லினோலியம்
கார்பெட்டில் மல்லாக்கப் படுக்க வைத்தார்கள். இடனே அக்குழந்தை கவிழ்ந்து தரையில் நீச்சல்
அடித்து ”இம்” என்பதற்குள் அறையின் மறுகோடிக்கு வந்தது. எங்களுக்கு
இது மிகவும் ஆச்சரியமாய் இருந்தது. மீண்டும் அறையின் ஓரத்தில் கிடத்தினார்கள்.கிடத்தித்
திரும்பிவதற்குள் குழந்தை மறு கோடிக்கு வந்து விட்டது. Such an hyperactive
child…! பொதுவாகவே
இம்மாதிரிக் குழந்தைகள் சற்று அதிகச் சுற்சுறுப்பாக இருக்கும் என்று
கேள்விப்பட்டிருக்கிறேன். இப்பதிவு அதற்காக அல்ல. ஒரு நாள் என் உறவினர் ஒருவர்
அவர்கள் வீட்டுக் குழந்தையுடன் வந்திருந்தார்கள் பேச்சுவாக்கில் நாங்கள் அந்த
ப்ரிமசூர் குழந்தையைப் பற்றிச் சொன்னோம். வந்திருந்தவர்கள் கையிலும் ஒரு குழந்தை
வயது சுமார் இரண்டு இருக்கலாம். இடுப்பிலேயே வைத்துக் கொண்டிருந்தார்கள், “ ச்சே.
.! இதென்ன பிரமாதம் .... இவன் ஆறுமாதத்திலேயே எழுந்து நடந்து ஓட
ஆரம்பித்துவிட்டானாக்கும்...!” என்றார்கள். அந்தக் குழந்தையானால் இடுப்பைவிட்டு இறங்கவே
மறுத்து விட்டது. காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சுதான் .... இருந்தாலும்
இப்படியா.? நம் வீட்டுக் குழந்தை நன்றாகப் படிக்கிறது என்று சொல்லிவிட்டாலே போதும்
அவர்கள் குழந்தையும் பள்ளியிலேயே முதன்மைக் குழந்தையாய் இருக்கும். ஒரு முறை ஒரு
தாத்தா பாட்டி அவர்கள் பேரக் குழந்தையுடன் வந்திருந்தார்கள் “அங்கிளுக்கும்
ஆண்டிக்கும் ரைம் சொல்லிக் காண்பி ? என்று அக்குழந்தையைப் பாடாய்ப்
படுத்தினார்கள். அது ஏன் சொல்கிறது.?பல மிட்டாய்கள் சாக்கலேட்டுகளுக்குப் பின் அது
அழுது கொண்டே ரெயின் ரெயின் கோஅவே என்று அழுதது. தங்கள் வீட்டுக் குழந்தையின்
புத்திசாலித்தனத்தை பறை சாற்றுவதில் பெற்றோரை விட அவற்றின் தாத்தா பாட்டிகளுக்கே
அதிக முனைப்பு. வீட்டுக்கு யாராவது வருவதானால் சில குழந்தைகள் வந்தவர்களின் கையையோ
பையையோதான் பார்க்கும்/ நாம் ஏதும் எடுத்துக்கொண்டு போயிருக்காவிட்டால் “
வருகிறவர் போகிறவர் எல்லாம் ஏதாவது கொடுக்க வேண்டுமா என்ன ?” என்று குழந்தைகளிடம்
கடுமையாகப் பேசுவார்கள்.
சில வீடுகளில்
குழந்தைகளுக்குப் புகட்டப் படும் முதல் பாடமே “மாமாவுக்கு டாட்டா சொல்லு. வருகிறவரை
வரவேற்கக் குழந்தைக்ளுக்குப் போதிக்கிறோமோஇல்லையோ முதலில் வழியனுப்பச் சொல்லிக்
கொடுக்கிறோம் இது ஒருவிதம் என்றால் அயல்நாடுகளில் வசிக்கும் தங்கள் பேரன்
பேத்திகளுக்கு ஈடே கிடையாது என்று சூடம் ஏற்றிச் சத்தியம் செய்யாத குறையாகப்
பேசுபவர்களையும் சந்திக்கத்தானே செய்கிறோம். ” என் நான்கு வயது
பேத்தி ( பேரன் )க்கு கம்ப்யூட்டரில் தெரியாதது ஏதும் இல்லை. நல்லது. ஆனால் இதை
சொன்ன உடனே எதிரிலிருப்பவர் உடனே தன் பங்குக்கு தங்கள் வீட்டுக் குழந்தைகள்
புராணம் சொல்லி ஓய மாட்டார்கள். இதற்கெல்லாம் காரணம் என்ன.?இப்போதையக் குழந்தைகள்
எல்லாம் நம் காலத்தைவிட புத்திசாலிகள்தான் ஒப்புக்கொள்ள வேண்டும். நான் மூன்று
வயதாக இருக்கும்போது நிலைக்கண்ணாடி முன் நின்று சீப்பால் தலை வாரிக் கொள்வேனாம். அது
என் பெற்றோருக்கு மிகவும் மகிழ்ச்சி தரக் கூடியதாய் இருந்திருக்கும். இப்போதைய
குழந்தைகள் அதிலெல்லாம் இருந்து எங்கோ முன்னேறி வந்து விட்டன.
குழந்தைகளை அவர்களுக்குப் பிடிக்காததைச்செய்யச் சொல்லி
வற்புறுத்துவது சரியல்ல என்று தோன்றுகிறது. மேலும் குழந்தைகள் ஒன்றும் காட்சிப்
பொருட்களில்லையே. பெற்றோர்களே , அவர்களையும் பெற்றோர்களே...! குழந்தைகள் நம் மனதுக்கு
இதம் தருபவர்கள். சில குழந்தைகளின் புத்திசாலித்தனத்தை ரசிக்கலாம். ஏன்... நானும்
என் பேரன் பற்றிய பதிவுகள் எழுதி இருக்கிறேன். திருமதி .கீதமஞ்சரி நிலா சிறுமியாய்
தன் பாட்டியுடன் கோவிலுக்குச் சென்று மூன்று சுற்றுக்குப்பதில் அதிகமாய் சுற்றியதைக் கழிக்க எதிர்
திசையில்சுற்றட்டுமா என்றுகேட்டதாக எழுத்யது நினைவுக்கு வருகிறது குழந்தைகள் என்ன
மாதிரி சிந்திக்கிறார்கள் என்று எண்ணி ரசித்திருக்கிறேன் தங்கள் வீட்டுக்
குழந்தைகள் குறித்த மகிழ்ச்சி பகிரும்படியாக இருக்கலாம் . ஒப்பிட்டு தங்கள்
குழந்தைகளே மேல் என்று எண்ணுவது சரியா, முதலில் நான் சொன்னது போல் காக்கைக்குத்
தன் குஞ்சு பொன் குஞ்சு பிற குழந்தைகளை மட்டம் தட்டிப் பேசுவதையோ அதைவிட தங்கள்
குழந்தையே சிறந்தது என்று எண்ணுவதையோ தவிர்க்கலாமே.
என் முந்தையப் பதிவில் காருண்யா இல்லம் பற்றி எழுதி இருந்தேன். உதவ முன் வருபவர்கள் நண்பனின் கடிதத்தில் கொடுத்திருக்கும் இணைய தளத்துக்குச் சென்று தொகை அனுப்ப வேண்டிய முகவரி முதலிய விவரங்களையும் அவசியம் பார்க்கவும். நன்றி.
All donations to Palakad Alzheimers’ Charitable Trust are exempted from payment of
Income Tax under section 80G – Cert.No.CIT/TCR/TECH/80G-36/2009-10.
Our Account No. is with Union Bank of India, Chandranagar Branch, Palakad. Act.No.SB.339602100008103 - Palakkad Alzheimers’ Charitable Trust. IFSC Code : UBIN 0533963.
Please contact Sri. P Madhusudhan Tel.Mob. 9447408252
Landline 0491/2571090
E mail madhu37@gmail.com
தன் குழந்தைப் பற்றி, பேரன் பேத்திகளைப் பற்றி இது போல் ஜம்பம் அடிப்பது இப்போதும் உண்டு... ஆனால், குழந்தை தானாக செய்யும் ஒவ்வொரு செயலும் மனதிற்கு இதமே...
பதிலளிநீக்கு//காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு. பிற குழந்தைகளை மட்டம் தட்டிப் பேசுவதையோ அதைவிட தங்கள் குழந்தையே சிறந்தது என்று எண்ணுவதையோ தவிர்க்கலாமே.//
பதிலளிநீக்குநியாயமான கருத்து. எல்லோருக்கும் நல்ல மனப் பக்குவம் வரவேண்டும்.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஉடனே எதிரிலிருப்பவர் உடனே தன் பங்குக்கு தங்கள் வீட்டுக் குழந்தைகள் புராணம் சொல்லி ஓய மாட்டார்கள். /
பதிலளிநீக்குதன்னைத்தானே மெச்சிக்குமாம்
தவிட்டுக் கொழுக்கட்டை - என்று ஏளனப்பார்வையை புரிந்துகொள்ளாமல் மேலும் மேலும் வெறுப்பேற்றுவார்கள்.
குழந்தைகளை சில பெற்றோர்கள் இப்படித்தான் வித்தை காட்டும் குரங்கைப் போல காட்சிப் படுத்துகிறார்கள். குழந்தை என்றில்லை, எங்க வீட்டு ரேடியோ, எங்க வீட்டு டிவி என்று எதுவுமே அடுத்தவர்கள் வீட்டுப் பொருட்களை விட அவர்கள் பொருள் ஒஸ்தி என்பது போலவே பேசுபவர்களை நானும் கண்டிருக்கிறேன்.
பதிலளிநீக்கு//தன்னைத்தானே மெச்சிக்குமாம்
பதிலளிநீக்குதவிட்டுக் கொழுக்கட்டை -//
அட!
குழந்தை தானாக செய்யும் ஒவ்வொரு செயலும் மனதிற்கு இதமே...
பதிலளிநீக்குநன்றி ஐயா
குழந்தை தானாக செய்யும் ஒவ்வொரு செயலும் மனதிற்கு இதமே...
பதிலளிநீக்குநன்றி ஐயா
கருத்தும் அருமை அதோடு தந்த காணொளியும் அருமை.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ திண்டுக்கல் தனபாலன்
@ துரை செல்வராஜு
@ இராஜராஜேஸ்வரி
@ ஸ்ரீராம்
@ கரந்தை ஜெயக்குமார்
@ வே.நடனசபாபதி
வருகை தந்து கருத்திட்ட அனைவருக்கும் நன்றி. உதவும் எண்ணம் வெளிப்படுத்தியுள்ள நண்பர்களுக்கு இப்பதிவின் தகவல்கள் உதவும் என்று நம்புகிறேன். இந்த விஷயத்துக்கு மறதி இருக்கக் கூடாது என்றே மீண்டும் இந்த வலியுறுத்தல் நன்றி.
“அங்கிளுக்கும் ஆண்டிக்கும் ரைம் சொல்லிக் காண்பி ? என்று அக்குழந்தையைப் பாடாய்ப் படுத்தினார்கள்.//
பதிலளிநீக்குபல பெற்றோர்கள், அன்றும் சரி இன்றும் சரி, குரங்காட்டிகளைப் போல்தான் ஆடு ராஜா, பாடு ராஜா என்று மழலைகளை பிறரை மகிழ்விக்க ஆட்டுவிப்பதில் வல்லவர்கள்.
மிகவும் சரியான சிந்தனை ஐயா. தங்கள் குழந்தைகளைப் பாராட்டுவது என்பது ஒவ்வொரு பெற்றோரும் பெற்றோரைப் பெற்றோரும் தவறாமல் செய்வதுதான். அதையே அடுத்த குழந்தையை மட்டம் தட்டுவது போல் பேசுவது மிகவும் தவறு. திறமை இருக்குமிடத்தில் பாராட்டுகள் தாமாகத் தேடிவரும். நாமாகத் தேடிப்போகவேண்டிய அவசியமில்லை.
பதிலளிநீக்குதங்கள் பதிவில் என் பதிவைக் குறிப்பிட்டமைக்கும் நன்றி.
நல்ல சிந்தனை.
பதிலளிநீக்குஇந்த காணொளியை பார்த்து ரசித்திருக்கிறேன்.
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.